கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் நாகபஞ்சமி திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கஞ்சாவை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் சிலர் கஞ்சாவுடன் சேர்த்து அதிக போதைக்காக கள்ளச்சாராயமும் குடித்துள்ளனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து 12 பேருக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
Tag: கள்ளச்சாராயம்
பீகார் மாநிலம் சாப்ரா, சரண் என்ற இடத்தில் கள்ள சாராயம் குடித்த 8 பேர் இறந்த நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் கள்ளச்சாரயம் குடித்து உயரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே தற்போது, சாப்ரா, சரண் என்ற இடத்தில் கள்ள சாராயம் குடித்த 8 பேர் இறந்த நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். கிராமத்தில் உள்ள பகுதிக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் பரிசோதனை செய்யப்பட்டு […]
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் ஒட்டியுள்ள கிராமத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. தந்துபா தாலுகாவை சேர்ந்த கிராமங்களில் இருந்து கூலி தொழிலாளர்கள் போடாட் மாவட்டம் nabhoi கிராமத்திற்கு சாராயம் குடிக்க சென்றுள்ளனர். குடித்த ஒரு மணி நேரத்தில் பலருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு சொந்த வீடுகளில் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தனர். உயிருக்கு போராடியவர்கள் […]
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் தொடர் மரணம் நிகழ்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்குள்ள ஜங்காரெட்டிகுடம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இவ்வாறு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக உயர் அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 23 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்ததுடன் 700 அரசு அதிகாரிகள் இதன் காரணமாக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பீகார் அமைச்சர் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்ற நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பாரன் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி 2 நாட்களில் 23 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 -ற்கும் மேற்பட்டோர் […]
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பலரின் நிலை மோசமாக உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மன்ட்சார் பாபர்ஸ் காக்ராய் என்ற கிராமத்தில் சாராயம் குடித்த பலர் திடீரென்று மயங்கி விழுந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே 3 பேர் இறந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பலரும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை பகுதியை அடுத்துள்ள பெரியசோளிபாளையத்தில் வைத்து சாராயம் காய்ச்சுவதாக பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரியான ராஜரணவீரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரின் உத்தரவின்படி ஜோடர்பாளையம் காவல்துறையினர் பெரியசோளிபாளையத்தில் […]
நெல்லையில் சொந்த தோட்டத்தில் வைத்து சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக சிவந்திபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சிவந்திப்பட்டியில் இருந்து பருத்திப்பாடு செல்லும் சாலையில் ராஜா என்பவரது தோட்டத்தில் வைத்து 3 பேர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் […]
தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்ச தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், சில இடங்களில் அரசு உத்தரவை மீறி கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அதில் பல வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் சிலருக்கு ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் கடலூரில் கள்ள சாராயம் குடித்து பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் 3 பேர் கொரோனா ஊரடங்கு போது கிரிக்கெட் விளையாடி விட்டு கரும்புத் தோட்டம் வழியாக வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே சாராய ஊறல் போடப் பட்டிருப்பதை பார்த்தே […]
திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் என்ற வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் பால் மற்றும் மருந்துகள் கடைகளைத் தவிர்த்து மற்றஅனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சி கல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. […]
காவல்துறையினர் பறிமுதல் செய்த கள்ளச் சாராய பாட்டில்கள் அனைத்தும் மாயமானதற்கு எலிகளே காரணம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தின் இடா மாவட்டத்தில் 1,450 -கும் மேற்பட்ட கள்ளச்சாராய அட்டைப் பெட்டிகள் கோட் வாலி தெகாட் காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்து இருந்தனர். அதன்பின் பறிமுதல் செய்த அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்த கள்ளச் சாராய பாட்டில்கள் மாயமாகி இருப்பது கடந்த வாரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த காவல் துறையினரிடம் விசாரித்தபோது இவை […]
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்சியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததால் 19 பேர் உயிரிழந்துள்ளனர், ஆறு பேர் கண் பார்வை இழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கின் விசாரணையின் போதே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். […]
