Categories
உலக செய்திகள்

காசா மீது…. இஸ்ரேல் ராணுவம்…. வான் வழித்தாக்குதல்….!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்  நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள தகவலின்படி, காசா முனையின் மத்திய பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித்தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள ராணுவ படைத்தளங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |