கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள டி நர்சிபூர் தாலுகாவில் உள்ள கபேஹுண்டி கிராமத்தில் 21 வயதுடைய கல்லூரி மாணவி மேக்னா வீட்டில் இருந்து பண்ணைக்கு சென்று கொண்டிருந்தபோது புலி தாக்கியது. மாணவியை புலி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. அப்போது அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மாணவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பலத்த காயம் அடைந்த மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் […]
Tag: கர்நாடக மாநிலம்
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் சீனிவாசபுரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்த லோகேஷ் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிரிஷா என்ற பெண்ணுடன் கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், 4-வதாக சிரிஷா கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் லோகேஷ் தனக்கு 4-வது ஆண் குழந்தை பிறக்கும் என்று கனவு கொண்டிருந்தார். ஆனால் 4-வது பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் லோகேஷ் […]
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா மல்லாபாத் கிராமத்தில் வசித்து வருபவர் பாகம்மா. இவர் அப்பகுதியில் விவசாய கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று காலையில் இவர் வேலை செய்த களைப்பில் விவசாய நிலம் அருகே உள்ள மரத்தின் கீழ் கட்டிலில் படுத்திருந்தார். அவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது திடீரென அவரின் காது அருகே ‘புஷ், புஷ்’ என்று சத்தம் கேட்டது. இதனால் அவர் கண்விழித்து பார்த்தபோது அவர் மீது ஒரு நாகப்பாம்பு ஏறி படமெடுத்தபடி இருந்தது. […]
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தொட்டநாகரா கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா. இவரது மகன் சுப்ரீத் (7). தனியார் பள்ளியில் படித்து வந்தான். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தை சேர்ந்த சதீஸ் என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. 3 ஆண்டுகள் ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த அவர்கள், பின் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்துவிட்டனர். ஆஷா தனது மகனுடன், தொட்டநாகராவில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆஷாவுக்கு, அதே […]
கர்நாடக மாநிலம் சிவமொகாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட முதல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்துக்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்களில் வீர சாவார்கர் மற்றும் திப்பு சுல்தான் படங்களை வைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை ஆனது. சாவர்க்கர் பேனரை அகற்றக்கோரி இஸ்லாமியர் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்து ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் காரணமாக பதற்றம் அதிகரித்ததால், சிமோகாவின் பல்வேறு பகுதிகளிலும் […]
கர்நாடக மாநிலம், துமகூறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேணுகா பிரசாத். இளைஞரான இவர் சினிமா படங்களை பார்த்து அந்த கதாபாத்திரத்தை போன்றே தன்னை பாவித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் அருந்ததி படத்தை தொடர்ச்சியாக 5 முறைப் பார்த்த அவர் அனுஷ்கா உயிரிழந்து மீண்டும் மறுபிறவி எடுத்து வருவதை உண்மை என நம்பியுள்ளார். இந்நிலையில் இவர் தனது தந்தை கண்முன்னே ‘நான் மறுபிறவி எடுப்பேன்’ என கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் ரேணுகா பிரசாத் […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பெரிய எலக்ட்ரானிக் ஷோருமிற்கு அப்துல் முனாஃப் (வயது 27) என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது சரியாக அந்த கடை மூடும் நேரத்தில் உள்ளே நுழைந்த அப்துல், பெண்கள் கழிப்பறைக்குள் நேக்காக புகுந்து ஒளிந்து கொண்டுள்ளார். பின்னர் கடையில் உள்ள அனைத்து விளக்குகளை அனைத்த ஊழியர்கள் கடையை மூடிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர். கடை மூடப்பட்ட சில மணிநேரத்தில் கழிப்பறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் அந்த கடையில் உள்ள விலையுயர்ந்த […]
வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி கர்நாடக மாநிலம் தனியார் ஹோட்டலில் வைத்து பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த பதறவைக்கும் விடியோ சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் சந்திரசேகர் குருஜி வரவேற்பையில் நடந்து வருகிறார். அப்போது அங்கு அவருக்காக காத்திருக்கும் இருவர் அவரை சந்திக்கின்றனர். அப்போது அங்கிருக்கும் சோபாவில் அமர்ந்த அவருடைய காலில் விழுந்து ஒருவர் ஆசீர்வாதம் வாங்குகிறார். […]
கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் உள்ள நாகுரி என்ற இடத்தில் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள் விற்பனை மையம் ஒன்று உள்ளது. சம்பவதன்று அங்கு வழக்கம் போல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில், இந்த விற்பனை மையம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனை அடுத்து அங்கு விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள், இந்த விபத்தில் தீக்கிரையாகி உள்ளன. இதன் பின், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தீயை கட்டுப்படுத்தினர். […]
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் கேசவமூர்த்தி படாவனே பகுதியை சேர்ந்தவர் பசவண்ணா(65). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி குடித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகள் சுஜாதா பிரசவத்திற்காக தாவணகெரேவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் 2 நாட்களில் சுஜாதாவும், அவரது குழந்தையும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். […]
கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் காகுன்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி. 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்குத் தெரியவரவே அவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். பின்னர், ஷாலினியின் காதலனின் பெற்றோர் பெண் கேட்டுச் சென்றபோது இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்றுள்ளது. இதையடுத்து ஷாலினிக்கு 18 வயது ஆகாததால் அவரால் திருமணம் செய்துகொள்ள முடியாது […]
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா டவுன் பகுதியை சேர்ந்தவர் சாதீர் (வயது 29). இவரது இளம் சகோதரர் அதே பகுதியில் வசிக்கிறார். அவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் தம்பி வீட்டுக்கு சென்ற சாதீர், 3 வயது குழந்தையை தனது வீட்டுக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவு வரை அவர் குழந்தையை தனது சகோதரரிடம் கொண்டு வந்து கொடுக்கவில்லை. நேற்று காலையில் குழந்தையை தூக்கி வந்தபோது உடலில் காயங்கள் இருந்தது. […]
கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த வாலிபருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து அவரது மனைவி திருமணம் நடந்த நாளிலிருந்து மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுத்துள்ளார். முதலில் அவர் மனைவிக்குச் சமைக்கத் தெரியவில்லை. பின்னர் போகப் போக கற்றுக்கொள்வார் என நினைத்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுத்துள்ளார். இதனால் கடுப்பான அவரது கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவரது வழக்கை விசாரித்த […]
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது […]
தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள போலீஸ் துறைகளில் 545 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வானது நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வில் தேர்வான சிலர் லஞ்சம் கொடுத்து இப்பணியை பெற்றுள்ளதாக புகார் ஒன்று எழுந்துள்ளது. ஆகவே இது குறித்து சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீசார், சிலரை கைது செய்துள்ளனர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து அந்த தேர்வினை ரத்து செய்துவிட்டு, அந்த […]
பள்ளி மற்றும் கல்லூரிகள் மே மாதம் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பியூசி தேர்வு நடைபெற வில்லை. இந்த வருடம் தொற்று குறைந்துள்ளதால் பி.யூ.சி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாததால் 2022-23 கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முன்கூட்டியே திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி மே 16-ம் தேதி பள்ளி மற்றும் […]
இளம்பெண்ணை திருமணம் செய்த 5 மாதத்தில் 45 வயதான விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகில் சவுடனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சங்கரண்ணா (45). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்ட 25 வயதான மேகனா என்ற இளம்பெண்ணை உறவினர்கள் சம்மதத்துடன் கோவிலில் வைத்து கல்யாணம் செய்துகொண்டார். சங்கர் அண்ணா வயதானவர் போல இருப்பதால் 60 […]
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கு கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. மேலும் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் நாளை எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. இந்நிலையில் தேர்வு எழுத வரும் அனைத்து மாணவர்களும் சீருடை அணிந்து மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஹிஜாப் […]
