யுபிஎஸ்சி பணிகளுக்கான தேர்வில், இந்திய அளவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 7ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு, 2019 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக நேர்காணல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அதற்கான நேர்காணல், கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்காக நடைபெற்று வந்தது. இன்று […]
Tag: கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதியான அரபிக் கடலில் 45 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்தை பெருக்க இந்திய கடற் பகுதிகளில் இரண்டு கட்டங்களாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற் பகுதியான அரபிக் கடலில் கடந்த மாதம் 15-ம் தேதியிலிருந்து விதிக்கப்பட்ட 45 நாட்கள் தடைக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300 விசைப்படகுகளில் உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். தடைக்காலம் முடிந்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை ( VAO) தேங்காய் திருடர்கள் தாக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளமடம் அருகே உள்ள குருக்கள் மடத்தில் செந்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார்.. அவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவர் நேற்று இரவு அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஊரில் இருக்கின்ற அவரின் சொந்த தோப்பில் […]
நாளை முதல் மீன்பிடிக்க செல்ல தயாராகும் மீனவர்கள் டீசல் விலையை குறைக்க கோரிக்கை வைத்துள்ளனர். அரபிக் கடலில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் மீன்பிடிக்க செல்ல கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், குளச்சல் முதல் கேரளா, குஜராத் உள்ள அரபிக்கடலில் கடந்த ஜுன் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்ல […]
தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில், […]
கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவி கொடி கட்டிய சம்பவத்திற்கு முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணாதுரை சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாதவர்கள் தங்களை அடையாளம் காட்ட மறைந்த மாமேதை மீது […]
கன்னியாகுமரியில் சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். நெல்லை மாவட்டம் உவரியில் தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து இருக்கின்றனர். சிறுமி தயார் உட்பட 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில் நாஞ்சில் முருகேசனும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்றைய தினம் இதுவரை இல்லாத அளவாக 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் மேலும் தற்போது ஒரு சட்டமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார். நாகர்கோயில் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் குமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர். தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உட்பட 21 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பது […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் இரு காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இடலாகுடியைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையத்தில் […]
நாகர்கோவில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஜெயினுலாபுதீன்.. இவருக்கு வயது 69.. இந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்த யு.கே.ஜி. படித்து வரும் 5 வயதுடைய சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசையாகப்பேசி, அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் முதியவர்.. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டு கத்தியுள்ளார்.. இந்த அலறல் […]
குலசேகரம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் செட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பலீலா. இவருக்கு வயது 45.. இவருடைய கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், மார்த்தாண்டத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் புஷ்பலீலா பணிபுரிந்து வந்தார். இவர், சுய உதவிக் குழுக்களில் தலைவியாகவும் செயல்பட்டு வந்தார்.. இந்தநிலையில் புஷ்பலீலா அதிக கடன்தொகை பெற்றதாக சொல்லப்படுகிறது. தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 4 மாதங்களாக […]
கன்னியாகுமரி அருகே தந்தை ரீசார்ஜ் செய்யாத மன விரக்தியில் கல்லூரி மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆண்டனி டேனியல். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஆண்டோ பெர்லின் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வந்துள்ளார். ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் பெர்லின் எப்போதும் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது வழக்கம். அதேபோல் வீடியோ கேம் […]
கன்னியாகுமரி சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 6 பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்திருக்கின்றது. இதில் அப்துல் ரகிம், அபூஹனீபா உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் முக்கியமான சில விஷயங்களை NIA கண்டறிந்திருக்கிறார்கள். அதன்படி பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகையில் […]
கன்னியாகுமாரியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை அடுத்த ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இளம்பெண் மாயமான பின் அவரது குடும்பத்தினர் குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் இருவரையும் வலைவீசி தேட, காவல்துறையினர் தேடுவதை அறிந்ததும் காதலன் […]
கன்னியாகுமரியில் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவருக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னதாக சாத்தூர் பகுதியில் இருந்து, மணப்பெண் உட்பட 9 பேர் ஒரு வேனில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டும், பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடிய சிவப்பு மண்டலப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளில் […]
திருநந்திக்கரை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் திருநந்திக்கரை பகுதியில் வசித்து வருபவர் தோட்ட தொழிலாளி ஜான்சன். இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார்.. இவர்கள் இருவருக்குமிடையே கடந்த சில நாள்களாக குடும்பத் தகராறு இருந்துவந்துள்ளது.. இந்நிலையில் நேற்று (ஜூன் 29) மீண்டும் ஜான்சனுக்கும், விமலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜான்சன் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.. இது குறித்து கேட்பதற்கு அக்கம்பக்கத்தினர் விமலா வீட்டுக்கு சென்றுள்ளனர்.. அப்போது […]
கொரோனா வைரஸ் கிருமி அழிந்து உலகிலுள்ள மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி மருந்துவாழ் மலை அடிவாரத்தில் சுமங்கலிகள் முன்னிலையில் 58 பசுக்களைக் கொண்டு மகா கோ பூஜை நடைபெற்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.. இந்தநிலையில், கொரோனா வைரஸ் கிருமி அழிந்து உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் நலம்பெற வேண்டி குமரி மாவட்டம் மருந்துவாழ் மலை […]
கன்னியாகுமரி அருகே பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடமிருந்து 10 சவரன் நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்றவனை போலீஸார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் சபிதா. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு பேஸ்புக் மூலம் ஜோஸ் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனக்கு அவசரமாக பணம் தேவைப் படுவதாக கூறியிருக்கிறார் […]
தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதனால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அதிகபட்சமாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியின் மைலாடி மற்றும் புதுக்கோட்டையின் தலா பகுதிகளில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி […]
நிச்சயிக்கப்பட்ட பெண் குறித்து வெளிநாட்டில் இருக்கும் மாப்பிளைக்கு அனுப்பப்பட்ட கடிதம் – புகைப்படம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் உள்ள கேசவன்புரம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 25 வயது இளம்பெண் தக்கலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வெட்டூர்ணிமடம் எம்.எஸ் ரோடு பகுதியில் வசித்து வரும் எபனேசர் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டிலிருந்து திருமணம் செய்துகொள்ள பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக பணம் […]
கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் என வேளாண் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில் நேற்று மாலை ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்ததால் தமிழகத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடங்கியதாக அச்சம் எழுந்தது. இதனையடுத்து கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவது குறித்து வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் […]
தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதகமான வாய்ப்புகள் உள்ளன. இதனால் […]
கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் கோதையாறு, பட்டணங்கால் பாசன பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் […]
அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வட தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆம்பன் புயல் வடக்கு நோக்கி கரையை கடந்து விட்டதால் வெப்பம் அதிகரிக்கும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை […]
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த 24 மணிநேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நாமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் என தகவல் அளித்துள்ளது. மேலும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்தகாற்று மற்றும் இடியுடன் கூடிய கன […]
கன்னியாகுமரியில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மலையில் உடும்பைப் பிடித்து சமைத்து சாப்பிட்டவர்களை வனத் துறையினர் மடக்கிப் பிடித்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வைரஸ் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதாக உயிர் பலி வாங்கிவிடும் என்பதால், உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட இயற்கை முறை சாறுகள், முட்டை, இறைச்சிகள் ஆகியவற்றை மக்கள் […]
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதால், உசிலம்பட்டி அருகே பிரசவ வலியோடு வந்த 2 கர்ப்பிணிகளின் குழந்தைகள் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், அப்பகுதியில் இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைகளுக்கே முதன்மையாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே இருக்கும் பொட்டுலுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி பாண்டி மீனா நிறைமாத கர்ப்பிணியாக […]
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி உள்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2,084 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 1,823 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்ட நிலையில், 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]
கன்னியாகுமரியில் பெண் போலீஸ் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் வந்த 4 பேரின் ரத்த மாதிரிகளை நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அந்த நால்வருக்கும் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கும் […]
கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார்.இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் 66 வயது முதியவருக்கு சிறுநீரக நோய் இருந்ததாகவும், […]
கன்னியாகுமரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 பேர் இறந்த நிலையில் இன்று மட்டும் அடுத்தடுத்து 3 பேர் […]
கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் […]
கன்னியாகுமரியில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது நபர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து ஊர் திரும்பிய நிலையில் கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று குறித்த பரிசோதனை அறிக்கை வராத நிலையில் முதியவர் உயிரிழந்துள்ளார். இவரது மகன் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குமரியில் கொரோனா வார்டில் உயிரிழந்த நபரின் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை […]
கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 26பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் , உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இரண்டு நாளில் வீடு திரும்ப இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதனால் 23 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் 15,492 பேர் […]
கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் கொடூர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினம்தோறும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை , தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இன்றுசுய ஊரடங்கு நாடு […]
கன்னியாகுமரி மாவட்டம் களியாகாவிளை பகுதியைச் சேர்ந்த வசந்தா. 49 வயதான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கு லால் கிருஷ்ணன்(13) என்ற மகனும் ஒரு மகளும் உள்ள நிலையில் அவர்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து மகனின் இறுதி சடங்குகளை முடித்துள்ளார். […]
காந்தியடிகள் தண்டி யாத்திரை சென்றதன் நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸார் குளச்சலில் இருந்து இரணியல் வரை யாத்திரை பயணம் செல்ல முயன்றனர். இந்த யாத்திரை செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதால் இளைஞர் காங்கிரஸார் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மறியல் செய்த காங்கிரஸார் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
களியக்காவிளை அருகே சந்தன மரத்தை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில்சேர்ந்த பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து சந்தன மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது பொதுமக்களின் உதவியுடன் ஒருவரை பக்தவச்சலம் பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பிடிபட்டவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சூழால் பகுதியை சேர்ந்த பிரதீஷ் என்பது தெரியவந்தது. […]