கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் கிராமத்தில் ஆறுமுகம் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் தும்பரமேடு கிராமத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு சொந்தமான சுமார் 10 நாய்கள் நேற்று ஆறுமுகத்தின் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்தது. அப்போது ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை நாய் கடித்து குதறியதில் 20 குட்டிகள் உட்பட 24 ஆடுகள் இறந்து விட்டதாக தெரிகின்றது. இதுகுறித்து ஆறுமுகம் போலீசில் புகார் அளித்துள்ளார். […]
Tag: கள்ளகுறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக விஜய் பாபு என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது விஜய் பாபு சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆவின் பொது மேலாளராக வேலை பார்த்த சத்திய நாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்ற சத்திய நாராயணனை வருவாய் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காதல் மனைவி தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாகுறிச்சி கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் பிரகாஷ்(25) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி அருள் பிரகாஷ் தனது காதலியான 19 வயது இளம்பெண்ணை விருதாச்சலத்தில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு […]
விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் உளுந்தூர்பேட்டை தாலுகா நெய்வனை கிராமத்தில் பழமை வாய்ந்த சொர்ணகடேசுவரர் கோவி அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மன்னர்கள் காலத்தில் பலராலும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி தானம் அளித்தவர்களில் குறிப்பிட்டத்தகுந்தவர்கள் ராஜேந்திர சோழர் சேதிராயர், மற்றும் விக்ரம சோழ சேதிராயர் ஆவர். இவர்கள் கிபி 12-ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் ஆவர். இவர்களின் உருவ சிலைகள் […]
நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எடையூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சிவராஜ்(28) என்பவர் கோவிந்தனுக்கு சொந்தமான காரை பழுது பார்ப்பதற்காக திருக்கோவிலூரில் இருக்கும் தனியார் பணிமனைக்கு ஓட்டி சென்றுள்ளார். அங்கு பழுதை சரி செய்த பிறகு சிவராஜ் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அவருடன் பிரபு என்பவர் உடனிருந்தார். இந்நிலையில் திருக்கோவிலூர்- சங்கராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த […]
தலையில் கல்லை போட்டு மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள களமருதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அண்ணாமலை (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அரவிந்தன்(23) என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது கோபத்தில் அரவிந்தன் தனது தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். பின்னர் […]
மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டு கிராமத்தில் விவசாயியான செல்வமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வயலில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முந்தினம் மாலை செல்வமணி மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை ஓட்டி வந்து கொட்டகையில் அடைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது 15 ஆடுகளும் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து செல்வமணி அதிர்ச்சி அடைந்தார். […]
மருமகனை தாக்கிய குற்றத்திற்காக மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஜோசப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லெனின் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஜோசப்ராஜ் தனது மகனை திட்டியதால் கோபத்தில் சிறுவன் தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜோசப் ராஜ் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வரச் சென்றபோது அவரை மாமனாரான பெஞ்சமின் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார். அதன்பின் ஜோசப் ராஜாவை பெஞ்சமின் தடியால் […]
60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை-சென்னை இணைப்பு சாலை ரயில்வே மேம்பாலத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]