பிரான்ஸ் நாட்டின் உயரியகுடிமகன் விருதை காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்து இருக்கிறது. அந்நாட்டின் உயரிய விருதான “செவாலியே விருது” (Chevalier de la Legion d’Honneur) அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது அவரது எழுத்துக்கள் மற்றும் ஆற்றிய உரைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சசி தரூருக்கு முன்பே இதே போன்றதொரு உயரிய விருதை ஸ்பெயின் நாடு வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த 2010 ஆம் வருடத்தில் ஸ்பெயின் மன்னர் சசிதரூருக்கு “என்கோமியெண்டா […]
Tag: காங்கிரஸ் எம்.பி
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவி என்பது யாருக்கும் சொந்தமானது இல்லை என்று தேர்தல் உத்தியாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பலமான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காங்கிரஸின் பிரதிநிதித்துவம் அவசியமானது. ஆனால் காங்கிரஸ் தலைமைப் பதவியாருக்கு […]
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் 6 பெண் எம்.பி.களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் திரிணாமுல் காங்கிரசின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் […]
கேரளா காங்கிரஸ் எம்பிக்கள் பயணத்திற்கு லட்சத்தீவு கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி அனுமதி மறுத்துள்ளார். லட்சத்தீவு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த கேரள காங்கிரஸ் எம்பிக்களின் பயணத்திற்கு லட்சத்தீவு கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி அனுமதி மறுத்துள்ளார். யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியாக பிரபுல் பட்டேல் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து நிர்வாக ரீதியாக அவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் மக்கள் எதிர்த்தனர். அதுமட்டுமில்லாமல் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிந்து […]
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்துள்ளார்.அதனால் கடந்த 10ஆம் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் […]
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அனைவரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன் காரணமாக சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த […]
கர்நாடக கேரள எல்லையை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்பி சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 6வது நாளாக நடைமுறையில் இருக்கிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் எல்லை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் […]