கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய தந்தை இறந்து விட்ட நிலையில் இவருக்கும் மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆம் தேதி கோயிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது. இதன் பிறகு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் இவர்களுக்கு திருமண வரவேற்பு நடை பெற்றுள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் வருகை தந்து மணமக்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து வாழ்த்தினார்கள். இந்த நிலையில் நண்பர்கள் அறிவழகன் தந்தையை உருவப்படத்தை பேனர் அச்சடித்த கட்அவுட் […]
Tag: கள்ளக்குறிச்சி மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த குற்றங்களை தடுப்பதற்காக அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறது. இருப்பினும் பெண்கள், சிறுமிகள் போன்றவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாள்தோறும் நடக்கத்தான் செய்கிறது. அதன்பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக தங்குவதற்கான விடுதிகளிலும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் விடுதியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு […]
போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்களை தடுக்க வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த போதை பொருளை ஒழிப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்ரேஷன் கஞ்சா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் வேட்டையாடப்படுகின்றனர். அதோடு போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுகளும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பகுதியில் […]
திடீரென குடோன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் பின்புறம் ஒரு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் பழைய பெட்ரோல் பம்புகள் உள்ளிட்ட சில பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]
புதிய மின்மாற்றியை முதல்வர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 150 கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பழைய மின்மாற்றி சீரமைக்கப்பட்டு புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ மணிக்கண்ணன் கலந்து கொண்டார். இவர் பூஜைகள் முடிவடைந்த பிறகு மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மேலும் நிகழ்ச்சியில் மின்வாரியத்தை […]
இருசக்கர வாகன விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சம்பட்டி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் இருக்கிறது. இவர் விடுமுறையை முன்னிட்டு பச்சம்பட்டிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தார். […]
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக வைத்து காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் போலீஸ் வாகனத்தை தீ வைத்து கொளுத்தி, காவலர்கள் மீது கற்களை வீசி எறிந்த வாலிபர்கள் சிலரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். […]
பெற்ற தாயை கொல்ல முயற்சி செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபி என்றும் மகனும், கோகிலா என்ற மகளும் இருக்கின்றனர். இவருடைய மூத்த மகன் கோவிந்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் கோபிக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருக்கும் நிலையில், கோகிலாவுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் […]
கோவில் ரதத்தை அலங்கரிப்பதற்கான துணியை ஒன்றிய தலைவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கோட்டத்தில் பிரபலமான பொண்ணு முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 7 வருடங்களாக நடைபெறாமல் இருக்கிறது. இதன் காரணமாக புதிதாக தேர் வாங்கப்பட்டு தேர் திருவிழா நடத்துவதற்கு கோவில் நிர்வாகமும், கிராம மக்களும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரதத்தை அலங்கரிப்பதற்காக துணி வாங்குவதற்காக கிராம மக்கள் ஒன்றிய இதை ஏற்றுக் கொண்ட ஒன்றிய தலைவரும் புதிதாக […]
நகை கடையை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புக்கிரவாரி புதூர் பகுதியில் ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மஹால் என்ற தங்கக் கடையை நடத்தி வருகிறார். இந்த நகை கடையின் பூட்டை சில மர்ம நபர்கள் உடைத்து ரூ. 50,000 பணம், 50 கிலோ வெள்ளி பொருட்கள், 281 பவுன் தங்க நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் […]
மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடந்த 13-ம் தேதி அதிகாலை விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீமதியின் பெற்றோர் என்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார் எனவும் கூறினர். […]
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இணையதளத்தின் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியில் உள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய போராட்டக்காரர்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பள்ளியை சூறையாடியதோடு காவலர்களையும் தாக்கினர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் […]
மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்ததாக கடந்த 13-ஆம் தேதி ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி கடந்த 12-ம் தேதி இரவு 10 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாணவி இறந்த உடனே […]
ஆக்கிரமிப்புகாரர்கள் மிரட்டியதால் மனமுடைந்த பெண் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள ஈரியூர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவருக்கு அம்சா(30) என்ற மனைவியும், ரணீஸ்(11), சபரீஸ்வரன்(9) என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்த நிலையில் இதுகுறித்து அம்சா கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் அம்சாவை தரக்குறைவாக பேசி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அம்சா தனது மகன்கள் […]
சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 3 பெண்களை தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள ஐம்படை பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு இவரது தம்பி சந்திரசேகர் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி சக்கரவர்த்தி இருவருக்கும் பொதுவான இடத்தில் இருந்த மரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன்-தம்பிக்கிடையே மீண்டும் […]
கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருங்குறிகை கிராமத்தில் கட்டிட தொழிலாளியான கப்பல்துரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 25 – ஆம் தேதியன்று நரிப்பாளையம் கிராமத்தில் இருக்கும் வனப்பகுதியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பெண்ணான ரோஷினி ராய் என்பவரை கப்பல்துரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கப்பல் துரையின் மீது வழக்கு பதிந்து அவரை […]
டிரைவரின் மரணத்தின் சந்தேகம் இருப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சீர்ப்பாதநல்லூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி டிரைவரான எழிலரசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் எழிலரசன் அப்பகுதியில் அவருடைய நண்பரான முருகன் மற்றும் தமிழரசனுடன் புஷ்பகிரி குளக்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது எழிலரசன் போதையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனை அடுத்து எழிலரசனின் நண்பர்கள் அவரின் […]
உளுந்தூர்பேட்டையில் 261 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி சான்றிதழை எம்.எல்.ஏ குமரகுரு வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏழை – எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சாய்வு தரணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு கலந்து கொண்டு 261 நபருக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் […]
மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்கள். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் ஐந்து விழுக்காடு வேலை வாய்ப்பு இடங்களை நிரப்ப வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளை கொண்டுநிரப்ப வேண்டும் எனவும் […]
லாரி டியூப்பில் சாராயம் கடத்திய தந்தை-மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமன் என்னும் ஒரு மகன் உள்ளார். சுமன் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை-மகன் இருவரும் மினி லாரியின் டியூப்பில் சாராயம் கடத்திச் சென்றுள்ளனர். புதுப்பாலப்பட்டு தத்துக்காடு சோதனை சாவடி அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கராபுரம் போலீசார் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் பிச்சையெடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எடுத்தாவை நத்தம் கிராமத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர் பெரியாபிள்ளை முதியோர் விதவை உதவி தொகை பெற்று தர லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாங்கிய லஞ்ச பணத்தை திரும்ப வழங்க கோரியும் லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரியும் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற ஆட்டு சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி உள்ளாக்கினார். உளுந்தூர் பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நடைபெறாமல் இருந்த ஆட்டுசந்தை இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் செம்பறி ஆடு, குறும்பாடு, வெள்ளாடு, மேச்சேரி ஆடு உள்ளிட்ட பல்வேறு ரகங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் […]
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கல்லூரி மாணவியை திருமணம் செய்த தொடர்பான வழக்கில் மாணவி சௌந்தர்யா கணவர் பிரபுயுடன் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எ.ல்.ஏ திரு. பிரபு தியாகத் துர்க்கத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காததால் அவரை வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதை கண்டித்து சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் […]
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு திடீரென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுகவின் இளம் எம்.எல்.ஏ-வான பிரபு தியாக விருவத்தை சேர்ந்த கோவில் அர்ச்சகர் சாமிநாதன் என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று காலை இளம் பெண்ணை எம்.எல்.ஏ பிரபு திருமணம் செய்து கொண்டார். கள்ளக்குறிச்சியில் உள்ள இல்லத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே […]