Categories
மாநில செய்திகள்

நம்ம மொழி தான் எப்போதும் கெத்து…. பெருமையுடன் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று தமிழ்நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இது குறித்து கவர்னர் ஆர்.என். ரவி கூறியதாவது, “நமது நாடு ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ஆங்கிலம் நம் மொழிகளின் பெருமையை தடுக்கிறது. அதனால் தான் பிரதமர் நமது நாட்டின் மொழிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். நமது மொழிகள் பாரம்பரியமானவை. அதிலும் தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் இணையான வார்த்தை இன்று வரை இல்லை. மேலும் நம் பாரத […]

Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரிக்கு இடம் தர மறுக்கிறார்கள்”…. தமிழக அரசை குற்றம்சாட்டிய கவர்னர் தமிழசை….!!!

புதுச்சேரி அரசு மருத்துவமனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது‌. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து துறை தலைவர்களும், தங்கள் துறைகளுக்கு தேவையான கருவிகள், எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது, சிறப்பு மருத்துவர்கள் எத்தனை பேர் வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 11 சிகிச்சை அரங்கங்கள் தயாராக இருந்தும் பயன்படுத்தாமல் உள்ளது. இன்னும் 6 மாதத்தில் அறுவை சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்…. மேரிலாந்தில் கால் பதித்த முதல் இந்திய பெண் கவர்னர்….. தேர்தலில் கலக்கிய அருணம் மில்லர்….!!!!

மேரிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி துணை கவர்னர் என்ற பெருமையை அருணா மில்லர் பெற்றுள்ளார். அமெரிக்க நாட்டில் மேரிலாந்து என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாண துணை கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 6 நவம்பர் 1964 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார். அவர் தனது ஏழு வயதில் தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகின்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் […]

Categories
மாநில செய்திகள்

இனி பல்கலைக்கழகத்தில் “துணைவேந்தர்கள் இப்படி தான் நியமிக்கப்படுவார்கள்”…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!!

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போல மேற்கு வங்கத்திலும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 13 பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக கவர்னருக்கு மட்டுமே உள்ளது.    மேலும் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தேர்வு செய்யும் போது  பல்கலைக்கழகங்களில் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் தலா ஒருவர் மற்றும் கவர்னர் சார்பில் ஒரு பிரதிநிதி என மூன்று பேர் நியமிக்கப்படுவர். இதனை மாற்றும் வகையில் தமிழகத்தில் […]

Categories
உலக செய்திகள்

திடீர் பயணமாக… தைவான் புறப்பட்ட இண்டியானா மாகாண ஆளுநர்….!!!

அமெரிக்க நாட்டின் இண்டியானா மாகாணத்தினுடைய ஆளுநராக இருக்கும் எரிக் ஹோல்காம்ப், நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தைவான் நாட்டிற்கு சென்றிருக்கிறார். சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு செல்வதை சீனா கடுமையாக எதிர்த்தது. எனினும், அவர் அதனை மீறி தைவான் நாட்டிற்கு சென்று வந்தார். இதனால் சீனா கடும் கோபமடைந்தது. அதனையடுத்து, அமெரிக்க நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் தைவானுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கவர்னர்கிட்ட போய் என்ன அரசியல் பேசுறாரு…. ரஜினிகாந்துக்கு கடம்பூர் ராஜீ பதிலடி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ,  பொதுவாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர் கவர்னர். கவர்னரிடம் போய்  அரசியலில் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியல ? கவர்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதுதான் எங்களுடைய கருத்து,  அனைவரின் கருத்தும் அதுதான்.ரஜினிகாந்த் வாரேன், வாரேன் என்று அவர் புதுசா சொல்லல இந்த  கருத்தை… 30 வருஷமா இன்னைக்கு வாரேன், நாளைக்கு வாரேன் அப்படின்னு சொல்லுவாரு. பிறகு அவர் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, கூட்டி ஆலோசனை செய்வார். பிறகு […]

Categories
உலக செய்திகள்

மராட்டிய கவர்னருக்கு…. கொரோனா தொற்று உறுதி…. பெரும் பரபரப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத்தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா பரவல் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி, மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மராட்டியத்தில் தற்போது பரபரப்பான […]

Categories
மாநில செய்திகள்

“இது நடக்காது”…. திமுகவை மறைமுகமாக தாக்குகிறாரோ….? புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்…!!!!!!!

பிற மொழி திணிப்பு என்ற வார்த்தைக்கு  இடமில்லை எ தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலுக்கு வந்த  புதுச்சேரி கர்வனர் தமிழிசை சொந்தர்ராஜன் நிருபர்களிடம் பேசியபோது,  குமரி கடற்கரையில் நடைபெறும் பவுர்ணமி தீப ஆரத்தி நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது. நதிகள் மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளுக்கு ஆரத்தி எடுப்பது தமிழர்களின் பண்டைய கால கலாச்சார முறையாகும். மேலும் அது நாம் நீர்நிலைகளுக்கு நன்றி கூறி மரியாதை செலுத்தும் விதமாக அமைகின்றது. இந்த  நிகழ்வுகள்  நமக்கு நினைவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை….. எடப்பாடி பழனிசாமி….!!!!

