உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையால் தானிய ஏற்றுமதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து ஐ.நா தலையீட்டால் உக்ரைன், ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உலக நாடுகளுக்கான உணவு தாணிய ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ் உக்ரைன் உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் படி உணவுடன் கூடிய 550 கப்பல்கள் இதுவரை உக்ரைன் துறைமுகத்தில் இருந்து வெளியேறி உள்ளது. இந்நிலையில் ஒப்பந்தம் சமீபத்தில் […]
Tag: கப்பல்
சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள யூ.எஸ். சி. ஜி. சி. மிட்ஜெட் கப்பலை சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள கடலோர காவல் படைக்கு சொந்தமாக 418 அடி நீளம் கொண்ட யூ. எஸ். சி. ஜி. சி. மிட்ஜெட் என்ற கப்பல் உள்ளது. இந்த கப்பல் 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளது. இதனையடுத்து சென்னை துறைமுகத்திற்கு நேற்று வருகை தந்துள்ளது. அப்போது அந்த கப்பலுக்கு சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் குவாட் நாடுகள் மீதான […]
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த கப்பல் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளது. உக்ரேனில் உள்ள துறைமுகத்தில் இருந்து 173 மீட்டர் நீளம் கொண்ட “லேடி செஷ்மா” கப்பல் 3 ஆயிரத்து 173 டன் சோளத்தை ஏற்றி கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென கப்பலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் போஸ்பரஸ் ஜலசந்தியில் கப்பல் கரை ஒதுங்கியது. இதனால் போஸ்பரஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படகுகளை கொண்ட அந்த ராட்சத கப்பலை நகர்த்தும் பணி […]
மணிலா பேட்டன் கேஸ் துறைமுகத்திலிருந்து 82 பேருடன் கேளத்தான் துறைமுகத்திற்கு பயணிகளின் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் தீ பற்றி வானளவாக கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்து பயணிகள் அலறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து பிலிப்பைன்ஸ் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடற்கரை வீரர்கள் கப்பலில் தவித்த 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று […]
இலங்கைத் தமிழர்கள் 76 பேர் கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையில் இருந்து வெளியேறி கனடாவிற்கு குடிபெயர முடிவு செய்தனர். இவர்கள் MV OCEAN LADY என்ற கப்பந்நிலையில் பலர் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சிலர் நாடு கடத்தப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.லில் கனடாவிற்கு வந்தனர். இந்த கப்பலை வான்கூவர் தீவிற்கு மேற்கே கனடா நாட்டின் அதிகாரிகள் மறித்தனர். இந்த கப்பலில் பலருக்கு என்ன ஆனது என்பதை கனட நாட்டின் அதிகாரிகளால் இதுவரை கூற முடியவில்லை. இ […]
கிழக்கு சீனாவின் ஷாங்காய் நகரில் உல்லாச பயண கப்பல் ஒன்றை வடிவமைக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. 341 மீட்டர் நீளமும், 37 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பயணக் கப்பல் சுமார் ஒரு லட்சத்து 42 ஆயிரம் டன் எடை கொண்டுள்ளது. முன்னதாக தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலை விட அளவில் சற்று சிறியதாகவும் திறனில் சக்தி வாய்ந்ததாகவும் தயாரிக்கப்பட இருக்கின்றது. மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் 2000க்கும் மேற்பட்ட அறைகளுடன் 16 […]
இலங்கையின் கோரிக்கையை மீறி, சீன நாட்டின் கப்பல் ஹம்பந்தோட்டா என்னும் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா தங்களின் யுவான் வாங்-5 என்னும் போர்க்கப்பலானது, இலங்கை நாட்டின் தென் பகுதியில் இருக்கக்கூடிய ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வரவுள்ளது என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அந்த கப்பல் இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, செயற்கைக்கோள் தகவல்களை திரட்டுவது குறித்த ஆய்வுகளில் ஈடுபடும் என்று கூறியது. ஆனால், சீனாவிலிருந்து வரும் அந்த கப்பல், உளவு […]
2ஆம் உலகப்போரின் போது மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பைன்ஸில் கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 7,000 மீட்டர் (23,000 அடி) கீழே கண்டுபிடிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸின் 3வது பெரியதீவுப் பகுதியான சமர் தீவில், கடலின் மேற்பரப்பில் இருந்து 6,865 மீட்டர் ஆழத்தில் இந்தகப்பல் சென்ற மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அக்டோபர் 25 1944 அன்று மத்திய சமர்தீவில் நடைபெற்ற போரின்போது அமெரிக்க கடற்படையின் கப்பல் சேதமடைந்தது. இந்நிலையில் இந்த கப்பல் மூழ்கிய இடம் பற்றிய துப்புகளை அடிப்படையாக வைத்து […]
கப்பல் எஞ்சின் பழுதாகியதால் கரைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இங்குள்ள சிட்னி கடற்கரையிலிருந்து சரக்கு கப்பல் ஒன்று கிளம்பியது. இதில் 21 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த கப்பலின் எஞ்சின் திடீரென பழுதாகி கடலில் நிற்கிறது. இந்நிலையில் பலத்த காற்று வீசுவதால் கப்பல் மீண்டும் கரைக்கு அடித்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கப்பலை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஹாங்காங்கின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது ஜம்போ கப்பல் உணவகம். 1976-ம் வருடம் சேவை தொடங்கிய இந்த கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் முதல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்த கப்பல் உணவகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் நகரின் அடையாளமாக இருந்த இந்த கப்பல் உணவகம் சுற்றுலாப்பயணிகளை பெரிய அளவில் ஈர்த்து வந்தது. ஏராளமான திரைப்படங்களும் இந்த கப்பலில் படம் பிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். […]
கொலம்பியா நாட்டிற்கு அருகில் கரீபியன் கடல் பகுதியில் கடந்த 1708 ஆம் வருடம் சான் ஜோஸ் எனும் கப்பல் சுமார் 600 பேருடன் கடலில் மூழ்கியுள்ளது. அதில் 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் இருந்தது. மேலும் உலகிலேயே அதிக தங்கத்துடன் கடலில் மூழ்கிய கப்பல் ஆக இது கருதப்படுகின்றது. இந்த கப்பலை தேடும் பணிகள் பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் 2015 ஆம் வருடம் கப்பல் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சான் […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பொலிலியோ தீவிலிருந்து கியூசான் மாகாணத்திலுள்ள ரியல் நகரத்தில் இருக்கும் துறைமுகம் நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் சுமார் 135 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில் அதன்பின் தீயானது படகு முழுவதும் பரவியதால் ஏற்பட்ட கரும் புகை காரணமாக பல […]
ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால் ஒரு பிரம்மாண்டமான கப்பல் எப்படி தண்ணீரில் மிதக்கிறது என்று உங்கள் அனைவருக்கும் கேள்வி எழலாம். மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய படகு மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும் மிகப் பெரிய கப்பல் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்து இருப்பதை பார்க்க முடியும். கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். அதனால் கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் இருக்கும். […]
ஜப்பானில் 24 சுற்றுலாப் பயணிகளுடன் மாயமான படகை தேடும் பணியில் ஆறு ரோந்து படகுகள் மற்றும் 5 குட்டி விமானங்கள் ஈடுபட்டிருந்தன. இவற்றின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 10 மணி நேரம் கழித்து படகில் பயணம் செய்ததில் ஒருவர் கூட உயிர் தப்பவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. படகு மாயமாவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட அந்த படகில் இருந்து அவசர உதவிக்கு அழைப்பு வந்ததாகவும், மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றத்தின் […]
உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட போர் கப்பல் தொடர்பில் ரஷ்யா தற்போது உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் Moskva என்ற போர் கப்பல் கடந்த வாரம் உக்ரைன் துருப்புகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது. அதில் பயணித்த மொத்த குழுவினரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கப்பல் மூழ்கும் முன்னர் அனைத்து வீரர்களையும் காப்பாற்றியதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டு வந்தது. மேலும், 396 வீரர்களை காப்பாற்றியிருப்பதாகவும், வெளியாகியுள்ள மாறுபட்ட கருத்துகளுக்கு தாங்கள் பொறுப்பாக முடியாது எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது. […]
ரஷ்யாவின் கப்பலை உக்ரைன் தாக்குவதற்கு முன்பாக வானத்தில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானம் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற கப்பலை உக்ரைன் படைகள் தாக்கியது. இதில் கப்பல் மூழ்கடிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய அரசு, முதலில் கப்பல் தீப்பற்றி எரிந்ததால் தான் கப்பல் மூழ்கியது என்று கூறியிருந்தது. அதன் பிறகு உக்ரைன் தாக்கியதை ஒப்புக்கொண்டது. இதற்கிடையில், இக்கப்பல் தாக்கப்படுவதற்கு சில நேரங்களுக்கு முன்பாக கருங்கடல் பகுதியில் வானத்தில் அமெரிக்க கடற்படைக்குரிய P-8 Poseidon aircraft என்ற […]
மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் ஆயிரம் டன்கள் எரிபொருள்களுடன் சென்ற கப்பல் நடு கடலில் மூழ்கியதால் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவை நோக்கி வணிகக் கப்பல் ஒன்று 1000 டன்கள் எரிபொருள்களுடன் சென்றிருக்கிறது. அப்போது துனிசியா நாட்டின் கேப்ஸ் கடற்கரைக்கு அருகில் சென்ற சமயத்தில் கப்பல் திடீரென்று கடலில் மூழ்கிவிட்டது. எனவே, கடலின் சுற்றுசூழலில் மாசு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. எனினும், அதிலிருந்த ஊழியர்கள் 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். வானிலை […]
ஷுதைதா துறைமுகத்திற்கு வர 31 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டப்பட்டுள்ளது. மேயனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படையினர் இருவருக்கும் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதை தொடர்ந்து பல மாதங்களுக்குப் பின் அந்த நாட்டின் ஷுதைதா துறைமுகத்திற்கு முதன்முறையாக எண்ணெய் கப்பல் திங்கள்கிழமை வந்து சேர்ந்துள்ளது. மேயனில் தலைநகர் சனா போன்ற பகுதிகளை மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளிடம் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு […]
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 40 நாட்கள் கடந்துள்ள நிலையில் ரஷ்யாவின் போர்க்கப்பலை உக்ரைன் ஏவுகணை தாக்குதல் செய்து அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே உக்ரைனின் துறைமுக நகரமான ஒடிசா நகரில் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தி சின்னா பின்னமாக்கியுள்ளது. இந்த தாக்குதல் கருங்கடலில் நிலை நிறுத்தப் பட்டிருக்கும் ரஷ்யாவின் Admiral Essen போர்க் கப்பல் மூலமாக சாத்தியமானது. இந்நிலையில் கடலில் உள்ள Admiral Essen போர்க் கப்பலை உக்ரைன் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி […]
வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதிய கோர விபத்தில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதாவது, டாக்கா புறநகரில் பாயும் சிட்டலக்சயா நதியில் ஏறத்தாழ 50 பேருடன் சென்ற பயணிகள் படகு மீது கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த நபர்கள் தண்ணீரில் […]
உக்ரைன் நாட்டின் தென் பகுதியிலுள்ள மைகோலைவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலில் 75 இந்திய மாலுமிகள் சிக்கி தவித்தனர். கடந்த 24-ம் தேதி உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்றதில் இருந்து அவர்கள் அந்த கப்பலை விட்டு வெளியேற முடியாமல் இருந்தனர். இது குறித்து தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வெளியேற தூதரகம் உதவ முன்வந்தது. அதன்படி முதற்கட்டமாக 57 மாலுமிகளை வெளியேற்ற பேருந்துகளை ஏற்பாடு செய்தது. அவர்களில் லெபனான், சிரியா போன்ற […]
கிரீஸ் நாட்டிலிருந்து சுமார் 288 நபர்களுடன் யூரோபெரி ஒலிம்பியா என்ற உல்லாச கப்பலானது திடீரென்று தீ பற்றி எரிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரீஸ் நாட்டிலிருந்து மத்திய தரை கடலில் உள்ள அயோனியன் கடலின் வழியே யூரோபெரி ஒலிம்பியா என்னும் உல்லாச கப்பலானது, இத்தாலி நாட்டிற்கு சென்றது. அதில் மொத்தமாக சுமார் 288 நபர்கள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, 4:30 மணிக்கு கிரீஸ் மற்றும் அல்பேனியா நாடுகளுக்கு இடையில் இருக்கும் கோர்பு தீவிற்கு அருகே சென்ற கப்பலில் […]
நைஜீரிய நாட்டில் எண்ணெய் வயலில் நின்று கொண்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து சிதறிய சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரியா நாட்டில் உள்ள நைஜர் டெல்டா பகுதியில் இருக்கும் எண்ணெய் வயலில் ஷேபா ஆய்வு, சேமிப்பு , உற்பத்தி நிறுவனத்திற்குரிய மிதக்கும் எண்ணெய் உற்பத்தி மற்றும் இறக்கும் கப்பல் இருந்துள்ளது. அந்த சமயத்தில், 2 மில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு எண்ணெய் சேமித்து வைக்கக்கூடிய திறனுடைய டிரினிட்டி ஸ்பிரிட் என்ற கப்பல் நேற்று முன்தினம் காலையில் திடீரென்று வெடித்துச் சிதறியது. […]
214 தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்டதால்சாண்டோஸ் துறைமுகத்தில் 5 கப்பல்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளன. பிரேசிலியாவில் 214 தொழிலாளர்கள் மற்றும் கப்பலில் பயணம் செய்த பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சான்டோஸ் துறைமுகத்தில் 5 கப்பல்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி அன்விசா கூறியுள்ளார். சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலிக்கு இடையே கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கப்பல்கள் தலா 3,000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரியோ டி ஜெனிரோ மற்றும் சாண்டோஸுக்கு […]
கப்பல் கவிழ்ந்த விபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகில் 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணம் மேற்கொண்ட 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காணாமல் போய்விட்டார்கள் என்ற தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி விபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் […]
லட்சத்தீவு கடல் பகுதியில் இருந்து எம்.வி.கவராத்தி கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு கவராத்தி தீவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் கப்பலில் இருந்த 624 பயணிகள் மற்றும் 85 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதன்பிறகு கடலோர காவல்படையின் சமர்த் கப்பல் மும்பையில் இருந்து அனுப்பப்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் […]
டென்மார்க்கில் கனரக வாகனம் ஒன்று கப்பலில் இருந்து சரிந்து தண்ணீருக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கில் கனரக வாகனம் ஒன்று துறைமுகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த கனரக வாகனம் எதிர்பாராதவிதமாக உருண்டு தண்ணீருக்குள் பாய்ந்துள்ளது. அதற்கு காரணம் அந்த வாகனத்தை இயக்க ஓட்டுநர் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க சென்ற நிலையில் கை பிரேக்-ஐ தவற விட்டதால் எதிர்பாராதவிதமாக வாகனம் தண்ணீருக்குள் விழுந்து விட்டது என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் கப்பலான தலாசா பெட்ரஸ், ஐரோப்பாவிற்கு பயணித்த நிலையில் கொழும்பு துறைமுகத்திற்கு அவசரமாக வந்தடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலாசா கப்பலானது, சுத்திகரிப்பு பொருட்களை உற்பத்தி செய்ய உபயோகப்படுத்தப்படும் மூலப்பொருள் கொண்ட கொள்கலனில் கசிவு ஏற்பட்டதால் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. அதாவது இந்த கப்பல், கடந்த மாதம் 25-ஆம் தேதியிலிருந்து, சிங்கப்பூரிலிருந்து பயணத்தை தொடங்கியிருக்கிறது. இன்று காலையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருக்கிறது. பழுதடைந்த கொள்கலன் நீக்கி சரி செய்யப்படும். அதன்பின்பு, மீண்டும் துறைமுகத்திலிருந்து கப்பல் வெளியேற்றப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த […]
இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பல் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய நாட்டின் ராணுவத் துறைக்கு பாத்தியப்பட்ட கே.ஆர்.ஐ நங்கலா 402 என்னும் நீர்மூழ்கி கப்பல் பாலி தீவிற்கு அருகே சுமார் 53 நபர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திடீரென்று அக்கப்பலில் இருந்து ரிப்போர்ட்டிங் அழைப்பு வரவில்லை என்று ராணுவத் துறையின் தளபதியான Hadi Tjahjanto கூறியுள்ளார். மேலும் இக்கப்பல் பாலி தீவிலிருந்தது சுமார் 60 மைல் தொலைவில் காணாமல் போயிருக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராணுவத் […]
அமெரிக்காவில் கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள லூசியானா கடற்கரையில் 129 அடி ‘சீகார் பவர்’ எனும் வணிக கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியுள்ளது .இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர் .மேலும் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தளபதியான வில்சன் கூறுகையில் ,கப்பலில் மொத்தம் 19 பேர் பயணித்ததாகவும் அதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 […]
இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த இஸ்ரேல் நிறுவனத்தின் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான்சானியாவில் இருந்து இஸ்ரேல் நிறுவனத்தின் சரக்கு கப்பல் ஒன்று கிளம்பி அரபிக்கடல் வழியாக இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த கப்பல் மீது திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஈரான் ஏவுகணை என்று மற்றொருபுறம் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்து விட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கப்பல் […]
தீப்பிடித்து எரிந்த சொகுசு கப்பலிலிருந்து 51 பணியாளர்களை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டுள்ளனர். இத்தாலியிலிருந்து கிளம்பிய சொகுசு கப்பல் கிரீஸில் உள்ள Corfu தீவிற்கு மார்ச் 1ஆம் தேதி வந்தது. சென்ற 2 வாரங்களாகவே அந்த கப்பல் Corfu தீவில் தான் நிறுத்தப்பட்டிருந்தது. 51 பணியாளர்கள் கப்பலுக்குள் இருந்த நிலையில் நேற்று மதியம் திடீரென்று அந்த கப்பல் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு […]
கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட கால்நடைகள் இரண்டு மாதங்களாக தீவனங்கள் இன்றி நடுக்கடலில் தத்தளித்து வந்த அவலநிலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயினில் உள்ள கார்டகெனாவில் இருந்து கரீம் அல்லாஹ் என்ற கப்பல் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி 895 கால்நடைகளுடன் துருக்கியை நோக்கி சென்றது. ஆனால் ஸ்பெயினில் கால்நடைகளுக்கு ஏற்படும் போவின் புளூடோங் என்ற தொற்று பரவி வருகிறது. அதனால் கால்நடைகளை ஏற்றி சென்ற கப்பல் கரைக்கு வர துருக்கி அரசு தடை விதித்திருந்தது. இதனால் அந்த […]
இந்தியாவில் உள்நாட்டு நீர் வழி இணைப்புகளையும், சுற்றுலாத் துறையையும் வளர்ப்பதற்காக அரசு, நீரின் மீது ஊர்ந்து செல்லும் விமான சேவைகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘சீ பிளேன்’ எனப்படும் இந்த விமானங்களுக்கு விமான நிலையங்களும், ஓடுபாதையும் தேவைப்படாது. அவை மேலே ஏறுவதற்காகவும் இறங்குவதற்காகவும் நிர்நிலைகளைப் பயன்படுத்தலாம். விரைவான, சிரமமற்ற பயணங்களுக்கு வசதி தரும் இந்த ‘சீ பிளேன்’ சேவைகள் இந்தியப் பயணத்துறையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறு துறைமுகம், கப்பல் மற்றும் நீர் வளத்துறைகளுக்கான […]
நடுக்கடலில் பொம்மையுடன் சிக்கித் தவித்த சிறுமியை கடற்படையின் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். ஆன்ட்டிரியோ நகரை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள கடலுக்கு கப்பலில் சுற்றுலாவாக சென்றுள்ளனர். அப்பொழுது குழந்தை ஒரு பலுனால் செய்யப்பட்ட குதிரை பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது கடலில் பெரிய அலை சீற்றம் ஏற்பட்டது. பெற்றோரின் கவனக்குறைவால் திடீரென்று அந்தக் குழந்தை கடலில் பொம்மையுடன் போய் விழுந்தது. இதனைக் கண்டு கதறி அழுத பெற்றோர் கடற்படை காவல்துறையினருக்கு […]
நைஜீரியா நாட்டு கப்பலில் மர்மமான முறையில் இறந்து போன தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட புன்னகையில் சேர்ந்தவர் வில்சன் ரோபோ. இவர் நைஜீரிய நாட்டு கப்பலின் மாலுமியாக வேலை பார்த்து வந்தர். இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி இவர் திடீரென கப்பலில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக கப்பல் நிறுவனம் […]
சரக்கு கப்பலில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் அதனை ஈடுசெய்ய மொரீஷியஸ் அரசு போராடி வருகிறது. ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் சரக்கு கப்பல் 3,800 டன் பெட்ரோலுடன் சென்ற மாதம் 25ஆம் தேதி இந்திய பெருங்கடல் தீவு நாடான மொரீஷியஸ் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக கருதப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் இந்த கப்பல் மோதியது. அதன்பின் கப்பலில் இருந்த குழுவினர் […]
4000 கிலோ போதைப் பொருட்களுடன் சிக்கிய கப்பலுக்கும் வெனிசுவேலா அதிபருக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது ஸ்பெயின் கடற்கறையில் 4000 கிலோ போதைப் பொருட்களுடன் சிக்கிய கப்பலுக்கும் வெனிசுவேலா அதிபருக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. கப்பலில் இருக்கும் போதைப் பொருட்கள் கொலம்பியா கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது என கொலம்பியா செய்தித்தாள் செய்தி வெளியிட்டது. கொலம்பியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவி செய்வதாகவும் 250 டன் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு செல்ல […]
பெல்ஜியம் ஜிப்ராக் துறைமுகத்தில் கடந்த புதன் கிழமை முதல் லைனர் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 3000-க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். சீனாவின் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 106-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து பெல்ஜியத்தில் கொரானா வைரசால் 3 பேர் உயிரிழந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வந்த பயணிகள் உள்ள நிலையில் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் […]
ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் […]
‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பலில்உள்ள பயணிகள் வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் வைரஸ் பாதிப்பு காரணமாக அந்நாட்டின் […]