கள்ளக்குறிச்சி வன்முறையை கண்டித்து தன்னிச்சையாக விடுமுறை அளித்தத்தது. தொடர்பாக 987 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 987 பள்ளிகளும் ஒரே மாதிரியான பதில் கடிதத்தை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tag: கள்ளக்குறிச்சி வன்முறை
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக, இன்று முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், “கள்ளக்குறிச்சி பள்ளியில் என்ன நடந்தது? வழக்கு தொடரப்பட்ட பிறகும் வன்முறை எப்படி நடந்தது? என்பது குறித்து இன்று முதல்வருடன் ஆலோசிக்க உள்ளோம். சான்றிதழ்கள் எரிந்து போய்விட்டதால் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். இது தொடர்பாக முடிவுகள் எடுப்பது குறித்தும் இன்று பேச உள்ளோம்” என்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக இன்று […]