தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி வரை கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை […]
Tag: கல்வி கட்டணம்
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிக்கல்வித்துறை குறைத்து நிர்ணயம் செய்துள்ளது. கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட குறைவான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்திருக்கின்றது. இந்த நிலையில் கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கல்வி கட்டணத்தை தமிழக அரசு குறைத்து இருக்கின்றது. அதன்படி எல்கேஜி யுகேஜி மற்றும் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு ரூபாய் 12,076 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் […]
கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பல மாணவர்கள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலகளித்து, அவர்கள் தொடர்ந்து அதே […]
தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விளக்கு அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கும் நேராக கொரோனா பரவி வரும் நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதில் பல மாணவர்கள் பெற்றோரை இழந்தனர். இந்நிலையில் தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் படிப்பது உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. […]
பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்துவதற்கு ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் குறைந்தபட்சம் 79,000 ஆகவும், அதிகபட்சம் 1.89 லட்சமாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் 1.41 லட்சம் ஆகவும், அதிகபட்சம் 3.03 லட்சமாகவும் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் (25% இட ஒதுக்கீட்டில்) மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் http://rte.tnschools.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. RTE சட்டத்தின்படி LKG முதல் 8 ஆம் […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாடு உருக்குலைந்து வருகிறது. இதனால் உக்ரைன் மக்கள் அண்டைநாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதேபோன்று உக்ரைன் நாட்டின் உயர் கல்விநிறுவனங்களில் படித்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுமாணவர்களும் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். அந்த அடிப்படையில் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் ஆகிய உயர்படிப்பு பயின்று வந்த சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதில் ஏராளமானோர் மருத்துவ மாணவர்கள் ஆவர். உக்ரைனில் இதுவரை போர் […]
கொரோனா பரவலின் தாக்குதல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தனியார் பள்ளிகளானது அரசு அனுமதித்துள்ள கல்வி கட்டணத்தை மீறி வசூலித்தால், அப்பள்ளியின் மீது பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் […]
மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் ஜனவரி 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எவ்வளவு என்பது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் வழிகாட்டுதல் வெளியிடும் பொழுது அதில் தெரிவிக்கப்படும். அந்த வகையில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எல்கேஜி […]
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. MBBS க்கு ரூ.13,610, B.D.S-கு ரூ.11,610 ஆக ஆண்டுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. MD /MS &MDS படிப்புகளுக்கு டியூஷன் கட்டணம் ரூபாய் 30,000, முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கான டியூசன் கட்டணம் ரூபாய் 20000, பிஎஸ்சி நர்சிங் […]
புதுச்சேரியைச் சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. தி.மு.கவுடன் கூட்டணி வைத்து 2016 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டத்தினை கொண்டு வந்தது. அத்துடன் அதற்கான கோப்புகளை ஆளுநர் கிரண் பேடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அந்தக் கோப்பில் பல்வேறு கேள்விகளை […]
கல்வி உரிமைச் சட்டத்தை ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்காக கட்டணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கட்டாயக் கல்விஉரிமைச் சட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கக்கூடிய மாணவர்களுக்கான கல்வி செலவை அரசே வழங்க வேண்டுமென இந்தச் சட்ட பிரிவுகள் சொல்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு செலவு செய்ய படுகிறதோ அந்த தொகையை அரசு […]
கல்வி கட்டண சலுகை கோரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கொரோனா காலத்தில் 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சட்டம் பயின்று வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டு சட்டம் பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு கணக்கின்படி […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தற்போது […]
சவுதியில் கொரோனா தாக்கம் காரணமாக 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டின் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைந்துள்ளது. சவுதி அரேபியாவின் வட பிராந்தியத்தில் டாபுக் மகாணம் இருக்கின்றது. அந்த மாகாணத்தின் கல்வி இயக்குனரகம், கொரோனா பாதிப்பால் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், டாபுக்கில் உள்ள 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டில் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதனால் 30 ஆயிரம் மாணவர்கள் பலன் […]
40 சதவிகிதம் மட்டுமே கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதனை விதியை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை […]
கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த பெற்றோர்களுக்கு பல்வேறு வகையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த காலகட்டங்களில் பள்ளி கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். கட்டணம் வசூலித்தால் தான் ஆசிரியர்களும், அலுவலர்களும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த வழக்கு கடந்த வாரம் […]