தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பதினொன்றாம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்புக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதனிடையே மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16ஆம் தேதி திறக்க தமிழக அரசு அனுமதி இருந்த நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பு […]
Tag: கல்வி
கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் சேர்ந்து பின்னர்விலகிய மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திருப்பித்தர கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை கொடுக்காமல் செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2020 – 2021 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பரவியதை தொடர்ந்து தற்போது பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநில அரசாங்கங்கள் கல்வி நிலையங்கள் திறப்பை அறிவித்து வருகின்றன. பல மாநிலங்களில் கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்துவிட்டது. தமிழகத்திலும் கூட 16ஆம் தேதி பள்ளி – கல்லூரிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த முடிவை அரசு மாற்றி அமைத்துள்ளது. இதனிடையே கல்வி சார்ந்த கல்லூரிகளில் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு என அடுத்தடுத்த பணிகள் […]
கொரோனா பேரிடர் காலத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில் கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கூட தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே வருகின்ற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மறு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் […]
கொரோனா பொதுமுடக்கத்தால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்த நிலையில் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு பொதுமுடக்க காலத்திலும் இணைய வழியில் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவன் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தற்போது 6ம் வகுப்பு முதல் 12ம் மாணவர்களுக்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை Bonafide Certificate வழங்க அலைக்கழிக்கும் […]
பள்ளியை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் என்பது பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் ஐஏஎஸ் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைவருமே பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு பிறகு 16 ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய நான்கு வகுப்புகள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் […]
நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வியையும் முடக்கியது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டனர். ஏறக்குறைய 8 மாதங்களாகியும் கல்வி நிலையங்கள் குறித்தும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போது தளர்வுகள் அறிவிக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் பள்ளி – கல்லூரி திறப்பு குறித்து தேதியை அறிவித்து வருகின்றன. அதேபோல தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது. தொலைதூர கல்வி […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இன்னும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. எப்போது பள்ளி, கல்லூரி திறக்கப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், பள்ளி கல்வித்துறை தரப்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் மாதம் வரை திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான […]
கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களின் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அரியர் தேர்வுக்கும் பணம் கட்டியவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் அறிவித்திருந்தது. இதற்கு ஆரம்பத்திலிருந்தே யுஜிசி தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திலும் தனது எதிர்ப்பை யுஜிசி தெரிவித்திருக்கிறது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை என்பதே அவர்களின் எதிர்ப்பாகும். இந்த நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன் ? என்று இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கேள்வி […]
கொரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும் ஒன்றில் இருந்து பத்தாம் வகுப்பு வரை பயிலும் ரெகுலர் மாணவர்களுக்கு தேர்வு இன்றி அனைவரும் பாஸ் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் கிட்டத்தட்ட 39 ஆயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு […]
நேற்று புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும் 10 சத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்த இருப்பதாக தெரிவித்த அவர், அமைச்சரவை கூட்டத்தின் முடிவை ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார். இதனால் தமிழகத்தைப் […]
நாட்டின் வளர்ச்சியை தீர்மானிபதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கல்வியறிவு இருக்கின்றது. எந்த நாடு கல்வியில் சிறந்து விளங்குகின்றதோ… அந்த நாடே வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நாடு என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தான் ஒவ்வொரு நாடும் கல்விக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து கல்வியை அனைத்து மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கு பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ, […]
கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, மாணவர்கள் வீட்டிலேயே இருந்த நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும் கல்வி நிலைய திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் மக்கள் மாணவர்கள் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்று அரசு அவ்வப்போது உள்ள பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு உத்தரவு […]
பள்ளி மாணவர்கள் அரசு தேர்வை எழுதி, அதன் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது இறுதி ஆண்டு தேர்வு தேர்ச்சி பெற்று அதனை பதிவு செய்கின்றனர். அதேபோல கல்லூரி செல்லும் மாணவர்களும் அடுத்தடுத்து அதற்கான பதிவுகளை செய்துவருகின்றனர். வேலைவாய்ப்பு உறுதி செய்ய மாணவர்கள் இந்தப் பதிவை தொடர்ச்சியாக செய்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு பதிவு குறித்தான ஒரு அறிவிப்பு மாணவர்களுக்கு […]
டெட் தேர்வுக்கான சான்றிதழ் இனி ஆயுள் வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெட் ( ஆசிரியர் தகுதி தேர்வு ) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சாற்று 7ஆண்டு வரை மட்டுமே செல்லும் என்பது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி ஒருமுறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது ஆயுள் முழுதும் செல்லும் என மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு […]
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிக்கான மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு கட்டணம் செலுத்த கடைசி நாள் இன்றோடு முடிவடைகின்றது . கொரோனா பேரிடர் காலங்களில் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டன. ஆனாலும் மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு கல்வி சார்ந்த நடவடிக்கைகளை இணையம் வாயிலாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இணையவழியில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு உள்ளிட்ட விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. இன்ஜினியரிங் கவுன்சிலிங் இரண்டாவது […]
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபிடி இருப்பதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் ) நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகும் அந்த இணையதளத்தில் நேற்றில் இருந்தே […]
தமிழகத்தில் அரசு பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மொத்த கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இது தொடர்பான வழக்கு […]
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய இணையத்தளங்கள் சில வெளியாகியுள்ளது மாணவர்களுக்கு அவர்களது படிப்பிற்கான செலவை ஈடுசெய்ய பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் திறமை, எடுத்திருக்கும் பாடப்பிரிவு, இனம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் பல உதவித்தொகைகள் கொடுக்கப்படுகின்றன. வளர்ந்த நிறுவனங்கள் பல உதவித்தொகையை மாணவர்களுக்கு கொடுத்து வருகின்றன. கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்கள் சிலவற்றை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவற்றில் சில www.scholarshipsinindia.com www.education.nic.in www.scholarship-positions.com www.studyabroadfunding.org […]
தனியார் பள்ளிகள் தங்கள் கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தால் நாட்டின் பொருளாதாரம் பெரும் அளவில் சரிந்து போயுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியும் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் வகையில் தான் மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வருகின்றன. பல்வேறு வகைகளில் மக்களுக்கு சலுகை அறிவிப்புகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்தடுத்து பல்வேறு உத்தரவுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்தன. […]
புதிய கல்வி கொள்கை மூலம் சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் கவுகாத்தி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி இளைஞர்களின் சிந்தனையில் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களின் கனவுகள் தான் இந்தியாவை உருவாக்கப் போகிறது என குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலத்திற்கு தயாராவதற்கான நேரம் இது எனவும் கூறினார். சர்வதேச கல்வி மையமாக இந்தியாவே தேசிய […]
அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவ சமுதாயம் அஞ்சத் தேவையில்லை என சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பழகன் யுஜிசி ஏஐசிடிஇ ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உயர்கல்வித்துறை செயல்படுவதாகவும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி அரசு செயல்படும் என்றும் குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மெயில் ஐடியில் இருந்து ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பியதாகவும் கூறினார். அரியர் தேர்வு […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு, மாணவர்கள் நேர்மையாக எழுதுவார்கள் என நம்பிக்கை விடுகிறார். இறுதி பருவத்தேர்வு பல்கலைக்கழகங்கள் மூலம் இணைய வழியில் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் நேர்மையாக ஆன்லைன் தேர்வுகளை எழுதுவார்கள் என்ற நம்பிக்கையில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே தேர்வு எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் இறுதிப் பருவத்தேர்வு நாளில் தொடங்கி வரும் 30ஆம் […]
1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது குறைவான நாட்களே என்ஜி இருக்கும் என்பதால் அதைக் கணக்கில் கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டிருந்தது. நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்தின் முக்கிய பகுதிகளில் […]
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1,17,990 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய நீட்தேர்வு கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் மேலும் தள்ளிவைக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. திட்டமிட்டபடி இன்று தேர்வு நடத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து […]
அரியர் தேர்ச்சி கிடையாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணா பல்கலைக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. தமிழக அரசு அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைய கூடிய ஒரு நிலை இருந்தது. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப அமைப்பு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் எந்தவிதமான தேர்வு முறையும் இல்லாமல், […]
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோக்கை 10 லட்சத்தைக் கடந்தது. மேலும் செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் மாணவா் சோக்கை 15 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.கரோனா பரவல் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி 1, 6, 9- ஆகிய வகுப்புகளுக்கும், ஆக.24-இல் […]
தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையிலிருந்த இறுதி பருவ தேர்வை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னரே நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதி தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்ற விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்ற ஒரு தகவலையும் உயர்கல்வித்துறை அமைச்சர் […]
கல்லூரி மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு இறுதி பருவத்தேர்வு என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வு செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதனை பின்பற்றி […]
ஆசிரியர் தகுதி தேர்வில் ஆயுள் காலம் 7 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளில் ஒன்றில் இருந்து எட்டாம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணிக்குச் செல்ல வேண்டுமென்றால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும், வேலைக்காக இன்னொரு தேர்வையும் எழுத வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடியவர்களுடைய […]
கொரோனா கால ஊரடங்கு பொதுமுடக்கத்தால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. அதில் ஏதேனும் பிழை இருந்தால் தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றோப்பமிட்டு […]
கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் இணையதளம் வழியாக கல்வி சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிய உடனே உயர்கல்விக்கு ( பொறியியல் கல்லூரிக்கான) விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் இணையம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று […]
கொரோனா கால ஊரடங்கால் மாணவர்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி விடுகின்றனர். பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் ? என்று எந்த முடிவும் எடுக்க முடிவு எடுக்கவில்லை. இதனால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கவலையில் இருந்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பள்ளி திறப்பு குறித்து, கல்லூரி திறப்பு குறித்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சிபிஎஸ்இ தேர்வு குறித்து முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ […]
தமிழக்தில் பொதுமுடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் முடிவுகளை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும், மதிப்பெண் சான்றிதழில் குறைகள் இருப்பின் வரும் 17ம் தேதி முதல்…. 25-ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், […]
தமிழக அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை ( 10ஆம் தேதி ) பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட இருக்கின்றன. […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]
கொரோனாவால் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி தடைபட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மரத்தின் உச்சியில் ஏறி கல்வி கற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் மாணவர்கள். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்காவில் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை கொண்டது கடமலை, மயிலை ஒன்றியம். தனியார் பள்ளிகளில் பயின்று வரும் இந்த கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. செல்போன் சிக்னல் கிடைக்காததால் மலையின் உச்சிக்குச் சென்றும். மரத்தின் மீது […]
ஆகஸ்ட் 12 முதல் பி.இ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுமென்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்க கூடிய பொறியியல் கல்லூரிகள் கல்வியாண்டுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் அவர்களுக்கான (இந்த பருவத்திற்கான) வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான சூழல் இல்லாத காரணத்தினால் அந்த வகுப்புகள் அனைத்துமே இணைய வழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. […]
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. ஆறு மாதங்கள் ஆகியும் இன்றும் பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி நீடிக்கிறது ? ஒவ்வொரு மாநிலங்களும் மாநிலத்திற்கு தன்மைக்கு ஏற்றவாறு பள்ளி, கல்லூரியை திறப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்கள் கல்வி நிலையம் செய்யப்படும் தேதியையும் அறிவித்து விட்டனர். ஆனால் தமிழகத்தில் அதிகப்படியான கொரோனா தொற்று இருப்பதால் கல்வி நிலையங்கள் திறப்பு […]
மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கை என்ற வரைவை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. கல்வியாளர்கள் இதிலுள்ள பாதக அம்சங்களை குறிப்பிட்டு வரும் நிலையில், சாதகமான அம்சங்களை குறிப்பிடுகின்றன. இது தேசிய பெரிய விவாதமாக மாறியுள்ளது. அண்மையில் இது குறித்து மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்நிலையில் புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாளை மாநாட்டில் காணொளியில் உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி கல்விக் கொள்கை மூலம் உயர் […]
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாநிலங்கள் கல்வி நிலையம் திறப்புகான தேதியை அறிவித்து, முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழகத்திலும் வருகின்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் திறப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் […]
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த திட்டமிட்டு அட்டவணைப் படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதால் சில சாதக, பாதகமான அம்சங்கள் ஏற்படுகின்றன. ஆன்லைன் கல்வி மூலமாக ஹேக்கர்கள் மாணவர்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். டேப்லெட், லேப்டாப், செல்போன் ஆகியவற்றில் பயன்படுத்தி வீட்டில் இருந்து மாணவர்கள் கல்வி கற்கும் போதும், வகுப்புகளை கவனிக்கும் […]
பொறியியல் படிப்பில் சேருவதற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்தாண்டு மொத்தமாக விண்ணப்பித்த மாணவர்களை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களிடையே குறைந்து வந்தது. அரசு ஒதுக்கீட்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக இருக்கின்றன. தரமான கல்லூரிகள் இல்லாததும், படித்து முடித்ததும் வேலை வாய்ப்பு கிடைக்காத சூழலும் பொறியியல் […]
தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து. நேற்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்புதிய கல்விக் கொள்கை தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறை அமைச்சர் , மூத்த அமைச்சர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை பொறுத்தவரை… […]
மத்திய பல்கலைக் கழக தேர்வு வாரியம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 22ம் தேதி அன்று அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்திக்கொள்ள துறை தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள் முழுவதுமாக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் […]
தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு என்ன காரணம் ? என்பது குறித்த ஒரு செய்தித் தொகுப்பில் தற்போது பார்க்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் முடிவுகளின் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு கல்லூரிகளின் தேர்ச்சி விழுக்காடு தரப்பட்டுள்ளது. வழக்கமாகவே பொறியியல் கல்லூரிகளில் தரமில்லை, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, தரமான ஆசிரியர்கள் இல்லை […]
தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து அவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது சட்ட கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று விஸ்வரூபமெடுத்து பரவி வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள் முடங்கி இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனிடையே அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் கல்வி கட்டணத்தில் 40 சதவீத கட்டணத்தை மட்டும் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பல பள்ளிகள் வசூல் செய்ததாக புகார் எழுந்தது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது […]