Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்பு: பெண்ணின் முடிவே இறுதியானது…. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு….!!!!

தில்லியை சேர்ந்த 26 வயது பெண் தன் 33 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது, கருவிலுள்ள குழந்தைக்கு பெரு மூளையில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மருத்துவர்கள் மறுத்தபோதிலும் பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி, இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு விவகாரம்… “இந்த தீர்ப்பு கோர்ட் மற்றும் நாட்டிற்கு சோகமான நாள்”…? அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் பேச்சு….!!!!!

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 1973 ஆம் வருடம் அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் அரசியலமைப்பு உரிமை என அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட் அரசு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல 1992 ஆம் வருடம் நடைபெற்ற வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கலைத்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பானது பல்வேறு மாகாணங்களில் சட்ட வடிவில் இருக்கிறது இந்த சூழலில் 15 வாரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெண்கள் கருக்கலைப்பு – சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு ..!!

சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் ? எப்போது செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விரிவான தீர்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான,  சட்டபூர்வ கருக்கலைப்பை செய்து கொள்வதற்கான முழு சுதந்திரம் அனுமதி இருக்கிறது என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING:திருமணம் ஆகாத பெண்களுக்கு….. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

திருமணம் ஆகாத பெண், கருக்கலைப்புக்கு அனுமதி கோரிய வழக்கில், “அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு” என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கருக்கலைப்புக்கான உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றுவது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு என தீர்ப்பளித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: கருக்கலைப்பு: பெண்களுக்கு உரிமை உண்டு- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ..!!

சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் ? எப்போது செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விரிவான தீர்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான,  சட்டபூர்வ கருக்கலைப்பை செய்து கொள்வதற்கான முழு சுதந்திரம் அனுமதி இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் […]

Categories
சினிமா

BIGG BOSS நிகழ்ச்சியால் Abortion…. பிரபல தமிழ் நடிகை சோகம் …..!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொண்டு பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை கடந்த ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது . அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியால் தனக்கு கர்ப்பம் கலைந்ததாக நடிகை சுஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின் போது சுஜா மயக்கம் போட்டு விழுந்துள்ளார். மருத்துவரிடம் காட்டியதில் அவர் எட்டு வாரம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. பிறகு மருத்துவர் கொடுத்த அறிவுரையின் பெயரில் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

BREAKING: கருக்கலைப்பு செய்த பெண் மரணம்…. அதிர்ச்சி தகவல்…..!!!!

கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

திருமணமாகாமல் கர்ப்பம்….. கருக்கலைப்பை மறுக்க முடியாது….. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…..!!!!!

மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்ந்ததால் கர்ப்பமானார். அவர் தனது 20 வார கருவை கலைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், கருக்கலைப்பு சட்டத்தின் 3வது பிரிவில் பார்ட்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர கணவர் என குறிப்பிடப்படவில்லை. இதன் பொருள் திருமணமாகாத […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்புக்கு அனுமதி…. இரு மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்….!!!!!!!!!

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புரிமை தேசிய அளவியல் சட்டபூர்வமாகிய 50 வருட கால உத்தரவை ரத்து செய்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும் முரணாக பெண்கள் கரு கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்துள்ள […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு திடீரென நேர்ந்த விபரீதம்…. சிக்கிய மெடிக்கல் உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை தாலுகா மேட்டுபாளையத்தில் வசித்து வருபவர் வேல்முருகன். இவருக்கு அனிதா(27) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு சென்ற 2016 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்னிகா, வர்ஷினா என 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 3வதாக அனிதா கர்ப்பமடைந்தார். இதையடுத்து 4 மாத கர்ப்பிணியாக இருந்த அனிதா கடந்த மே மாதம் 5ஆம் தேதி ராமநத்தத்திலுள்ள ஒரு மெடிக்கலுக்கு வந்து வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பார்த்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் கருகலைப்பு சட்ட உரிமை ரத்து…. இதற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்ட பேரணி….!!!

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கருகலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை, தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறி உள்ளது. இதற்கிடையில் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பெண்களுக்கு ஆதரவாக 15,000 ஆஸ்திரேலியர்கள் அமெரிக்க கருக்கலைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக பேரணி நடத்தி […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு உரிமைக்கு தடை…… பெண்கள் கடும் எதிர்ப்பு….. போராட்டம்….!!!!

