Categories
தேனி மாவட்ட செய்திகள்

இனிமே எளிதாக புகார் அளிக்கலாம்…. “காவல்நிலையத்தில் வரவேற்ப்பாளர்கள் நியமனம்”….!!

கம்பம் காவல்நிலையத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் வரவேற்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் யாரிடம் புகார் கொடுப்பது எந்த அதிகாரியை சந்திப்பது என்று குழப்பத்தில் தயங்கி நிற்பது பல இடங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் அனைத்து காவல்நிலையங்களிலும் வரவேற்பாளர்களை நியமித்து வருகின்றனர். இதனால் காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்க முடியும். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க வந்த நேரம், புகாரின் தன்மை ஆகியவற்றை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் புகார் அளிக்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தலுக்கு துணை போகும் சிறுவர்கள்…. 5 பேர் அதிரடி கைது…. 123 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

கேரளாவிற்கு கடந்த முயன்ற 123 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 5 வாலிபர்களை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் சாக்கு மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த மரம்…. அதிஷ்டவசமாக தப்பிய மூதாட்டி…. 2 வீடுகள் சேதம்….!!

சாலையோரம் இருந்த பழமையான மரம் வேரோடு சரிந்து விழுந்ததில் 2 வீடுகள் மற்றும் மின் கம்பம் சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் கம்பம்-சுருளிப்பட்டி செல்லும் சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ள நிலையில் சுருளிப்பட்டி பிரிவு சாலையில் உள்ள வ.உ.சி திடல் அருகே மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து அருகே இருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சிக்கிய மீனம்மாள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்… பெண் காவலர் படுகொலை… நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் காந்தி சிலை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது. டெல்லியில் பெண் காவலர் சபியா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கம்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் தங்கபாண்டி, செயலாளர் குணசேகரன், மாநில […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொடிக்கம்பத்தால் வந்த பிரச்சினை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. மனைவி அளித்த புகார்…!!

கொடிகம்பம் முன்பு தீக்குளித்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை மனு அளித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பம் ஏகலூத்து சாலை பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன்பு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து விலகி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்துள்ளார். இதனையடுத்து கடத்த மாதம் சிலம்பரசன் அப்பகுதியில் உள்ள ஒரு கொடிக்கம்பத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தாலிக்கு தங்கம் வழக்கும் விழா… கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்… மகிழ்ச்சியுடன் சென்ற குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் தமிழக அரசின் திருமண உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள சுமார் 135 படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திட்டத்தின் கீழ் மொத்தமாக நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்… கோரிக்கைகளை வலியுறுத்தியும்… தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கம்பம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இயந்திர நடவு பணியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்..!!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இயந்திர நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண்மைதுறை சார்பாக இயந்திர நடவு பணி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த இயந்திர நடவு பணியின் மூலம் ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்யலாம் என்றும், தண்ணீர் பயன்பாட்டை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இயந்திர நட விருப்பு  ஏக்கருக்கு 2,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் வேளாண்மை துறையின் மூலம் தேசிய  வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் பஞ்சம் – 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம்

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக பொதுமக்கள்     குற்றம்சாட்டியுள்ளனர்.   கம்பம் நகராட்சியின் இருபத்தி எட்டாவது வார்டு பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது அதுவும் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் இருப்பதால் குடிப்பதற்கு கூட பயன்படுத்த முடிவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் எந்தவித உதவியும் வழங்கப்படாததால் பட்டினியால் தவிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் இது குறித்து கம்பம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கம்பத்தில் ஜூலை 12 முதல் 25…. “முழு ஊரடங்கு” ஆலோசனை கூட்டத்தில் முடிவு….!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 12 முதல் 25ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மக்கள் தளர்வுகளுடன் நடமாட தொடங்கியுள்ளனர். இருப்பினும் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்தின் […]

Categories

Tech |