அரசு கலைக் கல்லூரி காண உதவி பேராசிரியர் தேர்வு, சட்டக் கல்லூரிக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு அக்டோபரில் நடைபெறும். 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஆர்பி. 15 ஆயிரத்து 149 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. அடுத்த ஆண்டு டெட் தேர்வு நடைபெறாது. 2024ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Tag: கல்வி
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில, இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு பதிவாகி இருக்கின்றது. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் […]
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 5ல் பள்ளிகள் திறப்பு. ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால் ஜனவரி 4ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்படும். அதேபோல குரூப் 1, குரூப் 2, குரூப்-3 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுக்கான அட்டவணையானது வெளியிடப்படும். எந்தெந்த துறையில் எவ்வளவு காலியிடப் பணியிடங்கள் உள்ளது ? அதற்கான அறிவிப்பு வெளியாகி, அந்த காலிப் பணி இடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பானது வெளியிடப்படும். கடந்த வாரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) சார்பில் அறிவிப்பானது வெளியிடப்பட்டது. அதில் […]
2023 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப் ஃ4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2023 பிப்ரவரியில் குரூப் 2 பிரதான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற உள்ள 6, 7, 8ஆம் வகுப்பு காலாண்டு அறிவியல் வினாத்தாள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெறக் கூடிய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல் தேர்வு என்பது இன்றைய தினம் நடைபெற இருக்கின்றது. ஏற்கனவே காலாண்டு தேர்வு உள்ளிட்டவை எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே இன்றைய நடைபெற இருப்பதற்கான தேர்வுக்கான வினாத்தாள் என்பது முன்கூட்டியே நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
நாளை நடைபெற உள்ள 6, 7, 8ஆம் வகுப்பு காலாண்டு அறிவியல் வினாத்தாள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய நடைபெறக் கூடிய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல் தேர்வு என்பது நாளைய தினம் இருக்கின்றது. ஏற்கனவே காலாண்டு தேர்வு உள்ளிட்டவை எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே நாளைய தினம் நடைபெற இருப்பதற்கான வினாத்தாள் என்பது முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர் எஸ் […]
இந்தியா முழுவதும் கடந்த 2008-09 ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 100% நிதியை ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கான உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் நடபாண்டிற்கான சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உதவி தொகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை […]
தமிழக அரசு ஊழியர்கள் இதையெல்லாம் செய்யலாம் என்று திருத்தம் செய்த அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது பற்றி இதில் பார்ப்போம். பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும் பின்னும் அவசியம் இருந்தாலும் நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி யாராவது ஒருவரின் ஜாதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவருடைய […]
நாட்டா தகுதி தேர்வு தேவையில்லை என்ற அறிவிப்பை மீறி பிஆர்க் படிப்பில் மாணவி சேர அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் நான்கு வாரங்களில் மாணவிக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கல்வியின் கொள்கைகளில் முடிவு செய்யும் பொறுப்பற்ற அதிகாரிகளால் இளைஞர்கள் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறுகிறது. கல்வி வணிகமயமானதுடன் தகுதி இல்லாதவர், அறிவுசார் ஆணவக்காரர்களின் கைகளில் விழுந்து விட்டது என நீதிபதி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
சுவீஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 24 ஆயிரம் புலம் பெயர்ந்தவர்களின் கல்வித்தரம் அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி தரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போச்சுகல், ஸ்பெயின், துருக்கி, செர்பியா, மாசிடோனியா மற்றும் கோசோவா போன்ற நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்களின் தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பிள்ளைகள் பெற்றோரை விட கல்வியில் மேம்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக புலம்பெயர்ந்த பெற்றோர்கள் 15 அல்லது 16 வயதில் பள்ளி படிப்பை கைவிட்டிருந்த நிலையில் […]
நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் இனி கல்வி, விவசாயம், வாழ்வாதாரம் என அனைத்து பிரிவுகளிலும் கடனுதவி பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக https://www.jansamarth.in என்ற இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் கல்வி,, விவசாயம், வணிகம், வாழ்வாதாரம் என கடன் அமைப்புகளின் கீழ் மத்திய அரசின் திட்டங்கள் […]
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 98 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூட கட்டிடத்தை தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்துள்ளார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஒரு கோடியே 94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியுள்ளார். மேலும் கடந்த ஒரு ஆண்டுகால சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கு காரணம் முதல்வர் தளபதியின் திட்டங்கள் செயல்பாடுகள் தான் அதேபோல பெண்கள் சமுதாயம் […]
