தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா ராங்கி […]
Tag: கருத்து
பிரபல நடிகர் விஷால் திருப்பதியில் உள்ள 2 கல்லூரிகளில் நடைபெற்ற லத்தி படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. ஜெகன்மோகன் ரெட்டி பாதயாத்திரை மேற்கொண்ட போது ஒரு வருடத்திற்கு முன்பாகவே அவர் தான் ஜெயிப்பார் என்று கூறியவன். நான் அவரை சாதாரணமாக சந்தித்து பேசியதற்காக என்னை குப்பம் தொகுதியில் போட்டியிடப் போகிறார்கள் என்று கூறுகிறார்கள். சமூக சேவை செய்பவர்கள் எல்லோருமே அரசியல்வாதிகள் தான். அதன் […]
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் பயங்கரவாத செயல்களை ஆதரிக்கும் அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சாடி பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மற்றும் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ கூறியதாவது, ஒசாமா பின்லேடன் இறந்து விட்டார். ஆனால் குஜராத் கசாப்பு கடைக்காரர் வாழ்கின்றார். அவர் தான் தற்போது இந்தியாவின் பிரதமராக (மோடி) இருக்கிறார். பிரதமர் மோடி அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் நிறுத்துவதற்கு அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான முன்னெடுப்புகளில் களமிறங்க உக்ரைன் மறுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்திருந்த உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றாமல் போர் நடவடிக்கையை உக்ரைன் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் உக்ரைன் ரஷ்யா இடையான போர் இன்னும் பல மாதங்கள் தாண்டியும் தொடரும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி […]
ரஜினிகாந்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் மு.க. ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில் “எனது நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
சேலத்தில் உள்ள மத்திய சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு சட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் ஐஜியும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியுமான பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் அனைவரும் பயத்தை தவிர்ப்பதோடு நல்ல புத்தகங்களை படித்து நேர்மையான நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும். நீதிதுறைக்கும் காவல்துறைக்கும் இருக்கும் சில இறுக்கமான சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும். அதன் பிறகு காவல்துறையால் சராசரியாக 100 […]
கட்டாய மத மாற்றம் அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரான ஒன்று என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து செய்யும் மதமாற்றமானது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி பாஜக-வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவற்றில் நேற்று நடந்த விசாரணையின் போது மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “பணம், […]
எங்கள் குணம் மக்களுக்கு புரியும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. இவர் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இது தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது. கடந்த காலங்களில் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக செயல்பட்டு வந்தது. ஆனால் […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடித்துள்ள ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக பேட்டி அளித்த ஐஸ்வர்யா ராஜேஷிடம், அவரின் அண்ணன் மணியை பற்றி […]
வாடகை தாய்க்குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை சமந்தா பதில் அளித்து இருக்கின்றார். முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சென்ற ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இதன் பிறகு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்ற அக்டோபர் 9-ம் தேதி பகிர்ந்தார். இதன் பிறகு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்து இருப்பதாக செய்தி வெளியானது. இதை அவர்களும் மறுக்கவில்லை. இந்த விஷயத்தில் […]
நடிகர் அசோக் செல்வன் திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல நடிகரான அசோக் செல்வன் தமிழில் தெகிடி திரைப்படம் மூலம் பிரபலமானார். இவர் நடித்த மன்மத லீலை, ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு தனித்த அடையாளத்தை பெற்று தந்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூலை குவித்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் நடிகர் அசோக் செல்வன் பங்கேற்றார். அப்போது […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை வாடகைத்தாய் முறையில் பிறந்தது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் கூறியதில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைகளும், பிரச்சனைகளும் கிளம்பியது. இதன் காரணமாக நயன் மற்றும் விக்கியின் வாடகைத்தாய் விவகாரம் குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் […]
காந்தாரா திரைப்படம் குறித்து பிரபல நடிகர் கருத்து தெரிவித்துள்ளார். கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளி வருகின்றது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. இத்திரைப்படம் 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகின்றார். ஆனால் அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்வீக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் படமே இந்த படமாகும். துன்பங்களையும் அதிரடியான சண்டை […]
சினிமா மாறிவிட்டதாக லைலா கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் 2000களில் விக்ரம், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் லைலா இவர் ரசிகர்களால் கன்னக்குளி அழகி என்று பாராட்டப் பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்த லைலா 16 வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” படத்தில் லைலா நடித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் சினிமா வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இதுக்குறித்து […]
தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி ஆகிய படங்களில் பூனம் கவுர் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் திருமணம் ஆகாத பெண்களுக்கு கரு கலைப்பு செய்யலாம் என்று சுப்ரீம் கோட் அளித்த தீர்ப்பை வரவேற்று இருக்கிறார். இது குறித்து பூனம் கவுர் கூறியது, சட்டப்படியான பாதுகாப்பான கருகலைப்புக்கு திருமணமாகாத பெண்கள் கூட தகுதியானவர்கள் […]
இந்தியா முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய இடங்களில் கடந்த 22-ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சில கருத்துக்களை கூறியிருந்தார். இதற்கு கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது, தமிழக முதல்வருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பற்றி தெரியுமா, தெரியாதா? […]
நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், எனது மகள் இதழ் வில்சன் கல்லூரி முதலாமாண்டு பயின்று வருகிறார். கடந்த 6 ஆம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. இது குறித்து விசாரித்த போது எனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ப்ரீபையர் விளையாடுவதாகவும், அதில் ஏற்பட்ட பழக்கமாக கன்னியாகுமரியை சேர்ந்த ஜாப்ரின் என்பவருடன் சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். வளரிளம் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை அமைப்பு சார்பில் ஆன்மீக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இவர் ஆன்மீகப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 வருடங்களாக ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறார்கள். அவர்கள் ஆன்மீகத்திற்கான ஆதாரத்தை கேட்கிறார்கள். சனாதனம் பற்றி கேள்வி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், […]
எம்.பி. ஆ. ராசா தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் உள்ள வேப்பேரி பகுதியில் கடந்த 6-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பியான ஆ. ராசா கலந்து கொண்டு இந்து மதம் குறித்து பேசினார். இவர் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் இவர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது. நான் மன்னிப்பு கேட்க வேண்டும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ரம் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் நடிகர் தனுஷுக்கு மனைவியாக படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை எல்லி அவ்ரம் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதாவது நானே வருவேன் […]
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் காயம் காரணமாக முழங்காலில் தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் டி20 உலக கோப்பை போட்டியில் ஜடேஜாவால் விளையாட முடியவில்லை. இது குறித்து ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 5-வது இடத்தில் ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடக் கூடியவர். ஜடேஜாவும், பாண்டியாவும் சிறந்த ஆல்ரவுண்டர்கள். இவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது. ஜடேஜா காயம் காரணமாக விலகியதால் இடது […]
ரஷ்யா அதிபர் புதின் உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோபைடன் புதினை எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் ராணுவம் இந்த வாரம் நாட்டின் வடகிழக்கில் இருந்த ரஷ்ய படைகள் மின்னல் வேகத்தில் விரட்டி அடித்துள்ளது. இந்த பின்வாங்கும் நடவடிக்கை ரஷ்யாவிற்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும் இது பற்றி புதின் பேசும்போது, ரஷ்யா இன்னும் வலுவாக பதில் அளிக்கும் என புதின் எச்சரிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக ரஷ்யா ஒரு காலகட்டத்தில் சிறிய அணு […]
சென்னையில் உள்ள திட்ட மேலாண்மை நிறுவனத்தின் 21-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, ஒரு திட்டத்தை அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் தொடங்கி அதை செயல்படுத்த முயற்சி செய்யும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் தலைமை பொறுப்பில் இருப்பவர் மிகவும் திறமையானவராக இருக்க வேண்டும். இந்த தலைமை பொறுப்பை ஏற்பவரின் செயல்பாடுதான் ஒரு […]