15,000 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் காலியாகவுள்ள 15,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படுவதாக, தொடக்க மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, கர்நாடகா பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகவே 15,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத உள்ளதாகவும் மற்றும் இதற்கான அரசாணை வருகின்ற 21 தேதி […]
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கும்பகல்லு கிராமத்தில் உள்ள ஸ்ரீராமகுன்று மலையில் மகேந்திர பாபு என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிலத்தில் அரசு அனுமதி பெற்று கேரளாவைச் சேர்ந்த அக்கீம் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கல்குவாரியில் கற்களை உடைப்பதற்காக வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. அப்போது வெடியின் அதிர்வால் எதிர்பாராதவிதமாக பெரிய பாறாங்கல் ஒன்று மேலிருந்து கீழே உருண்டு விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கல்குவாரியில் பணியில் […]
பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் தொழுகையில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்காதர்கா என்ற பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடந்தது. அதைப்போல் இந்த பள்ளியில் உள்ள முஸ்லிம் மாணவிகள் வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் முகநூல் மற்றும் […]
ஒரு படிப்பில் சேர்ந்து பின் அதை விட்டு வெளியேறினால் அந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் அந்த அபராதம் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரில் நேற்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியதாவது, மருத்துவம் ,என்ஜினீயரிங் போன்ற படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு ஒரே நேரத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக […]
வருகின்ற திங்கள் முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவி துணி அணிந்து இந்து மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வெறுப்பு உணர்வு ஏற்பட்டு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இந்நிலையில் கர்நாடகாவில் வருகின்ற திங்கள் முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான […]
ஹிஜாப் அணிவது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவண்கரே மாவட்டத்தில் இன்று ஹிஜாப் அணிவது தொடர்பான போராட்டம் நடைபெற்றது. அதாவது கல்லூரிக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார்அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு […]
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடை தொடர்பான பிரச்சினையை கர்நாடக ஐகோர்ட்டின் விரிவான விசாரணை நடத்தப்படும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதனால் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடையின் மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு […]
பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது படிப்படியாக தொற்றின் வேகம் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 12-ஆம் வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 16ம் தேதியிலிருந்து மே 6 ம் தேதி வரை பொதுத்தேர்வு நடக்க […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ஒருவர் மிகப்பெரிய சூட்கேசுடன் விடுதிக்குள் நுழைந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த விடுதி பாதுகாவலர் அதனை சோதனையிட முயன்றார். ஆனால் அந்த மாணவர் பேக்கை தூக்கி கொண்டு வேகமாக ஓடியுள்ளார். இதையடுத்து பாதுகாவலர் அந்த பேக்கை பறித்து சோதனை செய்துள்ளார். அப்போது அந்த பேக்கிற்குள் இருந்து ஒரு அழகிய பெண் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி […]
நேற்று முன்தினம் கர்நாடக சவிதா சமூகம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சாதிகளால் புரையோடி போய் இருக்கும் தீண்டாமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது உறவினர்கள் அல்லது குடும்பத்தினரின் ரத்தம் மட்டுமே தேவை என்று மருத்துவர்கள் கேட்பதில்லை. அதேபோல் எந்த சாதிக்காரர் எனக்கு ரத்தம் கொடுத்தார் என்றும் நாம் கேட்டதில்லை. எனவே ஜாதிகள் இருக்கும் வரை நாம் […]
மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த சிறிய கிராமம் சிக்கமாலூர். இந்த கிராமத்தை சேர்ந்த நாகராஜப்பா கூலி வேலை செய்து வருகிறார். இவர் தொடர்ந்து மதுக்கு அடிமையானதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அவரை காணவில்லை. பின்னர் உறவினர்களும், அவரது குடும்பத்தினரும் பல இடங்களில் தேடினர். தேடுதலுக்குப் பின் நாகராஜப்பா ஒரு புதர் பகுதியில் இறந்து கிடப்பதாக தகவல் […]