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். eScholarhip , உதவித்தொகை என்பது மாணவர்கள் தங்களின் கல்வி தேவைகளை நிறைவேற்ற நிதி உதவிக்கான வெகுமதி ஆகும். தமிழக அரசு eScholarhip சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம்பள்ளி அல்லது கல்லூரிக் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு பல உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது. தமிழக அரசில் ஏழை குழந்தைகளுக்கு ஏராளமான உதவித்தொகை சேவைகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் eScholarhip மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகைகளின் […]
உலகில் கல்வி வளர்ச்சியில் தலைசிறந்த நாடாக முதலிடத்தில் இருப்பது பின்லாந்து. அந்நாட்டில் கல்வி முறையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது தெரியுமா?. அங்கு ஏழு வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல துவங்குகின்றனர். எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு அசைவிலும் ஒளியிலும் இருந்து கற்க ஆரம்பிக்கிறது. அதாவது இலை உதிர்வது, செடி துளிர்ப்பது, இசை ஒழிப்பது, பறவை பறப்பது கூட குழந்தைகளுக்கு ஒருவித கல்விதான். ஏழு வயதில் […]
கல்வி, சுகாதாரத்தை பொது பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், மாநில அரசின் சட்ட மசோதாவை ரத்து செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சுட்டிக்காட்டினார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்வை மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலைதான். என்னை […]
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு அவா்களின் இருப்பிடத்திலேயே கல்வி வழங்கும் திட்டம் ரூபாய் 8.11 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தாா். தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்புகள் வெளியிட்டார். அந்த வகையில் மாணவா்களின் தனித் திறன்களை மேம்படுத்தும் அடிப்படையிலும், கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவழித்திடவும் கோடைக் கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலாத் தலங்களில் நடத்தப்படும். பள்ளிப்பாடங்களைத் […]
அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நிறைவு பெற்று மீண்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளது. இந்த வகுப்புகள் ஜூன் 30 வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையிலும் அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாகும். ஆகவே மாணவர்கள் வருகைப்பதிவு குறையாமல் வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த செமஸ்டர் தேர்வு ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பெங்களூரூ பொறியியல், பிஎஸ்சி, விவசாயம் மற்றும் பிடெக் உட்பட பல உயர் படிப்புகளுக்கான கர்நாடக அரசு நடத்தும் சி.இ.டி. எனும் பொது நுழைவுத்தேர்வு ஜூன் 16, 17, 18ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பி.யு.சி. 2ஆம் ஆண்டு முடித்த பிறகு பொறியியல், ஹோமியோபதி, பிஎஸ்சியில் விவசாயம், தோட்டக்கலை, வனம், விவசாய பயோ தொழில்நுட்பம், பிடெக், விவசாய பொறியியல், உணவு தொழில்நுட்பம், டெய்ரி தொழில்நுட்பம், உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பி.பார்ம், டி.பார்ம். ஆகிய படிப்புகளுக்கு 1994 […]
ஆர்கிடெக்சர் படிப்புக்குரிய “நாட்டா” நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலான சிஓஏ வெளியிட்ட அறிவிப்பில், வரும் கல்வியாண்டில் பி.ஆர்க்., படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்சர் நுழைவு தேர்வானது ஜூன் 3, ஜூலை 12, ஜூலை 24 என 3 கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. தினசரி காலை மற்றும் பிற்பகல் என்று இருவேளைகளில் தேர்வு நடத்தப்படும். தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் விதிகளின் அடிப்படையில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி […]
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கட்டாயம் பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளி […]
2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 […]
உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை கூறலாம் என மத்திய அரசு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. பெற்றோர்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், உயர்கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி கருத்துக் கூறலாம். அதன்படி www.nirfindia.org என்ற இணையதளத்தில் மார்ச் 27க்குள் கருத்துக்களை முன்வைக்கலாம். அனைத்து தரப்பின் கருத்துக்களை பரிசீலித்த பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
விதியை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் மாணவர்களுக்கு துணை மருத்துவ படிப்புகளுக்கு இணையதளம் வழியாக கலந்தாய்வு செய்யப்பட்டு சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதில் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை உத்தரவு அளித்த பிறகும் கல்லூரிக்குள் அனுமதி அளிக்கவில்லை. அதோடு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தது . இது குறித்து மருத்துவ […]
கல்வியை முழுமையாக மாநில பட்டியலில் மாற்ற வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி மக்களின் கருத்தை தெரிந்து கொள்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. அதில் ஆம் கல்வியை முழுமையாக மாநில பட்டியலில் மாற்ற வேண்டும் என்று66.99% பேர் வாக்களித்துள்ளனர். இல்லை கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டாம் என்று20.56% பேர் வாக்களித்துள்ளனர். இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று12.55% பேர் வாக்களித்துள்ளனர்.
புகழ்பெற்ற மணிபால் பல்கலைக்கழகத்தில்(ஜெய்ப்பூர்) வீட்டிலிருந்தே (அல்லது) வேலை செய்துகொண்டே ஆன்லைன் வழியாக MBA, B.com, BBA, BCA, MCA உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்து பட்டம் பெறலாம். மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்கள் வேலைவாய்ப்பு உதவி, coursera ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள சான்றிதழ், படிப்புகள் கற்க வாய்ப்பு என பல்வேறு சலுகைகள் உண்டு குறைந்த இடங்களே உள்ளது உடனே முந்துங்கள்!
தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை வேலை நாள் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களின் நேரடி கல்விமுறை அதிகம் பாதிக்கப்பட்டது. அதை கருத்தில்கொண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு பின்னரும் பல்வேறு தரப்பிலிருந்து மாணவர்களுக்கு இந்த வருடமாவது இறுதித்தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் […]
1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10, 11, 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும், எனவும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் M.s., மற்றும் ph.d படிப்புகளில் சேர மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சேர விரும்புவர்கள் https//cfr.annaunivedu என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 4 வளாகங்களில் கல்லூரிகளில் சேருவதற்கு உதவித்தொகை வீட்டு வாடகைப்படி உடன் சேர்த்து ரூ 31,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் “லீக்” ஆகாமல் தடுப்பதற்கு 3வகை வினாத்தாள்கள் தயாரிக்க பள்ளிக்கல்விதுறை முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. அப்போது பல்வேறு பாடங்களுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே “லீக்” ஆனது. தற்போது 2-ம் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 முடிவடைய இருக்கிறது. இத்தேர்வில் வினாத்தாள்கள் லீக் […]
கர்நாடக மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முடிவடைகிறது. தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 10 முதல் மே 15 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளித்து கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 1 ம் வகுப்பு முதல் 7 ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 4-ந்தேதி வரை ஆண்டு தேர்வு நடத்த வேண்டும். மேலும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட முடிவு வேண்டும் எனவும் […]
நம்முடைய எல்லோருடைய வாழ்க்கையிலும் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. 3 வயது முதலே பள்ளியில் குழந்தைகளின் பெற்றோர்கள் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்களை விட்டு பிரிந்து இருக்க தைரியமில்லாத அந்த வயதிலேயே குழந்தைகளுக்கு கல்வியை கற்று கொடுக்கிறார்கள். பிறருடன் பழக விடுகிறார்கள். சிறு வயதிலேயே அந்த குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு என அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு, எட்டாம் வகுப்பு முதல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு இன்ஜினியரிங், […]
கியூபா கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கு. தற்போதைய உலகில் மகிழ்ச்சியான குழந்தைகள் மற்றும் அடிப்படை கல்வி புள்ளி விவர பட்டியல் வெளியாக தொடங்கிய பின்பு முதலில் உலகத் தலைமை பீடத்தில் பின்லாந்து உள்ளது. இந்த விஷயத்தில் பின்லாந்தோடு போட்டிபோடும் நாடுகள் என்றால் அது கியூபாவும், சமீபத்திய சாதனை நாடுகளான அமெரிக்காவும், லத்தீனும் தான். கியூபாவை நாம் கண்டிப்பாக தனித்துக் குறிப்பிட வேண்டும். எந்த நல்ல விஷயம் வெளி வந்தாலும் அது சரி கிடையாது என்று தூக்கி எறியும் […]
மாணவர்கள் கல்வி கோவிட் காரணமாக 2 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களை உருவாக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. 2022 – 23க்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இது நிர்மலா சீதாரான் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2ஆவது முறையாக இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. அதன்பின் அவர் பட்ஜெட்டை வாசித்தார்.. பட்ஜெட் சிறப்பம்சங்கள் : தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் கருத்தரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் குறு சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநில உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவைகளின் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பவள விழாவை துவக்கி வைத்தார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன். அப்போது பேசிய அவர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக முதல்வர் அவர்கள் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துள்ளதாக கூறினார். மேலும் அழகப்பரால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி தற்போது இந்த அளவிற்கு பெயர் வாங்கி இருப்பது ஒரு பெரிய விஷயம் என்று கூறினார். மேலும் காரைக்குடி கல்விக்குப் பெயர் […]
