இறந்து கிடந்த யானையின் உடலை வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பூணாச்சி என்ற இடத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பர் ஆழியாறு பள்ளம் அருகே யானை இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி வனபாதுகாவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராகவன், வால்பாறை அரசு […]
Tag: காட்டு யானை உயிரிழப்பு
மரக் கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்த போதிலும், காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காயமடைந்த ஒரு ஆண் காட்டு யானை சுற்றி திரிந்துள்ளது. இதனை வனத்துறையினர் கடந்த மாதம் 17-ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியோடு பிடித்து அபயரண்ய முகாமில் இருக்கும் மரக்கூண்டில் அடைத்து விட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனால் காட்டு […]
காட்டு யானை டயர் வீசி கொலை செய்யப்பட்டதையடுத்து பாதுகாப்பை அதிகரிக்க 5 வனக்காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான கார்ப்பரேட் அருகில் சென்றதால் அங்கு இருந்தவர்கள் டயரில் பெட்ரோலை ஊற்றி கொழுத்தி யானை மீது வீசினர். இதையடுத்து யானையின் தலையில் தீப்பிடித்ததால் அலறி ஓடியுள்ளது. இந்நிலையில் காது கிழிந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். […]