மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வன்னியூர் தெற்றிக்குழி பகுதியில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மனைவி உள்ளார். மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கிறிஸ்டோபரை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு தனது மனைவி குடிப்பதற்கு பணம் இல்லை என கூறியதால் கிறிஸ்டோபர் வினிதா மீது மண்ணெண்ணையை […]
Tag: கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை பகுதியில் இருக்கும் கடைகளில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள ஒரு கடையில் புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் கடைக்காரர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
நடுரோட்டில் வாலிபர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் புதிய பேருந்து நிலைய சாலையில் இருக்கும் டாஸ்மாக் அருகே ரத்த காயங்களுடன் ஒரு வாலிபர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் லட்சுமிபுரத்தில் தெரு நாய் சுற்றி திரிந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிரதாப் என்பவரின் வீட்டிற்குள் தெருநாய் நுழைந்தது. இதனை அடுத்து வெளியே செல்வதற்கான வழியை தேடிய போது சுற்றுசுவரில் இருந்த துளை வழியாக வெளியே சென்று விடலாம் என நினைத்து நாய் தலையை நுழைத்தது. ஆனால் துளையில் சிக்கிக் கொண்டு நாயின் தலை சுவருக்கு வெளியேவும், உடல் சுவருக்கு உள்ளேயும் இருந்தது. இதனை அடுத்து தலையை வெளியே எடுக்க பலமாக […]
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்ததால் நேற்று காலை பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1674 கன அடி தண்ணீர் வந்தது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் ஆகிய அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து […]
சட்ட விரோதமாக காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அன்வர்தீன், ஜோஜோ மற்றும் உசைன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மூன்று […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் ஜெயராம்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயராம் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஜெயராம் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்துள்ளார். இதனை அடுத்து ஜெயராம் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று மதியத்திற்கு மேல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில் கோவையார், பேச்சுப்பாரை, பெருஞ்சாணி போன்ற இடங்களில் கன மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தது. மேலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே புன்னைநகர் பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான 63 சென்ட் நிலம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அறநிலை துறை வட்டாட்சியர் சஜித், முப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் நில அளவையர்கள் ராகேஷ், அஜித் ஆகியோர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு அதில் அறிவிப்பு பலகை வைத்தனர். […]
உறவினர் வீட்டில் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு கைதகம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரோன் (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்ற போது சாரோன் யாருக்கும் தெரியாமல் 7 பவுன் தங்க நகையை திருடிவிட்டார். இதுகுறித்து அறிந்த உறவினர் பொதுமக்களின் உதவியோடு சாரோனை சுற்றி வளைத்து பிடித்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாவூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருந்தாளுனராக வேலை பார்க்கும் சுஜிலா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுஜிலா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திங்கள்சந்தை அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மினி பேருந்தின் ஓட்டுனர் சிபின் என்பவர் சுஜிலாவை தற்கொலைக்கு தூண்டியதாக […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் சந்ததிகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து அவரிடம் போலீசார் […]
அரசு பேருந்தும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து நேற்று அதிகாலை கேரளா அரசு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கேரளப் பகுதியான காராளி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட 12 பேர் […]
காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தருமாறு போலீஸ் சூப்பிரண்டுக்கு பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் வீராளி காட்டுவிளை பகுதியில் ஜாய்ஸ் என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது “எனது கணவரான ஜேக்கப் கடந்த மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின் மறுநாள் அவர் திருப்பூர் சென்றடைந்ததாகவும் 10 நாட்களில் ஊருக்கு […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாகூர் பகுதியில் பிளம்பரான ஆனந்த்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் சுஜிலா(28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் சுசிலா நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருசடி விளாகம் பகுதியில் கூலி தொழிலாளியான கிப்சன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஷைனி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கிப்சனின் தாய் டெல்பி(65) என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்பி தனது மருமகளுடன் மார்த்தாண்டம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். ஒரே இருக்கையில் மாமியாரும் மருமகளும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். இந்நிலையில் பேருந்து வெட்டுமணி நிறுத்தத்தில் நிற்க முயன்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் டெல்பியின் கழுத்தில் கிடந்த 2 1/2 […]
பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சைமன் நகரில் தனியார் நிறுவன மேலாளரான சங்கரநாராயணன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் சங்கரநாராயணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்த சங்கரநாராயணன் உள்ளே […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டகம் மேலன்விளை பகுதியில் கொத்தனாரான பிரேம்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சபிதா கணவருக்கு தெரியாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாலி சங்கிலி அவரது தாயாரிடம் அடகு வைக்க கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த பிரேம்குமாருக்கும், சபீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் வேலைக்கு சென்ற பிரேம்குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சபிதாவும், உறவினர்களும் […]
கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடம் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை. வருவாய் துறை அரசாணை எண்:515 நாள்:25.8.2008 இன் படி முறையாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை. குறிப்பிட்ட அரசாணையின்படி கலந்தாய்வு முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த […]
ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனரான மகேந்திரன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே. ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிந்தாமணி தனது கனவை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். கடந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி நடுத்தெருவில் சிதம்பரம் பிள்ளை(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய ஊனமுற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது தாய் பார்த்து கொள்ளுமாறு முதியவரிடம் விட்டு சென்றுள்ளார். அப்போது முதியவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிதம்பரம் பிள்ளையை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 5 ஆயிரம் […]
பேன்சி கடையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்ஷராம்(45) என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடையை பூட்டுவிட்டு பக்ஷராம் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 80 […]
தனது மகனை காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தாய் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்த ஜெயபால், சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு சேதுபதி (29) என்ற மகனும், ஜிது என்ற மகளும் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரையும் பெற்றோர் கடன் வாங்கி பிடெக் படிக்க வைத்துள்ளனர். இதில் மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கும், அதே கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போன மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய மாணவி […]
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 3 ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பல்வேறு முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 ஹோட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்வதற்காக ரசம், மோர், சாம்பார் ஆகிவற்றை கட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழித்துவிட்டனர். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேனம்விளை பகுதியில் பால் மகேர் பாலால் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் சிவில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவருக்கும் சென்னையில் ஐடி ஊழியராக வேலை பார்க்கும் ஆர்த்தி சுரேஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்ற நிலையில் மண்டபத்தில் வைத்திருந்த ஒரு பேனர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது மணமகனின் நண்பர்களின் சார்பில் 90ஸ் கிட்ஸ் என்ற தலைப்பில் ஒரு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடியப்பட்டினம் மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் இணைந்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் சங்கத்தில் இருக்கும் 250 உறுப்பினர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். உறுப்பினர்கள் சங்கத்திற்கு வழங்கிய 4 சதவீத பணத்தை வங்கியில் வரவு வைப்பது வழக்கம். ஆனால் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சங்க பொருளாளரின் கையெழுத்தை போலியாக போட்டு 80 லட்சத்து 55 ஆயிரத்து 728 ரூபாய் பணத்தை […]
ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அதங்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான அஜித் குமார்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி மது போதையில் மாமனார் வீட்டிற்கு சென்ற அஜித்குமாரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபத்தில் அஜித் குமார் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த 2 நாட்களாக கதவு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜ் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் அதிகமாக கடைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் பேருந்து நிலையத்திற்குள் நீண்ட நேரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக போலீசார் பேருந்து நிலையத்திற்குள் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை காந்திநகர் பகுதியில் ராஜேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், சிவஜித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் தொழிலாளியான அகஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(29) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வினி(10), ஆஷிகா(8) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது அகஸ்டின் புதிதாக வீடு கட்டுவதால் தனது அண்ணன் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அகஸ்டின், மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் புதிய வீட்டில் சீரமைப்பு பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வருகின்ற பக்தர்களுக்கு கோவில் பற்றிய ஸ்தல வரலாற்றினை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக திருக்கோவில் நிர்வாகம் கோவிலின் உள்ளே திருக்கோவில் நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் செலவில் ஆன்மீக புத்தக நிலையம் ஒன்று நிருவப்பட்டுள்ளது. இந்த புத்தக நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்கியது. மேலும் […]
கல்லூரி வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குறிச்சி மஞ்சனாவிளை பகுதியில் மணி(33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசீர் மனுவேல் என்ற மகன் இருந்துள்ளார். பிளம்பரான ஆசீருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 11-ஆம் தேதி ஆசீர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முத்தளக்குறிச்சியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்த ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் […]
மது போதையில் வாலிபர் தள்ளிவிட்டதால் தொழிலாளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தவிளை பகுதியில் தொழிலாளியான முத்தையன்(63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் முத்தையன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக குழித்துறைக்கு நடந்து சென்றுள்ளார். பின்னர் பொருட்களை வாங்கி விட்டு சாலையோரமாக நடந்து சென்ற போது மருதங்கோடு கோணம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் குடிபோதையில் முத்தையனை வழி மறித்துள்ளார். […]
பேச்சிப்பாறை அணைப்பகுதியில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டும் பேச்சிப்பாறை அணை பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை பெய்ததால் நீர்மட்டம் 71 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி […]
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பண்டிகை மிக பிரசித்தி பெற்றதாக இருக்கும். தமிழகத்தில் பொங்கல், தீபாவளி போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மக்கள்களால் கொண்டாடப்படுகின்றது. அந்த நாளில் புத்தாடை அணிந்து விதவிதமான உணவுப் பொருட்களை சமைத்து உறவினர்களை அழைத்து உணவிட்டு மகிழ்வார்கள். அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் எட்டாம் தேதி கேரளா […]
சட்ட விரோதமாக கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை சட்டவிரோதமான செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு மாவட்டங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் […]
லாரி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இளைய சமுதாயத்தினர் முதல் பெரியவர் வரை சில நேரங்களில் மனம் தடுமாறி தற்கொலை செய்து கொள்கின்றனர். குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை, சொத்து தகராறு போன்ற பல்வேறு காரணங்களால் உயிரை மாய்த்து கொள்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சன்விளை பகுதியில் சிவதாஸ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் வீடு கட்டுவதற்கும் லாரி […]
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் அரசு பேருந்துகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் இருக்கும் கழிவு நீரை மழை நீர் ஓடையில் விடக்கூடாது எனவும், உறிஞ்சுழி அமைத்து அதில் கழிவு நீரை விடுமாறும் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில் கொடுங்குளம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராஜன் என்பவரின் வீட்டு கழிவு நீரை ஓடையில் விடக்கூடாது என நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் தொடர்ந்து […]
தந்தை மகனை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கணவன் மனைவியிடையே தகராறு, தகாத உறவு, இடப்பிரச்சனை, சொத்து பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் கொலை சம்பவங்கள் அரங்கேரி வருகிறது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதை தவிர்த்து கோபத்தில் சில கொடூர செயலை செய்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விளை […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆயிரம்பிலாவிளைவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களான நாகராஜன், ஜெகதீஷ் ஆகியோருடன் பருத்திக்காட்டுவிளை பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் பூச்சிக்காட்டுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகில் உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியில் அகஸ்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மதுசூதன பெருமாள்(24). இவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான அழகியபாண்டியபுரத்திற்கு சென்றார். இந்நிலையில் நேற்று மாலையில் தெரிசனங்கோப்பு அருகில் உள்ள பழையாற்றில் குளிக்க சென்றார். சிறிது நேரத்தில் மதுசூதன பெருமாள் உடல் கரையோரம் ஒதுங்கியது. அந்த நேரத்தில் ஆற்றில் குளிக்க வந்தவர்கள் […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் காரில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாதலமாகவும், […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துவரும் வளர்ச்சிதிட்டப் பணிகள் தொடர்பாக துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலிலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக நடந்துவரும் இரணியல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட 97 பணிகள் தொடர்பாக கேட்டறியப்பட்டது. குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் கடந்த 2018-2019ன் கீழ் […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்மநபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகேயுள்ள ஆளூர் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த சங்கரநாராயணனின் மனைவி ஜமுனா (47). இவர் குமரி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு […]
நாடு முழுவதும் வேலை வாங்கி தருவதாக பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதாவது பட்டதாரிகளிடம் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் தனது வங்கி பணத்தை அனுப்ப வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதை நம்பி பல பேர் பணத்தை அனுப்பி ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அரசியலில் உள்ளவர்களும் தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்கின்றனர். நாகர்கோவில் சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியில் 32 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் […]
மாற்றுத்திறனாளிகள் மனநலம் குன்றியோரை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்டிங் ஜான் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நித்திரவிளை காவல்நிலையத்திற்கு 2014 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்ட போது போலீசார் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதையடுத்து வீட்டிற்கு திரும்பிய சில நாட்களில் மரணமடைந்துள்ளார். இந்த மரணத்திற்கு காவல்துறை தான் காரணம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடு தர வேண்டும் என்று அவரது […]
திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படப்பகுளம் பகுதியில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவரும் மகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதனால் ரோஸ்மேரி தனது மகன் வினுராஜூடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வினுராஜூவை அவரது தாயார் கண்டித்துள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் வினுராஜூக்கு சரியான வரன் அமையவில்லை. […]
மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் நல்ல தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் வில்லிசேரி குளம் பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான இடத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்த போது 6 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு நல்லதம்பி அதிர்ச்சியடைந்தார். ஆடுகளின் கழுத்து பகுதியில் காயம் இருந்தது. மர்ம விலங்கு ஏதோ கடித்ததால் […]