Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு”… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி போன்ற ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பில் இந்த வருடம் 580 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு போன்ற நான்கு கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டான 15 சதவீதம் என மொத்தம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…..? இன்று(19.10.2022) MBBS, MDS படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்….!!!!!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இடங்களை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூர் மருத்துவமனையில் நேரடியாகவும் பொது கலந்தாய்வானது இணையத்தின் மூலமாகவும் நடைபெறுகிறது. மருத்துவ கல்வி இயக்குனரகம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி வருகிறது. நடப்பாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை கடந்த திங்கள்கிழமை அன்று வெளியிட்ட நிலையில் இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு கலந்தாய்வு சென்னை ஓமந்தூர் […]

Categories
மாநில செய்திகள்

323 பொறியியல் கல்லூரிகளில்…10% இடங்கள் கூட நிரப்பப்படவில்லை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

தமிழகத்தில் பிஇ பிடெக்  பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதி வரை நடத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பொது பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு தொழில் பிரிவு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

“பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியது இல்லை”.. அமைச்சர் பொன்முடி பேச்சு…!!!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பி ஆர் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் மாத இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

நாளை(செப்.27) முதல்… தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர்களுக்கான கலந்தாய்வு…!!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கும் வருடம் தோறும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அது பற்றி ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளது. அதனால் பணி மாறுதல் கலந்தாய் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாளை பள்ளிக்கல்வித்துறையில் ஒரே அலுவலகத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்களை மாறுதல் செய்ய கலந்தாய்வு நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி பள்ளிக்கல்வி ஆணையரக இணை […]

Categories
மாநில செய்திகள்

ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுக்கு மேல்…. வேலை செய்வோருக்கு நாளை முதல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

ஒரே அலுவலகத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களை மாற்றம் செய்ய நாளை முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், எந்தவித புகாருக்கும் இடம் இல்லாமல் அனைத்து அலுவலகங்களும் செயல்பட வேண்டும். கடந்த ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி மூன்று வருடங்களுக்கு மேல் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர் அளவில் கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

“திட்டமிட்டபடி 10ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும்”….. கல்வி இயக்குனரகம் அதிரடி தகவல்….!!!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 668 மாணவர்களுக்கு இடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பி.இ. பொது பிரிவு கலந்தாய்வு….. ஆன்லைன் முறையில் தேர்வு செய்ய வீடியோ வெளியீடு…… அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படித்ததற்கான இணைய வழி கலந்தாய்வை தமிழக உயர்கல்வித்துறை சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான கலந்தாய்வில் 1.59 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். கல்லூரிகளில் 1.50 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு ஏற்கனவே நிறைவு பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவு தாமதமானதால் பொது பிரிவுக்கான கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது….? யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு…. இதோ முழு விபரம்….!!!!

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு பற்றிய முக்கிய தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இன்ஜினியரிங் படிப்புகளில் ஒவ்வொரு பிரிவினருக்கும் இருக்கும் இட ஒதுக்கீடுகளில் உள் ஒதுக்கீடாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்படும். அதன்படி 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளநிலை பட்டப்படிப்பு: மாணவர் சேர்க்கைக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சென்ற 5-ஆம் தேதி மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் முதல் கட்டமாக மொழிப் பாடம் தவிர முதன்மை பாடங்களில் 400 மதிப்பெண்ணுக்கு 330 வரை எடுத்த மாணவிகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்ற 12-ம் தேதி வரை நடந்தது. அதன்பின் காலியாகவுள்ள பாடப் பிரிவுக்கான இடங்களுக்கு வரும் 22-ஆம் தேதி முதல் 2ம் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது. அந்த வகையில் வரும் 22-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது….? அமைச்சர் தகவல்…!!!!

தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மட்டும் இல்லை, மாணவர்களின் நன்மையை கருதியும் பொறியியல் கலந்தாய்வு நீட்டித்திருக்கிறோம். பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, கலந்தாய்வு சமூக நீதியின் அடிப்படையில் நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சரியான […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இன்று(ஆகஸ்ட் 5) முதல்…. வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன்20ஆம் தேதி தொடங்கியது. இதில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேரடி முறையில் இன்று தொடங்கும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் கலந்தாய்வு….. இதுவரை 1.99 லட்சம் பேர் விண்ணப்பம்….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக கல்லூரியில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடிவுகள் வெளியான முதல் நாள் முதல் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற […]

Categories
மாநில செய்திகள்

B.E/B.Tech மாணவர் சேர்க்கை…. இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று (ஜூன் 20) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.50 லட்சம் இடங்கள் வருடம் தோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் வருகின்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு… கலந்தாய்வில் புதிய வழிமுறைகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மார்ச் 14-ஆம் தேதி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு  நடைபெற உள்ளது. இதற்கான விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்  பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் தொடங்கியுள்ளதால் அரசு பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. தற்போது பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு  வருகிற மார்ச் மாதம் 14ஆம் தேதி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் தொடர்பான புதிய கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வருடந்தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா  பாதிப்பு குறைய தொடங்கியதை  தொடர்ந்து வழக்கம்போல பள்ளிகள் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. கலந்தாய்வு தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவை அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 980 தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையம் இந்த பணியிடங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு…. அரசுக்கு விடுக்கும் கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. எனினும் அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. தற்போது  கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதால் பிப்.1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பிப்.28 – மார்ச் 8 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இளநிலை சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு tnhealth.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு பிப்.25 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கான கலந்தாய்வு பிப்.25-ஆம் தேதி தொடங்குகிறது. மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் இறுதி விவரங்கள் பிப்.28-ல் வெளியிடப்பட உள்ளது. இட ஒதுக்கீடு பெற்றவர்கள் மார்ச் 1 முதல் 7-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு tn medical selection.net, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

பிப்.24 முதல் கால்நடை மருத்துவ கலந்தாய்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2021-22-ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச் & பி.டெக் ) கலந்தாய்வு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பிப்ரவரி 24, 25 & 26 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதேபோல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி மார்ச் 16-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: தமிழக அரசு ஆசியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவித்தது. அந்த வகையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கலந்தாய்வு பிப்ரவரி 16ம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தொடர்ந்து 3-வது அலை பாதிப்பு நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது. இதன் காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அந்த அடிப்படையில் பிப்.1 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 15 முதல்…. குரூப் 4 தேர்வர்களுக்கு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ), குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3 ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு & கலந்தாய்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை….!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. எனவே ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருக்கிறது. இந்த நிலையில் ஆசிரியர் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு…!!” வெளியான திடீர் அறிவிப்பு…!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கில் திருத்தம் செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதில் தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதலில் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற விரும்பினால் தற்போது அவர்கள் பணிபுரியும் பள்ளியில் ஓராண்டை கடந்த பின்புதான் இடமாறுதல் அளிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு தேதி மாற்றம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக வரும்10 தேதி தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நாளை மறுநாளே நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும்10 தேதி தேர்தல் பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

“எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வு முன்பதிவு”…. இன்று முதல் பிப்ரவரி 1 நள்ளிரவு வரை….!!!!

தமிழகத்தில் முதன் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் பிப்ரவரி 1 நள்ளிரவு வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். அதன் பிறகு பிப்ரவரி 6-ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். அதனை தொடர்ந்து பிப்ரவரி 7 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., இடங்களுக்கு கலந்தாய்வு…. இன்று தொடக்கம்….!!!!

தமிழகத்தில் புதிதாக இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளும், 37 அரசு மருத்துவ கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 1,930 பி.டி.எஸ். மற்றும் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 1,930 பி.டி.எஸ். மற்றும் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. அதாவது இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் இடங்களில் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

MBBS அட்மிஷன்…. முதல் முறையாக ஆன்லைனில் கவுன்சிலிங்…. வலுக்கும் கோரிக்கை….!!!!

கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றால் மருத்துவர்கள் இடைவிடாது, ஓய்வில்லாமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பணிகளின் போது, ஏராளமான மருத்துவர்கள் உயிரிழந்தனர். இருந்தபோதிலும் அரசு மருத்துவர்கள் பயப்படாமல் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை அளித்து வந்தனர். மருத்துவர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல், மற்ற மாநிலங்களை விட […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. எம்.டி.எம்.எஸ் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்….!!!!

நாடு முழுவதும் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “NEET PG கவுன்சிலிங் MCC ஆல் இன்று முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து , குடியுரிமை மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டுக்கு மேலும் பலத்தை அளிக்கும்” என்று குறிப்பிட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 12 முதல் மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சூர் மண்டவியா அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோன பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஆசிரியர் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைபெற இருந்த ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்/ காப்பாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மீண்டும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஆதி திராவிட நலத்துறை அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலியாக ஜனவரி 10, 11, 12 போன்ற தேதிகளில் நடைபெற இருந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஜனவரி 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வழியாக நடத்தப்பட உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் ஜனவரி 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் முன்னுரிமைப்பட்டியல் ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடப்படும். மேலும் அந்தப் பட்டியலில் திருத்தம் இருப்பின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு இனி…. பழைய இட ஒதுக்கீட்டு முறையில் கலந்தாய்வு…. அரசு புதிய அதிரடி….!!!!

உயர் நீதிமன்ற தடைக்கு முன்பாக 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பிஇ, பிடெக், மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நீதிமன்ற தடை காரணமாக எம்இ, எம்டெக், எம்ஆர்க் எம்பிளான் ஆகிய முதுநிலை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தால் திட்டமிட்டபடி கடந்த நவம்பரில் நடத்த முடியவில்லை. அது மட்டுமல்லாமல் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி சேர்க்கைக்கான கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி எம்பிசி மாணவர்களுக்கு பழைய […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா….! இன்று முதல் தொடங்கும் மருத்துவ கலந்தாய்வு….!!!!

19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைகள் தொடங்கியுள்ளது. பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்.சி. ரேடியோகிராபி, ரேடியோதெரபி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. அரசு மருத்துவக் கல்லூரிகளில்  2,276 இடங்களும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்..! ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு…. தேதி அறிவிப்பு…!!!

தமிழத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது இரண்டாவது அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற வில்லை. பின்னர் தற்போது கொரோனா சற்று குறைந்துள்ளதால், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த […]

Categories
மாநில செய்திகள்

19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு….  நாளை முதல் கலந்தாய்வு….!!!!

19 மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த 19 படிப்புகளுக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைகள் தொடங்கியுள்ளது. பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி., பி.எஸ்.சி. ரேடியோகிராபி, ரேடியோதெரபி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 19 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. அரசு மருத்துவக் கல்லூரிகளில்  2,276 இடங்களும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்”…. தேதி வெளியிட்ட தமிழக அரசு….!!!!

2021 –  22ம் ஆண்டிற்கான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிடமாறுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மாறுதல் ஒளிவுமறைவு எதுவும் இல்லாமல் 2021- 22 ஆம் கல்வியாண்டு முதல் நடத்துவதற்கு கொள்கை வகுக்கப்படும் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த கல்வியாண்டிற்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில்….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு குறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு பிறகு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இது நடப்பு மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, புதுப்பணியிடங்கள் கோரவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாணவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக பொறியியல் கல்லூரிகளில் M.E , M.Tech உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க கேட் அல்லது டான்செட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்-லைன் விண்ணப்ப தேதி அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் M.E , M.Tech , M.arch படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வும், MBBS, BDS கலந்தாய்வும் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூன்றாம் கட்ட கலந்தாய்வு வருகின்ற 25 ஆம் தேதி சென்னை தேர்வாணைய அலுவலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

நீங்களா முடிவு எடுக்காதீங்க….! எல்லோருட்டையும் கேளுங்க…. ஸ்டாலினுக்கு திருமா வேண்டுகோள்….!

தமிழ்நாடு என பெயர் சூடப்பட்ட ஜூலை 18-ஆம் தேதி அன்று தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதன்படி மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய பகுதிகள் பிரிந்து சென்றது. எனவே 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாநில […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தற்போது பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொறியியல் சேர்க்கைக்கு SCA to SC பிரிவினருக்கு கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் ஆன்லைனில் நடைபெற உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொது கலந்தாய்வு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை,துணை கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. இன்னும் ஒரே நாள் தான் இருக்கு…. உடனே போங்க….!!!!

பிஇ, பி.டெக் போன்ற படிப்புகளுக்கு துணை கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு இந்த ஆண்டு 1, 39,033  தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதன்பின்னர் தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் 13 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சு போன்ற 7 பணியிடங்களுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அதே ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் இதற்கான பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 17 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை…. வரும் 27 ஆம் தேதி முதல்… பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு….!!!!!

தமிழகத்தில், அனைத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தற்போது  சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற உள்ளது.  கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடக்கின்றது. அதனால் முதலில் கலந்தாய்வுக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும், பின்னர் அடுத்து தங்களுக்கு விருப்பம் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்து,தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடுவதற்கும், உறுதிப்படுத்துவதற்கும், […]

Categories
மாநில செய்திகள்

இன்று யாரும் வர வேண்டாம்…. தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாகவும், மீண்டும் எப்போது கலந்தாய்வு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே இன்று பொது மாறுதல் தொடர்பாக யாரும் கலந்தாய்வுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. பள்ளி கல்வித்துறையில் 2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அலுவலகங்கள், […]

Categories
மாநில செய்திகள்

B.E சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு… இன்று முதல் ஆன்லைனில் தொடக்கம்…..!!!

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குவதாக  உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிஅறிவித்துள்ளார். இந்த கலந்தாய்வில் 7. 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வாகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சேர்க்கை ஆணைகளை வழங்க உள்ளார். தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக, மொத்தம் 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் கலந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிஇ சிறப்பு பிரிவு கலந்தாய்வு…. நாளை தொடக்கம்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல் சிறப்பு கலந்தாய்வு நாளை தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பிஇ சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப் -17 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், நாளை தொடங்குகிறது. நாளை முதல் ஆன்லைனிலன் கவுன்சிலிங்க் தொடரும் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும்  கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |