கடற்கரையில் 80 வயது முதியவரின் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி குப்பம் கிராமப் பகுதியின் அருகில் இருக்கும் கடற்கரையில் 80 வயதுடைய முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் நெல்லிக்குப்பம் கிராம நிர்வாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கிராம நிர்வாக அதிகாரி மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
Tag: காஞ்சிபுரம்
அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு சான்றிதழ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களை எச்சரித்து […]
பழைய பொருட்கள் வைத்திருந்த குடோன் திடிரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வடகால் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய பொருட்கள் சேமிப்பு குடோன் இருக்கின்றது. இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குடோனில் ஒரு பகுதியில் எதிர்பாராவிதமாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதன் பின் சிறிது நேரத்திலேயே தீ மளமளவென எரிந்து குடோன் முழுவதும் பரவி விட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் […]
அத்தியாவசிய தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களின் 222 வாகனங்ககளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு சண்முகப்பிரியா தலைமையில் காவல்துறையினர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து காவல்துறையினர்கள் சாலைகளில் தடுப்பு அமைத்து அந்த வழியாக வருகின்ற வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். இதில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை […]
கொரோனா நோயாளிகளுக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் மதிய நேரம் உணவு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி இந்து சமய அறநிலைதுறை சார்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற கொரோனா நோயாளிகளுக்கும், அவர்களுடன் இருப்பவர்களுக்கும் மதிய நேர உணவை நாள்தோறும் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதனை அடுத்து வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் சார்பில் 600 உணவு பொட்டலங்களும், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் சார்பில் 600 […]
கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை தொகை 2000 ரூபாயை நியாய விலை கடைகளில் வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணியானது நியாய விலை கடையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்துள்ளார். இதனை அடுத்து தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிவாரண நிதி தொகையை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கியுள்ளார். இந்த […]
சாலையில் முகவசம் அணிந்து சென்ற சிறுவர்களுக்கு காவல்துறையினர் மாலை அணிவித்து பாராட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டீ கடைகள் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை அடுத்து அத்தியாவசிய தேவை இன்றி […]
ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டமின்றி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இது குறித்து சென்னையில் நடைபெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 10 மணிக்கு மேல் பிரதான சாலைகளான காமராஜர் சாலை, காந்திரோடு, பேருந்து நிலைய பகுதிகள், மூங்கில் மண்டபம் என நகரின் முக்கியமான பகுதிகளுக்கு யாரும் செல்ல இயலாதவாறு காவல்துறையினர் […]
அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறநிலைத்துறை அதிகாரிகளின் உத்தரவின் படி உணவு வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குமாறு அறநிலைத்துறை தலைமை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இம்மாவட்டத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வைத்து உணவு தயாரிக்கபட்டுஅந்த உணவானது அறநிலைதுறை பணியாளர்கள் மூலமாக அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை […]
முதியவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதால் மனஉளைச்சல் ஏற்பட்டு மடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் 54 வயதுடைய முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 11-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மனஉளைச்சலில் இருந்த முதியவர் அந்த மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
கொரோனா நிதி நிவாரணத்திற்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் 1000 ரூபாய் இணையதளம் மூலம் செலுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வண்ணம் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புகின்றனர். இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரங்கசாமி குளம் பகுதியில் கார்த்திக் என்பவர் […]
கொரோனா தொற்றின் பரவல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்ற காரணத்தால் அதனை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான முறையில் உள்ளாட்சித் துறை வருவாய் மாவட்ட அலுவலர்கள், மருத்துவர்கள், […]
பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் 2000 ரூபாய் நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடையில் 2000 ரூபாய் நிவாரணம் முதல் தவணையாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறும் போது, தொற்று பரவல் காரணமாக குடும்ப அட்டைதாரர்கள் நியாய […]
செவிலியர் தினத்தை முன்னிட்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவ படத்திற்கு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனரின் அலுவலகம் முன்பு செவிலியர் சேவையின் முன்னோடி மங்கை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவ படத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் குருநாதன் தம்பையா தலைமை தாங்கினார். இந்நிலையில் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளரான கல்பனா என்பவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் […]
நிவாரணம் தொகையை பெறுவதற்காக புதிதாக குடும்ப அட்டை வாங்க பொதுமக்கள் அலை மோதியதால் குன்றத்தூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் புதிய ஐந்து திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2000 ரூபாய் முதற்கட்டமாக வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அந்தத் திட்டத்தின் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து குன்றத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக குடும்ப அட்டை பதிவு […]
வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளை கேட் பாலாஜி நகர் பகுதியில் லதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவனை இழந்து தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்துள்ளார். இந்நிலையில் வட்டிக்கு விடும் தொழில் செய்த லதா தான் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த லதா தனது […]
அரசின் வேண்டுகோள் படி ஒரு நாளைக்கு 150 டன் ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளிலும் தடையின்றி ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகின்றதா என கண்காணிக்கும் விதத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த சமயம் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட சூப்பிரண்டு சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி போன்றோர் உடனிருந்தனர். இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு […]
மாடியிலிருந்து தவறி விழுந்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியில் டென்னிஸ் பயிற்சியாளரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக ராஜா தவறி விழுந்து விட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ராஜாவுக்கு சிகிச்சை […]
ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் 21 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மெக்ளின் புரம் பகுதியில் ஜவுளிக்கடை உரிமையாளரான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டை பூட்டி விட்டு தன் சொந்த ஊரான வேலூர் மாவட்டத்திற்கு மோகன் குமார் செல்லும் போது தனது மாமனாரிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து ராமச்சந்திரன் தனது மருமகன் மோகன் குமாரின் […]
ஊரடங்கின் காரணத்தால் மது கடையில் 12 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் அதை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனை அடுத்து முழு ஊரடங்கின் போது மளிகை கடைகள் மற்றும் காய்கறிக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 113 மதுக்கடைகளில் 12 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யபட்டுள்ளது. […]
கொரோனா கட்டுப்பாட்டை பின்பற்றாமல் மீன் சந்தையில் பொதுமக்கள் கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் அதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தாமல் எந்த விதமான பயமும் இன்றி சாலையில் சுற்றி வருகிறார்கள். இதனை அடுத்து தமிழக அரசு இன்றிலிருந்து வருகின்ற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி தனது மோட்டார் சைக்கிளில் பிச்சைவாடி பகுதிக்கு சென்றுவிட்டு இந்திராநகர் திரும்பிக் கொண்டிருக்கும் போது பின்புறமாக வேகமாக வந்த லாரி இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ரவியை சாலையோரம் சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
அமைச்சர் அன்பரசன் அண்ணா சிலைக்கு மாலை மரியாதை செய்து பின் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தை மற்றும் தாய் ஆரோக்கிய கட்டிடத்தையும், திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு மையத்தையும் அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் விசாரித்துள்ளார். இதற்கு முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் […]
விபத்தில் பலியானவரின் பரிசோதனை சான்றுதழை உரியவரிடம் ஒப்படைக்காத காரணத்தால் காவல்துறையினர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் வசந்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியே வந்த அரசு பேருந்து அவரின் மீது மோதிவிட்டது. இதில் படுகாயமடைந்த வசந்தாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வசந்தா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
சாலையை கடக்கும் போது எதிர்பாரா விதமாக லாரி மோதியதால் சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஜெயந்தி என்ற ஒரு மகள் உள்ளார். இதனை அடுத்து இவரின் சித்தப்பா கண்ணையன் அரசு பள்ளிக்கூடத்திற்கு எதிரே இளநீர் கடை நடத்தி வருகிறார். அந்தக் கடைக்கு சென்று இளநீர் வியாபாரம் செய்வதை சிறுமி ஜெயந்தி வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி சித்தப்பாவின் இளநீர் […]
அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டுயுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மக்கள் அதிகமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் கூடுதலாக முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருவதாகவும் […]
காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்தியுள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில் அந்த நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் பரவலால் அம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், பெருநகராட்சி பகுதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு […]
பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் முத்து என்ற முதியவர் வசித்து வந்தார். இந்நிலையில் முத்துவின் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு எதிர்பாராவிதமாக அவரை கடித்துவிட்டது. இதனால் ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட முத்துவிற்கு மருத்துவர்கள் […]
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் போது அரசு அதிகாரி திடீர் என மயங்கிவிழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கரை பகுதியில் இருக்கின்ற அண்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் அந்த மாவட்டத்திற்கான நான்கு தொகுதிகளின் வாக்குகளின் எண்ணிக்கையானது நடைபெற்றயுள்ளது. இந்த வாக்கு எண்ணும் பணியில் தேர்தல் பணியாளர்களும், நகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டார்கள். இந்நிலையில் வாக்கு எண்ணும் பணியினை செய்துகொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சி ஊழியர் குமரவேல் என்பவர் தலைசுற்றி திடீரென மயங்கி விழுந்து […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்ளகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளைகேட், கோனேரிகுப்பம், வெளியூர் சுடுகாடு, ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக காஞ்சிபுர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதிகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மறைமுகமாக மது பாட்டில்களை வைத்து அதனை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. […]
இரவு நேரம் மணல் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை, திருப்பருத்திகுன்றம், செவிலிமேடு பாலாறு, வேகமதி ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாகமாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்றவர்களை பார்த்துள்ளனர். இதனை அடுத்து அந்த மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்த காவல்துறையினர் வண்டியில் சோதனை செய்யும் போது மணல் கடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் […]
பூச்சி கொல்லி மருந்துகளில் கலப்படம் செய்தால் உரிமம் பறிக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிமாநிலத்தில் பூச்சிகொல்லி மருந்துகள் உடன் போலியான உயிரி பூச்சி மருந்துகளை சேர்த்து கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதனால் தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து பூச்சி மருந்து விற்பனை கடைகளை ஆய்வு செய்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளர்களை கொண்ட ஒரு குழுவனது அமைக்கப்பட்டுள்ளது. […]
5 பழைய வாகனங்களுக்கு பதிலாக புதியதாக 5 வாகனங்களை அரசு காவல்துறையினருக்கு வழங்கியுள்ளது. தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த ஐந்து பழைய வாகனங்களுக்கு பதிலாக புதியதாக 5 வாகனங்களை வழங்கியுள்ளது. இந்த 5 புதிய வாகனங்களும் காஞ்சிபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சண்முகப்பிரியா கொடி அசைக்க வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இரண்டு […]
கொரோனா தடைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து சீல் வைத்தனர். கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் 3000 சதுர அடி கொண்ட கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை மற்றும் காந்தி சாலை போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஜவுளி கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. […]
கொரோனா தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றியவாறு பூ வியாபாரம் செய்ய மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரானா நோய் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இதனை அடுத்து காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த பூக்கடை சத்திரம் வணிக வளாக பகுதியில் மக்கள் அதிகம் கூடுகின்றனர். எனவே அப்பகுதியில் பூ வியாபரம் நடத்த தடைவிதித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அதிரடியாக உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பூ […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் விதிகளை மீறிய 147 வாகனங்களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலககெங்கிலும் கொரானா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் இரட்டை மண்டபம், பேருந்து நிலையம், காஞ்சிபுரம் காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகனங்களும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. […]
கொரானா கட்டுப்பாடு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உலகெங்கிலும் கொரானா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பேரூராச்சி பகுதிகளில் கொரானா பாதிப்பானது அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே மக்கள் கொரானா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என அதிகாரிகள் தீவிரமாக […]
ஓடும்போதே திடீரென கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் ப்ரீத்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ப்ரீத்தி தனது தோழிகள் மூன்று பேருடன் இணைந்து அவரது சொந்தக் காரில் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென காரில் புகை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் காரில் பயணித்தவர்கள் அச்சத்தில் உடனடியாக காரை விட்டு இறங்கிவிட்டனர். இந்நிலையில் […]
சுப முகூர்த்த நாளை ஒட்டி பட்டுப்புடவை எடுக்க காஞ்சிபுரத்தில் கூட்டம் களை கட்டியதால் சமூக இடைவெளி காற்றில் விடப்பட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து […]
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் வெப்பத்தை தவிர்க்க அமைக்கப்பட்டிருந்த ஃபால்ஸ் சீலிங் கீழே விழுந்து சேதம் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் தலைமை மருத்துவமனை அருகே நகராட்சி சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகம் அமைந்துள்ளது. அந்த உணவகம் அதிகாலை ஆறு மணி முதல் மாலை மூன்று மணிவரை செயல்படும். அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ளதால் நோயாளிகள், நோயாளிகளுடன் வருவோர் மற்றும் அப்பகுதி ஏழை மக்கள் அந்த உணவகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த […]
காஞ்சிபுரத்தில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் அரசியல் களத்திலிருந்து ஒதுக்குவதாக அறிக்கை விடுத்த சின்னம்மா அனைத்து கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காஞ்சி காமாட்சி அம்மனை தரிசிக்க அவர் நேரில் வந்தார். அப்போது சின்னமாவிற்கு அ.ம.மு.க வேட்பாளர்கள் அனைவரும் பூங்கொத்து […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தற்போது பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து வருகிறது. ஏற்கனவே […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூடிய இடத்தில் பையில் சுற்றி […]
காஞ்சிபுரத்தில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 3 டன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் விதி முறைகளும் நடத்தைகளும் அமலில் உள்ளது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது அவ்வழியாக காஞ்சிபுரத்திலிருந்து […]
காஞ்சிபுரம் மாவட்டம், தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல்வேறு துறைகள் ஈடுபட்டுவருகின்றன. சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவு பெற வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளுடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்து , தனது வாக்கினையும் பதிவு செய்தார் […]
மின்கம்பி அறுந்து விழுந்து கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் எச்சூர் கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வந்தார். இவர் தினமும் கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜேக்கப் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது வீட்டின் மேலே செல்லும் மின்சார கம்பி உயர் மின் அழுத்தம் காரணமாக அறுந்துள்ளது. இதனை கவனிக்காமல் இருந்த ஜேக்கப்பின் மீது விழுந்ததால் […]
காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தினை திருப்பி ஒப்படைக்க சிறப்புக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2021 காண சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பணப்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தேர்தல் குழு அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினரை நியமித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணத்தினை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்த […]
தாய் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பிளஸ் 1 மாணவி தூக்கில் தொங்கிய சம்பவம் மாங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே பட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா(வயது 37). இவர் பூந்தமல்லியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கோவர்த்தினி பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று சூர்யா வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடித்து இரவு வீட்டிற்கு திரும்பிய அவர் […]
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் உணவு தயாரிப்பு நிலையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் பாக்யராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இறந்த செய்தி கேட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த […]