கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடியாட்களுடன் சென்று பாட்டிலால் கணவன் மண்டையை உடைத்த மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் வேப்பங்குடி அருகே பழக்கடை நடத்தி வரும் அன்பு மோனிகா தம்பதியினர் குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அடியாட்களுடன் கணவரின் கடைக்குச் சென்ற மோனிகா அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சர்பத் பாட்டிலால் கணவனின் மண்டையை காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக […]
Tag: கன்னியாகுமரி
வங்கி அதிகாரி ஒருவர் தனது உயிரை சாமிக்கு காணிக்கையாக கொடுக்க தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பந்தன்காட்டில் வசிக்கும் செல்ல சுவாமியின் மகன் நவீன்(32). இவர் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காததால் விரக்தியுடன் இருந்துள்ளார். அச்சமயம் நவீன் தனக்கு ஒரு வேலை கிடைத்தால் தன் உயிரை காணிக்கையாக கொடுப்பதாக கடவுளிடம் வேண்டி இருந்தார். இந்நிலையில் மும்பையில் இருக்கும் பாங்க் ஆப் இந்தியாவில் நவீனுக்கு உதவி மேலாளராக வேலை கிடைத்து பணிபுரிந்து வந்துள்ளார். […]
கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி திறக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை யாக கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையும் கடந்த மார்ச் 13ஆம் தேதி மூடப்பட்டது. ஏழு மாதங்களாக அரண்மனை மூடப்பட்டு இருந்ததால் பத்மநாபபுரம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பத்மநாபபுரம் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையும் அப்போது மூடப்பட்டது. தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதியன்று திறக்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சித் தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் 10 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக தலையிட்டு ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான உரிமைகள் பறிக்கப் படுவதாக குற்றம் சாட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் […]
தசைசிதைவு நோயினால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த குமரி இளைஞர் ஒருவருக்கு செய்தி எதிரொலியால் அமெரிக்க வாழ் தமிழர் உதவிக்கரம் நீட்டி உள்ளார். குமரி மாவட்டம் நாவல் காடு பகுதியைச் சேர்ந்த காந்திலால் தசைச்சிதைவு நோய் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். இருப்பினும் வீட்டில் இருந்தபடியே கிராம மக்களுக்கு தன்னால் இயன்ற சமூக சேவையாற்றி வருகிறார். இந்த நிலையில் தனது மகன் வெளி உலகத்தை காணும் வகையில் மோட்டார் நாற்காலி வழங்குமாறு அரசுக்கு காந்திலாலின் தாயார் லீலா கோரிக்கை […]
துணை காவல் கண்காணிப்பாளரின் தொடர் மிரட்டலால் திமுக நிர்வாகியான மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் சிவராம பெருமாள், திமுக மருத்துவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். இவர் அப்பகுதியில் மருத்துவமனை வைத்திருந்தார். இவருடைய மனைவி சீதா, அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சிவபெருமாள் கடந்த ஜூலை 12 ஆம் தேதி, கொரோனா தொற்று தொடர்பான பணிக்குச் சென்று வந்த மனைவியை […]
நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் தொடங்கப்பட்ட இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மதுரை கன்னியாகுமரி இடையே 4250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்த ரயில்வே கோட்ட உயரதிகாரிகள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வு செய்த போது எப்படி இருந்ததோ அதே நிலைதான் தற்போது உள்ளதாக அதிகாரிகள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணிற்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகர்கோயில் அடுத்துள்ள மழை கட்டிப்போட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். காய்ச்சலால் அவதிப்பட்ட தனது மனைவி ரெஜிலாவை தெங்கம்புதூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரெஜிலாவுக்கு முகம் வீங்கியதோடு காதில் ரத்தமும் வடிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் ரெஜினாவை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ரெஜினாவை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் ஆற்றில் மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்களின் உதவியுடன் உயிருடன் வனத்துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு சப்பாத்து பகுதியிலுள்ள பரளி ஆற்றில் அப்பகுதி இளைஞர்கள் மீன் பிடிப்பதற்காக வலை விதித்துள்ளனர். அப்போது வலையில் மலைப்பாம்பு சிக்கி இருப்பதை கண்டு இளைஞர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து வலையில் இருந்த 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு உயிருடன் மீட்ட வனத்துறையினர் அதனை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று […]
கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலைகள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கல்நகர் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் அதிகாரிகள் ரகசியமாக கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடை தேர்தலுக்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் சரிபார்க்கும் பணிகள் […]
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததில் தமிழகத்தில் 67 மருத்துவர்கள் பலி. இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் செயலால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கொரோனா பாதிப்பில் உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் இந்திய அளவில் 610 டாக்டர்களும், தமிழக அளவில் 67 டாக்டர்களும் பலியாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வந்த கனமழையால் குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வந்த மழையால் 48 அடி அளவு கொண்டுள்ள பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, பறளியாறு உள்ளிட்ட குறித்த முக்கிய அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சுற்றுலா மையமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் […]
ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து பால்வளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சுசீலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் ஆவின் நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக உள்ள தனக்கு துணை பதிவாளர் கிருஷ்ணதாஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஒத்துழைக்க மறுத்ததால் ஒரே ஆண்டில் தனக்கு 4 முறை குற்றம் நோட்டீஸ் வழங்கப்பட்டு பதவி […]
நவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொலு பொம்மைகள் விற்பனை களைகட்டியுள்ளது. 50 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை உள்ள கொலு பொம்மைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சக்தியின் அருள் வேண்டி ஒன்பது தினங்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம், வடசேரி, கோட்டாறு போன்ற பல்வேறு பகுதிகளில் பொம்மைகளின் விற்பனை விருவிருப்பு அடைந்து உள்ளது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து […]
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக வருவாய் இன்றி தவிப்பதால் திருமண மண்டபங்கள், அரங்குகள் ஆகியவற்றை 50 சதவீத மக்களை அனுமதிக்க வேண்டும் என மேடை அலங்காரம் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மேடை அலங்காரம் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தன. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வாடகை பொருட்கள் உரிமையாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி தினகரன், கடந்த ஆறு […]
காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு சத்யபிரதா சாகு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரசைை சேர்ந்த திரு வசந்த் குமார் காலமானதை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட […]
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி டெம்போ டேங்கர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த மினி டெம்போ ஓட்டுநர் காவல்துறைக்கு பயந்து தப்பி ஓட்டம் பிடித்தார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கொல்லன்விலை பகுதியில் இருந்து ரத்தினம் என்பவர் ஓட்டிய டேங்கர் லாரி ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டேங்கர் லாரி மீது நாகர்கோவிலில் இருந்து வேகமாக வந்த மினி டெம்போ வாகனம் […]
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே சேமியா மூட்டைகளுக்கு இடையே கேரளாவிற்கு ஒரு டன் புகையிலை பொருட்கள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான கலியக்கவிலை பேருந்து நிலையம் அருகே அன்வர் என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தன் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி கேரளாவிற்கு கடத்துவதாக தக்கலை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகம் பொருத்துவதற்காக, விபத்தில் பலியான இளைஞரின் சிறுநீரகம் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சுமார் மூன்றரை மணி நேரத்தில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் விபத்து ஒன்றில் பலியானார். இவரது சிறுநீரகத்தை தானம் செய்ய அவரது உறவினர்கள் விரும்பினர். இன்னிலையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வெங்கடேஷ் என்பவருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. […]
கன்னியாகுமரியில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் தவறான வார்த்தைகளைப் பேசி உல்லாசத்துக்கு அழைத்த எஸ்.ஐ பேசிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி அருகே தக்கலையில் பெண் ஒருவர் தன் டூவீலரை தொலைத்துள்ளார். அதுபற்றி புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற போது எஸ்.ஐ உல்லாசத்திற்கு விடுதிக்கு அழைத்து ஆடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. புகார் அளிக்கச் சென்ற பெண் அவரின் பேச்சுக்கு விடாமல் பதிலளித்து சமாளித்துள்ளார். புகார் அளிக்க சென்ற […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். மெடிக்கல் ரெப் ஆக பணியாற்றி வரும் இவருக்கும், பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோஷி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ் குடித்துவிட்டு ஜோஷி […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண்மணி தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக உயிரிழந்தவரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்து உள்ள மருதம்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரிகா என்ற பெண்மணி கொரோனா தொற்று காரணமாக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர் குணமடைந்து விட்டதாக. அவர் குணமடைந்து விட்டதாக நேற்று முன்தினம் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அன்று மாலை […]
குழந்தை பிறந்து ஐந்தாவது நாளில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் அமைந்த சாமிதோப்பு அருகே உள்ள சோட்டபணிக்கன் தேரிவிளையில் வசித்து வருபவர் மாரியப்பன் . 31 வயதாகும் இவர் வீடுகளில் மார்பிள், டைல்ஸ் பதிக்கும் காண்டிராக்டராக தொழில் செய்து வருகின்றார் .கொரோனா நோய்த் தொற்றல் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதகாலமாக வேலையில்லாமல் தொழில் நஷ்டம் ஏற்பட்டது, அதில் குடும்ப செலவை எதிர்கொள்ள பணம் இல்லாததால் அவதிக்குள்ளானார். […]
இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக தொழில் இன்றி வறுமையில் வாடும் இசை கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட தமிழ் கிராமிய பாண்ட் வாத்திய இசை கலைஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை எழுப்பப்பட்டது. வடசேரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் கிராமிய பாண்ட் வாத்திய குழுவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தையை போலீசார் நேற்று மீட்டனர். இதனையடுத்து கர்நாடக போலீசார் உடன் இன்று நாகர்கோவில் வருகை தந்த குழந்தையின் தாய் கார்த்திகாவிடம் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரிநாராயணன் குழந்தையை ஒப்படைத்தனர். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெற்ற மகள்கள் 3 பேரை தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளியூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று முந்தினம் மாலை தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் திடீரென […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெறும் தன் மீதான வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி மோசடி மன்னன் காசி தொடர்ந்த வழக்கை மற்ற வழக்குகலோடு சேர்ந்து பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளம்பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காசி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பாலியல் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருவதாகவும், நாகர்கோயில் […]
வடமாநிலத்தை சேர்ந்த பெண் மரத்தில் சடலமாக தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஆரல்வாய்மொழி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத மலைப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை இளைஞர் ஒருவர் அவ்வழியாக சென்ற போது பார்த்து ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். மரத்தின் அருகே மது பாட்டில்கள் கிடந்துள்ளது. காவல்துறையினர் […]
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பெற்றோரும், நண்பர்களும் இனிப்புகள் கொடுத்து பாராட்டினர். நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்துக்கொள்வது தவறு என்றும், உழைத்தால் வெற்றி நிச்சயம் என்றும் தேர்ச்சி பெற்ற பெண் ஐபிஎஸ் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூர் மங்கலநடையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவியாளர் பிரேமச்சந்திரனின் மகளான பிரவீனா, சிறுவயது முதலே ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற கனவோடு படித்துவந்தார். ஐந்து முறை […]
பேச்சை மீறி வேலைக்கு சென்ற மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகரன்-தங்கம் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 13 வருடங்கள் ஆன நிலையில் 11 வயதில் ராகுல் என்ற மகனும் 10 வயதில் தனுசியா என்ற மகளும் இருக்கின்றனர். ராஜசேகரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் நன்றாக குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் அவருக்கு வேலையும் […]
தலைக்கவசம் அணியாததால் ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குளச்சலை சேர்ந்தவர் செல்வாகரன். வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த இவரது மொபைல் எண்ணுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் செல்வாகரன் தலைக்கவசம் அணியாமலும், வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக குறிப்பிட்டு அதற்கு காவல்துறையினர் சார்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மெசேஜில் கிடைத்த தகவலின் அடிப்படையில் செல்வாகரன் இணையதளத்தில் ஆராய்ந்துள்ளார். […]
கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் அதிகாரி குழுவினர் விசாரணை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் போலி நபர்களை சேர்த்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ஏற்கனவே இந்த முறைகேடுகளில் உள்ள அதிகாரிகளை குழுவின் விசாரணை அதிகாரியாக சேர்த்தால் விசாரணை பயனற்றுப் போகும் என மனித பாதுகாப்பு கழகம் குற்றம் சாட்டியுள்ளது. நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதன் மாநில தலைவர் திரு ஜெயமோகன், கிசான் முறைகேட்டில் நில பயனீட்டாளர்கள் […]
காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் திரு சிலம்பு சுரேஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தோல்வி அடைந்ததாக குற்றம் சாட்டினார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் தோல்வியடைந்து விட்டதாக காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் திரு சிலம்பு சுரேஷ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஊரடங்கு காலத்தில் பசி பட்டினியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கால் வலிக்காக சென்ற பெண்ணை கொரோனா பரிசோதனை எடுக்காமலேயே தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே ஈச்சன்விலை பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவர் கால் வலிக்காக தனது மகளுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். கால் வழியாக சென்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், […]
தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் ஊருக்கு வெளியே பாலம் அமைத்தால் விவசாயம் அழிந்து விடும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே விரிகூடு ஊர் வழியாக ரயில்வே பாலம் அமைக்க கோரி மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவ்அமைப்பினர் தலைவர் டாக்டர் சாமுவெல் ஜார்ஜ் விரிகூடு ஊருக்கு வெளியே பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் […]
