Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையின் நடுவே நின்ற காட்டெருமைகள்…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலைகளில் உலா வருகிறது. நேற்று குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருவங்காடு பகுதியில் முகாமிட்ட காட்டெருமைகள் சாலையின் குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து அறிந்த போலீசார் காட்டெருமைகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அந்த வழியாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நகர் பகுதியில் உலா வந்த காட்டெருமை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத் துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டெருமை நகர் பகுதியில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடமான 7 ரோடு சந்திப்பு, கவிதியாகராஜர் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காட்டெருமையை கடந்து சென்றனர். அதிலும் […]

Categories
சினிமா

“காட்டெருமையை விரட்டிய புலி”…. நடிகர் ரன்தீப் ஹூடா கேட்ச் செய்த வீடியோ…. வைரல்….!!!!

ஹாலிவுட் சினிமா நடிகரான ரன்தீப் ஹூடா, புலி ஒன்று காட்டெருமையை விரட்டும் காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு “நான் கேட்ச் செய்த முதல் புலி வேட்டை” என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சத்புரா புலிகள் காப்பக காட்டுப்பகுதியில் இதனை அவர் படம் பிடித்து உள்ளதாக தெரிகிறது. ரன்தீப், வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது வீடியோவுக்கு பல பேரும் லைக்குகளை கொடுத்து வரும் நிலையில் ரசிகர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கழுத்தில் சிக்கியிருந்த கயிறு…. அவதிப்பட்ட காட்டெருமை…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காட்டெருமையின் கழுத்தில் சிக்கியிருந்த பிளாஸ்டி கயிற்றை வனத்துறையினர் வெட்டி அகற்றியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனையட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கயிறு கழுத்தில் சுற்றிய நிலையில் தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று அவதிப்பட்டு வந்துள்ளது. இந்த காட்டெருமை தீவனம் சாப்பிட முடியாமல் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு வனத்துறையினர் காட்டெருமைகள் மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். ஆனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது எப்படி செத்துச்சு…? மர்ம முறையில் இறந்த உயிர்… வனத்துறையினர் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தனியார் தோட்டத்தில் மர்மமான முறையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள காட்டு எருமைகள் அடிக்கடி நகர் பகுதிகளுக்கு வந்து குப்பைகளில் வீசப்படும் பழங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை தின்று விடுகின்றன. இதன் காரணமாக காட்டெருமைகள் உடல்நல குறைபாடு ஏற்பட்டு மர்மமான முறையில் இறக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கொடைக்கானல் பாக்கியபுரம் என்னுமிடத்தில் காட்டெருமை ஒன்று தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உடல்நல பாதிப்பால் இறந்திருக்கலாம்..! ரோந்து பணியில் கண்டறியப்பட்ட உயிர்… பரிசோதித்த மருத்துவ குழுவினர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை அருகே காட்டெருமை ஒன்று தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அயனாம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காட்டெருமை ஒன்று தொப்பசாமிமலை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டனர். உடனே அவர்கள் இதுகுறித்து அய்யலூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை டாக்டர் ராஜ்குமார் […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்பாராமல் இறந்து விட்டது… “காட்டெருமைக்கு ‘கரண்ட் ஷாக்”… 9 பேர் அதிரடி கைது..

காட்டெருமைக்கு ‘கரண்ட் ஷாக்’ கொடுத்து கொன்ற வேட்டைக்காரர்கள் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் போரம்தியோ என்ற வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு காட்டெருமை மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.. இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் விசாரணையை தொடங்கினர்.. இந்த விசாரணையில், காட்டெருமை சுற்றித்திரிந்த பகுதியில் இரும்பு கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் இது வேட்டையாடுபவர்களின் செயலாக இருக்கும் என்று சந்தேகமடைந்த வனத் துறையினர், அச்சனக்மார் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஸ்னிஃபர் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சீண்டிய காட்டு யானை… துணிந்து விரட்டிய காட்டெருமை… வைரலாகும் வீடியோ..!!

காட்டெருமை ஓன்று யானையை விரட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில், தனது ட்விட்டர் பக்கத்தில், எருமை யானையைத் துரத்துகிறது.. மனதில் உள்ள வலிமை வாழ்க்கையில் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில்,  காட்டுப்பகுதியில் புகுந்த யானைகள்  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துரத்திய நாய்…. இரும்பு கதவில் சிக்கி காட்டெருமை மரணம்….. கொடைக்கானல் அருகே சோகம்…!!

கொடைக்கானல் அருகே இரும்பு கதவின் மேல் பகுதியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பேரிக்காய் சீசன் தொடங்கி விட்டதன் காரணமாக வனப் பகுதியில் இருக்கக்கூடிய காட்டெருமைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும், அவ்வப்போது குடியிருப்பு வளாகத்தில் சுற்றித்திரிந்தும் வந்தன. இந்நிலையில் எப்போதும் போல் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமை ஒன்று தனியாக ஊருக்குள் வந்துள்ளது. எருமையை கண்ட நாய்கள் உடனடியாக குரைக்கத் தொடங்க மிரண்டுபோன காட்டெருமை ஓடியது. […]

Categories

Tech |