கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாகலூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அசோக் மேட்டுப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை அசோக் சொந்த வேலை காரணமாக தனியார் பேருந்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அசோக் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் […]
Tag: கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் நாயகம் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வில்லியம்ஸ் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். அங்கு போர் நிலவிய காரணத்தினால் வில்லியம்ஸ் இந்தியா வந்து தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கியிருந்து படித்து கொண்டிருந்தார் பின்னர் வில்லியம்ஸ் தனது நண்பர்கள் 6 பேருடன் டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு […]
கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எஸ்.ஏ காலணியில் மகாவிஷ்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மகாவிஷ்ணுவின் நண்பர் ராம்குமாருக்கு பிறந்தநாள். இதனால் மகாவிஷ்ணு தனது நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள் விழாவிற்கு சென்று மது அருந்தியுள்ளார். இதனையடுத்து மகாவிஷ்ணு சென்னை ரெட்டேரி 200 அடி சாலையில் இருக்கும் ஃபாஸ்ட் புட் உணவகத்தில் […]
தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாரதியார் நகர் 4-வது குறுக்கு தெருவில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் பொய்யன்கொட்டாயில் இருக்கும் பனங்காட்டூர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நவீன் குமார் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]