அப்பா நண்பர்கள் பலரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் என வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவை அடுத்து தற்போது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை செயலகம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் […]
மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மறைவையொட்டி கன்னியாகுமரி மக்களவை தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர் உயிரிழந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருக்கிறது என்று மக்களவை செயலகம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வசந்தகுமார் அவர்கள் கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பி ஆகியிருந்தால் […]
சாலையோரம் பழக்கடை நடத்தி வந்த பெண்ணை தவறான உறவுக்கு அழைத்த போலி செய்தியாளர் உள்ளிட்ட 2 பேர் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் வசித்து வருபவர் ஜெயசுஜி.. 30 வயதுடைய இவர் நாக்கால்மடம் பகுதியில் சாலை ஓரத்தில் பழக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில், நேற்று இரவு அங்கு வந்த இருவர் குடிபோதையில் பத்திரிகையாளர் எனக் கூறிக் கொண்டு இலவசமாக பழங்களை கேட்டுள்ளனர்.. அதுமட்டுமில்லாமல் தகாத வார்த்தைகளால் பேசி […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த வசந்தகுமார் மரணத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்த் குமார் இன்று உயிரிழந்தார். இது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மரணத்திற்கு பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் சித்தப்பா நீங்கள் இல்லை என்பதை […]
மூன்று வருடங்களுக்கு முன்பு அண்ணியை உயிருடன் எரித்து கொலை செய்த கொழுந்தன் தற்போது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் . கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த சடைய மங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் மனைவி சிவகலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். சுரேஷ்குமாரின் வீட்டிற்கு அருகில் அவர் சகோதரர் ஸ்ரீகண்டன் வீடு உள்ளது. ஸ்ரீகண்டனுக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. ஓணம் பண்டிகையின் போது பாரம்பரிய உடையணிந்து பூக்களால் கோலமிட்டு இறைவனை வழிபட்டு வணங்குவர்.. ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெறும்.. ஆனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கலையிழந்துள்ளது.. காரணம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது இடங்களில் மக்கள் கொண்டாட கூடாது […]
கல்லறைத் தோட்டத்தை தோண்டி உடல்களை எடுத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஒருவர் புகார் அளித்துள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான விஜயன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான முக்கால் சென்ட் இடம் ஒன்றில் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்தபொழுது அவர்களுக்காக கல்லறை தோட்டம் ஒன்று அமைத்து அதில் தாத்தா, பாட்டி, தந்தை மற்றும் தாய் ஆகியோரை அடக்கம் செய்து இருந்தார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதிகளில் சஜாக் ஆப்பரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசார் மற்றும் கடலோர காவல் துறையினர் இணைந்து அதிவிரைவு ரோந்து படகுகளில் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர். காலையில் 7 மணிக்கு தொடங்கிய இந்த ஒத்திகை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கடலில் சந்தேகிக்கும் படி யாராவது […]
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்ததை தடுக்க முயன்ற மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் அலை திடீரென ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. தூண்டில் வளைவு அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக மீனவர்கள் போராடி வந்தும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் […]
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சின்னதுரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அரசு தரப்பில் மீன் பிடித்து கரை வந்து சேரும் போது கடல் சீற்றத்தால் மணல் திட்டில் படகு மோதி, கடந்த நான்கு தினங்களில் இரு மீனவர்கள் பலியானார்கள். தொடர்ந்து அதே போன்று மேலும் ஒரு மீனவர் பலியானார். நீரோடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மீன் பிடித்து […]
பத்து வருடங்களுக்கு பிறகு சுயநினைவுக்கு திரும்பிய நபர் தனது குடும்பத்தினரிடம் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றனர். வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பலர் இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துவந்து தனியாக விட்டுச் செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு நினைவு திரும்பிய நிலையில், […]
அஞ்சுகிராமம் அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 13 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுகிராமம் அருகே மேட்டுக்குடியிருப்பு ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்த வேதமணி என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி உஷா (37) கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.சம்பவத்தன்று வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய இரண்டு மகன்களையும் நாகர்கோவிலில் இருக்கின்ற அக்கா வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் வடிக்கும் தொழில் மூன்றாம் கட்ட ஊரடங்கின் போது கொடுக்கப்பட்ட தளர்வுகளால் 50 சதவீதம் பணியாளர்களுடன் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளான கோதை ஆறு, குற்றியாறு, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ரப்பர் பால் […]