Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கல் கடல் பகுதிகளில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு, வட மேற்கு திசையில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 3 நாட்களுக்கு கன மழை…. தமிழக அரசு போட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் கனமழையும், நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனை அடுத்து மழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Heavy Rain: இன்று(1.11.22) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை….. வெளியான அறிவிப்பு….!!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலகl கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(1.11.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று(1.11.22) கன மழை பெய்யும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கின்ற தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 31.10.2022 கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று இந்த 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு…. அலர்ட் மக்களே…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

Breaking: இங்கு பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை….. சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா – வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் கனமழை  பெய்துவருகிறது. இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இன்று 25 மாவட்டங்களில் கன மழை… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!

பெங்களூர்  மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. ராமநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அர்க்காவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சன்னப்பட்டனா டவுனில் உள்ள பிடி காலனி வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. தூம கூறு மாவட்டம் மதுகிரி கொரட்ட கெரே, உலியூர் துர்கா பகுதியிலும் கனமழை பெய்துள்ளது. ஊலியூர் துர்கா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அவரை அந்த பகுதி மக்கள் மீட்டுள்ளனர். சக்பள்ளாபூர் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : “நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு”….. வானிலை எச்சரிக்கை…..!!!1

தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்று வேக மாறுபட்டால் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

HIGH ALERT : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு…. யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் . சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

இந்த 6 மாவட்டங்களில்…. இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?….!!!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானில் கொட்டி தீர்த்து வரும் கனமழை”…182 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 182 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அங்குள்ள 13 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் வெள்ள பாதிப்பால் 63 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்கள்…. இதோ லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில்….. இன்று கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தொடரும் கனமழை….. 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை….. வானிலை எச்சரிக்கை…..!!!!

கேரள மாநிலத்தில் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்க்கு முன்கூட்டியே திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், வயல்நாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று அதிக கன மழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ALERT : தமிழகத்தில் 19 மாவட்டங்களில்….. கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல்பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதே போல கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு , மதுரை, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில்….. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில் 5 மாவட்டங்களில்….. கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. மலையின் காரணமாக பொதுமக்களும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மோசம் அடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை”…… பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!!!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுமார் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை வெயில் அதிக அளவில் இருந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு மேல் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அதை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. இதற்கு அசானி என பெயர் சூட்டப்பட்ட நிலையில் ஆந்திரா ஒடிசா மாநிலங்கள் இந்த புயல் மிரட்டி வந்தது. இந்நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING :11 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வருகிற 14-ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் உருவான அசானி புயல் ஆந்திரா – ஒடிசா இடையே கரையை கடந்த போதிலும், பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழக்தில் 4 நாட்களுக்கு….. கனமழை பெய்ய வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் நீலகிரி கோவை திருப்பூர் திண்டுக்கல் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு அசானி என பெயரிடப்பட்டது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. மேலும் இந்த புயல் நாளை  மாலை வரை வடக்கு ஆந்திர- ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

தீவிரமடைந்த “அசானி” புயல்…. இன்று இந்த 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகுது மழை….. வானிலை எச்சரிக்கை….!!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு அசானி என பெயரிடப்பட்டது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. மேலும் இந்த புயல் நாளை மாலை வடக்கு ஆந்திர- ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத கன மழை…. “வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்”…. பரபரப்பில் பிரபல நாடு….!!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத கன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக நியூசவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் குயின்ஸ்லேன்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைநகர் பிரிஸ்பேன் மற்றும் பல நகரங்களில் கடந்த 22ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால்  வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த கனமழையால் சுமார் 18 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த பேய் மழை…. வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்…. பிரபல நாட்டில் நேர்ந்த சோகம்….!!

பிரேசிலில் நேற்று முன்தினம் பெய்த பேய் மழையால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தென்ன அமெரிக்காவின் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் நேற்று முன்தினம் இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை 30 நாட்கள் பெய்ய வேண்டியது ஆனால்  3 மணி நேரத்தில் பெய்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். இதனை தொடர்ந்து பெரும்பாலான நீர்நிலைகளில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த பேய் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலைப் பிரதேசமான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை தகவல்….!!!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

திரும்பவும் முதல்ல இருந்தா…? டிசம்பர் 4 முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!!

டிசம்பர் 4 முதல் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள […]

Categories
மாநில செய்திகள்

WARNING: அடுத்த ஓரிரு மணிநேரத்தில்…. சென்னை வானிலை மையம்….!!!!

தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தென்காசி, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இந்த 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்…. 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமடைந்துள்ளது. இன்று பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… வானிலை தகவல்…!!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்தெரிவித்துள்ளதாவது: “உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்… நாளை கனமழை பெய்ய வாய்ப்பு…!!!

வட கடலோர தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. கரையை கடந்த போது 45 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதாகவும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

வெளுத்து வாங்கிய கனமழை…. காணாமல் போன 17 பேர்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!

சீனாவில் பெய்த கனமழையினால் 7 பேர் உயிரிழந்ததாக  தகவல் வெளியாகியுள்ளது  சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாணத்தில் டையான் குவான் கவுண்டியில் லபாஷே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். இதனை அடுத்து இந்த நிலச்சரிவில் சிக்கிய 10 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சைகாக […]

Categories
உலக செய்திகள்

இரண்டு நாடுகளிலும் விடாது பெய்யும் மழை…. இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு…. பலி எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு….!!

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் தொடர் மழையால் வெள்ளம் வடியாமல் வீடுகளை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே ஜெர்மனி ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு பகுதியில் நேற்று பெய்த கனமழையால் 6 வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும் 25 வீடுகள் இடிந்து விழும் நிலையிலும் […]

Categories
உலக செய்திகள்

கனமழையினால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு.. உயிரோடு புதைந்து பலியான மக்கள்.. இந்தோனேஷியாவில் சோக சம்பவம்..!!

இந்தோனேஷியாவில் பெய்த கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தோனேஷியாவில் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலையில் பெய்த  கன மழையினால் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். பேரிடர் நிவாரண அமைப்பு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 44 நபர்கள் உயிரிழந்ததாகவும் சிலர் மாயமானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்களை தேடும் […]

Categories
மாநில செய்திகள்

“புயல் கரையை கடந்துவிட்டது” அடுத்த 6 மணி நேரத்தில்…. வடமாவட்டங்களில் கன மழை -வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தென்மண்டல வானிலை மைய தலைவர் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து உருவான நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறிய பின்னர் மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, கடலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. நிவர் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் வானிலை

”நிவர் புயல்” எதிரொலி… ”சென்னையில் விடிய விடிய மழை”…. வெள்ளக்காடாய் ஆன தலைநகர் …!!

நிவர் புயல் எதிரொலியாக சென்னை முழுவதும் விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது. நிவர் புயலை தொடர்ந்து சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகின்றது. நேற்று இரவும் கூட விட்டுவிட்டு கனமழை நீடித்து வந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னையில் பெய்த மழை அளவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி சென்னையில் அதிகபட்சமாக புரசைவாக்கம் பகுதியில் 14.8 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!!

சென்னையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். சேலம், கரூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் வெள்ளம்… தள்ளாடும் தார்பங்கா… உயிரிழப்பு 25 ஆக உயர்வு…!!

பீகார் மாநிலத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தர்பங்கா மாவட்டம் அதிக பாதிக்காப்பட்டுள்ளது. நேபாளத்தில் உற்பத்தியாகி பிகாரில்  ஓடும் நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழையால்  ஏற்பட்ட வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பிகார் மாநிலத்தில் 16 மாவட்டங்களை சேர்ந்த 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, மாநிலத்தில் உயிரிழப்பு 25 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகி இருக்கும் தர்பங்கா மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது போன்று முசாபர்பூர் பகுதியில் 6 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் கனமழை – காலம்புழா அணையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு…!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகள் மற்றும் வீடுகள் மீதும் விழுந்துள்ளன. மரங்கள் விழுந்ததில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் விழுந்த மரங்களால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான […]

Categories
தேசிய செய்திகள்

“ஆரஞ்சுஅலெர்ட்” அடுத்த 5 நாட்களுக்கு தீவிரம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

கேரள, கர்நாடக மாநிலத்திற்கு கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்பதால், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அசாம் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
வானிலை

7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளுர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். மேலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று  வீசக்கூடும் என்பதால் ஜூலை 21, 22 தேதிகளில் கேரள கடலோர பகுதிகள், மாலத்தீவு லட்சத்தீவு 23 வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக இடியுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி முதல் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் மன்னார் வளைகுடா […]

Categories
மாநில செய்திகள்

மேற்கு வங்கத்தில் கரையை கடக்க தொடங்கிய ஆம்பன் புயல்…. ஒடிசாவில் சூறாவளிக் காற்றுடன் கன மழை!

அதி தீவிர புயலாக உள்ள ஆம்பன் புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் மணிக்கு 27 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஆம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா இடையே சந்தர்வன் வனப்பகுதியை ஒட்டி புயலில் முகப்பு பகுதி கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க 4 மணி நேரம் ஆகும் என […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தஞ்சை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்த கோடை மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் அடைந்தனர். சென்னையிலும் பல பகுதிகளில் நேற்று மாலை வேளையில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சட்டென்று மாறிய வானிலை… டெல்லியை குளுமையாக்கிய மழை – மக்கள் மகிழ்ச்சி!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. டெல்லியில் நேற்று முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. டெ ல்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் நேற்று காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி குறைந்து 13.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 28 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. दिल्ली: […]

Categories

Tech |