பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையத்தில் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கல் குவாரியில் இன்று காலை வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த கோர விபத்தில் லாரி உரிமையாளரும், தொழிலாளியுமான சுப்பிரமணி (30), வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உரிழந்தனர். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே விபத்துக்கு காரணம் என்று […]
Tag: கல்குவாரி
கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.05.2022 அன்று திடீரென்று மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு […]
நெல்லையில் கல்குவாரி பாறைக்குள் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் பலியாகியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் அருகே இருக்கும் அடைமிதிப்பான் குளம் பகுதியில் தனியார் கல்குவாரி உள்ள நிலையில் சென்ற 14ம் தேதி கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம், முருகன், விஜய், முருகன் உள்ளிட்ட 6 பேர் பாறைக்குள் மாட்டிக் கொண்டார்கள். இதையடுத்து தீயணைப்பு துறையினர் முருகன், விஜய், செல்வம் உள்ளிட்ட 3 பேரையும் நேற்று முன்தினம் […]
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் தினமும் வெடிபொருட்கள் மூலம் பாறைகள் தகர்க்கப்பட்டு கற்களை அள்ளும் பணி நடந்து வருகிறது. கடந்த 14ஆம் தேதி சுமார் 4 ஆயிரம் அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தன.ர் அப்போது திடீரென்று பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விழுந்தது. அங்கு பணியாற்றி வந்த ஆறு பேர் […]
நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் சிக்கிய நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து 300 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் கல்குவாரியில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாறை சரிந்ததில் பள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய […]
கனிம வளத்தை பொருத்தவரை கல் குவாரியோ , மணல் குவாரியோ எதுவாக இருந்தாலும் பணம் கொட்டுவதால் அங்கு விதிமீறல்கள் தாராளமாக நடக்கிறது. அதிலும் கிரானைட் குவாரிகள் என்றால் கோலார் சுரங்கத்தில் தங்கத்தை வெட்டி எடுப்பது போல என்பதால் என்னென்ன வகையில் அரசு வருவாயை ஆக்கிரமிக்க முடியுமா அந்த வகையில் எல்லாம் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. குவாரிகளை பொறுத்தவரை கனிம வளத்துறையின் உரிமம் பெறவேண்டும். இந்நிலையில் குவாரிகளில்ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க அழியும் தன்மையில் உள்ள மேஜிக் பேனாவை பயன்படுத்தி […]
30 இடங்களில் புதிதாக கல்குவாரிகள் அமைக்க தனியாருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுமான பணிக்கான ஜல்லி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் 30 இடங்களில் குவாரிகளை திறக்க தனியாருக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கட்டுமான பணிக்கு கான்கிரீட் கலவை தயாரிப்பது சாலைகள் அமைப்பது போன்ற பணிகளுக்கு கருங்கல் ஜல்லிகள் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 3,500 குவாரிகள் அனுமதிக்கப்பட்டன. இதில் தனியார் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான குவாரிகளில் அளவுக்கதிகமாக […]
அரியானா மாநிலம் பிவானி பகுதியில் தோஷம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாதம் கிராமம் கல்குவாரி நிறைந்த பகுதி ஆகும். இங்கு இன்று காலை சுரங்கப் பணியின் போது மலையின் பெரும்பகுதி திடீரென்று விரிசல் ஏற்பட்டு சரிந்து விழுந்தது. இதனால் அங்கு நின்றிருந்த சுமார் அரை டஜன் பாப்லாண்ட் இயந்திரங்கள் மற்றும் டம்ப்பர்கள் இடிபாடுகளில் புதைந்தது. மேலும் இங்கு வேலை பார்த்த பல தொழிலாளர்களும் இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஒருவர் உயிரிழந்ததாகவும், 12 முதல் 20 பேர் வரை […]
கல்குவாரியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளித்திருப்பூர் அருsalai mariyal கே கல்குவாரி ஒன்று இருக்கிறது. இந்த குவாரியில் கற்களை பெயர்க்க வெடி வைக்கப்படும். அப்போது அதிலிருந்து சிதறும் கற்கள் கொமராயனூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விழுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள கூப்புக்காடு பிரிவு என்ற இடத்துக்கு திரண்டு வந்து திடீரென சாலையில் அமர்ந்து […]
கல்குவாரி நீரில் குளிக்கச் சென்ற வாலிபர் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மொட்டைமலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இருக்கின்றது. அந்த கல்குவாரியில் தண்ணீர் தேங்கி ஒரு குட்டை போன்று இருக்கின்றது. அங்கு மொட்டைமலை அருகிலுள்ள வன்னியம்பட்டியை சேர்ந்த மாரிக்கனி மற்றும் சிலர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது மாரிக்கனிக்கு திடீரென வலிப்பு வந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார் . இதுகுறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் […]
அதிக அளவு எடை ஏற்றி டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காவல்துறையினர் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜிப்சன் குவாரி மற்றும் கல்குவாரியில் இருந்து லாரிகளில் அதிக பாரம் கற்களை எடுத்து செல்கின்றனர். இதுகுறித்து பெரம்பலூர் வட்டார போக்குவரத்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலை பேரளி சுங்கச்சாவடி அருகே தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கற்களை ஏற்றி வந்த 10 […]
குட்டையில் குளிக்கச் சென்ற இளம்பெண் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள தொரப்பாடி காந்தி தெருவில் நவ்சாத் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மூத்த மகள் நசியா 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நசியா தனது தங்கை, தம்பிகளுடன் சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நசியா குளித்துக் கொண்டிருக்கும்போது நீச்சல் தெரியாமல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனைக் கண்ட சிலர் நசியாவை […]
வேலூர் அருகே சகோதர சகோதரியுடன் கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், தொரப்பாடி ,காந்திதெருவை சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் நான்கு பேரும் சேர்ந்து சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாட சென்றனர். அப்போது மூத்த மகள் மற்றும் அவரது சகோதரர்கள் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக நசியா நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தினால் […]
கல் குவாரியில் வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டதால் அதிலிருந்து 10 கிலோ எடையுள்ள கல் ஒருவரின் வீட்டில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் அவ்வபோது பாறைகளை வெடி வைத்த தகர்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று பயத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குவாரியில் வேலை செய்யும் ஊழியர்கள் […]
நெல்லையில் பொதுமக்கள் லாரியை சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்திலிருக்கும் கிராமத்திற்கு அருகே கல்குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியை சுத்தம் செய்யும் விதமாக அங்கிருந்த மணலை லாரியில் ஏற்றிக்கொண்டு, அதனை அகற்றும் பணி நடைபெற்றது. இதனிடையே அப்பகுதியிலிருக்கும் விவசாய நிலங்கள், அங்கு கல்குவாரி அமைத்தால் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியிலிருந்து மணலை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் […]
ராணிப்பேட்டையில் இருக்கும் கல்குவாரியில் வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் அப்பகுதியிலிருக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவிலிருக்கும் அனந்தமலைப்பகுதிகளில் எண்ணற்ற கல்குவாரிகள் உள்ளது. இக்குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்காக வெடிகள் வைக்கப்பட்டு பின்னர் அதனை ராட்சச எந்திரம் மூலம் நொறுக்கி ஜல்லியாக மாற்றுவது வழக்கம். இந்நிலையில் இதில் வைக்கப்படும் வெடியின் அதிகளவு சத்தத்தினால் அதனை சுற்றியுள்ள பகுதியலிருக்கும், அதாவது அனந்தமலை, மேட்டூர் உட்பட சில கிராமங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதாவது அளவுக்கதிகமான சத்தத்தினால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு […]
தேனியில் நீரில் மூழ்கவிருந்த மகளை காப்பாற்ற முயன்ற தாய் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வரசநாட்டில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் குமுதாவும், நந்தினியும் அதே பகுதியிலிருக்கும் தங்களது தோட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் நந்தினி தோட்டத்திற்கு அருகே பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் தெரியாத விதமாக நிலைதடுமாறி குளத்தில் விழுந்திருக்கிறார். இதனை கண்டு […]
மதுரையில் கிராம பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது கோப்புகளை தூக்கி எறிந்த கோட்டாட்சியர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கூட்டியார்க்குண்டு அருகே உள்ள கருவேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரிகள் கிரஸ்ஸர் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தூசியினால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு அதிக அளவில் மாசுபடுவதால் அதனை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் விளைநிலத்திற்கு அருகே கல்குவாரி அமைக்கும் அதிமுக பிரமுகருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் மலைக்கு அருகே உள்ள விளை நிலத்தை இரவோடு இரவாக வாங்கி அந்த இடத்தில் கல்குவாரி அமைக்க அதிமுக பிரமுகர் திட்டமிட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு குவாரி அமைத்தால் அதிலிருந்து வெளியேறும் கல் துகள்கள் விளை நிலங்களிலும் மனிதர்கள் மீது படிந்து பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த பகுதி மக்கள் குற்றம் […]
விருதுநகர் அருகே தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பி பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான கல்குவாரி அமைய உள்ளது. இதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் கண்மாய், […]