வேலூர் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொணவட்டம் பகுதியில் இன்று காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் கும்பலாக எடுத்து கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அவை அனைத்தும் 500 ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் எனவும் அதில் மொத்தம் 14.50 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த […]
Tag: கள்ள நோட்டு
மீன் வாங்கி விட்டு தந்தை, மகன் இருவரும் கள்ள நோட்டை வியாபாரியிடம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக செல்வர். இந்நிலையில் ரீத்தாபுரம் பகுதியில் வசிக்கும் தந்தையும், மகனும் மீன் வாங்கிவிட்டு வியாபாரியிடம் பணத்தை கொடுத்துள்ளனர். அதில் ஒரு 500 ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வியாபாரி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கள்ள […]
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் எது கள்ள நோட்டு? நல்ல நோட்டு எது என்று கண்டுபிடிப்பது எப்படி என்று இப்போது இந்த தொகுப்பில் பார்க்கலாம். பழைய மற்றும் புதிய நோட்டுகளில் Window Threat அப்படி என்கிற ஒரு லைட் அடிக்கிற மாதிரியான ஒரு கோடு ரூபாய் நோட்டின் நடுவில் இருக்கும். ரூபாய் நோட்டை நம்மை நோக்கி படுக்க வைத்து பார்த்தால் அந்த கொடு ஊதா கலரில் தெரியும். அதை அப்படியே லைட்டாக கொஞ்சம் கொஞ்சமாக மேலாக […]
மதுபான கடையில் கள்ளநோட்டை மாற்றுவதற்கு முயன்ற வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊரம்பு பகுதியில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது. அங்கு வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து உயர்ந்த மது பாட்டிலை கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுத்த ரூபாய் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பரிசோதனை செய்து பார்த்ததில் கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வாலிபரிடம் ஊழியர்கள் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்து விட்டு […]
மத்தியபிரதேச மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் கள்ள நோட்டு சிக்கியிருக்கும் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், பாலாகாட் என்ற பகுதியில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து இரண்டு நாட்களாக தீவிர சோதனை நடத்தி வந்தனர். அந்த சோதனையில் கள்ள நோட்டு கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டதாக 8 பேரை அதிரடியாக கைது […]
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016ஆம் ஆண்டு புதிய 500 ரூபாயை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஒரு வருடத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் இந்தியாவில் 29.7 சதவீதம் கள்ள நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 2000 […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி செய்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமலாபுரத்தில் வசித்து வரும் சந்தனமேரி என்பவர் பழக்கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய கடையில் இரண்டு பெண்கள் பழம் வாங்கியுள்ளனர். அந்த பழத்திற்கு 500 ரூபாய் நோட்டை இரண்டு பெண்களும் சேர்ந்து சந்தனமேரியிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த 500 ரூபாய் நோட் வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் […]
சேலம் மாவட்டத்தில் மார்க்கெட்டிலுள்ள வியாபாரியிடம் கள்ள நோட்டு கொடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார். இந்நிலையில் பாலாஜி சேலம் கடை வீதிக்கு சென்று முருகன் என்ற வியாபாரியிடம் 12 தேங்காய் வாங்கி விட்டு அதற்கு 500 ரூபாய் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டு மீது முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வேறு ரூபாய் […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபுவும் அவரது தம்பியான பாபுவும், அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் ஆட்டு வியாபாரியான செல்வராஜ் பத்தாயிரம் ரூபாய் கடனாக கேட்ட நிலையில் இருபது 500 ரூபாய் நோட்டுகளை சகோதரர்கள் வழங்கியுள்ளனர். அவர்கள் வழங்கிய 500 ரூபாய் நோட்டுகளும் கள்ளநோட்டுகள் என தெரிய வந்ததையடுத்து, செல்வராஜ் காவல் நிலையத்தில் […]
ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டவரிடம் 55 லட்சத்துக்கு கள்ள நோட்டு கொடுத்து மோசடி செய்த நபரை கோவையில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையை சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் அதிபர் மனைவியான ஜெனிஃபரிடம் கோவையை சேர்ந்த ஆச்சரியார் என்பவர் ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை ஆவணத் தொகையாக கொடுத்துள்ளார். முதல் தவணையாக ஆச்சாரியா கொடுத்த 55 லட்சம் ரூபாயை ஜெனிஃபர் பார்த்தபோது கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து […]
காமராஜபுரத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கே எல் கே எஸ் நகரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் ரூ 500ஐ கொடுத்து பொருள்களை வாங்கியுள்ளார். அப்போது அந்த நோட்டு சந்தேகப்படும் வகையில் இருந்ததால், கடை உரிமையாளர் உடனடியாக கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது, ஜெயராஜ் […]