விநாயகர் சதுர்த்தியின் போது அனுமதி இல்லாத இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது என டிஎஸ்பி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. இந்த கொரோனா பரவல் தற்போது குறைந்ததால் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வர இருப்பதால் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல்வேறு […]
Tag: காஞ்சிபுரம் மாவட்டம்
பழிக்கு பழி வாங்குவதற்காக இரட்டை கொலை அரங்கேறியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே மணிமங்கலம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான ரவுடி ஆவார். இவர் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அன்சாரி, சுதாகர், சதீஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் சிறையில் இருந்து […]
மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் சிறிய அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அமைக்க முன் வருபவர்களுக்கு அரசு சார்பில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இந்த பூங்கா அமைப்பதற்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதன் பிறகு பூங்காவில் அரசு கூறும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். அதன்படி பூங்காவில் 2 தொழிற்கூடங்கள், தொலைத்தொடர்பு […]
சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பகுதியில் கருணாகரன்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொர்ண லட்சுமி (12) என்ற மகள் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி வழக்கம்போல் பள்ளியில் இருந்து டியூஷனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கழிவறைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினம்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வபோது சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகின்றது. 18 வயதிலிருந்து 60-வது வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில், முதன்மை மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. இருந்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் […]
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை வேளிங்கப்பட்டறை தெருவில் முருகன்(59) என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்காக இருசக்கர வாகனத்தில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் சின்னயன்சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென இருசக்கர வாகனத்தின் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுப நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விதித்தித்து வருகிறார்கள். அந்தவகையில் வேலூர் மாவட்டத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபங்களில் 100 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்களில் […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன், ஷாலினி தம்பதி. இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா பக்கத்துவீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் சுடச்சுடப் பலகாரம் சுட்டு விட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் குழந்தை தவறி விழுந்துள்ளது. இதில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் சேர்த்து மொத்தம் 20,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பக்கத்து ஊர்களுக்கு சென்று திரும்பி வருவதற்கு போதிய அளவு போக்குவரத்து வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுநாள் வரையிலும் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூடுவாஞ்சேரி வழியாக நீலமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் தான் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் […]
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பல லட்சம் மக்கள்,ரேஷன் அட்டை மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. ஆனால் ரேஷன் அரிசி, தற்போது தரமற்ற முறையில் விநியோகிப்பதாக பல மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 800 ரேஷன் கடைகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 645 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் பகுதியில் […]
5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நடவாவி கிணற்றை மீண்டும் புனரமைத்து பாதுகாக்க வேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து கலவை என்ற ஊர் செல்லும் வழியில் ஐயங்கார் குளம் என்னும் ஒரு திருத்தலம் உள்ளது. மேலும் அங்குள்ள சஞ்சீவிராய் சுவாமி கோயிலை ஒட்டிய பெரிய குளத்தின் அருகே நடவாவி என்ற சிறப்பு மிகுந்த கிணறு ஒன்று உள்ளது. மேலும் இந்த கிணற்றுக்குள் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த படிக்கட்டுகள் வழியே […]
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று, காலை வழக்கம்போல் பல் துலக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். உடேன அவர் பல் தேய்த்துக் கொண்டிருந்த பிரஸ் ஆனது, ரேவதியின் ஒருபக்க கண்ணத்தை கிழித்து மறுபக்கம் சென்றுள்ளது. இதனால் அவரது வாய் பகுதியில், பல் தேய்க்கும் பிரஸ் சிக்கி பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே இதனை கண்ட அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் ரேவதியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியரை வட்ட வழங்கல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக காவல்நிலையம் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக ஒரு ரேஷன் கடையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாக இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர் செல்வத்திடம் கோரிக்கை விடுத்தும் ஏவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் மர்மநபர் […]
குடும்பத் தகராறில் மனைவி கணவனை சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டி தெருவில் ஆட்டோ டிரைவரான நவ்ஷத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நவ்ஷத் மது மற்றும் கஞ்சா பழக்கங்களுக்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கடன் தொல்லையும் இந்த தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சோபனா என்ற மனைவியும், அக்ஷயா என்ற மகளும், கோவேஷ் சென்ற மகனும் இருக்கின்றனர். தற்போது கொரோனா விடுமுறை கால கட்டத்தில் அன்பழகன் தனது வீட்டிலேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி […]
அம்மா சிமெண்ட் வழங்கப்படவில்லை என ஊராட்சி மன்ற வளாகத்தின் முன்பு திடீரென கூலித்தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்ரம்பாக்கம் ஒரியன் நகர் பகுதியில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் குறைந்த செலவில் சொந்தமாக வீடு கட்ட முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பன்னீர்செல்வம் அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த 2020 – ஆம் […]
காஞ்சிபுரத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன் வாங்க கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் பொன்னேரி கரையிலுள்ள மீன் சந்தையில் பொதுமக்கள் மீனை வாங்குவதற்காக கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் ஒன்றாக கூடியுள்ளனர். இதனால் […]
மாமல்லபுரத்தில் கொரோனாவின் பரவலை முன்னிட்டு கடற்கரை பகுதிகள் தடுப்புகள் மூலம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதிலும் குறிப்பாக செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தொற்று அதிகமாக பரவுகிறது. இதனால் அரசாங்கம் சில குறிப்பிட்ட மாவட்டங்களிலிருக்கும் சுற்றுலா தலம், வழிபாட்டுத்தலம் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இந்த நிலையில் பொதுமக்கள் கோடை விடுமுறை நாட்களை கழிப்பதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மாமல்லபுர கடற்கரைக்கு சென்றுள்ளனர். அதனை மாமல்லபுரம் சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் […]
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வக்கீல் கொலை வழக்கிற்காக காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த அழகரசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவரும், அவரது நண்பரும் கடந்த 12 ஆம் நாளன்று தேசிய நெடுஞ்சாலையில் தனது கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் 3 மர்ம நபர்கள் வந்து இருவரையும் கத்தியால் சரமாரியாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே அழகரசன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது நண்பரை அக்கம்பக்கத்தினர் […]
காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் அதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கொண்டுவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் கொரோனாவிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள முகக் கவசம் அணிதல் மற்றும் வெளியே சென்றால் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்றவும் அரசாங்கம் வலியுறுத்தியது. இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் துறையினுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் கோவிலான […]
காஞ்சிபுரத்தில் மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் விசாரத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணிப்பேட்டையிலிருக்கும் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பாபு அவரது நண்பர்களுடன் சேர்ந்து முயல் வேட்டைக்காக சென்றார். இதற்கிடையே அப்பகுதியில் வேர்க்கடலையை எலிகள் மற்றும் பன்றிகள் சேதப்படுத்தி வந்ததால் மச்சேந்திரன் என்பவர் அங்கு மின் வேலியை அமைத்தார். இந்த நிலையில் முயல் வேட்டைக்கு சென்ற பாபு மின் […]
காஞ்சியில் மண்ணில் புதைந்த நிலையில் கிடைத்த கல் செக்கை தொல்லியல் துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 15 ஆம் நூற்றாண்டுடைய அரிய வகையான கல்செக்கு கிடைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து உத்திரமேரூரில் வரலாற்று ஆய்வின் மையத் தலைவரான கொற்றவை ஆதான் பேசியுள்ளதாவது, உத்திரமேரூரிலிருக்கும் முட்புதருக்குள் புதைந்த நிலையில் 3 வரி கல்வெட்டு எழுத்துக்களுடைய கல் செக்கை கண்டறியப்பட்டது. இதில் பொறிக்கப்பட்டிருக்கும் அந்த 3 வரி குரோதன ஆண்டு காலத்தில் புக்கண்ணராயர் ஆட்சியில் […]
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவிலின் ராஜகோபுர கதவினுள் சிக்கியதால் 3 நபர்கள் படுகாயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இதில் அமைந்திருக்கும் மூலவரை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலினுடைய கோபுரத்தின் கதவை பக்தர்களின் தரிசனத்திற்காக கோவிலினுள் காவலராக பணிபுரியும் நபரும், பக்தர்கள் 2 பேரும் சேர்ந்து அதனைத் திறக்க முற்பட்டனர். இதனையடுத்து ஒரு பக்கத்தின் கதவைத் திறந்ததும், மறுபக்கத்தினுடைய கதவை திறக்க போகும்போது […]
காஞ்சியில் தண்ணீர் என நினைத்து மதுவுடன் திராவகத்தை கலந்து பருகிய முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தனியார் கல்லூரியின் காவலாளியான காளி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்த கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திராவகத்தை தண்ணீர் என நினைத்து மதுவுடன் கலந்து குடித்துள்ளார். இதனால் துடிதுடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி […]
காஞ்சிபுரத்தில் ரயில்வே ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிபுரத்தில் ரயில்வே ஊழியரான துரையரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டினுடைய பின்புற கதவை உடைத்து பீரோவிலிருந்த 60 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் எழுந்து பார்க்கும்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து […]
காஞ்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருக்கும் அறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சிறிது நிமிடம் தடைபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட எந்திரத்தை வாக்கினை எண்ணும் அறையினுள் வைத்து பூட்டி அந்த அறைக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலிருந்தும் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை பொன்னேரி கரையிலிருக்கும் என்ஜினியர் கல்லூரியில் வைக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் […]
காஞ்சிபுரத்தில் கால்வாயிலிருந்து அழுகிய ஆண் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிலிருக்கும் கம்ப கால்வாயிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதியிலிருக்கும் பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான காவல் துறையினர்கள் கால்வாய்க்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து அவர்கள் அக்கால்வாயில் பார்க்கும்போது 45 வயது நிரம்பிய அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
காஞ்சிபுரத்தில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை தண்ணீரென்று நினைத்து குடித்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் திருமுல்லைவாயலில் 60 வயதுடைய மேகனா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தினந்தோறும் மேகனா மிகவும் சிரமப்பட்டுதான் வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று நீரழிவு நோய்க்கான மாத்திரையை வாயினுள் போட்டுவிட்டு தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக பாட்டிலில் இருந்த கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்துள்ளார். இதனையடுத்து அவர் […]
காஞ்சிபுரத்தில் லோக் அதாலத் நடைபெற்றதன் மூலம் 252 வழக்கிற்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் நல நீதிமன்றம் அமைந்துள்ளது. இதில் மாவட்ட நீதிபதியான ஜே.சந்திரன் தலைமையில் 5 அமர்வுகளாக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் கூடியது. இந்த விழாவில் சுமார் 817 வழக்குகள் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதில் ஒரே நாளன்று 252 வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 13,67,17,800 ரூபாயை தீர்வு தொகையாக வழங்கியுள்ளது. இதற்கிடையே தலைமை தாங்கிய நீதிபதியான ஜே.சந்திரன் விபத்தில் இறந்த […]
காஞ்சியில் புதிய ரயில்வே நிலையம் முன்பு 100 அடி அளவிலான கம்பத்தில் தேசியக் கொடியை பறக்க விட்ட சம்பவம் அனைவருக்கும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு வழியாக வையாவூர் போகும் ரோட்டில் பழைய ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருக்கும் பொன்னேரிக்கரையில் புதிய ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டது. இந்த ரயில்வே நிலையத்திற்கு முன்பாக தென்தமிழக ரயில்வேயின் உயர் அதிகாரிகள், இந்த ரயில்வே நிலையத்திற்கு முன்பாக 100 அடி அளவிலான கம்பத்தில் தேசிய கொடியை பறக்க […]
காஞ்சிபுரம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 1,15,15,840 ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்தனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தலையொட்டி […]
காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அதியமான் நகரில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சரண்யாவிற்கும், அன்பழகனிற்க்கும் 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சரண்யா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனையடுத்து தம்பதியர் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சரண்யா தூக்கிப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து […]
காஞ்சிபுரத்தில் இருக்கும் கோவில் உண்டியலில் போடப்பட்டிருக்கும் காணிக்கையை அறநிலை துறையினர் தலைமையில் எண்ணபட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான சிவபெருமானை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். அப்போது பொதுமக்கள் மூலவரை தரிசனம் செய்துவிட்டு அக்கோவிலில் இருக்கும் 4 உண்டியல்களில் ஏதேனும் ஒன்றில் தங்களால் முடிந்த காணிக்கையை போடுவார்கள். இந்நிலையில் அக்கோவிலில் இருக்கும் 4 உண்டியல்களையும் அறநிலைத்துறையின் உதவி ஆணையரான ஜெயா தலைமையிலான […]
காஞ்சிபுரத்திலுள்ள வாக்குச்சாவடியில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சானிடைசர் வழங்க தி.மு.க கட்சியை சேர்ந்த பெண்களை பணியில் ஈடுபடுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகமாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனால் தேர்தல் ஆணையம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்தது. அதாவது வாக்களிக்க வரும் மக்கள் முககவசம் கட்டாயமாக அணிந்திருக்க […]
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியின் மீது பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பூங்கோதை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு படப்பை அருகே 30,00,000 ரூபாய் மதிப்பிலான நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தினை மதுரை மங்கலத்திலிருக்கும் பெரிய ரவுடியான குணா என்பவர் தனது நண்பரின் பெயருக்கு எழுதி வைக்கும் படி மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவர் அவ்வாறு செய்யாவிடில் கணவரை கொலை செய்து விடுவதாகவும் கூறினார். இதனால் அச்சமடைந்த அவர் காஞ்சிபுரம் மாவட்ட […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு முதியோர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டில் 1593 வாக்குகள் பெறப்பட்டது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலிருக்கும் மூத்த குடிமக்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அத்தியாவசியமான பணிகளில் ஈடுபடுவோருக்கும் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் விதமா தபால் ஓட்டினை தேர்தல் குழு வழங்கியது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டது. […]
காஞ்சிபுரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியூரிலிருக்கும் தனது மகளை பார்க்க சென்றுள்ளார். இவர் வெளியூருக்கு சென்றதை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 53,000 ரூபாயையும், 4 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். இதனையடுத்து தனது இல்லத்திற்கு திரும்பி வந்த ராமானுஜம், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]
காஞ்சிபுரத்தில் தேர்தல் பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அரசாங்கம் முன்னாள் படை வீரர்களை தேர்தல் பணியில் சிறப்பு காவலராக பணியாற்ற ஏற்பாடு செய்துள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தலில் பணியாற்ற விருப்பமுள்ள மற்றும் உடல் பலமுள்ள 70 வயதுக்குட்பட்ட முன்னாள் படை வீரர்கள் https://bit.ly/Details of Retired Personnel reported for […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 4,20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம்6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் ஆங்காங்கே பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியில் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்வாயில் கிடந்த கோவில் கல் தூண்களை அறநிலையத்துறையினர் மீட்டுள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் பஞ்சுபேட்டையில் இருக்கும் மின்வாரியத்திற்கு அருகே ஒரு பெரிய கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் சுமார் 150க்கும் மேற்பட்ட கோவில் கல் தூண்கள் கிடப்பதை கவனித்த தனிநபர் எவரோ மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் மாவட்ட கலெக்டர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கல் தூண்களை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் தூங்களை அப்புறப்படுத்துமாறு அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அறநிலையத்துறையின் சில முக்கிய அதிகாரிகள் […]
காஞ்சிபுரத்தில் கட்டிட தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் தாயார் அம்மன் என்ற ஊரில் வடிவேல் என்பவர் வசித்து வந்தார். இவர் முன்னதாக கொலை வழக்கு ஒன்றில் ஈடுபட்டு தற்போது கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் அப்பகுதியிலிருக்கும் முத்து மாரியம்மன் கோவிலில் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போது கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் வடிவேலை கத்தியால் சரமாரியாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த செங்கலாளும் அவரை அடித்துள்ளார்கள். […]
காஞ்சிபுரம் அருகே லஞ்சம் வாங்க முற்பட்ட சப் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காவல் நிலையத்தில் சிவராஜ் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் ஜெகதீசன் என்பவர் பில்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பில்டிங் காண்ட்ராக்டரான ஜெகதீசன் மீது இருக்கும் சில வழக்குகளிலிருந்து அவரை விடுவிக்க ரூபாய் 20,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெகதீசன் அப்பகுதியிலிருக்கும் லஞ்ச […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஏகாம்பரநாதர் கோவிலில் தேரோட்ட விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பரநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.இதில் கடந்த 18ஆம் தேதி பங்குனி திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. அதிலிருந்து ஏகாம்பரநாதர் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்து வீதி உலா சென்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்துள்ளார். இதற்கிடையே ஏகாம்பரநாதர் வெள்ளித் தேரில் எழுந்தருளி 63 நாயன்மார்களுடன் பிரம்மாண்டமாக ஊர்வலம் சென்றுள்ளார். பின்னர் பங்குனித் திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றதில் ஏகாம்பரநாதரும், குழளி அம்மனும் பிரம்மாண்டமான […]
தாம்பரத்தில் லாரியிலிருந்து வாழை மர இலை கட்டுகள் விழுந்ததால் தனியார் பள்ளி ஊழியர் இறந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் பழனி என்பவர் வசித்து வந்தார். இவர் திருவேற்காட்டிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவருக்கு முன்னால் வாழைமர இலைகளை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக சென்று கவிழ்ந்தது. இதற்கிடையே லாரியிலிருந்து இலை கட்டுகள் சரிந்து பழனியின் மோட்டார் சைக்கிளின் […]
காஞ்சிபுரத்தில் பட்டுத்துணியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள் பொறித்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர்களை நியமித்தது. இந்நிலையில் 100 சதவீத வாக்கு பதிவிற்காக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூபாய் 2,93,000 பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்துப் பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த […]
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட செம்மர கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள திருத்தணியில் தமிழக சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இச்சோதனைச்சாவடி வழியாக ஆந்திராவிலிருந்து செம்மர கட்டைகளை தமிழகத்திற்கு லாரி மூலம் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று தமிழக எல்லைக்குள் விரைவாக நுழைந்து சோதனை சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் காவல்துறையினர்கள் லாரியை பிடிக்க மோட்டார் […]
பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் கோவில்களில் நகரமாகவும் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த ஊர் என்று சிறப்பையும் இந்த ஊர் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் கே.எம்.பி.பி., காங்கிரஸ் மற்றும் பாமாக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன. திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன.தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் எழிலரசன். காஞ்சிபுரம் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3,08,406 ஆகும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி […]
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 1 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வென்றுள்ளது. அதிமுக மற்றும் திமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் சுந்தர். உத்திரமேரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,59,633 ஆகும். தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். முறையாக தூர்வாரப்படாததால் ஒரு போகத்திற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள […]
காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூபாய் 10,000 வசூலிக்கப்பட்டது. கொரோனாவின் கோரத்தாண்டவம் மெதுமெதுவாக குறையத் தொடங்கிய சூழலில் தற்போது மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தமிழக அரசு கொரோனா விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் குறிப்பாக முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டதிலுள்ள குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வட்டார அலுவலர் வேல்முருகன் தலைமையிலான […]