கர்நாடகாவில் கெம்பண்ணா என்பவர் ஒப்பந்த கூட்டமைப்பு தலைவராக இருந்து வருகிறார். இவர் தோட்டத்துறை மந்திரி முனிரத்னா மீது சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசு 40 சதவீதம் லஞ்சப்பனம் பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது மட்டுமல்லாமல் இது குறித்து பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதிக அளவிலான ஊழலால் உள்ளூர் ஒப்பந்ததாரர்களால் எந்த பணியும் பெற முடியவில்லை எனவும் பிற மாநிலங்களை சேர்ந்த நபர்களே பணியை பெறுகின்றனர் […]
Tag: கர்நாடக அரசு
மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான பந்தத்தை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சமீபத்தில் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மதத்தை கடந்து அனைத்து சமுதாய மக்களும் ஒன்று திரண்டு வந்து அந்த யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் நாய், பூனை, கிளி, ஆடு, மாடுகளை தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல பாவித்து வருகின்றார்கள். அதுபோல அழையாவிருந்தாளியாக வீட்டிற்கு வரும் […]
கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீ ராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகத்தில் ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு 15 இல் இருந்து 17 சதவிகிதமாகவும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு 3 ல் இருந்து 7 சதவிகிதமாகவும் அதிகரிக்க அரசு ஏற்கனவே முடிவு செய்திருக்கிறது. இதற்கான அவசர கூட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து ஒன்பதாவது அட்டவணையில் இட ஒதுக்கீடு அதிகரிப்பை சேர்க்க முடிவு செய்து […]
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக அரசு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 24.50 விழுக்காட்டில் இருந்து 27.25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதம் 24.50 விழுக்காட்டில் இருந்து 27.25 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது. இது ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக […]
கர்நாடகாவில் பி.யூ.சி தேர்வு கால அட்டவணையானது மாற்றம் செய்து வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பி.யூ.சி. தேர்வு நடத்தப்படவில்லை. அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு குறித்த தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பி.யூ.சி தேர்வுக்கான கால அட்டவணைகளும் திடீரென மாற்றம் செய்துள்ளதாக, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வானது வருகின்ற ஏப்ரல் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (24). இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஆவார். ஹர்ஷா பிப்.20 ஆம் தேதி அன்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர். அதன்பிறகு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தொட்டபேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத […]
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இருப்பினும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி வருகின்றது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தி வருவதால் நோய்த்தொற்று குறைந்து வருவதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 7ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள […]
கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15.36 கோடி நிவாரண நிதிக்கு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் 28 பேர் கொரோனா பாதிப்பில் […]