விஜே மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவில் தோன்றி ரவீந்தர் பேசினார். அதோடு ரசிகர்களின் கேள்விக்கும் பதிலளித்தார். அவர் கேமராவுக்கு முன்னால் வருவதற்கு மகாலட்சுமி மறுக்கிறார் என்றார். என் பொண்டாட்டி ரொம்ப வெட்கப்படுகிறாள். கண்டிஷன் போட்டு என்னை நைட்டு 10 மணிக்கு அன்பே வா சீரியலை […]
தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. தெலுங்கில் அதிக படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் மூன்று படங்களிலும், தெலுங்கில் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து ரெஜினா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: “2020ல் எனது காதல் முறிந்து போனது. அதிலிருந்து விடுபட கொஞ்சம் நாள் எடுத்துக் கொண்டேன். […]
திருமணம் செய்யாமல் குழந்தை பெறுவதில் என்ன தவறு உள்ளது என்று நடிகை தபு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்த பிரபலமானவர் தபு. இவர் ஒரு மாடல் அழகிய ஆவார். இவர் தமிழில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதி, டேவிட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 51 வயது ஆகின்றது. இதுவரை இவர் […]
தன் கடை விளம்பர படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் சரவணன் அருள். இவர் தானே ராஜா மாதிரி இருக்கிறேன் ஹீரோவாக என் நடிக்க கூடாது என்று ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோவாகிவிட்டார். ஜேடி-ஜெர்ரி இயக்கிய தி லெஜென்ட் படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தார். மேலும் தனக்கு ஜோடியாக நயன்தாராவின் நடிக்க வைக்க முயன்று தோல்வி அடைந்தார். அதன் பிறகு பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். அதனைதொடர்ந்து படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் […]
லைகர் படத்திற்கு எதிரான ஹேஷ்டேக்குகள் இணையதளத்தில் பரவி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ராக்கெட்டரி நம்பி விளைவு. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனை மாதவன் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள, Dhokha round […]
இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆவார். இவர் கடந்த 1952-ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள சிதம்பரத்தில் பிறந்தார். இவர் கடந்த 1971-ஆம் ஆண்டு பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்தார். கடந்த 1976-ம் ஆண்டு ஒகையோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற வெங்கட்ராமன், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பேராசிரியராக பணியாற்றினார். இவர் ரைபோசோம்கள் பற்றி ஆய்வு செய்து, அதற்கான அமைப்புகள், செயல்பாடுகள் மற்றும் ஆண்டி பயாட்டுக்களின் செயல்பாடுகள் […]
ஐஸ்வர்யா ராய் இருவர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின் இந்தி சினிமாவில் நடிக்க தொடங்கி அங்கு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறி உள்ளார். பின்னர் அமிதாபச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை விட ஐந்து வயது பெரியவர். இந்தநிலையில் ஐஸ்வர்யா ராய் […]
குரங்கம்மை அறிகுறிகளுடன் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட முன்மாதிரி முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. அதில் அவர்கள் யாருக்கும் குரங்கமை இல்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு ஊசியால் கட்டுப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கின்ற நிலையில் குரங்கம்மை நோய் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 70-ற்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் […]
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த […]
ஓடிடியில் படங்களை வெளியிடுவதற்கு காத்திருக்க வேண்டி இருக்கிறது என அறிமுக இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். தமிழில் அறிமுக இயக்குனர் செல்வகுமார் செல்லபாண்டியன் இயக்கத்தில் வார்டு 126 என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படம் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்கும் விதமாகவும், ரொமான்டிக் கதை அம்சத்துடனும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் ஜிஷ்ணு மேனன், மைக்கேல் தங்கதுரை ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். அதன் பிறகு நடிகைகள் சாந்தினி, ஷ்ரிதா சிவதாஸ், வித்யா பிரதீப், சுருதி ராமகிருஷ்ணா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். […]
மக்களுக்கு நன்மை செய்வதற்கே எனக்கு நேரம் போதவில்லை. இதனால் வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல நேரம் கிடையாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் 581 கோடி மதிப்பிலான 99 புதிய பணிகளுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் ” 47 கோடியில் கரூர் திருமா நிலையூர் பகுதியில் விரைவில் பொது பேருந்து நிலையம் அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் […]
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுகர் சர்மாவை ஆதரித்து, சமூக வலைதளத்தில் கருத்துப்பதிவிட்ட ராஜஸ்தானி சேர்ந்த தையல் கடைக்காரரான கன்னையா லாலை அவரது கடையில் வைத்து கோஸ் முகமது மற்றும் ரியாஸ் அத்தாரி ஆகிய இருவரால் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த படுகொலை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் […]
மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. அதே நேரம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரனாவத் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், […]
அண்மையில் நடிகை சாய்பல்லவி தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: ” தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.?” என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், […]
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்க விரும்பும் நபர்கள் முன் வரலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான கருத்துக்களை வருகின்ற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நேரிலோ, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 21 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் துணை ஆணையர், ஒருங்கிணைப்பாளர், விசாரணைக்குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண் 8, ஆற்றங்கரை […]
அதிமுகவை கைப்பற்றுவதில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் அவருக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்று சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், அவர் பாஜகவில் இணைய விரும்பினால் நாங்கள் அவரை வரவேற்போம். அவருடைய வருகை பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை பாஜக […]
தனது முன்னாள் மனைவியின் காதல் குறித்த கேள்விக்கு பிரபல நடிகர் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் பாலா. இவர் ஒரு சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறலாம். ஏனெனில் நடிகர் பாலாவின் அப்பா ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவருடைய சகோதரர் சிறுத்தை சிவா பற்றி சொல்லவேண்டிய அவசியமே கிடையாது. அவரைப் பற்றி அறியாதவர் எவருமே இருக்க மாட்டார். இந்நிலையில் நடிகர் பாலா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் அவருக்கு […]
தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான சானிக்காயுதம் படம் வெளியானது. அமேசன் பிரைம்மில் வெளியான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து மிகப் பெரும் பாராட்டை பெற்றிருக்கின்றார். இதே போல தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இந்த […]
அரசியலுக்கு போவதாக தான் கூறியதும் தன்னுடைய தாயார் எச்சரித்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான இவர் மிகச் சிறு வயதிலேயே அரசியலில் நுழைந்தவர். தற்போது இவர் காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர் அரசியலுக்கு போவதாக முதன் முறையில் தன் தாயிடம் கூறியபோது அவர் எச்சரித்ததாக கூறியுள்ளார். ஆனால் “உன்னுடைய செயல்களுக்கு நீதான் பொறுப்பு. எப்போதும் நேர்மையும், குணமும் மிக முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்” என்று தாயார் […]
விராட் கோலிக்கு ஓய்வு தேவை என்று ரவிசாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி ரன் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அவர் சமீபத்தில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுப்பதற்கு தடுமாறுகிறார். இரண்டரை வருடங்களுக்கு மேல் அவர் சர்வதேச போட்டிகளில் சதம் விலாசமும் இல்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி […]
கல்வி, சுகாதாரத்தை பொது பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், மாநில அரசின் சட்ட மசோதாவை ரத்து செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சுட்டிக்காட்டினார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்வை மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலைதான். என்னை […]
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வியை சந்தித்தது ஏன்? என்று ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வலிமையான அணிகளாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது. முதல் 4 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐந்து […]
சட்டமேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய கருத்தை வெறுக்கிறோம் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார். ‘அம்பேத்கர் அண்ட் மோடி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதினார். அதில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டர் தளத்தில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக் […]
ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்தது இது இரண்டாவது முறையாகும். ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து இந்த ஐபிஎல்லில் ஐந்து முறை தோல்வியை தழுவியது. புனேவில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் […]
தமிழ்நாட்டில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளது. அங்கெல்லாம் புதிய கல்லூரி தொடங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பங்கேற்று பேசிய அமைச்சர் பொன்முடி பூந்தமல்லி தொகுதியில் 3 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், ஒரு அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி உள்ளதாக தெரிவித்தார். மேலும் 33 சுயநிதி கலை அறிவியல் கல்லூரி, ஒரு தொழில்நுட்பக் […]