மதுரையில் நடைபெற்று வரும் கள்ளழகர் நிகழ்வில் வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததை அடுத்து மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விபரம் அல்லது வேறு ஏதேனும் விபரம் குறித்து அறிய மதுரை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலரை 9498042434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நிகழ்வில் வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு ஆண் […]
Tag: கள்ளழகர்
மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், தேர்த்திருவிழா போன்றவை முடிவுற்ற நிலையில் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் பிரம்மாண்டமாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண […]
வைகை ஆற்று நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகப்புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றதால் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் […]
கொரோனா குறைவால் இரண்டு வருடங்களுக்கு பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது. ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினால் மும்மாரி பெய்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களுடைய நம்பிக்கை. இந்த நிலையில் இன்று கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக அழகர் மலையிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுக சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளி னார். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இந்த […]
மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ஆம் தேதி(இன்று ) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் கருவூலம் மற்றும் வங்கிகள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் பாரம்பரிய முறைப்படி சனிக்கிழமை (ஏப்ரல் 16) நடைபெற இருக்கிறது. அதிகாலை 5.50 மணி முதல் 6.20 மணிக்குள் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். இதற்காக அழகர் கோவிலிலிருந்து சுந்தரராஜ பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வியாழக்கிழமை ஆறு முப்பது மணி அளவில் தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரையை வந்தடைந்தார்.இந்த நிகழ்ச்சியில் பக்தர்களும் ஆற்றில் இறங்குவார். இந்த நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து […]