காங்கோ நாட்டில் பலத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு உண்டாகி 141 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு உண்டானது. இதில் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனது. […]
Tag: காங்கோ
காங்கோவில் பெய்து வரும் கனமழையால் 120 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் வெள்ளம், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக முழு பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, என் 1 சாலை 3- 4 நாட்களுக்கு மூடப்படலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் மற்றும் மிகப்பெரிய நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. […]
காங்கோ நாடு ஒரு ஜனநாயக குடியரசாக உள்ளது. இந்த நாட்டில் கடந்த மார்ச் மாதம் இரண்டு சீன சுரங்க தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இரண்டு ராணுவ கர்னல்கள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும் நான்கு ராணுவ வீரர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. குறிப்பாக மரண தண்டனை பெற்ற ஆறு பேரில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் இராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலே குறிப்பிட்ட இரண்டு […]
காங்கோ நாட்டில் ஆற்று பாலம் ஒன்றின் திறப்பு விழா நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கோ நாட்டில் மழைக்காலங்களில் மக்கள் பாதுகாப்பான முறையில் ஆற்றை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக புதிய ஆற்றுப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை திறக்கும் விழா நடைபெற்ற போதே அந்த பாலம் இடிந்து விழுந்த அதிர்ச்சிகரமான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. Bridge collapses while being commissioned in […]
காங்கோ நாட்டின் ஐ.நா சபையினுடைய ஹெலிகாப்டர் திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் நிர்வகித்து வரும் ஐ.நா சபையினுடைய மனிதாபிமான சேவைகளுக்கான ஹெலிகாப்டர், வடக்கு கிவு மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த போது, கோமா நகரத்திற்கு பக்கத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், அந்த விமானத்தின் ஊழியர்கள் மூவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், திடீரென்று இந்த விபத்து ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று ஐ.நா உலக […]
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் ஐ.நாவின் அமைதி காப்பாளர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் பல பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டிருக்கிறது. காங்கோ நாட்டில் பல வருடங்களாக தீவிரவாதிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதலில் மக்கள் பலர் பலியாகியுள்ளனர். இதனை தடுத்து ஐ.நா அமைதி காப்பாளர்கள் குழு மக்களை காக்கவில்லை என்று ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது. மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், ஐ.நா அமைதி காப்பாளர்கள் மூவர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சர்வதேச […]
கங்கோ நாட்டில் ஐ.நா அமைதிப்படையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரண்டு இந்திய வீரர்கள் உட்பட மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டில் தீவிரவாத அமைப்புகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் குழு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் அரசு படையினரை குறி வைத்து அவர்கள் அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். நாட்டில், ஐ,நா அமைதிப்படைகள் மற்றும் உள்நாட்டு படைகள் இருக்கும் போது, தீவிரவாத தாக்குதல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, கொந்தளித்த […]
குரங்கம்மை நோய்த்தொற்று வன பகுதியில் இருக்கும் இறந்த குரங்கு, வவ்வால், எலிகளை எடுத்து வந்து மக்கள் உணவாக சாப்பிட்டதில் பரவியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகின்றது. இந்த நோய் தொற்றின் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 […]
காங்கோவில் தட்டம்மை நோய் தொற்றினால் 132 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்கா நாட்டில் காங்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. கடந்த 24ஆம் தேதி வரை 6,259 பேருக்கு தட்டம்மை நோய் தொற்று பரவியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் சுகாதார மந்திரி கில்பெர்ட் மொகொகி கூறியதாவது “நாட்டின் பொருளாதார தலைநகரான பாய்ண்ட்-நாய்ர் இந்த நோய் தொற்றுக்கான மையமாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 5,488 பேருக்கு தட்டம்மை […]
காங்கோ நாட்டில் மர்ம நபர்கள் சிலர் சீன தங்க சுரங்கத்திற்குள் புகுந்து 8 சீனர்களை கடத்திச் சென்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீன தங்க சுரங்கம் ஒன்று காங்கோ நாட்டின் தெற்கு கிவு பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் திடீரென மர்ம நபர்கள் சிலர் சீன தங்க சுரங்கத்தின் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் […]
மர்ம நோயினால் 165 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காங்கோ நாட்டில் குவிலு மாகாணத்தில் குங்கு என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. இதனால் அங்குள்ள 165 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிலும் இந்த மர்ம நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் மலேரியா நோய்க்கான அறிகுறியும் இரத்தசோகையும் காணப்பட்டதாக அந்நாட்டின் பிராந்திய சுகாதாரத்துறை தலைவர் ஜீன்-பியர் பாசாக் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட […]
ஆற்றில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் 61 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இருக்கும் ஆற்றில் 9 படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளன. அதிலும் அந்த படகுகளில் 200க்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். இந்த நிலையில் படகானது வடக்கு மங்கலா மாகாணத்தில் உள்ள பம்பா நகருக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் பொழுது தீடிரென கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து படகில் பயணம் செய்த 200 பேர் நீரில் மூழ்கியுள்ளதாக […]
காங்கோவில், தன் பாதுகாவலருடன் செல்ஃபி எடுத்து பிரபலமான நடாகாஷி என்ற கொரில்லா குரங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதுகாவலர் மடியில் படுத்தபடியே உயிரிழந்துள்ளது. காங்கோவில் கடந்த 2019 ஆம் வருடத்தில் வன பாதுகாவலரான மேத்யூ ஷவாமுடன் சேர்ந்து நடாகாஷி மற்றும் மடாபிஷி என்ற கொரில்லா குரங்குகள் இரண்டு செல்ஃபி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது. அதன்பின், அந்த புகைப்படம் வைரலாகி, அந்த இரண்டு குரங்குகளும் பிரபலமானது. It is with heartfelt sadness that Virunga announces the death […]
காங்கோவில் உள்ள மவுண்ட் நயிராகாங்கோ என்ற பெரிய எரிமலை நேற்றிரவு வெடித்து சிதறியதில் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காங்கோ நாட்டிலுள்ள கோமா என்ற ஏரிக்கரை நகரில் சுமார் 20,00,000 மக்கள் வசிக்கிறார்கள். மவுண்ட் நயிராகாங்கோ என்ற பெரிய எரிமலை இந்நகரத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சீற்றத்துடன் இருந்த, இந்த எரிமலை திடீரென்று நேற்றிரவில் வெடித்துச் சிதறிவிட்டது. அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறி, அந்த பகுதி முழுவதும் சூழ்ந்து, அதிகமான வீடுகள் சாம்பலாகிவிட்டன. […]
காங்கோ நாட்டின் எதிர்க்கட்சி வேட்பாளர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவான காங்கோ நாட்டைச் சேர்ந்தவர் கை பிரைஸ் பர்பைட் கோலஸ் (61 வயது). இவர் 1979 மற்றும் 2016 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டில் கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுள்ளர். இதனிடையே இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் […]
காங்கோவில் தங்கம் நிறைந்த மலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கத்தை தோண்டியெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. காங்கோ நாட்டில் உள்ள kivu என்ற மாகாணத்தில் Luhihi என்ற கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள மலையில் அதிகமான தங்கம் மணல் முழுவதும் நிறைந்து காணப்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கிராமத்தில் வசிக்கும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கடப்பாறை, மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் அப்பகுதியில் திரண்டனர். A video from the Republic of the Congo documents the […]
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்ததால் வேலை செய்து கொண்டிருந்த 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்கள் நிறைந்துள்ளன. அதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அப்பகுதியில் சுரங்கம் அமைத்து, அதன் வழியாகச் சென்று தங்கத்தை வெட்டி எடுக்கின்றன. ஆனால் அந்த சுரங்கங்களில் முறையான பாதுகாப்பு கருவிகள் எதுவும் பயன்படுத்தப்படாததாலும் மற்றும் அரசு உரிமம் இல்லாமல் சில ரகங்கள் […]
காங்கோ நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டதில் தொழிலாளர்கள் 53 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோவில் காமிடுகா என்ற இடத்தில் டெட்ராய்டு சுரங்கம் அமைந்துள்ளது. கனமழை காரணமாக சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து உள்வாங்கியது. அப்போது ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புக்குழுவினர் பலரை மீட்டனர், எனினும் மண்சரிவில் சிக்கி சுரங்கத் தொழிலாளர்கள் 53 பேர் பலியாகிவிட்டனர். காங்கோ நாட்டில் உரிமம் இல்லாமல் ஏராளமான சுரங்கம் செயல்படுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். […]