இந்தியாவின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. இவர் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி நடந்தது. இந்த படுகொலை பற்றி விசாரிக்க எம்டிஎம்ஏ எனும் பல்துறை கண்காணிப்பு முகமை நியமிக்கப்பட்டது. இந்த அமைப்பு சிபிஐயின் ஒரு பகுதியாக செயல்பட்டது. இந்த விசாரணைக் குழு கடந்த 1998-ம் ஆண்டு ஜெயின் கமிஷன் பரிந்துரையின் படி நியமிக்கப்பட்டது. […]
Tag: கலைப்பு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ரத்து செய்த துணை சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று கூறிய பாகிஸ்தான் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கு தடை இல்லை என்றும், நாளை மறுநாள் ஏப்ரல் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ஆளும் அரசை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உச்சத்தை அடைந்து வருவதால் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கட்சிக்கும் அதிபர் கோத்தபய ராஜபட்சவிற்கும் எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமைக்க கூட்டணி கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் வலியுறுத்தியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் மகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மருத்துவமனை அலுவலகத்தில் தரையில் படுத்து உறங்கியுள்ளார். அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் பார்மிங்க்டோன் பகுதியில் ஜோ டங்கன் சாரா டங்கன் ஆகியோர் 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். ஜோ டங்கன் சிமெண்ட் தொழில்நுட்ப வல்லுனராகவும் சாரா டங்கன் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அப்பொழுது திடீரென அவர்களின் இளைய மகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சாரா ஜோவிற்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் தனியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி […]
அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்ப செயலாளர், துணை நிர்வாகிகளாக இருந்தவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுகவின் அனைத்து ஊரக கழக செயலாளர்கள் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கோவை மற்றும் மதுரை என பிரிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவை சென்னை மண்டலத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், […]
இலங்கை நாடாளுமன்றத்தை திடிரென்று கலைத்தார், அந்நாட்டின் அதிபரான கோத்தபய ராஜபக்சே, அப்பொழுது அவர் தேர்தல் நடைபெறும் தேதியையும் தெரிவித்தார். இலங்கைக்கு 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து அத்தேர்தல் முடிவில் செப்டம்பர் மாதம் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக நேற்றிரவு திடீரென அறிவிப்பு விடுத்தார். இந்நிலையில் அரசாணையும் உடனடியாக வெளியானது. ஏப்ரல் 25ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், […]