நாடாளுமன்ற எம்பி ஜெயந்த் சிங் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில், இந்தியாவில் சென்ற 5 வருடங்களில் கழிவு நீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கியதில் 352 பேர் வரை இறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் யாரும் ஈடுபட்ட தகவல் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கழிவுநீர் […]
Tag: கழிவுநீர் தொட்டி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் அண்மையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பட்டியலினத்தவர் ஆணையர் துணை தலைவர் அருண் ஹால்டர், இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் 72 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர், கழிவுநீரை அகற்றுவதற்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை […]
சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு தனி நபர்களை ஈடுபடுத்த கூடாது. இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு ஒருவர் கழிவு நீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்து விட்டால் அதற்கான முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்பதோடு, […]
ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் மரணமடைந்தனர். தமிழக அரசு சார்பில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. அதற்காக பிரத்யேகமாக இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளிகள் இதுபோன்று கழிவு நீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது உயிரிழப்பு நடைபெற்று […]
மதுரையில் நேரு நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி சரவணன், சிவகுமார், லட்சுமணன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த மூவரது உடலும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனமான வி.ஆர்.ஜி நிறுவனத்தின் உரிமையாளர் விஜயானந்த் மற்றும் ஊழியர்களாக ரமேஷ், லோகநாதன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். […]
சென்னை தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமங்கலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35), அவரது நண்பர் ஏழுமலை (36) இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியது. அதில் இருவரும் கழிவுநீர் தொட்டியில் மயங்கி விழுந்து அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்து சம்பவ […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கிய உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே கழிவுநீர் தொட்டியை 5 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாயப்பட்டறை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் தினேஷ் மற்றும் வடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
குஜராத் மாநிலத்தில் கஜ்ராத் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் ரசாயன ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு 5 தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். அப்போது இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. விஷவாயு தாக்கி ஐந்து பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் இந்த மரணங்கள் அதிகரித்து கொண்டே செல்வது மிகுந்த […]
பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும் அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]
கழிவு நீர் தொட்டியில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்பால் – மேரி ஜாஸ்மின். ஜான்பால் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். மேரி ஜாஸ்மின் எண்ணாயிரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார் . இவர்களது மகன் எட்டு வயதுடைய ரெமி எட்வின். இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான். நேற்று மாலை […]
ஜார்கண்டில் கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளிவந்த நச்சு காற்றை சுவாசித்ததால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திர பர்ன்வால். இவர் தனது வீட்டில் 20 அடி ஆழமும் 7 அடி அகலமும் கொண்ட கழிவுநீர்த் தொட்டி ஒன்றை கட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அந்தத் தொட்டியின் கட்டுமான பணியை செய்து கொண்டிருக்கும் பொழுது, அதிலிருந்து வெளிவந்த நச்சுக்காற்று சுவாசித்த பர்ன்வால் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். முதலில் இந்த கட்டுமானப் பணியை […]
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே உள்ள நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்க அதே குடியிருப்புக்கு கீழ் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால் நேற்று காலை கழிவுநீர் தொட்டி திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது. இதில் குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. […]