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கோடிஹாலா கிராமத்தில் பசவராஜ் புகாரி என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளார். இந்நிலையில் கிராமத்தில் ஒரு வீட்டில் ஐந்தரை அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது என்று அந்த முதியவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் மதுபோதையில் இருந்திருக்கிறார். இருப்பினும் ஆபத்து என்று அழைத்த உடனே சென்று வழக்கம் போல் பாம்பை […]
கர்நாடக மாநிலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் உள்ள தண்ணீர் வரும் பைப் லைனில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைத்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பலர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த வகையில் பொதுப்பணித்துறை ஜூனியர் இன்ஜினியர் ஒருவர் வீட்டில் சோதனை செய்த போது பல இடங்களில் தேடியும் எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. […]
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் போது கையில் ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் சத்தமாக பாட்டு மற்றும் வீடியோக்கள் பார்க்கின்றனர். இதனால் எரிச்சலடைந்த ஒருவர் பேருந்தில் பயணம் செய்யும்போது சத்தமாக பாட்டு கேட்பதற்கும் மற்றும் வீடியோ பார்ப்பதற்கும் தடை விதிக்க கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேருந்தில் […]
கர்நாடக மாநிலத்தில் சுமார் 1500 கிலோ எடைகொண்ட திமிங்கலம் ஒன்று மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சாகர் என்பவர் மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பும் போது படகில் மீனவர்கள் வலையை பிரித்து பார்த்த போது ராட்சத திமிங்கலம் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த ராட்சத திமிங்கலம் சுமார் 1500 கிலோ எடை இருக்கும் எனவும், பெரிய அளவு திமிங்கலம் மீது அமர்ந்து புகைப்படம் […]
சிறையில் ஒரு நாள் கைதியாக வாழவேண்டும் என்று யாருக்காவது ஆசை உள்ளதா? தற்போது கர்நாடகாவில் புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஹிண்டல்கா என்ற சிறை உள்ளது. இந்த சிறையில் விசாரணைக் கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என்று 500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் சிறை கைதியாக வாழமுடியும். இதுகுறித்து அந்த சிறையின் அதிகாரி தெரிவித்துள்ளதாவது: சிறையில் வாழ விரும்புபவர்கள் […]
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதன் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில், தொற்று முழுமையாக […]
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதன் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில், […]
ஜூன் 7 க்கு பிறகு கர்நாடக மாநிலத்தில் சில தளர்வுகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார். […]
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் ஆவணத்தை கேட்டதற்கு 5 அடி பாம்பை காட்டி பதறவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும் என்று ஏராளமான காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று மைசூர் மாளிகை அருகே காவல்துறையினர் வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்தப் […]
தந்தை மகனை கண்டித்த காரணத்தினால் தாய், தந்தை இருவரையும் 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அனுமந்தையா என்ற நபர் அவரது மனைவி ஹொன்னம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் பீனியாவில் உள்ள ஒரு அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து அங்கேயே வசித்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகன் தனது பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் ஊர் சுற்றுவது, உல்லாசமாக இருப்பது போன்ற செயல்களில் […]
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு வரும் வரை காளஹஸ்தி கோவில் 2 மணி நேரம் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் நாளை முதல் ஊரடங்கு குறித்து அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை தினமும் காலை 2 மணி நேரம் கோவில் திறக்கப்படவுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் 8 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் 300 கொரோனா நோயாளிகள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோன தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. பல மாநிலங்களில் இந்த அவலநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா தொற்று கடுமையாக பரவிவருகிறது. […]
மாநிலம் முழுவதும் இன்னும் 15 நாட்கள் ஊர்வலங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்களிலும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகப்படியானோர் கூடுவதற்கு அனுமதி கிடையாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பெங்களூரு […]
பெங்களூருவை அடுத்த மங்களூருவில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மீனில் ஒரு முழு பிளாஸ்டிக் பை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் மீன் கடை ஒன்றில் கடை உரிமையாளர் ஒருவர் இறைச்சிக்காக மீனை வெட்டியுள்ளார். அதில் ஒரு முழு பிளாஸ்டிக் பை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த மீன் முரு வகையை சேர்ந்தது. அதன் எடை 10 கிலோ இருக்கும். இதனை கடை உரிமையாளர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது […]
ராஜஸ்தானில் புகார் கொடுக்க வந்த பெண்ணை மூன்று நாட்களாக அறைக்குள் அடைத்து பலாத்காரம் செய்த உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் ஆழ்வார் மாவட்டத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி 26 வயதான பெண் ஒருவர் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மேலும் காவல் நிலைய வளாகத்தில் உள்ள தனது அறைக்குள் அடைத்து வைத்து 3 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பெண் ஜெய்ப்பூர் […]
கர்நாடக மாநிலத்தில் பெண்கள் விடுதியின் கழிவறைக்கு அருகில் 24 வயதான இளைஞன் ஒருவன் நிர்வாணமாக நிற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் ரைஸுர் லின்சுகூர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவன் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகே பெண்கள் தங்கியிருக்கும் விடுதி ஒன்று உள்ளது. அந்த இளைஞன் பெண்கள் உபயோகிக்கும் கழிவறைக்கு அருகில் பல நேரங்களில் நிர்வாணமாய் நிற்பதை வழக்கமாக வைத்துள்ளான். பெண்கள் தனியாக கழிவறைக்கு செல்லவே பயந்து வந்துள்ளனர். […]
கர்நாடகாவை அடுத்த மங்களூருவில் 8 வயது சிறுவனை கடத்தி 17 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு அடுத்த உஜிரே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனை காரில் கடத்தி சென்ற அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் குழந்தையை உயிருடன் விடுவிக்க வேண்டும் என்கிறால் 17 கோடி ரூபாயை பிட்காயின் ஆக செலுத்துமாறு பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். விளையாட போன குழந்தை தனது தாத்தாவுடன் வீடு […]
பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தனது வீடு, ஆடை, கார் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இதைப்பற்றி இதில் பார்ப்போம். உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நாம் இங்கு பார்க்கப்போவது தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவர் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம்தான். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த செவன்ராஜ் என்பவருக்கு 58 வயதாகும். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவரது […]
கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் வீரிதர், கலபுரசி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பல்லாரி, யாதகிரி உள்ளிட்ட கர்நாடகப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக விஜயபுரா மாவட்டம் நிடேர்க்குண்டியில் உள்ள அல்லம்பட்டி அணை, யாதகிரி மாவட்டம் புறப்பாரா தாலுகா நாராயணபுர கிராமத்தில் உள்ள வசவசாகர் அணை உள்ளிட்ட நீர்நிலைகளில் வேகமாக நீர் நிரம்பி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு […]
ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவப் பிரியர்கள் கறி வாங்க காத்துக் கிடப்பது போல் கர்நாடகாவில் உள்ள ஒரு கடையில் பிரியாணி வாங்க அதிகாலை முதலே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு வாடிக்கையாளர்கள் காத்துக் கிடந்த சம்பவம் அரங்கேறியது. கர்நாடக மாநிலம் ஓஸ்கோட் என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரியாணி கடை அப்பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. சுமார் 22 ஆண்டுகளாக செயல்படும் இந்த கடையில் பிரியாணி அதிக சுவையுடன் இருப்பதால் அதற்குகேன்று மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. […]
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தின் விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. கர்நாடக மாநிலம் தாவன் கரை மாவட்டத்தில் வெண்ணிய நகரில் நேற்று நள்ளிரவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு புனே தேசிய நெடுஞ்சாலையின் நடுவே டயர்களை கொளுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.