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பவளவிழா ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, முதல்வர் முக ஸ்டாலின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். இந்தக் கல்லூரி பல லட்சம் மாணவர்கள் உருவாக்கியுள்.து இந்த விதையை விதைத்தவர் அழகப்பர் . மு க ஸ்டாலின் மக்களுக்கு சொன்னதையும் சொல்லாததையும் கூட செய்து வருகிறார். இதனால் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். கல்விக்கு […]
தென்கொரியாவில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தென்கொரியா நவீன தொழில் நுட்பங்களில் முன்னேறிய நாடாக உள்ளது. இங்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சிறிய அளவிலான நவீன ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தென் கொரியாவின் சியோலில் உள்ள 300 நர்சரி மற்றும் மழலையர் கல்வி கூடங்களில் இந்த குட்டி ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆல்ஃபா மினி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் 25 சென்டி மீட்டர் உயரமுள்ளதாக காணப்படுகிறது. இவை குழந்தைகளுக்கு […]
தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடி இருந்தாலும், மாணவர்களின் கல்வித்திறனில் எந்த குறைபாடும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டமானது முதன்முதலில் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு பல்வேறு வகையான நிதி உதவிகளும் உதவித் தொகையையும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயில கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021- 2022 ஆம் கல்வியாண்டில் ரூபாய் 15,000 வரை கல்வி உதவி கல்வி உதவி தொகை பெற முடியும். […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளதாக மத்திய அரசு […]
கர்நாடகா மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள பலாக்கா என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ஊரடங்கு காரணமாக மாணவ மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் அவர்களுக்கு சரியாக இணைய தொடர்பு கிடைக்காது. இதனால் பல மாணவர்கள் மலை முகடுகள், மரங்கள் மீது அமர்ந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பாடம் […]
சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். 2020-21ம் ஆண்டில் மாநில பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.11,943.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை தற்போது 4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில் அடுத்த ஓராண்டில் ரூ.5.7 […]
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாண்டிச்சேரியில் 8 லட்சம் பேர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அவர்களுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதில் மே மாதம் 3ஆம் தேதி தமிழ் மொழி பாடம், 5ஆம் தேதி ஆங்கிலம் தேர்வு நடைபெறுகிறது. ஏழாம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. மே மாதம் 11ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம் போன்ற படிப்புகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. […]
ஜெர்மன் அரசு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய கடன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா காரணமாக பல குடும்பங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கூட பணம் இல்லாமல் பல பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். இதனை சீர் செய்வதற்காக ஜெர்மன் அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு மாணவன் கொரோனா நிதியுதவி எனும் திட்டம் மூலமாக 650 யூரோக்கள் வரை வட்டியில்லாமல் […]
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதல் கட்டமாக 100 மாணவர்களுக்கு […]
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதல் கட்டமாக 100 மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் வரும் 8ம் தேதி வரை கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு எதிர்கொள்ள ஏதுவாக, மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்பதால், பள்ளிகளைத் திறப்பது குறித்து வரும் 8ம் தேதி வரை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் […]
சிபிஎஸ்இ பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான தேதி வெளியாக உள்ளதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ தேர்வுகள் மாநிலத் தேர்வுகளுக்கு முன்னதாகவே நடத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள. இந்நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆனால் பிற மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்திலேயே பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அமைச்சர் […]
போட்டி தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் தேர்வர்கள் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். அப்போது மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.மேலும், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு […]