Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் பசங்க பட நடிகர்…. இன்ஸ்டா போட்டோவால் குவியும் வாழ்த்து….!!!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகை ப்ரீத்தி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்று தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமானார். அதன் பிறகு கேளடி கண்மணி, வள்ளி, லட்சுமி கல்யாணம், தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ப்ரீத்தி நடிகர் கிஷோரை காதலிக்கிறார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பசங்க படத்தில் நடிகர் கிஷோர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு புகுந்து பெண்ணை அலேக்காக தூக்கிய நபர்…. பின் மாலையும் கழுத்துமாக மகள் கொடுத்த டிவிஸ்ட்….. ஷாக்கான பெற்றோர்…..!!!!

தெலங்கானா சிர்சில்லா மாவட்டத்தில் ராஜண்ணா பகுதியில் வசித்து வந்த ஷாலினியும், அதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் மீட்டனர். இதற்கிடையில் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, ஷாலினியை கடத்தியதாக ஜானி மீது காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நடந்து ஓராண்டு கடந்த நிலையில், ஷாலினிக்கு வேறொருவருடன் நிச்சயத்தார்த்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை […]

Categories
தேசிய செய்திகள்

OMG!… “வீடு புகுந்து மகள் கடத்தல்”…. பதறி துடித்த பெற்றோர்…. கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா மாவட்டம் ராஜண்ணா பகுதியில் ஒரு பெண்ணை வீடு புகுந்து மர்ம நபர்கள் சிலர் கடத்தியுள்ளனர். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட பெண் திருப்பதியில் மாலையும், கழுத்துமாக நின்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது கடத்தப்பட்ட பெண்ணின் பெயர் ஷாலினி. இவர் இதே பகுதியைச் சேர்ந்த ஜானி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக […]

Categories
உலக செய்திகள்

அட!… இவரு குடுத்து வச்சவருதா!… 50 வயதில் 24 வயது அழகியுடன் திருமணம்…. காதல் கதைய கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!!

பாகிஸ்தான்எ (50) நாட்டில் சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த பேருந்தில் சேஷாதி (24) என்ற இளம் பெண் அடிக்கடி பயணம் செய்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு திடீரென சாதிக் மீது காதல் ஏற்பட அவரிடம் ப்ரபோஸ் செய்துள்ளார். அதன்பிறகு சேஷாதியின் காதலை சாதிக் ஏற்றுக் கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சாதிக் பேருந்து ஓட்டும் ஸ்டைல், அவர் பேசும் விதம், […]

Categories
உலக செய்திகள்

காதல் திருமணம் செய்த மகள்…. மனைவியுடன் பங்கேற்ற ட்ரம்ப்… வெளியான புகைப்படம்…!!!

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பின் மகளுக்கு நேற்று திருமணம் நடந்திருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் மனைவியான மார்லா மேப்பில்சின் மகள் டிப்பனி டிரம்ப்பிற்கும் அவரின் காதலரான மைக்கேல் பவுஸோவிற்கும்  நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரையில் திருமணம் நடந்திருக்கிறது. மகளின் திருமணத்தில் டிரம்ப் தன் மனைவி மெலானியா டிரம்ப் உடன் பங்கேற்றார். டிப்பனி, லண்டனில் தான் தன் காதலரை முதல் தடவையாக சந்தித்திருக்கிறார். அவரின் காதலரான மைக்கேல் பவுஸோ, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு Arrange Marriage செட் ஆகாது…. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த விஷால்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் விஷால் காதல் திருமணம் குறித்து சுவராசியமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவருக்கு அரெஞ்சு மேரேஜ் செட் ஆகாது என்றும், அவர் காதலித்து வரும் பெண்ணை விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் அப்துல் கலாம் அல்ல”…. விரைவில் காதல் திருமணம் செய்வேன்….. நடிகர் விஷால் ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு 57 வகையான சீர்வரிசைகள் கொடுத்து நடிகர் விஷால் இலவச திருமணம் செய்து வைத்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து அவர்களை வாழ்த்தினார். அதன் பிறகு நடிகர் விஷால் பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் விஷாலுக்கு விரைவில் டும் டும் டும்….. அதுவும் காதல் திருமணம்….. பொண்ணு யார் தெரியுமா?….!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஷால். இவர் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வினோத்குமார் இயக்க, சுனைனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் விஷாலுக்கும், அனுஷா என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில பிரச்சினைகளால் அனுஷா மற்றும் விஷாலின் திருமணம் பாதியிலேயே நின்றது. இதை தொடர்ந்து நடிகர் விஷாலின் திருமண செய்திகள் குறித்த தகவல்கள் அடிக்கடி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுத்த காதலன்….. காதலி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடராஜனும், ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்ய நடராஜன் மறுப்பு தெரிவித்ததால் ரம்யா ஜெயம் கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி புகார் அளித்தார். இதனால் போலீசார் இரு விட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் ஜெயம்கொண்டதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கடல் கடந்த காதல்” நைஜீரிய பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

வாலிபர் ஒருவர் பெற்றோர் சம்மதத்துடன் நைஜீரிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பள்ளி வெங்கடாஜலபதி தெருவில் சுப்பிரமணி- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமால் பிரசாத்(28) என்ற மகன் உள்ளார். இவர் டிப்ளமோ படித்துவிட்டு ஜெர்மனி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே நைஜீரியாவில் வேலை பார்த்த போது திருமால் பிரசாத் பட்ரிசியா இய்ன்வாஎசா(25) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“காதலித்து திருமணம் செய்த வாலிபர்” திடீர் சம்பவத்தால் பரிதவிக்கும் திருநங்கை…. போராட்டத்தால் பரபரப்பு…!!!!

இளைஞரின் வீட்டிற்கு முன்பாக திருநங்கை போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கீழச்சின்னம்பட்டி பகுதியில் ஸ்ரீநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு திருநங்கை. இவர் ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து அருள்வாக்கு சொல்லி வந்துள்ளார். இந்த கோவிலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவர் சாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். இந்த வாலிபருக்கும் ஸ்ரீநிதிக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக விவேக் கோவிலில் பூசாரியாக சேர்ந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

WOW: வீட்டு வேலைக்காரரை கரம்பிடித்த பணக்கார பெண்…. இதோ சுவாரசியமான காதல் கதை….!!!!

பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது வீட்டில் வேலைக்கு நியமிக்கப்பட்ட வேலைக்காரர் மீது காதல் கொண்டு அவரையே கரம்பிடித்து இருக்கிறார். பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் பகுதியில் வசித்து வருபவர் நாசியா. நிலப் பிரபுவான இந்த நடுத்தர வயது பெண்மணி, தன் தோட்டம் மற்றும் வீட்டை பராமரிக்க சூபியான் என்ற நபரை பணிக்கு சேர்த்தார். இதையடுத்து அவர் அந்த வீட்டை பராமரிப்பது, சமைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது என பல்வேறு வேலைகளை பொறுப்புடன் செய்து வந்தார். இதனிடையில் வீட்டின் உரிமையாளரான நாசியாவுக்கு […]

Categories
உலக செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. ஆண் இல்லை என்று தெரிந்ததால் அதிர்ச்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

இளம்பெண் ஒருவர் ஆண் என்று நினைத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள ஜாம்போ பகுதியில் 22 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு டேட்டிங் ஆப் மூலமாக ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இளம் பெண்ணிடம் அந்த நபர் தான் ஒரு தொழிலதிபர் என்று கூறியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு பிறகு இளம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சொத்துல பங்கு வேணுமா” +2 மாணவனை வைத்து…. தங்கை கணவனை தட்டி தூக்கிய மச்சான்…!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பீ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(23). இவர் குமுதேப்பள்ளியை சேர்ந்த தனது நண்பர் முருகேசன்(26) வீட்டிற்கு அடிக்கடின் சென்று வருவார். அப்போது சந்தோஷும் முருகேசனின் தங்கை மீனாவும் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ், மீனாவை வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார், அண்மையில் முருகேசன் வீட்டார் தங்களது நிலத்தை விற்க முயன்றபோது மீனாவின் சொத்தை பிரித்து தருமாறு சந்தோஷ் கேட்டதாக கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்ததற்கே […]

Categories
தேசிய செய்திகள்

தாலி கட்டுற நேரத்துல….. ஓடிப்போய் அறையை பூட்டிக்கொண்ட மணமகள்…. காரணம் என்ன தெரியுமா…????

கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் குறித்த நாளில் இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. மணமேடையில் மணமகனும் மணப்பெண்ணும் தயாராக இருந்தனர். மணமகன் மாலையை எடுத்து மணமகளுக்கு அணிவிக்க போனார். திடீரென மாப்பிள்ளையை மணப்பெண் தடுத்து நிறுத்தி மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டார். உறவினர்கள், குடும்பத்தினர் எதுவும் புரியாமல் மணமகளை தடுத்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“எனது திருமணம் காதல் திருமணமாக தான் இருக்கும்”… உறுதியுடன் உள்ள பிரபாஸ்…!!!

பிரபாஸ் தனது திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என உறுதிபடுத்தியுள்ளார். பாகுபலி திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பிரபாஸ். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் பேச்சுலராக இருக்கின்றார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவருக்கு வரன்கள் அதிகம் வந்தது. ஆனால் அதை உதறி தள்ளி விட்டார். பிறகு அனுஷ்காவும் இவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இதை இருவரும் மறுத்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என கூறி வந்தனர். பிரபாஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம்” இதை தான் செய்யணும்…. பெண்ணுக்கு 23 இடத்தில் கத்திக்குத்து….!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தை சேர்ந்தவர் அபூர்வா  பூரணி. இவர் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுனர் முகமது ஆசாஸ்  என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த  நிலையில் மதத்தை பொருட்படுத்தாமல் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு அபூர்வா பூரணி என்னும் தனது பெயரை அரஃபா பானு என்று மாற்றிக் கொண்டார். அதோடு  பிராமணப் பெண்ணான அபூர்வா பூரணியை   அசைவ உணவுகளை சமைக்கவும், பர்தா அனியவும், இஸ்லாமிய முறைகளை கடைபிடிக்கவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காதல் கல்யாணம்…. “அடுத்தடுத்து விவாகரத்து பெற்ற 10 காதல் ஜோடிகள்”…. வெளியான லிஸ்ட் இதோ….!!!

சினிமாவில் உள்ள பிரபல நடிகை, நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். பிறகு சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துவிட்டு மனக்கசப்பால் பிரிந்து விடுகின்றனர். அந்த வகையில் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு ஏதோ சில காரணங்களால் பிரிந்த ஜோடிகளை பற்றி பார்க்கலாம். பார்த்திபன், சீதா :- “புதிய பாதை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்த்திபன், சீதா ஆகிய இருவரும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொண்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்…. தந்தை செய்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

காதல் திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மகளின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து போட்ட தந்தை ஒருவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஹரதலே கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ் நாய்க். இவர் ஒரு விவசாயி. இவருக்கு சைத்ரா என்ற மகள் இருக்கிறார். 21- வயதுடைய அந்த பெண் அதே கிராமத்தை சேர்ந்த மகேந்திரா என்ற இளைஞரை கடந்த ஒன்றரை வருடமாக […]

Categories
தேசிய செய்திகள்

“இதுவல்லவா காதல்” 35 ஆண்டுகள் காத்திருந்து…. 65 வயது காதலியை மணந்த காதல் மன்னன்…!!!!

மைசூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயம்மா (65). இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை பேறு இல்லாததால் அவருடைய கணவர் 30 வயதிலேயே அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து இவரை அதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் ஜெயம்மா இதை ஏற்க மறுத்துள்ளார்.  தன்னுடைய கணவரை நினைத்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து விடலாம் என்று 35 ஆண்டுகளை கழித்துள்ளார் . தற்போது அவருக்கு வயது 65. இந்த நிலையில் ஜெயம்மா, சிக்கண்ணாவை  திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள்

சாதி மறுப்பு திருமணம்…. தங்கையை கொல்ல முயன்ற அண்ணண்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் பகுதியில் உள்ள நெய்வேலி கிராமத்தில் கலைமணி என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி பானுமதி மற்றும் மகன் கர்ணன். அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகள் கௌசிகாவும் கர்ணனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் இருவரும் 10 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். இந்நிலையில் கௌசிகா நிறைமாத கர்ப்பமாக உள்ளார். அதனால் அவரின்  வளைகாப்பிற்காக அவரது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணமான காதல் ஜோடியை… அரிவாளால் வெட்டிய உறவினர்கள்… 4 பேர் கைது…

திருமணமான காதல் ஜோடிகளை அரிவாளால் தாக்கிய பெண்ணின் உறவினர் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகரில் வினித் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பில்கேஷி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 21ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்குப்பின்பு பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

21 உடன் ஓடிப்போன 19…. உடந்தையாக இருந்த 13…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!!

