திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சாந்தி பிரியா என்பவர் கணித பாட முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை எழுப்பி வருகின்றார்கள். அதாவது மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும் வேதியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும், பள்ளிகளில் பாடம் நடத்தாமல் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும் மற்றொரு மாணவியை மருமகளே என அழைத்து […]
Tag: கல்வி அலுவலர்
தமிழக பள்ளிகளில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. இது பற்றி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஜெ ஜெயக்குமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 9.2 .2007 க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி நிர்வாகம் […]
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கரன்கோவில் கல்வி அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட புதிய ஆட்சியாளராக ஆகாஷ் பொறுப்பேற்றார். இதனை அடுத்து உயரதிகாரிகள் பலர் புதிய ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் சங்கரன்கோவில் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் […]