சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சரியான சாலை இணைப்பு மற்றும் அடிப்படை மருத்துவ உதவி கிடைப்பதில்லை. இதனால் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎப்) போன்றோர் அங்குள்ள கிராமத்தில் பாதுகாப்புப்படை முகாமில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பொட்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பழங்குடி பெண்ணான மாயா என்ற கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. இதற்கிடையில் சுகாதார மையம் தொலைவில் உள்ளதால் கிராம மக்கள் […]
Tag: கர்ப்பிணி
வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள sao paulo என்ற மாகாணத்தில் ohana karolin(24) என்ற இளம் பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயிற்றுக்கு கீழே உடை இல்லாமல் அவரது பிறப்புறுப்பு மோசமாக சிதைக்கப்பட்டு அவரது வயிறு கிழிக்கப்பட்டு அவரது வயிற்றிலிருந்து ஏழு மாத குழந்தை அகற்றப்பட்டிருந்த நிலையில் சடலமாக அந்த பெண் கண்டெடுக்கப்பட்ட விஷயம் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
புதுச்சேரி சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் சீர்காழியை சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணும் காதலித்து 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். செவிலியராக பணிபுரிந்து வந்த சந்தியா, 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தன் மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளியுடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை தொடர்பாக சந்தியாவுக்கும், மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சந்தியா, […]
லெபனான் நாட்டில் ஐந்து மாத கருவை கலைக்க மறுத்த மனைவியை, கணவன் உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லெபனான் நாட்டில் உள்ள திரிபோலி என்ற பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஹனா முஹம்மது கோடர் என்ற பெண்ணிடம் அவரின் கணவர் கருவை கலைக்குமாறு வாக்குவாதம் செய்திருக்கிறார். எனினும், முதல் தடவை தாயாவதால் கருவைக் கலைக்க மாட்டேன் என்று ஹனா உறுதியாக கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த நபர், எரிவாயு கானிஸ்டரை பயன்படுத்தி […]
2002-ம் ஆண்டு குஜராத் கோத்ரா வன்முறையின் போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை இந்துத்தவ கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்தது. மேலும் பில்கிஸ் பானுவின் கைக்குழந்தை உள்பட அவரின் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்தது. இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 11 பேருக்கு 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆயள் கைதிகள் 11 பேரும் தண்டனையை குறைக்குமாறு முறையிட்ட போது இது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியது. […]
கர்ப்ப காலத்தில் சில யோகாசனங்கள், தியான நுட்பங்கள் மற்றும் சுவாச பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனென்றால் அவை மன அழுத்தத்தை நீக்கி பதட்டத்தை குறைக்கின்றது. மேலும் டெலிவரி நேரத்தில் கர்ப்பிணிகளை சாந்தமாகவும் மன தைரியத்துடன் வைத்திருக்க உதவுகின்றது. யோகாவை தாய்மார்கள் சரியாக செய்து வந்தால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உடலும் மனமும் மென்மை ஆகின்றது. ஒரு நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் யோகா பயிற்சி செய்வது மிக முக்கியமாகும் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் கார்டியோ மற்றும் கஷ்டமான […]
குழந்தை பிறந்தவுடன் பிறப்பு சான்றிதழ் எடுப்பது அவசியம். ஏனெனில் தற்போது பிறப்பு சான்றிதழ் ஏராளமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது பிறப்பு சான்றிதழ் கட்டாயம் கேட்கப்படுகிறது. தமிழக அரசின் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தாய்மார்களுக்கு RCH எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது கிராம சுகாதார செவிலியர் மூலம் கர்ப்ப பதிவு செய்து இந்த RCH எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதை மேலும் எளிதாக்கும் வகையில் PICME 2.0 இணையதளத்தில் கர்ப்பிணிகள் தாங்களே சுயமாக […]
அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணம் பொர்ன்க்ஸ் பகுதியில் ஆஸ்கர் அல்வெஸ் (34) வசித்து வருகிறார். இவரும் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய லிவ் அப்ரு (34) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் லிவ் -இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையில் சென்ற 2018ஆம் வருடம் லிவ் அப்ரு கருவுற்றுள்ளார். ஆனால் லில் அப்ருவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை தான் இல்லை என்றும் லிவ் அப்ரு வேறு நபருடன் உறவில் இருந்ததாலேயே கர்ப்பம் அடைந்ததாகவும் அவரது […]
ராஜஸ்தான் மாநிலம் துசா மாவட்டதை சேர்ந்த டாக்டர் அர்ச்சனா மற்றும் அவரது கணவர் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்கு வந்திருந்த நிலையில் பிரசவத்தின்போது அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதில் அந்த கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் டாக்டர் அளித்த சிகிச்சையில் தவறு நடந்துள்ளது என்று எண்ணி ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் அர்ச்சனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் […]
ரோபோடிக் உதவியுடன் ஒரேநேரத்தில் பிரசவம் மற்றும் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு தாயையும், குழந்தையையும் அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா். சென்னையை சோ்ந்த மருத்துவா் திவ்யதா்ஷினி(27) கா்ப்பமாக இருந்த போது இடது சிறுநீரகத்தில் பெரியகட்டி இருந்தது. இதனால் இருஉயிா்களையும் காப்பாற்ற வேண்டிய சூழலில் திவ்யதா்ஷினி சென்னை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அப்போது அவரைப் பரிசோதித்த சிறுநீரகவியல், மகப்பேறியல் சிறப்பு நிபுணா் மீரா, சிறுநீரகவியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா் ராகவன் போன்றோர் தலைமையிலான […]
தமிழகத்தில் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பக் காலத்தில் பேறுகால நிதி உதவித்தொகையாக 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாய் வழங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆணை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய, தமிழக அரசு சார்பாக சிறப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது. அவற்றில் ஊட்டச்சத்து மாவு ஒரு கிலோ, இரும்புச் சத்து திரவம் 200 மி.லி- 3, உலர் பேரிச்சை ஒரு கிலோ, […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 17 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதற்கிடையில் […]
மதுரை அருகே கர்ப்பிணி மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், சித்தூர் கிராமத்தை சேர்ந்த கணபதி ராஜா என்பவர் ஏழு மாதங்களுக்கு முன்பு நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நாகலட்சுமி மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகலட்சுமியின் அண்ணன் காவல்துறையில் புகார் அளித்தார். […]
இங்கிலாந்தில் 31 வார கர்ப்ப காலத்திலிருந்த 33 வயதாகும் பெண்ணொருவர் திடீரென உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி மூச்சு விடுவதற்கும் சிரமப்பட்டு கோமாவிற்கு சென்ற நிலையில் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இங்கிலாந்தில் லாரா என்னும் 33 வயதாகும் பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய 31 வார கர்ப்ப காலத்தில் திடீரென உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையினால் சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த லாராவிற்கு திடீரென மூச்சுத் திணறல் […]
9-வது குழந்தையை பெற்றெடுத்த 4 நாட்களில் பெண் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் எட்மண்டனில் 8 குழந்தைகளுக்கு தாயாக இருந்த Jennifer Rosebluff-Thomas கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Jennifer-ன் நிலைமை திடீரென மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது Jennifer தன் சகோதரியான Carol Charles-யிடம் “என்னை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆகவே நான் சாகப்போகிறேன்” […]
4 மாத கர்ப்பிணி பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெங்கானூர் கிராமத்தில் பவித்ரா என்ற வனிதா வசித்து வந்தார். இவர் என்ஜினீயராக இருந்தார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மலையப்பநகர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மாணிக்கவாசகம் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதா வீட்டுக் குளியலறையில் தூக்கிட்டு […]
காதலி கர்ப்பம் ஆனதால் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க முடிவு செய்து காதலியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் பலமு மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனைக் காதலித்து வந்துள்ளார். அந்த பெண் அந்த இளைஞனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததால் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அந்த இளைஞனுடன் கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞன் தற்போது […]
திருப்பூர் அருகே மூன்று மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருமாநல்லூரில் போயர் காலனியில் மணிஸ்வரன்(22) ஹேமலதா (22) தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஹேமலதா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். அவர் 3 வருடத்திற்கு முன்பே செந்தில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் .அவர்கள் இருவருக்கும் (2) வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதனால் ஹேமலதாமீண்டும் மணிஸ்வரன் என்பவரை இரண்டாவது திருமணம் […]
கோவை திமுக கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்ட அக்கட்சியின் தலைவரிடம், லாவண்யா என்ற கர்ப்பிணி பெண், அதிமுகவின் ஊராட்சி மன்றத் தலைவர் தன்னை தாக்கி தனது கர்ப்பம் கலைய காரணமாக இருந்ததாகப் புகார் கூறினார். ஆட்சி அமைந்தவுடன் மக்களின் குறைகளை முதல் 100 நாட்களில் தீர்ப்பதே தனது முதல் பணியெனக் கூறி கூட்டங்கள் தோறும் மக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகிறார் ஸ்டாலின். இதனைப் பார்த்த முதல்வர் பழனிசாமி, புகார்களை தொலைபேசி வாயிலாக என்னிடம் கூறலாமென அறிவித்தார். […]
அமெரிக்காவில் சூட்கேஸில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிட்டனி ஸ்மித் என்ற 28 வயது இளம்பெண் ஆறு மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.அவர் சமீப காலத்தில் காணாமல் போனதால் அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நியூஸ் நதி அருகே ஒரு பெரிய சூட்கேஸ் சந்தேகத்திற்கிடமாக இருப்பதை போலீசார் கண்டனர். அதனருகில் சென்று திறந்து பார்த்தபோது காணாமல் போனதாக சொல்லப்பட்ட இளம் பெண் சடலமாக இருந்துள்ளது. திருமணமாகாத பிரிட்டனி, கோடி பேஜ் என்பவரை காதலித்து அவருடன் […]
காஷ்மீரில் கர்ப்பிணிப் பெண்ணை நான்கு மணி பணியில் நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காஷ்மீரின் குப்வாரா பகுதியில் நிறைமாத கர்ப்பிணியான ஷப்னம் பேகத்திற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது. அதுமட்டுமன்றி அங்கு சாலைகள் முழுவதும் பனி மூடி உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் அந்த […]
மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் இணைந்து பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாகா நத்தத்தில் சுகன்யா என்ற பெண் காவலர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில் சுகன்யாவிற்கு அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் அனைத்து போலீசாரும் இணைந்து காவல்நிலையத்தை ஒரு வீடு போல மாற்றினார். […]
பாபநாசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட 7 மாதக் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாபநாசம் தாலுக்கா இரும்புத்தலை கிராமத்தின் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு 21 வயதில் விஜயா என்ற மகள் இருக்கிறார். அவரும் சேர்ந்த மக்கள் அத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரும் 7 மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விஜயா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவர் நேற்று திடீரென மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து […]
வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதைத் தெரிந்துகொள்ள கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் நெக்பூர் பகுதியை சேர்ந்தவர் பன்னலால். இவருக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவரது மனைவி ஆறாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என கூறிவந்த பன்னலால் மனைவியின் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதை அறிந்துகொள்ள கூர்மையான ஆயுதத்தால் வயிற்றை கிழித்து உள்ளார். […]
கன்னியாகுமரியில் கொரோனா இல்லாத நிறைமாத கர்ப்பிணி பெண்ணை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முயன்ற சுகாதாரத்துறை குழுவினரால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த உள்ள மணிக்கட்டுப்புட்டால் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணான திருமதி ரூபிகாவுக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை குழுவினர் கூறியுள்ளனர். எனினும் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் தனக்கு கொரோனா இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக சான்றிதழ்களை ரூபிகா காண்பித்துள்ளார். அதனை ஏற்க மறுத்த சுகாதாரத்துறை குழுவினர் ரூபிகாவை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்கு […]
சென்னையில் ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கர்ப்பிணி மனைவியுடன் ஆடு திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது மனைவியே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். சென்னை எண்ணூர் மீனவ கிராமங்களில் ஆடு காணாமல் போவதாக ஏற்கனவே புகார்கள் இருந்த நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் சாலையிலிருந்து ஆடுகளை வண்டிகளில் எடுத்துச் சென்று உள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். […]
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழையால் சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளப்பெருக்கை சமாளிப்பதற்காக 21 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் பல மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் கோபாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான கர்ப்பிணி ஒருவர் சிக்கி இருப்பதாக மீட்பு […]
முன்னாள் காதலி தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்து வேறு ஒருவரை காதலித்ததால் கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது லண்டனை சேர்ந்த தபால் விநியோகம் செய்யும் பெண் கெல்லி மேரி ஆரோன் என்பவரை கெல்லி காதலிக்க ஒரு வருடங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கெல்லி ஆரோனை பிரிந்து சென்றுள்ளார். ஆனால் கெல்லியின் வயிற்றில் ஆரோனின் குழந்தை வளரத் தொடங்கியுள்ளது. அதன்பிறகு […]
சென்னையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 587 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளில் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100 , அரசு ராயபுரம் மருத்துவமனையில் 45 , கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30 , […]
சென்னையில் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 3 கர்ப்பிணிப் பெண்களும் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,210 பேர் சிகிச்சை […]
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 வயது கர்ப்பிணிக்கு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தப் கர்ப்பிணி கடந்த ஏப்ரல் 16ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைக்கு COVID19 தொற்று ஏற்படவில்லை என்றும், குழந்தை தற்போது தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளது என சசூன் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தூண்டியுள்ளது. இதுவரை 543 […]