சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைய இருக்கிறது. இந்த நினைவுச் சின்னத்தை மக்கள் அடைவதற்காக கலைஞர் நினைவிடத்தில் இருந்து கடலுக்குள் அமையும் பேனா நினைவு சின்னம் வரை உயர்மட்ட பாலம் கட்டப்பட இருக்கிறது. இதற்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி […]
Tag: கருத்து கேட்பு
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த […]
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தொழிற்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்பு முதல் கூட்டம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். உறுப் பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். […]
தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு அலகிற்கு 27.50 பைசா முதல் 1.25 ரூபாய் வரை உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை மின்கட்டணம் உயர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மின்சார கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டால் மக்கள் […]
மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க மாநில கல்விக் கொள்கை குழு முடிவு எடுத்துள்ளது. தமிழகத்திற்கு என பிரத்தியேகமாக கல்வி குழுவை வடிவமைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இரண்டு கூட்டங்களாக அந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கு பொதுமக்கள் அனைவரிடமும் கருத்துக்களை பெற இந்த குழு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து தமிழகம் முழுவதும் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் நகரின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தலீபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அரண்மனைக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே ஜனாதிபதி அஷ்ரப் கனி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்களின் கைக்கு ஆட்சி மாறியது. காபூல் நகரின் எல்லையை தலிபான்கள் சூழ்ந்திருந்த நிலையில், அவர்களை நகருக்குள் செல்ல தலிபான்களின் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதன்பின்பு தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தனர். நகர் […]
முதலமைச்சர் சிறுபான்மையினர்களின் உரிமைகளை பாதிக்கின்ற எந்த திட்டங்களையும் அனுமதி வழங்கமாட்டார் என பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கான கருத்து கேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் வாழ்வியல் பிரச்சனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்கும் மற்றும் அரசாங்கத்தால் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை கண்டறிவதற்கும் […]
பள்ளிகள் திறப்புக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதால் இறுதி முடிவை முதல்வர் அறிவிக்க உள்ளார். நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று குழப்பம் நிலவியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். […]
நாளைக்குள் கருத்து கேட்டு முடிக்கும்படி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 50 லட்சம் பேர் படிக்கின்றனர் தற்போது பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளைக்குள் கருத்து கேட்கப்பட்டு நாளை மறுதினம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் சென்னையில் இருக்கும் பள்ளி கல்வி துறைக்கு வந்து சேரும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதன் மூலமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுமென அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை வருகின்ற நவம்பர் 16ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பினை கடந்த 31ம் தேதி தமிழக அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 9, 10, 11, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் இன்னும் கொரோனா இருந்து […]
புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகணிப்பு ஆன்லைன் மூலமாக இன்று நடைபெற உள்ளது. புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக உயர்கல்வித்துறை இன்று ஆன்லைன் மூலமாக கருத்துக்களை கேட்க இருக்கிறது. புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை மூலம் சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு […]