வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வாட்டர் டேங்க் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவருடைய 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தன் வீட்டில் மொத்தம் 250 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷு பண்டிகை கொண்டாடுவதற்காக […]
Tag: கன்னியாகுமரி
திடீரென சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே ஞாறோடு பகுதியில் சுதீப் – கோபிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விபிஷிகா (8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் விபிஷிகா அதிகாலை 2 மணியளவில் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். அதன்பிறகு விபூசிகா திடீரென அலரி துடித்தபடி மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் விபிஷிகாவை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் […]
சட்ட விரோதமாக விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டினம் பகுதியில் புதுக்கடை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சுப்பையாவை கைது செய்து அவரிடமிருந்த 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பூட்டிய வீட்டிற்குள் பேருந்து ஓட்டுநர் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே மேட்டுக்கடை முல்லை நகர் பகுதியில் பிரபா சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருவட்டார் பணிமனையில் அரசு ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் பிரபாசிங் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாசிங் செல்போனுக்கு அவருடைய மனைவி […]
தமிழக முதல்வர் விவசாயிகளுடன் காணொலிக்காட்சி மூலமாக உரையாடினார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக உரையாடினார். இந்த நிகழ்ச்சியானது குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ஞானதாசன் மாடரேட்டர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், விஜய் வசந்த் எம்.பி, […]
குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே குச்சிராயன்விளை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் தனது நண்பருடன் சேர்ந்து கொடுமுடி கரையாகுளத்தின் படித்துறையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ரமேஷ் எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷின் நண்பர் குளத்தில் இறங்கி ரமேஷை மீட்க முயற்சி […]
லாட்ஜில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறது. இவர் கடந்த 10-ஆம் தேதி வேலை தேடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இவர் மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கும் ஒரு லாட்ஜில் அறையெடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் சண்முகம் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து […]
பயங்கர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே சீதப்பால் பகுதியில் முத்து கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர் தன்னுடைய நண்பர் முகர்ஜிபாஸை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன்பிறகு முகர்ஜி பாஸ், முத்து கிருஷ்ணன் உள்பட 3 பேர் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரிக்கு […]
தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் வடசேரி காவல்துறையினர் ஆம்னி பேருந்து நிலையம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றிக் கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த விபின், அருண் துளசி, ஷாஜி என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூருவிலிருந்து ஆம்னி பேருந்து மூலமாக நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். இவர்கள் கையில் இருந்த […]
சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர போதைப் பொருள் மற்றும் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்பிறகு போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக ரயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து […]
விடுமுறை தினத்தை முன்னிட்டு கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும் காட்சி தெரியும். இந்நிலையில் விடுமுறை தினம் என்பதால் இந்த அபூர்வ காட்சியை பார்ப்பதற்காக கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனையடுத்து மாலை 6 மணி அளவில் அரபிக்கடல் பகுதியில் மஞ்சள் நிற சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. அப்போது வங்கக்கடல் பக்கமாக சந்திரன் மேகக் கூட்டங்களில் இருந்து வெளியே […]
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த புனித நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் செல்வார்கள். அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் பகுதியில் சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி […]
நேருக்கு நேர் கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கு வித்யா என்ற மனைவியும், ஜெயஷர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு கேரளாவில் இருந்து காரில் குடும்பத்துடன் சென்றுள்ளனர். இந்த கார் ஆரல்வாய்மொழி அருகே சென்ற போது எதிரே வந்த கார் ஈஸ்வரனின் காரின் மீது பலமாக […]
இருசக்கர வாகன விபத்தில் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்கணங்கோடு பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் முளகுமூடு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வாகனம் குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு […]
திடீரென ஒருவர் மயங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புனித வெள்ளியை முன்னிட்டு குருசுமலை பகுதிக்கு சிலுவையை தரிசனம் செய்வதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் சிலுவையை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வரும் வழியில் ஜெயராஜன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் ஜெயராஜனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஜெயராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து […]
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இப்பகுதிக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படும் பூக்களை உள்ளூர் மற்றும் கேரள வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இதனையடுத்து வெளிநாடுகளுக்கும் பூக்கள் தோவாளையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை வேகமாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது ஒரு […]
பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் அருகே வடுகன்பற்று பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், மதுவர்தனி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் ஸ்கூட்டரில் இருளப்பபுரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இவர்கள் சுசீந்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் ரேணுகாவின் ஸ்கூட்டரின் மீது பலமாக மோதியது. […]
தமிழக முதல்வர் குறித்த அவதூறு பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக முதல்வர் மற்றும் நபிகள் நாயகம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்புவதாக குமரி மாவட்ட கோட்டார் துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த அருள் முருக கிருஷ்ணன் என்பவர் அவதூறு கருத்துகள் பரப்பியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் திருவாரூர் சென்று அருள் முருக கிருஷ்ணனை […]
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் ராணித்தோட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு அரசுப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். இவர் பள்ளி […]
பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் காவல்நிலையத்தின் முன்பாக பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பன்றிவாய்க்கால் பொத்தையில் உள்ள மலைப்பகுதியில் வழிபாட்டுத்தளம் அமைக்க முயற்சி நடப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வருவாய்த்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு மண்டல தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் நாஞ்சில் ராஜா, அகில பாரத இந்து மகா சபை […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் கண்ணுபொத்தை காலணியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய முதல் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் இரண்டாவதாக சித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சங்கர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் […]
வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் மரியம்மை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். இவர் வழிபாடு முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மரியம்மை வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 1/2 பவுன் தங்க நகை மற்றும் […]
கொலை குற்றவாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி அருகே விளாங்கோடு காலணியில் மார்ஷல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் அடிதடி, கொலை முயற்சி போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி மார்ஷல் ஒருவரை அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டியுள்ளார். இது தொடர்பாக மார்ஷல் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு […]
பல பெண்களிடம் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஸ்கூட்டரை மறித்து அதில் வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்த சுபின் என்பது தெரியவந்தது. இவர் கடந்த மாதம் 22-ஆம் தேதி மளிகை கடையில் வேலை பார்க்கும் மேரி ஸ்டெல்லா என்ற பெண்ணிடம் முட்டை […]
விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இவர்கள் அதிகாலை வரும் சூரிய உதயத்தில் பார்த்து ரசித்துவிட்டு கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் […]
ஸ்கூட்டரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் அருகே சரல்விளை பகுதியில் ஜெபர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரல்விளை பகுதியில் இருக்கும் ஒரு கால்வாயில் குளிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவர் குளித்து விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது கரையில் நின்ற ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெபர்சன் கொற்றிக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
டீக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை செக்கோட்டு விளை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ் திடீரென விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். […]
முதியவரை கொடூரமான முறையில் காட்டுப்பன்றி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி அருகே பெருந்தலைக்கோடு பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலக்கரை பகுதியில் இருக்கும் தென்னந்தோப்புக்கு ஓலைகளை சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு காட்டுப்பன்றி மணியை கொடூரமான முறையில் தாக்கியுள்ளது. இதில் மணிக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர […]
டாக்டர் அம்பேத்கரின் படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மேலகாலனி சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அம்பேத்கர் சிலை பொறிக்கப்பட்ட கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி தோவாளை தாசில்தார் தாஜ்நிஷா, வருவாய் ஆய்வாளர் லெனின், கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்காதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இவர்கள் […]
மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணத்தில் ரப்சேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரப்சேல், சூசை ஆண்டனி என்பவருக்கு சொந்தமான படகில் ஆழ்கடலுக்கு 5 மீனவர்களுடன் தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ரப்சேல் மீது மின்னல் தாக்கியது. இதைப்பார்த்து […]
பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பயாட்றிஸ் தங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களிடம் 2 மத நூல்களை ஒப்பிட்டு ஒரு மதத்தை மட்டும் உயர்வாகப் பேசியுள்ளார். இதனையடுத்து ஒரு குறிப்பிட்ட மதத்தின் கருத்துக்களை எடுத்துக் கூறி அந்த மதத்தை பின்பற்றுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் […]
பிரபல நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படம் ரிலீஸான தியேட்டரில் திரை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் 3 திரையரங்குகளில் ரிலீஸானது. நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக தியேட்டரில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக 3 தியேட்டர்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக […]
எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்த மத்திய அரசை கண்டித்தும், சொத்து வரியை குறைக்க கோரியும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஜாகீர் உசேன், பொருளாளர் சைபர் அகமது, செயலாளர்கள் ஜப்பார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் […]
