வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் காமராஜர் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு மாதம் சரியாக குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் குடிநீர் வராததை […]
Tag: கருப்பு கொடி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவருக்கு இட ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணித்தனர். மேலும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் வீடுகளில் ஏற்றியிருந்த கருப்பு கொடிகளையும் காவல்துறையினர் அகற்றினர். இருந்தபோதும் […]
செஞ்சி அருகே தனி ஊராட்சி வேண்டி உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஆவியூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதால் அந்த கிராமத்தினரே ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். குறைந்த ஓட்டுகள் உள்ள விற்பட்டு கிராமத்தை யாரும் கண்டுகொள்ளாததால் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் வேதனையில் இருக்கின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அவர்கள் மாற்று […]