நேற்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் தமிழக மக்கள் சமூகநீதியை காக்கும் வகையில் திமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் இந்தியாவே புகழ்ந்து பேசும் வகையில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தின் மூலம் நீக்கியுள்ளார். அதேபோல் தமிழ்தாய் வாழ்த்து, கோவில் நிலம் மீட்பு என […]
Tag: கருப்புக் கொடி
விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியுள்ளார். டெல்லியில் 40 விவசாய சங்கங்கள் சேர்ந்து மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆறு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை குறிக்கும் விதமாக இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைத்தும் தங்களது வீட்டில் கருப்பு கொடியை ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள வியாபாரிகள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி கடைகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுற்றுலா பயணிகளை கொடைக்கானலுக்கு அனுமதிக்ககோரி பல்வேறு சங்கங்களின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அரசு […]
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் விவசாயிகள் கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள தாராபுரத்தில் பிரதமர் மோடி வருகை தந்தார். தாராபுரம் […]
உசிலம்பட்டியில் 68 சமுதாய மக்களுக்கு டி என் டி சான்றிதழ் வழங்கக்கோரி இரு சங்கத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பாக வடமாநில தமிழர்கள் கூட்டமைப்பும் சீர்மரபினர் சங்கமும் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினர்களும் காவல்துறையினரிடம் கூறியதாவது, இந்திய நாட்டிலுள்ள அனைத்து சீர்மரபினர் மற்றும் […]