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. சிலர் முறைகேடாக கள்ளச்சாராயம் காய்ச்சி அதை விற்று வருகின்றனர். காவல்துறையினர் இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பிடித்து வந்தாலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது வட மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகின்றது. கள்ளச்சாராயம் குடித்த பலரும் பலியாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனாலும் கள்ளச்சாராயம் காய்ச்சவதை இன்னும் நிறுத்தியபாடில்லை. இதனால் பஞ்சாப் அரசு ஒரு திட்டம் தீட்டியுள்ளது. அதாவது […]
கள்ளச்சாராயம் காய்ச்சுவது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதை குடித்து சில சமயங்களில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் எரிசாராயம் விற்பனையாகி வருவதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் வாட்ஸ்அப் மற்றும் டுவிட்டரில் புகார் அளிக்கலாம் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் 6374111389 என்ற வாட்ஸ் அப் எண், @manithan _ yes என்ற டுவிட்டர் பக்கம், 10581 என்ற 24 […]
மத்திய பிரதேசத்தில் முகேஷ் கிரார் என்பவர் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் மான்பூர், பஹாவாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் பலருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததால் தான் இவர்கள் அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள். அதன் பிறகு காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில் இவர்களுக்கெல்லாம் முகேஷ் கிரார் […]
தெலுங்கானாவில் கள்ளச்சாராயம் குடித்ததில் 143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கள்ளச்சாராயம் விற்றுள்ளனர். அதனை வாங்கிக் குடித்த அப்பகுதி மக்கள் சிறிது நேரத்திற்குப் பின் வாந்தி எடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அதன்பின் கள்ளச்சாராயம் குடித்த 143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் மீதமுள்ளவர்களின் […]
அரசு மதுக்கடையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து பல பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த தீபாவளி பண்டிகையின் போது 6 பேரும் மற்றும் ஹாபூரில் 7 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ளனர். இந்த சோகம் இன்னும் மறையாத நிலையில் அம்மாநிலத்தில் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் அமாலியா கிராமத்தில் தற்போது ஐந்து பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகியுள்ளனர். மேலும் பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலியான அனைவரும் அரசு […]
ஆத்தூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் மணிவிழுந்தான் பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்தபகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மணிவிழுந்தான் கிராமத்திலிருந்து தலைவாசல் ஆத்தூர் செல்லும் சாலை பகுதியிலும் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, மணிவிழுந்தான் கிராமத்துக்கு வெளியே புதர் பகுதியை ஒட்டி பைக்கில் […]
பெரம்பலூரில் கள்ள சாராயம் காய்ச்சிய இருவரை கைது செய்த போலீசார் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்துள்ளனர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் ஒரு மாதத்திற்கு மேலாக மூடியே உள்ள நிலையில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவம் நடந்து வருகின்றது.அவ்வகையில் பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் செல்வகுமார், மயில்வாகனன் ஆகிய இருவர் மூர்த்தி என்பவரது காட்டில் வைத்து நாட்டு […]
கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சிய 6 பேரை போலீசார் கைது செய்து 440 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர் நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கையாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் அதிகமாக காய்ச்சப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதனை தடுக்கும் நோக்கத்துடன் மதுவிலக்கு காவல்துறையினர் ரேவதி […]
புதுக்கோட்டை அருகே மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மது கடைகள் ஆகியவை மூடப்பட்டன. இதையடுத்து, மது கிடைக்காமல் பல்வேறு மதுபிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கருப்பு சந்தையில் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திக்கோயில் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய காவல்துறையினர், கள்ளச்சாராயம் காய்ச்சிய ராமர், வெயில்முத்து, ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பொருட்கள் மட்டும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தப்பியோடிய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இதேபோல, ஊரடங்கை […]
மானாமதுரையில் ஆளில்லா வீட்டிற்குள் சாராயம் காய்ச்சிய பட்டதாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், குடிமகன்கள் பலரும் போதைக்காக திக்குமுக்காடி வருகின்றனர். இதனால் 20 வருடங்களுக்கு பிறகு சாராயம் காய்ச்சுவது சிலர் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்னவாசல், புதூர், செல்லும் வழியில் பூட்டி கிடந்த வீட்டில் […]
கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகத்தில் இதுவரை 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்து பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளும், பார்களும் அடைக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் போதைக்காக ஷேவிங் லோஷன், வார்னிஷ், மெத்தனால் , கள்ளச்சாராயத்தை குடித்து கிட்டத்தட்ட 10 […]
கேரளாவில் சாராயம் காய்ச்சிய 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 280 லிட்டர் சாராயம் தயாரிக்கும் மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா அச்ச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக கலால்துறை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று கலால் அலுவலர் சுமேஷ் ஜேம்ஸ் தலைமையில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் ஆலப்புழா […]