Categories
உலக செய்திகள்

சந்தேகத்தால் நடந்த விபரீதம்…. கொடூர கொலை…. 46 பேருக்கு மரண தண்டனை…!!!

அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீயை உண்டாக்கியதாக ஒரு நபரை மக்கள் அடித்து கொன்றதால் 49 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அல்ஜீரியா நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து தீவிரமாக பரவியது. இதில் 90 நபர்கள் உயிரிழந்தனர். அப்போது, 38 வயதுடைய ஜமீல் பின் இஸ்மாயில் என்ற இளைஞர் தான் காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கிராம மக்களுக்கு சந்தேகம் உண்டானது. இதனால் இஸ்மாயில் காவல்துறையினரிடம் உதவி கேட்டிருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

திடீரென பரவிய காட்டுத்தீ…. 37 பேர் உடல் கருகி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

காட்டுதீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான‌ அல்ஜீரியாவில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். இதேபோன்று தற்போதும் வடபகுதியில் உள்ள 8 மாகாணங்களில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உள்துறை மந்திரி கமெல் பெல்ஜாத் கூறியுள்ளார். இந்நிலையில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். அதோடு ஹெலிகாப்டர் மூலமாகவும் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் பற்றி எரிந்த காட்டு தீ…. 90 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பல்….!!!!!!!!

ஐரோப்பிய நாடுகளில் நடப்பாண்டில் வெப்ப அலை தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு சராசரி வெப்பநிலை அதிகரித்து மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். அதே சமயம் பல இடங்களில் காட்டுத்தீ  பற்றி எரியும் நிகழ்வுகள் ஏற்பட்டு இருக்கின்றது. அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள டெலோடோ பகுதியில் உள்ள காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீயானது வேகமாக பரவி வருகின்றது. இந்த காட்டுத்தீயால் சுமார் 90 ஆயிரம் ஹெக்டேர்  நிலப்பரப்பில் உள்ள மரம், செடி போன்றவை எரிந்து சாம்பலாக […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் உருவான காட்டுத்தீ…. இதற்கு காரணம் யார் தெரியுமா….? பெரும் அதிர்ச்சி….!!!!!!!!

பிரான்சில் உருவான காட்டுத்தீக்கு காரணமான நபர் யார் என்பது தெரிய வந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற காரணமாக அமைந்த காட்டுத்தீ  உருவாக்கியவர் ஒரு தீயணைப்பு வீரர் என தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கடுமையான அதிர்ச்சி உருவாகி இருக்கிறது. ஏற்கனவே மக்கள் வெப்பத்தால் சிரமப்பட்டு கொண்டிருந்த நிலையில் சென்ற வாரம் பல இடங்களில் பற்றிய காட்டுத்தீ  காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு  வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் அந்த காட்டுத்தீ  […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் வெப்ப அலை அதிகரிப்பு…. அதிவேகத்தில் பரவும் காட்டுத்தீ…. கருகிப்போன 988 ஏக்கர் வனப்பகுதி…!!!

ஸ்பெயின் நாட்டில் அதிகரித்த வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ கடுமையாக பரவி வருவதால் தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக உயிர்பலிகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் வெப்ப அலையால் காட்டுத்தீ கடுமையாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டலோனியா என்னும் பகுதியில் வீடுகள் இருக்கும் பகுதிக்கு அருகே காட்டுத்தீ தீவிரமாக பரவியுள்ளது. எனவே, உடனடியாக அந்த […]

Categories
உலக செய்திகள்

திடீரென பரவிய காட்டுத்தீ…. 7- ஹெக்டேர் பரப்பிலான நிலப்பரப்புகள் சேதம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

திடீரென பரவிய காட்டுத் தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் சண்ட் அண்டொனி டி கலான்ங் நகர் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு ஹோட்டலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென அப்பகுதியில் காட்டுத்தீ பரவ ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் தீ விபத்தில் சுமார் 70 ஹெக்டேர் பரப்பிலான நிலப்பரப்புகள் சேதமடைந்துள்ளது. மேலும் காட்டுத்தீ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரியும் காட்டு தீ…. பாதிக்கப்படும் விலங்குகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நீராவி பிட் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று வீசியதால் காட்டு தீ வேகமாக பரவியது. இந்த தீயில் ஏராளமான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அறிந்த தீ தடுப்பு மற்றும் வனக்காவலர்கள் அடங்கிய குழுவினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த காட்டுத்தீயால் யானை, காட்டெருமை, […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் கடுமையாக பரவும் காட்டுத்தீ…. இரவு, பகலாக தொடரும் தீயணைப்பு பணி…!!!

துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் இரவு பகலாக தீயணைப்பு பணி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் வனப்பகுதியில் காட்டுத்தீ தீவிரமடைந்து வருகிறது. தீ எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் தற்போது வரை கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சேர்ந்து சுமார் 1500 நபர்கள் நெருப்பை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறார்கள். மேலும் 14 விமானங்கள், 20 ஹெலிகாப்டர்கள் மற்றும் 360 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரவில் தீ […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிவேகத்தில் பரவும் காட்டுத்தீ…. 5000 ஏக்கர் வனப்பகுதி கருகி நாசம்…!!!

அமெரிக்காவில் காற்று பலமாக வீசுவதால் காட்டுத்தீ அதிவேகத்தில் பரவிக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் அரிசோனா மாகாணத்தில் பிளாக்ஸாடாஃப் என்னும் பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. மேலும் பலமான காற்று வீசியதால் காட்டுத்தீ தற்போது அதிவேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. தீ பரவிக் கொண்டிருக்கும் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது வரை, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் அளவு கொண்ட வனப்பகுதி நெருப்பில் கருகி நாசமாகி விட்டது. […]

Categories
உலக செய்திகள்

கிரீஸ் வூலாவில் பயங்கர காட்டுத்தீ…. வீடுகள் நாசம்… வெளியேற்றப்பட்ட மக்கள்…!!!

கிரீஸ் வூலா எனும் பகுதியில் காட்டு தீ பரவி, வீடுகள் எரிந்ததில் மக்கள் முகாம்களில் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கிரீஸ் வூலா எனும் பகுதியில் திடீரென்று பயங்கரமாக காட்டுத்தீ பரவியிருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனினும், அந்த பகுதியில் இருக்கும் வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. எனவே, அந்த மலைப்பகுதிகளை சுற்றி இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள்  குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். சுமார் 130க்கும் அதிகமான தீயணைப்பு படையினரும், 6 விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தீயை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அக்கியம்பட்டி மலைப்பகுதியில் திடீரென பற்றிய காட்டுத்தீ”… சம்பவத்தால் பரபரப்பு…!!!

அக்கியம்பட்டி மலை பகுதியில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி அடுத்து இருக்கும் அக்கியம்பட்டியில் உள்ள மலைப்பகுதியில் செடிகளில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக விடிய விடிய பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டன.

Categories
உலக செய்திகள்

காட்டுத்தீயில் சிக்கிய கிராமம்…. முற்றிலுமாக அழிந்த குடியிருப்புகள்…. 5000 மக்கள் வெளியேற்றம்…!!!

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ என்ற மாகாணத்தில் கடும் காட்டுத் தீ பரவியதில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் சேதமடைந்திருப்பதோடு ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறி வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் இருக்கும் ருய்டோசோ என்ற கிராமத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 200க்கும் அதிகமான குடியிருப்புகள் அழிந்துவிட்டது. நேற்று வெளியான தகவலின்படி 9.6 சதுர மைல் தூரத்திற்கு காட்டுப்பகுதி தீயில் கருகிவிட்டது. அதிகமான மின்னழுத்தம் கொண்ட கம்பிகளால் அங்கு தீ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் காட்டுத் தீ…. அரிய வகை மரங்கள் எரிந்து நாசம்…. வனத்துறையின் தொடர் முயற்சி….!!

வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டதால் 50 ஏக்கரில்  இருந்த அரிய வகை மரங்கள்,கொடிகள் மற்றும் செடிகள் எரிந்தன. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்தில் உள்ள மூங்கில்பண்ணை, முட்டுக்கோம்பை  வனப்பகுதியில் நேற்று மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.  தீ விறுவிறுவென பரவியதால் அங்கு இருந்த அரிய வகை மரங்கள் மற்றும் செடிகள் அனைத்தும் எரிந்து  நாசமாகியுள்ளது . இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனவர் வெற்றிவேல் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்கு வந்து காட்டுத்தீயை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பிடித்த காட்டுத்தீ…. பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

ஒண்டிவீரன் கோவில் மலைப்பகுதியில் தீடிரென காட்டுத்தீ பிடித்து மளமளவென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலமலை கிராமம் அருகே ஒண்டி வீரன் சுவாமி கோவில் மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் சம்பவத்தன்று நள்ளிரவில் திடீரென தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவி காட்டுத்தீயாக மாறியது. மேலும் நள்ளிரவு சமயத்தில் தீ பற்றியதால் யாரும் அதை கவனிக்கவில்லை. இதனைதொடர்ந்து  மறுநாள் காலையில் வனப்பகுதியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மளமளவென பரவிய தீ…. மலைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு…. வனத்துறையினர் விடுத்த எச்சரிக்கை….!!

வருசநாடு மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதை தொடர்ந்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பஞ்சம்தாங்கி மலைபகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த மலைப்பகுதியின் மற்றொரு பகுதி தேனி மாவட்டம் வருசநாடு வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் பலத்தகாற்று வீசியதால் மளமளவென தீ பரவி வருசநாடு வனப்பகுதியிலும் பரவ தொடங்கியுள்ளது. இதனையறிந்த வருசநாடு வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக மலைப்பகுதியில் பரவத்தொடங்கிய காட்டுத்தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

எரிந்து சாம்பலான நிலங்கள்…. என்ன காரணம்….? சோகத்தில் பிரபல நாடு….!!!

அர்ஜென்டினாவில் காட்டுத்தீ ஏற்பட்டு சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. வடக்கு அர்ஜென்டினாவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது கொரியன்டெஷில் உள்ள மலைப்பகுதியில் பரவியுள்ளது. இந்த தீ அதிவேகமாக பரவியதில் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் நிலங்கள் எரிந்து சாம்பலாயின. குறிப்பாக அப்பகுதியில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 6 சதவீதம் தீயில்கருகி நாசமானது. இந்த காட்டு தீயானது வறண்ட கால நிலையின் காரணமாக  ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீயை […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”…. கொத்து கொத்தாக செத்து மடியும் உயிர்கள்…. பிரபல நாட்டில் சோகம்….!!!!

பராகுவே நாட்டில் கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கும் மேலாக காட்டு தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. அதாவது பராகுவே நாட்டில் உள்ள காப்புகூ என்ற நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குப்பைகள் எரிக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விளைநிலங்கள் மற்றும் 24 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டது. மேலும் மாடுகள், குதிரைகள், ஆடுகள் என 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த பயங்கர தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை […]

Categories
உலக செய்திகள்

“பராகுவே நாட்டில் பயங்கரம்!”…. பற்றி எரியும் காட்டுத்தீ…. 2,000 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்….!!

பராகுவே நாட்டின் காட்டுப் பகுதியில் அதிவேகத்தில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். பராகுவே நாட்டின் தலைநகரமான, Asuncion-ன் தெற்கு பகுதியில் இருக்கும் Villeta என்ற காட்டுப்பகுதியில் பயங்கரமாக தீ பரவி வருகிறது. சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி,  தீயில் கருகி விட்டது. எனவே, தீயணைப்புபடை வீரர்கள், தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக, 40 தீயணைப்பு படை வீரர்கள், 8 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க போராடி […]

Categories
உலக செய்திகள்

சூறாவளி வேகத்தில் வீசிய காற்று…. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்…. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்….!!!!

அமெரிக்காவில் பயங்கர காட்டுத் தீயால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் காட்டு தீயால் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த நிலையில் உள்ளூர் ஊடகங்கள், கடந்த 30-ஆம் தேதி மணிக்கு 105 மைல் கிலோமீட்டர் என்ற வேகத்தில் பலத்த காற்று வீசியதால் தான் காட்டுத் தீ மோசமாக பரவியதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஏராளமான […]

Categories
உலக செய்திகள்

காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட தீயணைப்பு வீரர்கள்…. மீட்க போராடும் சக வீரர்கள்….!!

சிலியில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சில தீயணைப்பு வீரர்கள் மாட்டிக்கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் பணியை சக வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.  சிலி நாட்டில் இருக்கும் நுபில் என்னும் பகுதியின் குய்லோன் நகரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் ஒரு ட்ரக்கில் சென்று, தீயணைப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், அதி வேகமாக பரவிய காட்டுத் தீயில் அவர்கள் மாட்டிக் கொண்டார்கள். எனவே, சக வீரர்கள், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டில் சமீப நாட்களாகவே காட்டுத்தீ […]

Categories
உலக செய்திகள்

‘திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம்’…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு….!!

காட்டுத்தீ சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு  நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.  சிரியாவில் கடந்த ஆண்டு காட்டுத் தீயானது மூன்று மாகாணங்களுக்கு பரவியது. மேலும் 187  காட்டுத்தீ விபத்தில்  280 நகரங்கள் மற்றும் கிராமங்கள் சேதமடைந்தன. குறிப்பாக 32 ,000 ஏக்கர் விவசாய நிலம் தீயில் கருகி நாசமாகியது. இதனை தொடர்ந்து சுமார் 370 வீடுகள் தீக்கிரையாகின. இந்த காட்டுத்தீயினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதில் […]

Categories
உலக செய்திகள்

தீ வைத்து கொளுத்தப்பட்ட இடங்கள்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. திட்டவட்டமாக மறுத்த இளம்பெண்….!!

கலிபோர்னியாவில் காட்டை தீ வைத்து கொளுத்திய குற்றத்திற்காக காவல்துறை அதிகாரிகள் கைது செய்த இளம்பெண் தன்மீதான குற்றத்தை மறுத்துள்ளார். கலிபோர்னியாவில் 41 வீடுகள் உட்பட பல ஏக்கர் அளவிலான நிலங்களுக்கு தீ வைத்ததாக கூறி காவல் துறை அதிகாரிகள் அலெக்சாண்ட்ரா என்னும் இளம்பெண்ணை கைது செய்துள்ளார்கள். ஆனால் அந்த இளம்பெண் தான் வேண்டுமென்றே எந்த ஒரு பகுதிக்கும் தீ வைக்கவில்லை என்று தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதனையடுத்து அலெக்ஸாண்ட்ரா போராடி தாகத்தைத் தீர்ப்பதற்காக குடிநீரை கொதிக்க […]

Categories
உலக செய்திகள்

வேகமாக பரவும் காட்டுத்தீ…. வாழ்வாதாரங்களை இழந்த மக்கள்…. அணைக்க போராடும் வீரர்கள்….!!

வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் இராணுவத்தினரும் போராடி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலஹா மாகாணத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீயானது வேகமாக பரவி வருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 17000 ஏக்கர் நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் 2500க்கும் மேற்பட்ட மக்கள்  வாழ்வாதாரங்களை இழந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து வேகமாக பரவிவரும் இந்த […]

Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் காட்டுத்தீ…. மூடப்பட்ட சாலைகள்…. கட்டுப்படுத்தும் முயற்சியில் வீரர்கள்….!!

காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சலஸின் வடகிழக்கு பகுதியில் காட்டுத்தீயானது பற்றி கொழுந்துவிட்டு எரிகிறது. மேலும் இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து காட்டுத்தீயானது துவக்கத்தில்  5 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பரவியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காட்டுத்தீ பரவியுள்ள இடங்களில் இருக்கும் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட இரு […]

Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் காட்டுத்தீ…. தீவிர பணியில் தீயணைப்பு வீரர்கள்…. பொதுமக்கள் வெளியேற்றம்….!!

வனப்பகுதியில் பரவியுள்ள காட்டுத்தீயினால் 42,000த்திற்கும் மேலான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் எல்டொரோடா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுத்தீயானது பற்றி எரிந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். அதிலும் காட்டுத்தீயானது கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில்  காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை […]

Categories
உலக செய்திகள்

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ…. பல இடங்களில் மின் தடை…. கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி….!!

காட்டுத்தீயானது வேகமாகப் பரவி வருவதால் பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டுத்தீயானது தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்த காட்டுத்தீயானது அருகிலுள்ள நிரா நவாடா மலைப்பகுதி முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் இந்த தீவிபத்தில் 50 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் 2 பேர் தீயில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் […]

Categories
உலக செய்திகள்

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ…. கட்டுக்குள் கொண்டுவர முயற்சி…. உத்தரவிட்ட அதிகாரிகள்….!!

காட்டுத்தீயானது மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில நாட்களாகவே காட்டுத் தீயானது தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயானது சுற்றியுள்ள சில பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பிடித்த காட்டுத்தீ…. 10மணி நேரம் போராடிய வீரர்கள்… மரங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம்…!!

தொடால் வனப்பகுதியில் திடீரென பற்றிய காட்டுத்தீயால் வனப்பகுதியில் உள்ள மரம் செடி கொடிகள் என முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கழுகுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடால் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மதியம் 2 மணி அளவில் திடீரென அப்பகுதியில் காட்டுத்தீ பற்றி மளமளவென எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற வனச்சரகர் நாகராஜ், வனவர் நிதின், வனக்காப்பாளர் பெத்தனசாமி ஆகியோர் தலைமையில் சென்ற வன ஊழியர்கள் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் பரவிய காட்டுத்தீ.. அணைக்கச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது.. 8 பேர் உயிரிழப்பு..!!

துருக்கியில் தரையிறங்கிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 8 நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் காட்டுத்தீ பரவியுள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்த, ரஷ்யாவில் இருந்து பி-200 வகை தீயணைப்பு விமானம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் ரஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த விமானிகள் ஐந்து பேரும், துருக்கி நாட்டை சேர்ந்த நிபுணர்கள் மூன்று பேரும் பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில், விமானம் துருக்கியின் அடானா மாகாணத்திற்கு அருகில் தரை இறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 8 நபர்களும் […]

Categories
உலக செய்திகள்

30 ஆண்டுகளில் இல்லாத….. பற்றி எரியும் காட்டுத்தீ….. ஹெலிகாப்ட்டர் மூலம் அணைக்கும் பணி….!!

காட்டில் பரவியுள்ள தீயை ஹெலிகாப்ட்டர் மூலம் அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிரீஸ் நாட்டில் வெயிலின் தாக்கமானது இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. அனைத்து திசைகளிலும் காட்டுத்தீயானது பரவி வருவதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இந்த இலையில் எவியா நகரில் காட்டுத்தீயானது 6-வது நாளாக பரவி வருவதால் அங்குள்ள மரங்கள் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. 32% வனப்பகுதி தீயில் கருகிய சோகம்…. தீவிர தேடுதலில் இறங்கிய அதிகாரிகள்….!!

கலிபோர்னியாவில் மொத்தமாகவுள்ள வனப்பகுதியில் 32% திடீரென ஏற்பட்ட தீயினால் கருகி நாசமாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். வடக்கு கலிபோர்னியாவிலுள்ள வனப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் தற்போதுவரை 2.44 லட்சம் வரையிலான அதாவது மொத்தமாகவுள்ள வனப்பகுதியில் 32% காட்டுப்பகுதி திடீரென ஏற்பட்ட தீயினால் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இவ்வாறு ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 69 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சுமார் 9 கட்டிடம் சேதாரமாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

வேகமாக பரவிய தீ…. பலியான பொதுமக்கள்…. தகவல் வெளியிட்ட அமைச்சர்….!!

காட்டுத்தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக விவசாய மற்றும் வனத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டில் மத்திய தரைக் கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் உள்ள காடுகளில் சென்ற வாரம்  தீ வேகமாக பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் சிக்கி உயிரிழந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் பெகிர் பக்டிமிர்லி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் மனவ்காட் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும் மர்மரிஸ் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

கலிபோர்னியாவில் தீவிரமாக பரவும் காட்டு தீ.. 12 வீடுகள் சேதம்..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் தீவிரமாக பரவிய காட்டுத்தீயால் 12க்கும் அதிகமான வீடுகள் சாம்பலாகியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் நேற்று முன்தினம், தீவிரமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 14ஆம் தேதி அன்று காட்டு தீ பரவ ஆரம்பித்து, இந்தியன் பால்ஸ் முற்றிலுமாக பரவியுள்ளது. இதில் 12க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில், பட் மற்றும் ப்ளூமாஸ் போன்ற பகுதிகளில் 1,81,000-த்திற்கும் அதிகமான ஏக்கர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பற்றி எரியும் காட்டு தீ… ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

கனடாவில் சுமார் 300 இடங்களில் மோசமான வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 300 இடங்களில் மோசமான வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்த காட்டுத்தீயால் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுமார் 14 நாட்கள் இந்த அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ.. மீட்புப்பணிகள் தீவிரவாக நடைபெறுகிறது..!!!

அமெரிக்காவில் தீவிரமாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள ஓரேகான் என்ற மாகாணத்தில் இருக்கும் காடுகளில் தீ பற்றி எரிந்து அதிவேகமாகப் பரவுகிறது. இதுமட்டுமல்லாமல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எனவே பல சிரமங்களுக்கு மத்தியில் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனினும் கலிபோர்னியா காட்டு தீயுடன் ஒப்பிட்டால் பொருட்சேதம் பெரிய அளவில் இல்லை. மேலும் ஒவ்வொரு நாளும் காட்டுத் தீ பரவும் விகிதம் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் தீவிரமடையும் காட்டுத்தீ… அச்சத்தில் மக்கள்…!!!!

ரஷியாவின் சைபீரியா பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பரவி வருகிறது. குளிர் பிரதேசமான சைபீரியாவில் வெப்ப காற்று வீசியதன் காரணத்தால் ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 லட்சம் ஏக்கர் காடு அழிந்து, ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் அவதிப்பட்டு வருகின்றது. 15 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதியில் 216 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 2200 ஹெக்டேர் காடுகள் […]

Categories
உலக செய்திகள்

ஒரு சின்ன சிகரெட் துண்டு.. காடு முழுக்க பற்றி எரிந்த கொடூரம்..!!

ஸ்பெயினில் கோஸ்டா பிராவா என்ற பகுதியில் காட்டு தீ மளமளவென பரவுவதால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். Cap de Creus என்ற தேசிய பூங்காவின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று காட்டுத்தீயால் சேதமடைந்தது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அப்பகுதியில் வாகனத்தில் சென்ற ஒரு நபர் சிகரெட் துண்டை வீசி எறிந்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட தீ காடு முழுவதும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு படையினர் விமானம் வழியாக தீயை கட்டுப்படுத்த முயன்று […]

Categories
உலக செய்திகள்

2,27,000 ஏக்கர் நிலப்பரப்புகள் நாசமாகிய சோகம்…. 2000 வீடுகள் காட்டுத்தீயில் சிக்க இருக்கும் அபாயம்…. கடுமையாக போராடும் தீயணைப்பு வீரர்கள்….!!

அமெரிக்காவில் மின்னலினால் ஏற்பட்ட தீப்பொறி காய்ந்த புற்களின் மீது பட்டதால் உருவான காட்டு தீயை அணைப்பதற்கு சுமார் 1700 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். அமெரிக்காவில் ஒரேகான் என்னும் மகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்னலின் காரணத்தால் காய்ந்த புற்களின் மீது தீப்பொறி ஏற்பட்டு அதன்மூலம் காடு முழுவதும் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 1,700 தீயணைப்பு வீரர்கள் களம் இறங்கியுள்ளார்கள். மேலும் 12 ஹெலிகாப்டர்கள் உதவியுடனும் […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் வெப்பம்… விமானிகள் உயிரிழந்த சோகம்… பிரபல நாட்டில் பரபரப்பு தகவல்..!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காட்டுத்தீயால் அரிசோனா-உட்டா சாலை மூடப்பட்டுள்ளது. மேலும் பற்றி எரியும் தீயை அணைக்கும் போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக அமெரிக்காவின் மேற்கு பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்ய சென்ற விமானம் ஒன்று […]

Categories
உலக செய்திகள்

தீவிரமாக பரவிய காட்டுத்தீ.. நகரமே அழிந்து போன கொடூரம்.. மக்களை வெளியேற்றிய அதிகாரிகள்..!!

கனடாவில் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயால் ஒரு நகரம் முழுவதுமாக எரிந்து சாம்பலான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது . கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் லிட்டன் என்ற சிறு நகரம் காட்டுத்தீயால் அழிந்துவிட்டது. ஒரே நாளில் 62 தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்நகரம் 90% சாம்பல் ஆனது. ஆனால் அதற்குள் அங்கு வசித்த ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை வெளியேற்றியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நகரத்திற்கு உதவி வழங்குவதாக […]

Categories
உலக செய்திகள்

ஐயோ..! ஒரே சமயம் 2 இடத்துலயா…? எல்லாரையும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றியாச்சு…. பிரபல நாட்டில் தீவிரமாக நடைபெறும் முக்கிய பணி….!!

1,00,000 ஏக்கர் நிலம் காட்டுத் தீயில் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அரிசோனா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் திடீரென்று 2 பகுதிகளில் பயங்கரமாக காட்டு தீ பற்றி எரிகிறது. இந்த காட்டுத் தீயினால் சுமார் 1,00,000 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியது. இதனையடுத்து காட்டுத் தீயின் காரணத்தால் அரிசோனா மாகாணத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து காட்டுத்தீயை அணைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் காட்டுத்தீ… போராடும் தீயணைப்பு வீரர்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயை மூன்று நாட்களாக தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி அணைத்து வருகின்றனர். கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள பெலோபென்னீஸ் தீபகற்பத்தில் உள்ள காடுகள் அடர்ந்த பகுதியான கோரிந்த் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது. இதையடுத்து பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தீ பரவிய இடங்களை சுற்றிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயானது காற்றுடன் வேகமாக வீசியதால் கோரிந்த் பகுதியிலிருந்து தீயானது மேற்கு அட்டிகா பகுதியில் பரவியுள்ளது. மேலும் பைன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது மூலமா இப்படியா பரவனும்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையிலிருக்கும் அல்லிகுண்டம் மலைப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே அல்லிகுண்டம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது கோடைகால சூழ்நிலை நிகழ்வதால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் அல்லிகுண்டம் மலைப்பகுதியிலிருக்கும் நாணல் புற்கள் அனைத்தும் காய்ந்து சருகாகியுள்ளது. இந்நிலையில் அம்மலைப்பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததில் காய்ந்த நாணல் புற்கள் மூலம் காட்டுத்தீ மலை முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியிலிருக்கும் அனைத்து மரங்களும் காட்டுத் தீயில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 42 இடங்களில் காட்டுத்தீ… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 42 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வனத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெயில் இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வகையில் கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், வேலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 42 மாவட்டங்களில் காட்டுதீ ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த காட்டுத்தீ… பதறி ஓடிய விலங்குகள்… ஏராளமான மரங்கள் நாசம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் வனவிலங்குகள் பதறி ஓடியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே பிளாத்திகுளம் என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த கொடி, செடி, மரங்கள் கட்டுக்கடங்காத வகையில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தீத்தடுப்பு பணியாளர்கள் மற்றும் வன காப்பாளர் பீட்டர் ஆகியோர் வத்தலகுண்டு வனச்சரகர் ஆறுமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ… புகை மண்டலமாக மாறிய நேபாளம்… மக்கள் கடும் அவதி…!!!

நேபாளத்தில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இந்தியாவின்   அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நேற்று  திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அதனால் அங்கு உள்ள 54 மாவட்டங்களில்  கரும் புகை சூழ்ந்துள்ளது  . மேலும் காற்று மாசுபாடு ஏற்பட்டுவுள்ளதால் மக்கள் மூச்சு விடக் கூட முடியாமல் திணறி வருகிறார்கள் . மேலும் சித்வான், பர்சா, பரா,மற்றும் மக்வான்பூர் ஆகிய மாவட்டங்களும்  காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அதனால் மாநிலமுழுவதிலும் கரும் புகை சூழ்ந்துள்ளதால்  வானம் தெளிவான […]

Categories
உலக செய்திகள்

அதிவேகமாக பரவும் காட்டுத்தீ… பல வீடுகள் கருகி நாசம்… ஆஸ்திரேலியாவில் பரபரப்பு…!!

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் பல வீடுகள் தீயில் கருகி சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு பகுதிகளில் இருக்கும் பெர்த் என்ற நகரில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வருவதால் அதைச் சுற்றியுள்ள சுமார் 80 கிலோமீட்டர் பகுதிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளது. மேலும் இந்த காட்டுத்தீ கடந்த 4 தினங்களாக பரவி வருவதால் தற்போது வரை சுமார் 70க்கும் அதிகமான வீடுகள் எரிந்து அனைத்தும் சாம்பலாகியுள்ளது. இதனிடையே தற்போது காற்றின் வேகமும் […]

Categories
உலக செய்திகள்

கட்டுக்கடங்காத காட்டுத்தீ…. அரண்டு போன ஆஸ்திரேலியா…. பீதியில் மக்கள்…!!

ஆஸ்திரேலியாவில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் ஏற்கனவே ஏற்பட்ட காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான விலங்குகளும் சில மனிதர்களும் உயிரிழந்தன.ர் இப்போது மீண்டும் புதர்களில் காட்டுத்தீ பரவி உள்ளதால் அபாய நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் பெர்த் பகுதியில் பலமான காற்று வீசி வருவதன் காரணமாக தீ வேகமாக பரவி வரும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது .இதனால் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர். இதையடுத்து பெர்த் […]

Categories
உலக செய்திகள்

“பற்றி எரியும் காட்டுத் தீ”… மீட்பு பணியில் இறங்கும் விமானப்படை…!!

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக 15 லட்சம் ஏக்கர் மதிப்பிலான நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா வரலாற்றில் இரண்டாவது முறையாக, ஏற்பட்ட 3வது பெரிய நெருப்பாக, கடும் வெப்பம் மற்றும் தொடர்ந்து மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட காட்டுத் தீ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெருப்பின் காரணமாக சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், விமானஙகள் போராடி வரும் நிலையில் 40க்கும் […]

Categories
உலக செய்திகள்

கொழுந்து விட்டு எரியும் கலிபோர்னியா… தீயணைப்பு பணி தீவிரம்…!!!

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மூன்று தினங்களாக 11 ஆயிரம் இடங்களில் மின்னல் தாக்கியதில் 367 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வடக்கு கலிபோர்னியா மாகாணம் காட்டுத்தீயால் அதிக அளவு பாதிப்படைந்துள்ளது. மேலும் பாலோ, ஆல்டோ, நாபா ஆகிய இடங்களில் பரவிக் கொண்டிருக்கும் காட்டுத் தீயால் ஒரு லட்சம் ஏக்கர் அளவிலான காடுகள் மற்றும் வீடுகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன. […]

Categories

Tech |