கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் செருப்பாலூர், தக்கலை, குலசேகரம், கல்லடிமாமூடு ஆகிய பகுதிகளில் இருக்கும் 52 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதற்காக 17 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து 13 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Tag: கன்னியாகுமாரி
கன்னியாகுமரி மாவட்ட கிளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எனது பெயரில் புகைப்படத்துடன் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சமூகவிரோதிகள் எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இந்த கணக்கை தொடங்கி பலருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். மேலும் அதில் பண உதவியும் கேட்டுள்ளனர். இதனால் சிலர் என்னை தொடர்பு கொண்டு இது உண்மையா? என கேட்டபோது அது சமூக விரோதிகளால் உருவாக்கப்பட்ட போலியான இன்ஸ்டாகிராம் என தெரிவித்து, உதவி செய்யும் நோக்கத்தில் பணம் போடாதீர்கள் […]
பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற ரவுடியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குட்டக்குழி காலணியில் பிளம்பரான வினு(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்று வந்த இடத்தில் வினுவுக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த மாணவி மூலம் திருவட்டார் பகுதியில் வசிக்கும் மற்றொரு 12-ஆம் வகுப்பு மாணவி அறிமுகமானார். […]
கர்ப்பிணியை தாக்கி 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் முள்ளுவிளை பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி என்ற மனைவி உள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் சுபலட்சுமி பிரசவத்திற்காக காவல்ஸ்தலம் செட்டி தெருவில் இருக்கும் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விஷ்ணு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் சிலர் சுபலட்சுமி வீட்டிற்கு முன்பு பட்டாசுகள் வெடித்து […]
மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கனங்கோடு கீழ புல்லுவிளை பகுதியில் ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிஜேஸ் (26) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரிஜேஸ் சேனம்விளை அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ரவுடியான சிம்சோனி என்பவர் வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அப்போது ரிஜேஸ் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் கத்தியை […]
கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரமார்த்த லிங்கபுரம் பகுதியில் ஆண்டனி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிய வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் பத்மா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பத்மா யாரிடமும் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ஆண்டனி தனது மனைவியை கண்டுள்ளார். மனைவியின் […]
தண்ணீரில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர் மீனவ கிராமத்தில் குமார்(56) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக குமாருக்கு சொந்தமான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகளை இறையுமன்துறை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த படகுகளில் புதுச்சேரி பனித்திட்டு பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உட்பட 5 பேர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் என 8 […]
அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக பாறை கற்கள், எம்சாண்ட், ஜல்லி போன்ற கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதிக பாரத்தில் எம்சாண்ட் மணலை ஏற்றி கேரளாவுக்கு கொண்டு சென்றது […]
விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் வாழைத்தோட்டம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், மிஸ்ரிதா பிரிதுயூஷி என்ற 2 வயது மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீஜா தனது மகளுடன் நேற்று காலை வீட்டிற்கு அருகில் இருக்கும் சப்போட்டா மரத்தில் பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீஜா துணி […]
கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்டன்விளை பகுதியில் இருக்கும் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று வீடு வீடாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மினி பேருந்து ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாவூரில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருந்தாளுனராக வேலை பார்க்கும் சுஜிலா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சுஜிலா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திங்கள்சந்தை அருகே […]
பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து நேற்று மாலை 6 மணிக்கு குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தோவாளை புதூர் அருகே சென்ற போது என்ஜினில் இருந்து புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பெருந்தை நிறுத்திவிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதற்கிடையில் அலறி சத்தம் போட்டபடி பயணிகள் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலு மூடு பகுதியில் கனகராஜ்-அனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகராஜ் இறந்து விட்டதால் அனிதா தனது மகன்களான அல்ஜின் ஷால்(22), ஆண்ட்ரோ ஷால் ஆகிருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவத்துறையில் ரேடியாலஜி பிரிவில் டிப்ளமோ படித்து முடித்த அல்ஜின் ஷால் வேலை கிடைக்காததால் தற்போது கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக […]
கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுகிராமம் குளத்தின் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது. அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதை ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்ததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதற்கு தீர்வு காண போலீசாரும், […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பத்திர எழுத்தர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பிள்ளையார் கோவில் தெருவில் முரளி(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முரளி மோட்டார் சைக்கிளில் பெரியவிளை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் முரளி வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. […]
புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகில் பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அபிராமி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வினு பூதப்பாண்டி […]
ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் சைல்ட் லைன் உதவி எண் 1098 தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரியில் கணக்குப்பதிவியல் ஆசிரியராக வேலை பார்க்கும் கிறிஸ்துதாஸ் என்பவர் பாடத்திற்கு சம்பந்தமில்லாமல் பாலியல் தொடர்பான பாடம் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து […]
தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொன்மனை பண்டாரக்கோணம் பகுதியில் மாதவி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாதவியின் கணவர் பாஸ்கரன் இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மாதவி மாலை நேரத்தில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மாதவியை தேடி அலைந்தனர். அப்போது குற்றியாணி பகுதியில் உள்ள […]
வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அக்கரை பகுதியில் மணிகண்டன்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் தாயாரை ராமமூர்த்தி(52) என்பவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கரை பகுதியில் இருக்கும் கோழிக்கடை முன்பு மணிகண்டன் ராமமூர்த்தியை சந்தித்து ஏன் எனது தாயை கேலி செய்தீர்கள்? என தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராமமூர்த்தி மணிகண்டனை […]
சுசீந்திரம் அருகே உள்ள அக்கறை குத்துக்கல் பகுதியில் ஆனந்தம்(87) என்பவர் வசித்து வருகின்றார். இந்த நிலையில் ஆனந்தம் வீட்டில் தனியாக இருந்துள்ள போது ஆபாச வார்த்தைகளால் தனக்குத்தானே பேசியதாக தெரிகின்றது. அதே சமயம் அந்த பகுதியை சேர்ந்த அசோக்நாத் என்ற தொழிலாளி என்பவர் நடந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தன்னைத்தான் அவர் திட்டுகிறார் என நினைத்த அசோக்நாத் வீடு புகுந்து ஆனந்தத்தை தாக்கி செங்களால் தலையில் அடித்ததாக கூறப்படுகின்றது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தம் நாகர்கோவில் அருகே […]
குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தற்போது கோதை ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்திருப்பதால் அருவியில் மிதமான தண்ணீர் பாய்கின்றது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பமாக ஏராளமானோர் கார் போன்ற வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் […]
தந்தையை கொலை செய்த வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலுமூடு திருமன் தோட்டம் பகுதியில் குமரேசன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் முருகேஷ்(31) என்பவர் கேரளாவில் இரும்பு பீரோ தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகேஷ் கடந்த 2017-ஆம் ஆண்டு தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது […]
கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்து குமரியில் கொட்டிய லாரிக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழி மற்றும் மீன் கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து கொட்டுகின்றனர். நேற்று மாலை தேவசகாயம் மவுண்ட் நான்கு வழிச்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியிலிருந்து மூட்டை முட்டையாக கழிவுகளை இறக்கியுள்ளனர்.இதனை அவ்வழியாக சென்ற ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் பார்த்துள்ளார். இதனை அடுத்து […]
லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காயகரை பகுதியில் இருக்கும் கல்குவாரியில் இருந்து பாறைப்பொடி ஏற்றுக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி காயக்கரை இரட்டைகரை பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட்டது. அப்போது சாலையோரம் ஒதுங்கிய லாரி எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வழக்கு […]
கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் மீது அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 40 வயதுடைய ஒருவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பிரசவத்திற்காக வந்த ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளது. மற்றும் அந்த பெண்ணின் கற்பவையும் பாதிப்புக்குள் ஆகி உள்ளது. மேலும் இவர் […]
பழைய சைக்கிளின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட அலங்கார பொருள் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்வதால் ஆயுர்வேத மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்ட உணவகத்தில் பல்வேறு அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய சைக்கிளின் உதிரிபாகங்கள், […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பேருந்து நிலைய பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த கவின் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் கவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இறந்தவரின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. […]
தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரியக்கோடு முள்ளங்குழி விளையில் ஜான் ஐசக்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்தியா(34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜான் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் சந்தியா கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள தெள்ளந்தி பகுதியில் அஜிதா என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான அஜித், அஜிதாவை கடந்த சில தினங்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு அஜிதாவின் கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மது போதையில் சுற்றித்திரிந்த அஜித் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு, தன் வீட்டின் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இங்கு ஜெய் மிருத்திகா என்ற மாணவி 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் ராணித் தோட்டம் பொது மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வழித்தடம் 36N என்ற எண் கொண்ட பேருந்தின் உட்புற இருக்கையின் கால் பகுதியில் 6 முதல் 8 இஞ்ச் வரை ஓட்டை உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் […]
தனியார் கல்லூரியில் நகை, பணத்தை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகில் பேரை பகுதியில் வசித்து வருபவர் தோமஸ்ராஜ். இவர் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞான தீபம் என்ற பெயரில் சமுதாயக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த 9ஆம் தேதி மாலை வழக்கம் போன்று கல்லூரி முடிந்த பின் பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூ 1,96,000 மற்றும் […]
புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கன்யாகுமாரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே மின்மயமாக்குதலுடன் இரண்டாம் ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் முடிவடைந்த பணியை நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் மோட்டார் டிராலி ஆய்வு செய்தார். இதனையடுத்தது நாகர்கோவிலில் இருந்து 5 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் ஆரல்வாய்மொழி ரயில்வே நிலையத்தில் அமைந்துள்ள 2-வது நடைமேடைக்கு […]
கடல் கரையில் இருந்த சாமி சிலையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆராட்டுதுறை கடற்கரையில் நேற்று இரவு சாமி சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ராஜக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் கனிசெல்விக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் படி ஆய்வாளர் கனிசெல்வி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய 5 அடி உயரம் உள்ள சாமி சிலையை மீட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தொழிலாளியை வெட்டி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுடர்ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன் தன்னுடன் பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முருகன் அருகுவிளை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். […]
பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டைவிளை பகுதியில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள நர்சரி கார்டனில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று சாந்தா கார்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செடியின் விலையை கேட்பது போல் சாந்தா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு […]
குட்டையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரை வாழைவிளை பகுதியில் முதியவரான பூயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இவருக்கு வசந்தா என்ற மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர். கடந்த 23-ஆம் தேதி பூயன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பூயன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வசந்தா பூயனை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் […]
ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள செட்டிகுளம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் லிஜின்(30). இவர் பீச் சாலை சந்திப்பில் உள்ள மூன்று தளம் கொண்ட ஒரு வாடகை கட்டிடத்தில் சப் ஜெயில் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது ஜவுளிக்கடை முதல் தளத்தில் அமைந்துள்ளது. இரண்டாவது தளத்தில் தனியார் வங்கி அமைந்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று இரவு வழக்கம் […]
கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெட்டாங்கோட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இரவு பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை வந்து பார்த்த போது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இருந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வலுக்கட்டாயமாக கிருஸ்தவ மத போதனைகளை மாணவர்களிடம் புகுத்திய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தையல்கலை பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. தையல் வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு ஆசிரியர் இந்து மத கடவுள்களை பற்றி அவதூறாகப் பேசியும் கிருஸ்தவ மத போதனைகளை வலுக்கட்டாயமாக சொல்லிக் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. […]
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரியில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்திரை மாதம் வரும் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை மறுநாள் (சனிக்கிழமை) வருகிறது. அன்று மாலை ஆறு மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. இந்த அரிய காட்சியைக் காண்பதற்கு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
தென்மாவட்டங்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. இதன்பின் கொரோனா தொற்று பரவல் நாளடைவில் வெகுவாக குறைந்தது தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொது பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியது. தெற்கு ரயில்வே பண்டிகை கால சிறப்பு […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் காவல்துறையினர் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்தனர். இதேபோன்று பட்டகசாலியன்விலை […]
வருகிற 31-ஆம் தேதி முதல் கன்னியாகுமரி-புனே ரெயில் (எண்: 16382) இயக்கப்படுகிறது. இதுபற்றி திருவனந்தபுரம் கோட்டம் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தினசரி காலை 8.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.20 மணிக்கு புனே சென்றடையும். மறு மார்க்கமாக புனேயில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி முதல், தினசரி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:16381) 3-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு கன்னியாகுமரி வந்து […]
குமரிமாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்த பின் குற்ற சம்பவங்கள் குறையும் என குமரி மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 9.71 லட்சத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திறந்து வைத்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியபோது, அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் எண் , நம்பர் பிளேட் தெளிவாக தெரிவதால் […]
கன்னியாகுமரி மாவட்டம் அருகே வறுமையில் வாடிய குடும்பத்தினருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வீடு கட்டிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தோட்டக்கோடு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு கடந்த ஐந்து வருடத்திற்கு முன் பார்வை பறிபோயுள்ளது. பார்வை இழந்த பிறகு வேலைக்கு செல்ல முடியாத நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாழடைந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மழையில் வீடு முற்றிலும் சேதமடைந்து […]
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாதம் கொடை விழாவை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பெண்கள் தலையில் இருமுடி கட்டு சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபாடு செய்வதால் இது பெண்களின் சபரிமலை என்று […]
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்லும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மும்பை இடையே ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு கேரளா பயணிகளுக்கும் இந்த ரயில் போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் ரயில்வே கால அட்டவணை மாற்றத்தின் காரணமாக இந்த ரயில் திடீரென புனேவுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதை அறிந்த ரயில் பயணிகள் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கொரோனா காரணமாக 2020 மார்ச் […]
காய்கறி வியாபாரி கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகில் காட்டாத்துறை பருத்திக்கோட்டவிளை பகுதியில் காய்கறி வியாபாரியான கிறிஸ்டோபர்(47) என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி ராஜினி(41). கிறிஸ்டோபர் நிறைய பேரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்த கிறிஸ்டோபர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து […]
தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் தலக்குளம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொத்து தரகராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சுஜித் என்பவர் சட்ட விரோதமாக மணல் அள்ளியுள்ளார். இதனை பார்த்த மணிகண்டன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளார். இதனை அறிந்து கொண்ட சுஜித் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சுஜித் இரும்பு கம்பியால் மணிகண்டனை பலமாக […]