மர்மமான முறையில் கொத்தனார் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாளக்குடி அருகே சந்தைவிளை பகுதியில் ஜேசுராஜகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மிக்கேல் ஜெயா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இரவில் உணவருந்தி விட்டு தூங்குவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் மிக்கேல் ஜெயா மறுநாள் காலை கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு ஜேசுராஜகுமார் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மிக்கேல் ஜெயா கதறி அழுதுள்ளார். இதுகுறித்து […]
லாரி ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு அருகே கோவிலான்விளை பகுதியில் சுரேஷ் ராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் சுரேஷ் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 1 லட்ச ரூபாயும், வேறு சிலரிடமும் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை சுரேஷால் உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே […]
பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வரை அவதூறாக பேசிய குற்றத்திற்காக பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஜெயபிரகாஷை கைது செய்த காவல்துறையினரை கண்டித்தும், ஜெயபிரகாஷ் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க கட்சியின் மாவட்ட தலைவர் […]
மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020 இன் கீழ் தமிழக கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த தடை 61 நாட்கள் நீடிக்கும். அதாவது மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சனல் குமார் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் இருந்த ஒரு பள்ளி வளாகத்தின் முன்பு சந்தேகப்படும்படியாக ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அடைக்காகுழி பகுதியைச் சேர்ந்த அபிஜித் என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் இருந்து […]
இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்களாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களுக்கு எந்த வேலையும் இருக்கக்கூடாது. இவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தமிழகத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். இவர்கள் அரசிடமிருந்து வேறு எந்த ஒரு உதவி தொகையும் பெறக்கூடாது. இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அருகே குஞ்சாவிளை பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏசுதாஸ் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். அப்போது ஸ்ரீஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். அதன்பின் கடையிலிருந்து திரும்பி வந்த […]
மீன் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் தலைமையிலான நிர்வாகிகள் சிலர் மனு கொடுப்பதற்காக வந்தனர். இவர்கள் மீனவர்கள் நாட்டுப் படகுகள் மற்றும் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக செல்கின்றனர். இவர்கள் வெளிமாநிலங்களுக்கு மீன்பிடிக்க செல்லும் போது குறிப்பிட்ட காலத்திற்குள் கரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் படகுகளை புதுப்பிக்க வேண்டும் என உத்தரவு […]
அரசு பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலையில் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் கருங்கல் பேருந்துநிலையத்தில் நேற்று பேருந்துக்காக மாணவ மாணவிகளும், பொதுமக்களும் காத்திருந்தனர். அப்பகுதியில் இயங்கும் பல அரசு பேருந்துகளின் மேற்கூரைகள் சேதமடைந்து […]
புதிய காவல்நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக போக்குவரத்து காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக 83.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த காவல்நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் […]
நாளை மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வாணிப கழக மதுபான கடைகள் மூடப்படும். இதனையடுத்து எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3ஏ, எப்.எல்-3ஏஏ உரிமம் பெற்ற மதுபான கடைகள் மூடப்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் அதிக அளவில் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் படிக்கும் பல மாணவ-மாணவிகள் ஆட்டோ மூலமாக பள்ளிக்குச் செல்கின்றனர். இந்நிலையில் சில ஆட்டோக்கள் அதிக அளவு மாணவர்களை ஏற்றிச் செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் விதிகளை மீறி செயல்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்குமாறு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி மாநகராட்சியின் […]
மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். இவர் கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம் நேரடியாக சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித் தொகைகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். […]
தே.மு.தி.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தே.மு.தி.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாணவர் அணி துணைச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மேலும் மாநகர மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் அமுதன், ஐடன் சோனி உள்பட […]
பிரபல கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே நடுக்காட்டு இசக்கியம்மன் பகுதியில் ஜலதா தேவகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜலதா தேவகுமாரியின் கணவனும், மகனும் இறந்து விட்டனர். இவருடைய மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜலதா தேவகுமாரியின் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 83 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,26,000 ரூபாய் பணம் […]
கனமழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் நாகர்கோவிலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் முக்கடல் அணையிலிருந்து நாகர்கோவில் பகுதிக்காக குடிநீருக்காக வினாடிக்கு 8.6 கன […]
நீதிமன்றத்திலிருந்து கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு என்பவரை கடந்த 2007-ஆம் ஆண்டு மார்த்தாண்டத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு பாபு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் பாபுவை மீண்டும் திருவனந்தபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து மார்த்தாண்டத்தில் நடைபெற்ற திருட்டு வழக்குக்காக கேரள காவல்துறையினர் பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்துள்ளனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து பாபுவின் கை […]