கவர்னர் முதல் காவலர் வரை தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி…. டெல்லி புறப்பட்டார்…!!!!!!!

2 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி   ஜனாதிபதி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்டோரை சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும், அப்போது தமிழக நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பகோரிக்கை வலுத்துள்ள நிலையில், கவர்னரின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
அரசியல்

தமிழக கவர்னருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்…. மாநில அரசே முழு பொறுப்பு… அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!!!!

மயிலாடுதுறையில் கவர்னர் ஆர்.என்  ரவி சென்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு என  பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; மயிலாடுதுறையில் கவர்னர் ஆர்.என்  ரவி சென்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு.கவர்னர் கான்வாய் மீது திமுகவினர் கல் மற்றும் கொடிக்கம்பங்களை வீசியுள்ளனர். மேலும் இன்று நம் மேதகு கவர்னருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, மாநில அரசே முழு பொறுப்பு என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார் […]

Categories
அரசியல்

“தயவுசெய்து இதை மட்டும் பண்ணுங்க…!!” தமிழிசை வேண்டுகோள்…!!

புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் அவ்வையார் விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் பொழுது பெற்றோர்கள் அனைவரும் சிறிது யோசித்து நல்ல தமிழ் பெயராக சூட்டுங்கள். இதனை நான் கவர்னராக கூறவில்லை உங்கள் குடும்பத்தில் ஒருவராக கூறுகிறேன். ஏதோ வாயில் நுழையாத சூட்டுவதால் தமிழ் மறைக்கப்படுகிறது. அதனை தடுக்க சுத்த தமிழ் பெயரை குழந்தைகளுக்கு சூட்டுவதை பெற்றோர்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீட் தேர்வு குறித்த சர்ச்சை…. கண்டனம் தெரிவித்த வைரமுத்து…. வைரலாகும் பதிவு….!!!

நீட் தேர்வு குறித்து கோரிக்கை மனு ஒன்றை தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் திருப்பி அனுப்பி வைத்தார் கவர்னர். இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைவராலும் குரல் எழுப்பப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் சம்மதத்தோடு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் […]

Categories
அரசியல்

“கொஞ்சம் கூட பெரிய மனசு இல்ல… முந்திக்கொண்டு கொடியேற்ற கிளம்பிட்டாங்க…!!” தமிழிசை குறித்து நாராயணசாமி பேச்சு…!!

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடி ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தேசிய கொடியை ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் […]

Categories
அரசியல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில…. “ஆளுநர்கள் ஒற்றர்கள் போல தா இருக்காங்க”….  ஒரே போடு போட்ட முத்தரசன்…!!!!

நேற்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், “தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் 21 விதமான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொங்கல் முடிந்தும் புதுவையில் மட்டும் இன்னும் அறிவிக்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு சென்றடையவில்லை. அதேபோல் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் புதுவையில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்போது புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு மூவாயிரமாக உயர்ந்துள்ளது. அரசின் செயல்பாடுகளால் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. கவர்னரின் அதிரடி உத்தரவு….!!

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அம்மாவட்டத்தின் கவர்னர் அங்கு பேரழிவு அவசர நிலை உத்தரவை பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் நியூயார்க் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. அம்மாவட்டத்தில் ஒரே நாளில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா சுமார் 6,295 பேருக்கு உறுதியாகியுள்ளது. அதோடு மட்டுமின்றி ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் நியூயார்க் மாவட்டத்தின் கவர்னர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நியூயார்க் மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை”…. மேகாலய கவர்னர் பரபரப்பு கருத்து….!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 19 தேதி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வரும் பார்லிமென்ட் […]

Categories
மாநில செய்திகள்

கவர்னர் 2 நாள் பயணமகா குமரிக்கு வருகை…. 500 க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிப்பு….!!

குமரி மாவட்டத்திற்கு தமிழக கவர்னர் 6 என்ற இரண்டு நாள் பயணமாக இன்று வந்தார். அதன்பிறகு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த், தென்மண்டல ஐ.ஜி. அன்பு மற்றும் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் ஆகியோர்கள் மலர்கொத்து வழங்கி வரவேற்றனர். கவர்னர் வருகையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு மாலை 4 மணிக்கு படகு சவாரி மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

இவைகளை தடை செய்யாதீர்…. கவர்னர் உத்தரவு….!!

தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார் இதையடுத்து தமிழகத்திற்கு புதிய கவர்னராக கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ஆர். என். ரவி பதவியேற்றார். இவர் 2019ஆம் ஆண்டு நாகலாந்தில் கவர்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில்சென்னை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய கவர்னர், பாதுகாப்பு வாகனங்களுடன் தான் வெளியில் செல்லும்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

திடீர் உடல்நலக்குறைவு… மேற்கு வங்க கவர்னர் மருத்துவமனையில் அனுமதி!!

மேற்கு வங்காள கவர்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக  ஜகதீப்  தன்கர் இருக்கிறார். இந்நிலையில்  இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு  பரிசோதனையில் அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கவர்னர் ஜக்தீப் தன்கர்க்கு சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விலக்கு மசோதா…. கவர்னரை சந்திக்க செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு  அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைப்பதில்லை. இதனால் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையின் போது நீட்தேர்வு விளக்கு பெரும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அறிக்கையில் அறிவித்திருந்தது. அதன்படி பட்ஜெட் கூட்டத்தில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூர் மாநில கவர்னராக…. பதவி ஏற்றார் இல.கணேசன்…!!!

மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக இல கணேசன் பதவியேற்றுக்கொண்டார். தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்றுக் கொள்வதற்காக நேற்று மணிப்பூர் தலைநகர் இம்பால் என்ற இடத்திற்கு சென்றார். மணிப்பூர் விமான நிலையத்தில் மணிப்பூர் அதிகாரிகள் இவரை வரவேற்றனர். இன்று காலையில் கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஐகோர்ட் நீதிபதி சஞ்சய்குமார் இல கணேசனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகள் விடுவிப்பு … கவர்னர் பேச்சு ..!!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகளை  பாதுகாப்புடன் இன்று விடுவிக்கபட்டு உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ .எஸ் மற்றும் போகோஹராம் கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருவதால் அவர்களை ஒடுக்கும் விதமாக அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதனால்  பொதுமக்கள் , பாதுகாப்பு படையினர் போன்ற ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் போகோஹராம் பயங்கரவாதிகள் கிராம மக்களை கொன்று குவித்தும், பள்ளி மாணவ மாணவிகளை தற்கொலைப்படைக்காக  கடத்தியும் சென்றுள்ளனர். இந்நிலையில்  நைஜீரியாவில் ஜாம்பரா மாநிலத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking News வரணும்…! ஸ்டாலின் போட்ட பிளான்… அமைச்சர் கடும் தாக்கு …!!

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடி இருப்பார் என தமிழ் துறை வளர்ச்சி தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லாத காரணத்தால் பிரேக்கிங் நியூஸ் வரவேண்டும் என்பதற்காக, அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் கொடுப்பதாக அவர்  விமர்சித்தார். மேலும், சிஎம் துறையில் ஸ்டாலின் வச்ச குற்றச்சாட்டுக்கு அடுத்த நாளே முதல்வர் அதை உடைத்தார். டெண்டரே […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவின் கவர்னருக்கு கொரோனா… மனைவிக்கும் தொற்று உறுதி…!!!

ஒடிசா மாநிலத்தின் கவர்னர் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு தற்போது உச்சம் தொட்ட நிலையில் இருக்கின்றது. அம்மாநிலத்தின் கவர்னர் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒடிசாவின் மதிப்பிற்குரிய கவர்னர், பேராசிரியர் ஸ்ரீ கணேஷ் லால் ஜி கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படுமா?… மோதிக்கொள்ளும்… மராட்டிய கவர்னர், முதல்-மந்திரி…!!!

மராட்டிய மாநிலத்தில் 7 மாதங்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளதால் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் 7 மாதங்களுக்கு மேலாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கோவில்களை திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கவர்னர் பகத்சிங், முதல் மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “இந்து மதத்தின் தீவிர பக்தராக இருந்த நீங்கள் தற்போது வரை வழிபாட்டுத் தலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா மூணாறு நிலச்சரிவு… நேரில் சென்று ஆறுதல்… கேரள மாநில கவர்னர் மற்றும் முதல்வர்…!!

மூணாறு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மாநில முதல்வர் மற்றும் கவர்னர் ஆறுதல் தெரிவித்து வந்தனர். கேரள மாநிலம் மூணாறு ராஜமலை பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் கடந்த 7ஆம் தேதி இரவு ஏற்பட்ட இந்த பெரும் நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் புதைந்து மண்ணோடு மண்ணாகின. இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேலானோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எதுக்கு திடீரென கூட்ட சொல்லுறீங்க ? கவர்னரின் 6 கேள்விகளால் நொந்து போன அசோக் கெலாட் …!!

சட்டசபையை கூட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அசோக் கெலாட்க்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மனக்கசப்பால் மோதல் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டது மட்டுமில்லாமல், சபாநாயகர் பைலட் உட்பட  19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயலாற்றியதாக நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகரின் நோட்டீஸை எதிர்க்கும் விதத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கவர்னர் கார் மீது துப்பாக்கி சூடு… திடீர் தாக்குதலில் பாதுகாவலர் மரணம்…!!

ஆப்கானிஸ்தானில் கவர்னர் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். அவர்களின் தாக்குதலினால் பெண்கள், ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டுவருவது அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. பலமுறை அந்த அமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் கவர்னராக இருப்பவர் ஹபீஸ்  அப்துல் கய்யாம். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனா ஆலோசனை: அதிகாரிகளுடன் கவர்னரா …? – சிவசேனா எதிர்ப்பு

கொரோனா குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை செய்தது தொடர்பாக சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மாராட்டியதில் கொரோனா தொற்று பாதிப்பு சம்பந்தமாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மண்டல கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பை சிவசேனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியதாவது, “போர் காலம் போன்ற நிலையில் அரசு நிர்வாகத்தில் வழிமுறைகளை வழங்க ஒரு அதிகார மையம் தான் […]

Categories

Tech |