பிரிட்டன் மகாராணி அரண்மனையில் 26 அன்னப்பறவைகள் கருணை கொலை செய்யப்பட்டிருப்பது மகாராணிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பு கொண்டவர். ஆனால், தற்போது அவர் தொடர்ச்சியாக தன் செல்லப்பிராணிகளை இழந்து வருகிறார். கடந்த வருடத்தில் அவரின் இரண்டு செல்ல நாய் குட்டிகள் இறந்தது. இந்நிலையில், அவரின் 26 அன்ன பறவைகளை கருணைக் கொலை செய்துள்ளனர். இதனால், மகாராணி அதிக வேதனையடைந்திருக்கிறார். மகாராணியின் அன்னப்பறவைகளில் ஆறு பறவைகள் பறவை காய்ச்சலால் […]
Tag: கருணைக்கொலை
பிரிட்டனில் ஒரு அணில் 18 நபர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டனிலுள்ள பிளின்ட்ஷயரில் இருக்கும் பக்லி என்ற பகுதியில் ஒரு அணில், இரண்டு நாட்களில் சுமார் 18 பேரை கடித்திருக்கிறது. மேலும் அப்பகுதி மக்கள், அந்த அணிலுக்கு ‘ஸ்ட்ரைப்’ என்று பெயரிட்டுள்ளனர். இதுபற்றி, ஒரு நபர் கூறுகையில், ஸ்ட்ரைப், “என் தோட்டத்திற்கு வந்து தானியங்களை தின்று செல்லும். அது எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தான் இருந்தது. ஆனால், திடீரென்று ஒரு நாள் […]
கொலம்பியாவைச் சேர்ந்த பெண் நோயின் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் கருணைக்கொலை செய்யப்பட்டார். தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவைச் சேர்ந்தவர் 51 வயதான Martha Sepúlveda. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் Lou Gehrig’s எனப்படும் amyotrophic lateral sclerosis நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் கருணைக்கொலை செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதில் “என்னை பொறுத்தவரை வாழ்க்கையின் முழு உரிமையாளர் கடவுள் தான். […]
சுவிட்சர்லாந்தில் 2020ஆம் ஆண்டு மட்டும் 1,282 பேர் தங்கள் விருப்பத்தின் பேரில் மருத்துவர்களின் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2019 ஆம் ஆண்டை விட தற்போது அதிகரித்துள்ளது. சுவிஸில் வாழும் ஜெர்மன் மற்றும் இத்தாலி மொழி பேசும் 913 பேர் தங்கள் விருப்பத்தின் பேரில் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் 369பேர் கருணை கொலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சூரிச்சில் 312 பேரும்,பெர்னில் 133 பேரும்,ஆர்கூவில் 44 […]
தீராத நோய்களால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதை சட்டபூர்வமாக்க மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் கருணைக் கொலை செய்திட நியூசிலாந்தர்கள் எண்ட் ஆஃப் லைஃப் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தீராத நோயினால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்திட இந்த மசோதா வழிவகுக்கிறது. தற்போது இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் கிட்டத்தட்ட அரை மில்லியன் வாக்குகள் எண்ணப்படவில்லை. இந்நிலையில் தற்போது வரை பதிவான வாக்குகளில் 65.2 சதவீதத்திற்கும் மேலான வாக்காளர்கள் இந்த மசோதாவிற்கு […]
நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் 4 பேரையும் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய […]