தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த கால அவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் நேற்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகளின் சங்க கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவி ஸ்ரீமதிக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதன்பின் மாநில பொதுச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் […]
Tag: கவன ஈர்ப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மகளிர் குழு மூலம் தூய்மை காவலர்களுக்கு ஊதியம் வழங்கும் முறையை ரத்து செய்து ஊராட்சி மூலம் வழங்க வேண்டும், பணியார்களுக்கு அகவிலைப்படியை 31% இணைத்து வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலைதொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணி காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பில் தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கும், குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், தூய்மை காவ பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை […]