சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்னந்கான் என்ற பகுதியில் மூன்று கண்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. நெற்றிப் பகுதியில் மூன்றாவது கண்ணுடன் பிறந்த இந்த கன்றுக்குட்டியை சிவபெருமானின் அவதாரம் என்று வர்ணித்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். மூன்று கண்கள் மற்றும் 4 மூக்கு துவாரங்களுடன் பிறந்த இந்த அபூர்வ கன்று குட்டியை பார்க்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tag: கன்றுக்குட்டி
ஒருவருடமாக ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை கன்றுக்குட்டியை கொன்று தின்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் போன்ற கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை இப்பகுதியில் உள்ள கல்குவாரியில் பதுங்கி இருந்து கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிறுத்தையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெறுவதால் அதனை கூண்டு வைத்துப் பிடிப்பதற்கு வனத்துறையினர் முடிவு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் லாரியின் அடிப்பகுதியில் சிக்கிய கன்றுக்குட்டியை உயிருடன் எந்த காயமும் இன்றி பொது மக்கள் மீட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ இரண்டாம் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியின் அடிப்பகுதியில் கன்றுக்குட்டி சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த தாய்ப்பசு செய்வதறியாமல் லாரியை சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கன்றுக்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்ட போது அவர்களை தாய்ப் பசு முட்ட […]