கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் சுவாமி விவேகானந்தரின் பெயரில் 8,100 புதிய வகுப்பறைகளை கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டமானது குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று முதன் முதலாக கலகபுரி மாவட்டத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பிரியங்க் கார்கே எதிர்ப்பு தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு இல்லாமல் மற்றும் […]
Tag: காங்கிரஸ் கண்டனம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 தமிழர்களுக்கு 1998 ஆம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்திருந்தது. அதன் பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் நன்னடத்தை மற்றும் பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற தனக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 142 இன் படி கடந்த மே மாத பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கியது. அதனை […]
காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் எம். யுவராஜா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கடந்த 2012-ம் ஆண்டு நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் நிலங் களுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வழிகாட்டி மதிப்பை தற்போது 200 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு வழிகாட்டி […]
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாட திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் பாடத்திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராயின் வாக்கிங் வித் காம்ரேட்ஸ் புத்தகம் இடம்பெற்றிருந்தது. இதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் இந்தப் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் […]