பெண்களின் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பினால் அமெரிக்கப் பெண்கள் தங்களுடைய கருக்கலைப்பு உரிமையை இழக்க உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 13 மாகாணங்கள் உடனடியாக கருக்கலைப்புக்கு தடை விதித்ததாக கூறப்படும் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு உரிமை ரத்து…. பிரபல நாட்டில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

உலகின் மிகவும் பழமையான ஜனநாயகமாக அமெரிக்கா கருதப்படுகிறது. அந்த ஜனநாயக நாட்டில் கடந்த 1973-ஆம் ஆண்டு கருக்கலைப்பு என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அரசியலமைப்பு உரிமை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி ஒரு பெண் 22 வாரங்கள் முதல் 2 வாரங்கள் வரை கர்ப்பத்தை அவர் விரும்பினால் கலைத்துக்கொள்ளலாம் என்று இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை சட்ட பூர்வமாக்கிய உத்தரவை நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை ரத்து செய்ததால் இனி கருக்கலைப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் ஒரே வருடத்தில் 2 லட்சம் கருக்கலைப்புகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

பிரிட்டன் மற்றும் வேல்ஸில் கடந்த வருடத்தில் அதிகமான கருக்கலைப்புகள் நடந்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. சுகாதார மேம்பாட்டு துறை அலுவலகமானது கடந்த வருடத்தில் கருக்கலைப்புகள் செய்யப்பட்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த வருடத்தில் ஏறக்குறைய 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் வைத்து கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காலகட்டத்தில் அஞ்சல் வழியில் மாத்திரைகளை வாங்கி மருத்துவர்களை நேரடியாக சந்திக்காமல் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

மாமியாரின் வரதட்சணை கொடுமை….. மனைவியை சித்திரவதை செய்து கட்டாய கருக்கலைப்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…. !!!

கடலூர் மாவட்டம் வேம்பூர் அருகில் சிறு பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். ஆர்த்திக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாளே பிரேம்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளின் எடையை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஆர்த்தியின் மாமியார் சுகந்தி எங்கள் பகுதியில் வரதட்சணையாக 40 முதல் 50 பவுன் வரை போடுவார்கள் என்று கூறி அடிக்கடி சண்டை போட்டு […]

Categories
உலக செய்திகள்

சுயமாக கருக்கலைப்பு செய்த பெண்?….. நடந்தது என்ன?…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுயமாக கருக்கலைப்பு செய்து கொண்டதாக சொல்லி பெண் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. டெக்சாஸ் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள சட்டத்தை பொறுத்தவரையிலும் கருக்கலைப்பு செய்து கொள்வது என்பது தனியொருவரின் கொலையாகவே கருதப்படுகிறது. இதனிடையில் Lizelle Herrera எனும் 26 வயது பெண்மணியின் விவகாரத்தில் அவர் சுயமாக கருக்கலைப்பு செய்து கொண்டாரா (அல்லது) எவருக்கேனும் கருக்கலைப்புக்கு உதவினாரா என்பது வெளிப்படுத்தப்படவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை Lizelle […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் சரிப்பட்டு வராது….! “பெண்களை பாதிக்கும் சட்டம்”…. வருத்தம் தெரிவித்துள்ள அதிபர்….!!

கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் 6 வார கருவை கலைப்பதற்கு தடை விதித்து கடந்த செப்டம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு அம்மாகாண ஆளுநரும் ஒப்புதல் வழங்கிவிட்டார். இந்த தீர்மானத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்பை வழங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் வாஷிங்டனில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அமலில் இருந்த 20 வாரக்கால வரையிலான கருவை கலைக்கலாம் என்ற நிலையே தொடர வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்புக்கான கால அவகாசம் உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு…!!

கருக்கலைப்புக்காண கால வரம்பை 20 லிருந்து 25 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட சில காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கான காலவரம்பு தொடர்பான சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான புதிய விதிமுறைகளை அரசு நேற்று வெளியிட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் பொதுவாக பெண்கள் கருக்கலைப்பு செய்ய 12 வாரங்களுக்குள் ஒரு டாக்டரின் பரிந்துரையும், 12 முதல் 20 வாரங்களுக்கு கருக்கலைப்பு செய்வது எனில் இரண்டு டாக்டர்களின் பரிந்துரையும் […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்புக்கு எதிரான சட்டம்…. தடை விதித்த நீதிமன்றம்…. தீர்ப்பை ஆதரிக்கும் வெள்ளை மாளிகை….!!

அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்துக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு. அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தை ஆளும் குடியரசு கட்சியால் கருக்கலைப்புக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. மேலும் கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக பெண்கள் அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியின் மாவட்ட நீதிமன்றத்தில் கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ராபர்ட் பிட்மேன் கடந்த […]

Categories
உலக செய்திகள்

‘கருவுற்றிருந்தால் கூற வேண்டும்’…. கோபத்தில் உள்ள பெண்கள்…. அறிக்கை வெளியிட்ட நீதித்துறை அமைச்சகம்….!!

பெண்கள் கர்ப்பமடைந்திருப்பதை பற்றிய தரவுகளை ஆய்வகங்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈரானின் வடக்கில் உள்ள மஜந்தரன் மாகாணத்தில் நீதித்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஆய்வகங்கள் கருவுற்றிருக்கும் பெண்கள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் கருக்கலைப்பு சம்பவங்களை தடுக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அறிந்த ஈரானைச் சேர்ந்த பெண்கள் அரசின் மீது கடுமையான […]

Categories
உலக செய்திகள்

புதிய கருக்கலைப்பு சட்டம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக பேரணியாக சென்றதை அடுத்து லண்டனிலும்  நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்ட  விதிகளின்படி, 6 வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அமெரிக்க சட்டமானது, எந்தவொரு தனிப்பட்ட குடிமகனும் டெக்சாஸ் கருக்கலைப்பு வழங்குநர்கள் மீது சட்டத்தை மீறியதற்காக வழக்குத் தொடர அனுமதிக்கிறது. மேலும் டெக்ஸாஸ் சட்டமானது  இதய துடிப்பு சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

செஞ்ச தப்ப மறைக்க போய்… இப்படி ஆயிருச்சு… யூடியூப் பார்த்து கருக்கலைப்பு… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!!!

மகாராஷ்டிராவில் யூடியூபை பார்த்து கருக்கலைப்பு செய்த இளம்பெண் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழகி வந்ததாக தெரிகிறது. இந்த பழக்கத்தால் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுபற்றி ஆண் நண்பரிடம் தெரிவித்தபோது அவர் கருவை கலைத்து விடும்படி கூறியுள்ளார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு சென்று கருக்கலைப்பு செய்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும் என்று முடிவு செய்த அவர்கள் ரகசியமாக […]

Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்பு – நாளை முதல் அமல் …!!

பாலியல் பலாத்காரத்தால் ஏற்பட்ட கரு மற்றும் குறைபாடுள்ள கரு ஆகியவற்றை கலைப்பதற்கான உச்சவரம்பு காலத்தை 24 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. 20 வாரங்களாக இருந்த இந்த சட்டம் தற்போது 24 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு ஆணையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆண் வாரிசுக்காக…. தொடர்ந்து 8 முறை…. கொடூர சம்பவம்…!!!!

மும்பையில் வழக்கறிஞர் ஏக்நாத் தேஷ்முக் என்பவர் தாதரில் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு இவருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக மனைவி அடுத்த முறை அவர் கர்ப்பமாகும்போது , அவர் வயிற்றில் உள்ள குழந்தை என்ன என்பதை பரிசோதித்து தெரிந்து கொண்டுள்ளார். அதில் இரண்டாவதும் பெண் குழந்தை உருவாகி உள்ளது. இதனால் கர்ப்பத்தை கலைத்து விட்டு மீண்டும் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

கருகலைக்க பெண்களுக்கு உரிமை உண்டு…. அதிரடி உத்தரவு…!!!

கருக்கலைப்பு என்பது கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்கு வெளியே இருக்கும்போது உயிர்வாழக் கூடிய தன்மையை அடைவதற்கு முன்னர், அதனை கருப்பையிலிருந்து அகற்றி அதனை அழித்துவிடுதல் ஆகும். சில சமயங்களில் தானாகவே  கருப்பையின் உள்ளே இருக்கும்போது அழிந்துவிடுகின்றது. அவ்வாறு நிகழுமாயின், அது பொதுவாகக் கருச்சிதைவு அல்லது இயல்பு கருக்கலைப்பு அல்லது தானாக நிகழும் கருக்கலைப்பு   எனப்படும். தானாக அன்றி, ஒரு நோக்கோடு செய்யப்படும் கருக்கலைப்பு தூண்டற் கருக்கலைப்பு எனப்படுகிறது. ஒரு சில சமயங்களில் கர்ப்பிணிப் பெண்ணின் அனுமதியில்லாமல் கட்டாயபடுத்தி கருக்கலைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

3 வதும் பெண் குழந்தை வேண்டாம்… மனைவியின் வயிற்றை கிழித்து… கணவன் செய்த நெஞ்சை பதறவைத்த சம்பவம்…!!!

மூன்றாவதும் பெண் குழந்தையாக இரக்க போகிறது என்பதை அறிந்து மனைவியின் வயிற்றை கத்தியால் குத்தி கிழித்து கருவை கலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரின் மனைவி விஜயலட்சுமி. இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ளது. மூன்றாவதாக விஜயலட்சுமி கர்ப்பமானார். மூன்றாவது ஆண் குழந்தையாக பிறக்க வேண்டுமென்று அரவிந்து கூறிவந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பது குறித்து ஸ்கேன் சென்டருக்கு அழைத்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை இலியானா தனது கருவை கலைத்து விட்டாரா…? வருத்தத்தில் அவரே அளித்த விளக்கம்….!!!

நடிகை இலியானா தனது கர்ப்பத்தை கலைத்து விட்டார் என்று பரவி வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இலியானா நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இதையடுத்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் நடித்து வந்த இலியானா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்து வருவதாக உறுதி செய்தார். ஆகையால் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொட்டதாகவும் சமூக […]

Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம்… நிறைவேற்றம்..!!

26 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாயன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கருவுற்ற பெண்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் தங்களது கருவினை கலைக்க  விரும்புவார்கள். அப்படி 20 வாரங்கள் வரை கருவை கலைப்பதற்கு  சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால அளவினை 24 வாரங்கள் ஆக உயர்த்த வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் 24 வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பெண்கள் கருக்கலைப்பு செய்ய… பரபரப்பு அறிவிப்பு…!!!

இந்தியாவில் 24 வாரம் வரையிலான கருக்கலைப்பு சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கருக்கலைப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. பெண்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கருக்கலைப்பு செய்கிறார்கள். ஆனால் அதற்கும் சில சட்ட திருத்தங்கள் உள்ளன. அதன்படி குறிப்பிட்ட வாரத்தில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதி உள்ளது. இந்நிலையில் 24 வாரம் வரையிலான கருக்கலைப்புக்கு அனுமதி தரும் சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 20 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு மனுஷனா… பிஞ்சு கருவை கலைத்து மறுமணம் செய்த காதல் கணவன்..நீதிமன்றம் வழங்கிய தரமான தீர்ப்பு…!

காதல் மனைவியின் கருவை கலைத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. திண்டிவனத்தை சேர்ந்த 25 வயதுடைய மஞ்சுளா என்ற இளம்பெண்ணும் 32 வயதுடைய ராஜேஷ் குமார் என்பவரும் கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தாய் வீட்டிலேயே மஞ்சுளாவை விட்டுவிட்டு ராஜேஷ்குமார் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மாதத்திற்கு இரண்டு முறை மஞ்சுளாவை வந்து பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவின் கர்ப்பமானார். […]

Categories
உலக செய்திகள்

சட்ட விரோதம் இல்லை…”கருக்கலைப்பிற்கு அனுமதி”… வெளியான புதிய சட்டம்..!!

கருவைக் கலைப்பது சட்டப்பூர்வமானது என புதிய சட்டத்திற்கு அர்ஜென்டினாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக பட்டது. அந்த நாட்டின் மக்கள் தொகை 4.4 கோடி. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். எனினும் கருக்கலைப்பு இத்தனை ஆண்டுகளாக சட்டவிரோதம் என குறிப்பிட்டு வந்தது. ஆனால் கருக்கலைப்பு ஒருவரது விருப்பம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கருக்கலைப்புக்கு சட்டத்தில் அனுமதி இல்லாததால் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு குற்றம் அல்ல… நியூசிலாந்தில் நிறைவேறிய மசோதா!

நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு குற்றம் அல்ல எனும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக நியூசிலாந்தை பொறுத்தவரை கருக்கலைப்பு செய்வது குற்றமாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, இதற்கான மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பெண்கள் இனி 20 வாரங்கள் வரை தங்களது கர்ப்பத்தை கலைத்துக் கொள்வதற்கு தடை ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |