தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு என்ன காரணம் ? என்பது குறித்த ஒரு செய்தித் தொகுப்பில் தற்போது பார்க்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு தரப்பட்டுள்ளது. வழக்கமாகவே பொறியியல் கல்லூரிகளில் தரமில்லை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, தரமான ஆசிரியர்கள் இல்லை […]
Tag: கல்லூரி
இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு […]
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் இரண்டு ஷிப்ட் முறையை ஒரே ஷிப்ட் ஆக மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பான்மையான கல்லூரிகள் 2 ஷிப்ட் முறையைக் கொண்ட கல்லூரிகளாக இருந்து வந்தன. இதன் காரணமாக காலை ஷிப்ட் செல்லும் மாணவர்கள் ஆக்டிவாக இருப்பதாகவும், மாலை ஷிப்ட் செல்லும் மாணவர்களுக்கு படிப்பில் மந்த நிலை ஏற்படுவதாகவும் தொடர்ச்சியாக பல புகார்கள் எழுந்தன. எனவே பல கல்லூரிகளில் இரண்டு ஷிப்ட் முறையை ஒழித்து ஒரே ஷாட்டாக கல்லூரியை மாற்றுமாறு […]
இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பலரும் பகுதிநேர வேலை வாய்ப்புக்கு சென்றுக்கொண்டு படித்து வருகிறார்கள். அதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை நாம் சொல்ல முடியும். மாணவர்கள் இப்படியான முறையில் கல்வி கற்பதற்கு சாத்தியமாக இருந்தது கல்லூரி வகுப்புகள் இரண்டு ஷிப்டாக நடத்தப்பட்டது தான். இந்த முறையில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்கள்… வேலை பார்த்துக்கொண்டு படிக்க எதுவாக இரண்டு ஷிப்ட் வகுப்பு முறை இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது […]
கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து உயர் கல்வித்துறை அரசு ஆணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் அறிவிப்பில் தொடர்ந்து அரசாணை மற்றும் முந்தைய தேர்வுகளில் இருந்து எவ்வாறு மதிப்பெண் கணக்கிடுவது என்பதற்கான அறிவிப்புகளை உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். முந்தைய செமஸ்டர் தேர்வுகலிருந்து 30வது விழுக்காடு மதிப்பெண்கள் இன்டர்ணல் மதிப்பெண்களில் இருந்து 70வது விழுக்காடு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களுக்கு எந்த அடிப்படையில் […]
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான அட்மிசன் இன்று முதல் ஆன்லைனில் தொடங்கவிருக்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்திலும் அட்மிஷன் நடைபெற தாமதம் ஏற்பட்டது. தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் வெளியான நிலையில், முதற்கட்டமாக பொறியியல் பட்டப்படிப்பை படிக்க விரும்பும் […]
தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரை கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தனித்தனியாக ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர்கள் சென்று விண்ணப்பிக்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களின் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் கொண்டு அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு அதற்கான முயற்சிகள் ஓராண்டாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்தே இதனை நடைமுறைப் […]
தனியார் கல்லூரிகள் 3 தவணையாக கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து பழனியப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி மகாதேவன் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தார். கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு எப்படி ஊதியம் வழங்கப்படும் ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். […]
செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்தோ, ரத்து செய்வது குறித்தோ எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள், கொரோனா சிறப்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. எனவே தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை. நிலைமை சீரடைந்த பிறகே, தேர்வுகள் நடத்துவது அல்லது ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும், கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில், […]
கொரோனா முடிந்த பின்னரே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து தெளிவான விவரம் கிடைத்தால் மட்டுமே தமிழக அரசு முடிவெடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசின் கால அவகாசத்தை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணா பல்கலை கழகம் உட்பட நாடு முழுவதும் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை வந்த பிறகே கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கல்லூரிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழும்பி வந்த நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்தும், செமஸ்டர் தேர்வு குறித்தும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் […]
செப்டம்பர் மாதத்தில் கல்லூரியை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய நிலையில் அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக யுஜிசி சார்பில் இரண்டு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழுவும், ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு […]
தமிழகத்தில் உள்ள கல்லுரிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம், அச்சுறுத்தல் காரணமாக தற்போது கல்லூரிகள் விடுமுறையில் இருக்கின்றன. இந்த காலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெறக்கூடிய ஒரு காலகட்டம். ஆனால் தற்போது கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதாலும், தற்போதைய சூழலில் மே 3ஆம் தேதி வரைக்கும் கல்வி நிறுவனங்களில் இயங்காது என்ற நிலை இருக்குகின்றது. இத்தகைய சூழ்நிலையில் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிப்புகளை பல்கலைக்கழகங்கள் வெளியிட்டு வந்தன. எனவே மாணவர்களுக்கு […]
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்கள் சிலவற்றியிருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எஸ்ஆர்எம் வேலூர் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி NID பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் விடுமுறை முடிந்து திரும்பி கொண்டிருக்கும் நிலையில், விடுமுறை அளிப்பது குறித்து அரசு […]