ஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் சாமியை தரிசனம் செய்வதற்காக தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமியை தரிசனம் […]
Tag: கன்னியாகுமரி
டச்சு படையை வென்று கடற்கரையில் அமைக்கப்பட்ட வெற்றி தூணிற்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்ற துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை டச்சு படையினர் கைப்பற்று நோக்கில் குளச்சல் கடல் பகுதியில் முகாமிட்டு தங்கி இருந்தனர். இதனை அறிந்த திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா வேணாட்டின் தலைநகரான கல்குளம் பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து தனது தளபதிகளுடன் குளச்சல் கடற்கரைக்கு சென்றார். இதனையடுத்து அவர் தனது படைகளுடன் சேர்ந்து 2 மாதங்களாக டச்சு […]
குறைதீர்க்கும் முகாமில் 130 மனுக்களுக்கு அதிகாரிகள் தீர்வு கண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தக்கலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது தீர்வு காணலாம் என்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் புகார் மனுக்கள் குறித்து மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களிடம் விசாரணை நடத்தி தீர்வு கண்டனர். மேலும் இந்த முகாமில் இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், ஷேக் அப்துல் […]
மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும். அதன் பிறகு தேர்தலின் போது ஏற்படும் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண் இணைக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் […]
கடலின் நீர்மட்டம் தாழ்ந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு ஒரு மணி நேரம் படகு சேவை தாமதமானது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன் பின்னர் படகில் சென்று கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு திரும்பி வருகின்றனர். இதற்காக […]
பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மணக்குடி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தெங்கம்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசியுள்ளார். இதனால் கண்ணாடி உடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் […]
தமிழக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தடுப்பதற்காக மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலகிருஷ்ணன் புதூர் பகுதியில் மீனவரான அலெக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூபின் மேரி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் கிளின்டன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகனான ரூபிக்சன் காஸ்ட்ரோ என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 2 […]
வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலை பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பகுதியில் இருக்கும் தெருவில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் வாலிபர்கள் இரவு நேரத்தில் நான்கு வழி சாலை பணி நடைபெறும் பகுதியில் வைத்து மது குடிப்பது வழக்கம். நேற்று இரவு திடீரென அந்த இடத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று […]
சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு அரசு ரப்பர் கழகத்திலிருந்து ரப்பர் மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கோதமடங்கு பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. மேலும் நிலைதடுமாறி லாரி ஒரு பக்கமாக சாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் லாரியை […]
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் வெள்ளச்சிவிளை பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை. இவரது மனைவி ஷைலஜா (42) நேற்று முன்தினம் தன் ஸ்கூட்டரில் வில்லுக்குறி சென்றுவிட்டு வீட்டிற்கு மீண்டும் புறப்பட்டார். இதையடுத்து ஷைலஜா வெள்ளச்சிவிளையை சென்றடைந்தபோது எதிரே மோட்டார்சைக்கிள் ஒன்று வந்தது. அந்த மோட்டார்சைக்கிளை தக்கலை பகுதியில் வசித்துவரும் செல்சோ என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்நிலையில் ஸ்கூட்டர் மீது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது. இதனால் விபத்தில் ஸ்கூட்டரிலிருந்து ஷைலஜா தூக்கிவீசப்பட்டார். இதில் ஷைலஜாவுடைய தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனடியாக […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேர்கிளம்பி காப்பு விளை பகுதியில் அப்துல் சலாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலீல் ரகுமான்(27) என்ற மகன் இருந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்த ரகுமான் அந்த வேலை பிடிக்காமல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ரகுமான் முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் […]
கஞ்சா கடத்தி சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த நிஷான் மற்றும் ரதீஷ் என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 2 வாலிபர்களையும் கைது […]
குறுக்கே நாய் பாய்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து தம்பதி காயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் கணவன், மனைவி இருவரும் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் வெள்ளமடம் கிறிஸ்து நகர் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே சென்றது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 […]
பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள ஒரு பாறையில் 133 அடிஉயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிலையானது உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 வருடங்களுக்கு ஒரு முறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம் ஆகும். சென்ற 2017 ஆம் வருடம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட்டது. இதையடுத்து கடந்த வருடத்தில் ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த […]
கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடைக்கோடு குடுக்கச்சி விளை மலமாரி பகுதியில் தி.மு.க பிரமுகரான தாஸ்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தாசுக்கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான ஸ்டான்லி என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஸ்டான்லி தாசை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியவிளை பகுதியில் ஜெரின்(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருமனை பகுதியில் 11-ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ஜெரின் வீட்டிற்குள் நுழைந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் மாணவி நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் […]
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகில் சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட வீரமார்த்தாண்டன் புதூர் பகுதியில் முப்பாத்து ஓடை அருகே சுடலைமாடசாமி கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு ஒருவர் இடத்தை தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில் உள்ள இடத்தின் வாசல் பகுதி ஓடை புறம்போக்கில் உள்ளதாக பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து எந்த முன் அறிவிப்பும் இன்றி பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் வல்சன் போஸ், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் சதீஷ், […]
பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பண்டாரவிளை பகுதியில் சிலுவைராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ஜெஸ்டின் அருள் ஜோஸ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய், தந்தை இருவரும் இறந்து விட்டதால் ஜெஸ்டின் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை ஜெஸ்டின் விஷம் குடித்து அவரது வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஜெஸ்டினை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடமனாங்குழி விளையில் கொத்தனாரான சுகுமாறன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட சுகுமாறன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நேற்று முன்தினம் படுக்கை அறையில் இருந்த சுகுமாறன் திடீரென அலறி சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்ட குடும்பத்தினர் அங்கு […]
கன்னியாகுமரி ரெயில்வே ஸ்டேஷன் அருகே கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த போது அவர்களில் முருகன் என்பவர் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை எங்கோ பார்த்ததுபோல் உணர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவர் கூறிய தகவலை வைத்து காணாமல்போன தனது உறவினர்தான் என்பதை முருகன் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார். முருகன் சொன்ன தகவல் படி அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் […]
இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்டங்களிலும் மறுபடியும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துகளில் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும் தங்களை விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் ஹெல்மெட் கண்டிப்பாக அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கேசரி தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவருடைய மகள் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதில் செல்வராஜின் உறவினர் ஒருவர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார். இவர் செல்வராஜின் மகள் வசித்து வரும் நாட்டிற்கு செல்வதாக இருந்தது. இதன் காரணமாக தன் மகளுக்கு சில பொருட்களை அந்த உறவினர் வாயிலாக கொடுத்து அனுப்ப செல்வராஜ் முடிவு செய்தார். இதையடுத்து ரூபாய் 2,258 மதிப்புள்ள சில பொருட்களை திருவனந்தபுரத்திற்கு அனுப்புவதற்காக நாகர்கோவிலிலுள்ள ஒரு கூரியர் சர்வீஸ் […]
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் கோழிப் போர்விளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கஞ்சாபொட்டலங்கள் இருந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடமிருந்து மொத்தம் 1 ½ கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அதன்பின் 2 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக மழைபெய்து வருகிறது. நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி மாம்பழத்துறை ஆற்றில் 2.2 மி.மீட்டரும், அடையாமடையில் 3.2 மி.மீட்டரும், ஆனைக் கிடங்கில் 3 மி.மீட்டரும் மழை பதிவாகியது. மலையோர மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனிடையில் பேச்சிப் பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு 1,150 கனஅடி தண்ணீர் வருகிறது. அணைகளிலிருந்து வினாடிக்கு 753 கன அடி நீரானது […]
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையில் வசித்து வரும் மீனவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அந்த இளம்பெண் பாறசாலையிலுள்ள ஒரு உறவினரிடம் நீண்டநேரம் செல்போனில் பேசி வந்தார். இப்பழக்கம் அவர்கள் இடையில் கள்ளக்காதலாக மாறியது. இதனை மீனவர் கண்டித்தார். இதன் காரணமாக இளம்பெண் கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு […]
டீக்கடையில் சிலிண்டர் வெடித்து சிதறியதால் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை பகுதியில் சபிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் மூசா(47) என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். மேலும் சேகர்(52), பிரவீன்(25) ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று அதிகாலை மூசா கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது அது காலியானது தெரிந்தது. இதனால் கடையில் […]
படகுகள் மோதி கொண்டதால் மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மரமடி பகுதியில் மீனவரான ராசையன்(61) என்பவர் ரசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் செல்வி(54) என்ற மனைவியும், 5 பிள்ளைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ராசையன் அதே பகுதியில் வசிக்கும் மிக்கேல் தாஸ், டென்னிஸ் ஆகிய 2 பேருடன் தனது சகோதரரான ஆல்பின்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடல் சீற்றம் அதிகமாக […]
பெண்ணின் கைப்பையை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாகோடு பகுதியில் எட்வின் பிரைட்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 2 மகள்களுடன் மார்த்தாண்டத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் எட்வின் பிரைட்டின் ஒரு மகள் அங்கிருந்த நாற்காலியில் தனது கைப்பையை வைத்துவிட்டு முன் பகுதிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கைப்பை காணாமல் போனதே கண்டு பெண் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அந்த […]
காணாமல் போன முதியவர் தோட்டத்தில் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேர்க்கிளம்பி பகுதியில் செய்யது முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டதால் செய்யது முகமது மகன்களில் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது கடந்த 13-ஆம் தேதி அதிகாலை கடைக்கு டீ குடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இதனை அடுத்து அவர் […]
சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு சென்று அனைத்து பகுதிகளையும் கண்டு ரசித்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் குளு குளுவென சீசன் நிலவியது. இதனை அடுத்து தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி டீக்கடை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள ஷபிக் என்பவரின் டீக்கடையில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையில் வேலை பார்த்து வந்த மூசா, பிரவீன், சேகர் மற்றும் அங்கு தேநீர் அருந்த வந்த சுப்பையன், சுதா, சந்திரன், சுசீலா […]
கன்னியாகுமரி குளச்சல் துறைமுகம் தெருவை சேர்ந்தவர் ஜோசப்பெவின் (39). இவர் தற்போது நாகர்கோவில் குருசடிபகுதியிலுள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இதில் ஜோசப்பெவின் செட்டிகுளம் பகுதியில் சொந்தமாக துணிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் ஜோசப்பெவின் நேற்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்றபோது துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. அத்துடன் அங்கிருந்த சில துணிகளும் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து ஜோசப் பெவின் கோட்டார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி காவல்துறையினர் சம்பவ […]
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர் ஓவியங்களை வரைந்து அனுப்பினர். அந்த ஓவியங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் வரைந்த ஓவியங்களை ஒரு குழுவினர் ஆய்வு […]
மகனை கொலை செய்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழமுட்டும் பகுதியில் அல்மாண்ட்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிக்சன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிக்சன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நிக்சனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் […]
தண்ணீரில் மூழ்கினால் எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் கிராமத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரன் பிரசாத், ஊர் காவல் படை அதிகாரி பிரகாஷ் குமார், மைதிலி சுந்தரம், இன்ஸ்பெக்டர் மீனா, பேரூராட்சி தலைவர் சிவக்குமார், கவுன்சிலர் ரோகினி அய்யப்பன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பொது […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபி கிறிஸ்டின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலிடெக்னிக் படித்து முடித்த அபி கிறிஸ்டின் பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் […]
வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இன்ஜினியர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னங்காடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ரமேஷ்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பரான சுபாஷ்(32) என்பவருடன் பிளாஸ்டிக் கேனில் குடிநீர் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் இரணியல் மேலத்தெரு […]
மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாரியூர் கிராமத்தில் விவசாயியான தங்கராஜ்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை தங்கராஜ் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவர் சாலையில் திரும்ப முயன்ற போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் தங்கராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வரன்கள் தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது மிகவும் வைரலாகி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க பெண் வீட்டார் விசாரிக்க வரும் போது சிலர் தவறான விஷயங்களை கூறி வரன்களை தடுத்து விடுவதாக தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்கதையாகி வருவதால் இளைஞர்கள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக வரங்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி எனக்கூறி பேனர் மற்றும் […]
பேருந்து மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்றுவிளை பகுதியில் அஜின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அஜின் தினமும் பள்ளி மாணவர்களை அழைத்து சென்று மாலையில் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்வார். அதன் பின்னர் வில்லுக்குறிச்சி பகுதியில் வேனை நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு பேருந்தில் செல்வார். இந்நிலையில் நேற்று காலை அஜின் […]
குடிநீர் குழாயை சரி செய்ய கோரி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கால்பாலத்தடி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து குழித்துறை சந்திப்பு வரை புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று இதற்கான பணிகள் நடைபெற்றது. அப்போது திடீரென பழைய குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனை பார்த்து அப்பகுதி மக்கள் உடனடியாக […]
வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி பகுதியில் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் மொத்தம் 260 கடைகள் உள்ளது. ஆனால் தற்போது 140 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் கடைகளுக்கு முன்பு உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து பொருட்கள் வைப்பதாகவும், இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் வியாபாரிகள் பொருட்களை வைக்கக் கூடாது என […]
பேருந்து மீது பேனர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பற்றிச்சன்விளை சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலை ஓரத்தில் அஜித் என்பவர் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் காற்றில் பறந்து அரசு பேருந்து விழுந்துள்ளது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து விட்டது. ஆனால் பயணிகள் அதிஷ்டசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் பரமேஸ்வரன் காவல் […]
நாகர்கோவிலில் வீசிய சூறைக்காற்றில் மின்மாற்றி சாய்ந்து 3 மின்கம்பங்களும் சேதமடைந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதேபோன்று நாகர்கோவில் பகுதியில் இரவு முழுவதும் சூறைக்காற்று பலமாக வீசியது. இந்நிலையில் நாகர்கோவிலில் வீசிய சூறைக்காற்றில் கோட்டார் கம்பளம் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையின் ஓரமாக நிறுவப்பட்டிருந்த மின்மாற்றி மீது அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்தது. இதனால் மின்மாற்றி அடியோடு பெயர்ந்து அதன் அருகில் […]
சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியு ள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2002 -ஆம் ஆண்டு முதல் 2006 -ஆம் ஆண்டு வரை பணி நீக்க காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணையின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும், மேலும் சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு சாலை பணியாளர்கள் […]
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடுவராக நாகர்கோவிலை சேர்ந்தவர் நியமனம் செய்துள்ளனர். சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 10-ந் தேதி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் நடுவர்களில் ஒருவராக நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் ஸ்டெல்லா ஷர்மிளா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் போட்டியின் இயக்குனர் பாரத்சிங் சவுகான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தொடர்ச்சியாக உலக இளையோர் செஸ் போட்டியில் நடுவராகவும், காமன்வெல்த் […]
கடல் சீற்றத்தால் அலையில் இழுத்து செல்லப்பட்ட படகை மீட்க சென்ற போது கடலில் தத்தளித்த 7 மீனவர்களை மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் இந்திய கடல் தகவல் சேவை மையம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்திருந்தது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீன்பிடி உபகரணங்களை கடற்கரை மணற்பரப்பில் நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் கடியபட்டணத்தில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றத்தால் கரையில் நிறுத்தியிருந்த […]
அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி பறக்கை ரோடு பகுதியில் முகமது ரகீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹிஷாம் அகமது என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹிஷாம் அகமது செட்டிகுளம் பகுதியில் உள்ள டியூஷனுக்கு காலையில் சென்று வருவார். அதேபோல் வழக்கமாக ஹிஷான் முகமது காலையில் டியூசனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டியூஷன் […]
சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 7 5-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுத பெரு விழா நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியான 5-வது நாளான நேற்று குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு துறை […]