கடந்த ஜூலை மாதத்தில் மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள குந்தி கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் காணாமல் போனதை தொடர்ந்து அவருடைய பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 21 வயது வாலிபருடன் ஓடி போனதும், அதற்கு 13 வயது சிறுமி உதவியதும் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் வசித்து வந்த இவர்கள் சில நாட்களுக்கு முன்பு தங்கள் கிராமத்திற்கு திரும்பி வந்தனர். அப்பொழுது ஓடி போனதற்காக அவ்விருவரையும், மேலும் அவருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காதலில் ததும்பிய ஈரோடு…. இது திருமணம் செய்யும் வாரம்….!!!!!

ஈரோடு மாவட்டம் பவானியில் அடுத்தடுத்து 7 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தால் போலீசார் திகைப்பு அடைந்தனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி தஞ்சமடைந்தனர். இதில் மூன்று காதல் ஜோடிகளின் திருமணத்தை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஈரோட்டில் ஒரே நாளில் 12 ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கிருந்த போலீசார் திகைப்பு அடைந்தனர்.

Categories
மாநில செய்திகள்

திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஆகிட்டு… வரதட்சணை கொடுமையால் நேர்ந்த துயரம்….!!!

இந்தியாவில் பல பகுதிகளில் வரதட்சணை கொடுமைகளால் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதேபோல் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் வரதட்சணை கொடுமை தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் ரங்கநாதன் தெருவை சேர்ந்த சினேகா என்பவருக்கும், பனையூரை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் முதலில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்துகொண்ட தங்கை… மனமுடைந்த அண்ணன் செய்த காரியம்… கதறி அழும் பெற்றோர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் தங்கை காதல் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த சகோதரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்துள்ள அம்மையப்பனை அருகில் உள்ள இலங்குடியில் ஜெயராஜ்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது தங்கை சில தினங்களுக்கு முன்பு வீட்டின் எதிர்ப்புடன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் தங்கை ஓடிப்போன துக்கத்தில் செய்ராஜ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனையடுத்து மனவுளைச்சலில் இருந்து மீள முடியாமல் ஜெயராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“6 மாதத்திற்குள்” காதல் கசந்தது…. பூச்சி மருந்து இனித்தது…. பெண் எடுத்த விபரீத முடிவு…!!!

சென்னை பெரம்பலூர் பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன்(21). இவர் கீர்த்தனா(21) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். கீர்த்தனா அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். ஆனால் ராமச்சந்திரன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே செல்போனைப் பார்த்துக் கொண்டு நேரத்தை கழித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தநிலையில் சம்பவத்தன்று […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! இதற்கு கூட கடை வந்துருச்சி…. வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்ட கடை…!!!

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணங்களை விட காதல் திருமணங்கள் தான் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த காதல் திருமணங்களுக்கு ஜாதி, மதம் ஆகியவற்றை வைத்து ஒரு சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கு உதவி செய்யும் விதமாக ஹரியான மாநிலத்தில் வீட்டை விட்டு வெளியேறி ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தங்கையை காதலித்த நண்பர்… கொலை செய்யப்பட்ட அண்ணன்… திருச்சியில் பரபரப்பு…!!

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவியின் அண்ணனை அவரது நண்பரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் கிருபன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கிரிஜா என்ற தங்கை இருக்கிறார். இந்நிலையில் கிருபன்ராஜின் நெருங்கிய நண்பரான கவியரசன் என்பவரும், இவரது தங்கை கிரிஜாவும் காதலித்துள்ளார். இதனை அறிந்து கோபமடைந்த கிருபன்ராஜ் கிரிஜாவுக்கு அவசரமாக திருமண ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் கிரிஜா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு… மகளின் செயலால் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

 மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் வசித்து வருபவர் தனபால். இவரின் மூத்த மகள் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்து பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி தனபாலின் மகள் அந்த வாலிபரையே  திருமணம் செய்துகொண்டார். இதனால் வாழ்க்கையை வெறுத்த தனபால் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு […]

Categories
கிசு கிசு சினிமா

கீர்த்தி சுரேஷ், அனிருத் காதல்… வெளியான உண்மை தகவல்…!!!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதல் பற்றி வெளியான தகவல் உண்மையில்லை என்று கீர்த்தி சுரேஷ் தந்தை கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் கீர்த்திசுரேஷ் அறிமுகமான முதல் படம் இது என்ன மாயம். இதற்கடுத்து திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா விக்ரம் விஷால்மற்றும்  சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் கீர்த்தி சுரேஷ் “மகாநடி”  என்னும் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் வீட்டுக்கு போ…! 10லட்சம் வாங்கிட்டு வா…! சாதி பெயரை சொல்லி அவமானம்… காதல் மனைவிக்கு நேர்ந்த துயரம் ..!!

சென்னையில் தன் மனைவியை சாதி பெயர் கூறி வரதட்சணை கொடுமை செய்து வந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் பாலமுருகன் என்ற பகுதியை சேர்ந்த தம்பதிகள் ஆனந்தராஜ் (30) மற்றும் பாக்கியலட்சுமி (29). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி கர்ப்பமானதால் ஆனந்தராஜ் அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவீட்டாரும் அவர்களை சமாதானம் செய்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பிறகு ஆனந்தராஜ், […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்த அனீஷ்…. தொடர்ந்து மிரட்டிய பெண் வீட்டார்… இறுதியில் நடந்த கொடூரம் ..!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில், காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனீஷ்(29) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் முடித்துள்ளார். இந்தத் திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் வீட்டார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். தொடர்ச்சியாக, அனீஷுக்கு பெண் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மா வீட்டுக்கு போன கணவர்… திரும்பி வரவே இல்ல… தேடிச் சென்ற மனைவி… கணவர் வீட்டின் முன்பு கொடூரம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் காதல் கணவரின் வீட்டின் முன்பு விஷம் குடித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய ரம்யா என்பவர், சென்னையில் இருக்கு என்ற தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் வேலை செய்து வந்தார். அங்கு அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடங்களுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” 10,000 நீங்க 40,000 அவங்க…. பஞ்சாயத்தில் அபராதம்…. போலீசிடம் ஓடிய காதலன்…!!

காதல் திருமணம் செய்ததற்கு 40 ஆயிரம் அபராதம் விதித்த பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் ஜீவானந்தம், நாகராஜ் என்பவரது மகள் பவானியை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த பவானியின் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இதனை தெரிந்துகொண்ட ஜீவானந்தம் அவசர அவசரமாக பவானியை திருமணம் முடித்தார். இந்நிலையில் இது குறித்து பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டுல சம்மதம் கிடைச்சுருச்சு…. இனி காதலியோடு திருமணம்…. மகிழ்ச்சியில் நடிகர் அதர்வா …!!

தமிழ் திரை உலகில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அதர்வா தற்போது காதல் திருமணம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்தவர் முரளி .இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நடிகர் அதர்வா இளைய மகன் ஆகாஷ் ஆகும்.  அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகம்  ஆனவர். தற்போது இளைய மகனான ஆகாஷிக்கும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகளான சினேகாவிற்கும் சில வாரங்களுக்கு முன்பு திருமணம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உங்க மனைவியை எங்கே ? கோர்ட்டுக்கு வர சொல்லுங்க… எம் .எல்.ஏவுக்கு செக் வைத்த ஐகோர்ட் …!!

எம் .எல்.ஏ பிரபுவின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உலகில் கொரோனா  பிரச்சனை நிகழ்ந்து வரும் நிலையில் ஊரடங்கு  அண்மையில் நடந்த கள்ளக்குறிச்சி தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பிரபு என்பவர். இவர் கல்லூரி மாணவியை சவுந்தர்யா என்பவரை கடந்த மாதம்  ஐந்தாம் தேதி அன்று திருமணம்   செய்து   கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாக துருகத்தை  சேர்ந்த  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“MLA காதல் திருமணம்” துரோகம் பண்ணிட்ட… பெண்ணின் தந்தை செய்த செயல்…!!….

காதல் திருமணம் செய்த எம்எல்ஏவின் வீட்டின் முன்பு பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி தொகுதி அதிமுக வின் சட்டமன்ற உறுப்பினர் பிரபு தியாகதுருகத்தில் சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது மகளை அதிமுக எம்எல்ஏ பிரபு கடத்தி விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை புகார் கொடுத்தார். இதனிடையே இன்று அதிகாலை பிரபு சௌந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விருந்துக்கு வாங்க மாப்பிள்ளை… மனைவி வீட்டை நம்பிச் சென்ற தம்பதிகள்…. பின்னர் நடந்த கொடூரம்…..!!

எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து அவர் கணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி தன்னுடன் கல்லூரியில் படித்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து 10 தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சௌந்தர்யாவின் பெற்றோர் ஏற்க மறுத்ததால் அசோக் வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சௌந்தர்யாவின் பெற்றோர் தம்பதியினரை தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்ததால் வெறுப்பு மருமகனை கொன்ற மாமனார்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகனை கூலிப்படை வைத்து ஆணவக்கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹேமன் என்பவர் அவந்தி என்ற பெண்ணை கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்தார். திருமணத்துக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஜூன் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத் நகரில் வசித்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெண்ணின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி ஒரு வாரமே ஆகும் நிலையில் கணவர் கடத்தல் – பெண் உண்ணாவிரதம்..!!

நாகையில் உறவினர்களால் கடத்தப்பட்ட கணவனை மீட்டுத் தரக்கோரி ஒரு வாரத்துக்கு முன்பு காதல் திருமணம் ஆன சுமதி என்ற பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சுமதி இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனது கணவரை நான் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டேன். 17-ஆம் தேதி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண வரும் போது எனது கணவனை கடத்தி சென்றுவிட்டனர். போலீசில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விருந்திற்கு அழைத்து செல்லப்பட்ட பெண் கடத்தல்? கணவன் புகார்..!!

மதுரையில் காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை விருந்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர் திருப்பி அனுப்பாததால் மனைவி மீட்டுத் தரக்கோரி கணவர் சண்முக கண்ணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். மனைவியை அனுப்புமாறு கேட்டால் கொலை செய்துவிடுவேன் என பெண்வீட்டார் மிரட்டுவதாகவும், பெண் வீட்டார் விருந்துக்கு அழைத்து சென்று 20 நாட்களில் திருப்பி அனுப்புவதாக கூறினார்கள்அதில் எனக்கு விருப்பமில்லை அதனால் மனைவியை மட்டும் அனுப்பி வைத்தேன். மூன்று மாதமாகியும் பெண்ணை திருப்பி அனுப்ப மறுத்து விடுகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

டிக் டாக் காதல்… திருப்பதியில் திருமணம்… அனுமதிக்காத பெற்றோர்… ஒன்றாக உயிரை விட்ட கணவன், மனைவி..!!

காதல் திருமணத்திற்கு தொடர்ந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் பவன்குமார் மற்றும் சைலஜா. இவ்விருவரும் டிக் டாக் செயலி மூலம் பழகி வந்தனர். அதன் பிறகு இருவரிடையே காதல் தோன்றியதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரது பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். ஆனால் இருவரது வீட்டிலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகள் இப்படி பண்ணீட்டாளே… “ஊர் முழுவதும்”… கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை… காரணம் இதுதான்..!!

உயிருடன் இருக்கும் மகளுக்கு தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டத்தில் இருக்கும் சின்னமனூரை சேர்ந்தவர்கள் ஜெயபால்-செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். ஜெயபால் பெங்களூரில் குடும்பத்தினருடன் பணியின் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் மகள் கீர்த்தனாவிற்காக தனது சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அங்கு இளைஞர் ஒருவருக்கும் கீர்த்தனாவிற்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை அன்று திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் திருமணம்” தம்பதிக்கு கொடுத்த தண்டனை….. காணொளியால் வெகுண்டெழுந்த பிரபலங்கள்…!!

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை மொட்டை அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை செருப்பு மாலை அணிவித்து, பாதி மொட்டை அடித்து சித்ரவதை செய்த காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. கணவன் மனைவி இருவரையும் சாலையில் முட்டி போட வைத்து அரங்கேற்றிய கொடூர சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

காதல் கல்யாணம்… “8 மாதத்தில் சடலமாக தொங்கிய பெண்”… சந்தேகத்தை ஏற்படுத்திய கை… விசாரணையில் போலீசார்..!!

காதல் திருமணம் செய்த எட்டு மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த அவினாஷ் கமல் பிரீத் தம்பதியினர் காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு கணவரின் தாய் பிரித்யை  கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் பிரீத் குடும்பத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றியபோது […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு” உடல்நிலை மோசமான காதலன்… சிகிச்சை அறையில் காதலி செய்த செயல்… அதன்பின் நடந்த ஆச்சரியம்…!!

  கொரோனா நோயாளியை அவரது காதலி சிகிச்சையின் போதே திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து அவர் தொற்றிலிருந்து மீண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதிகரித்து வருவதால் பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னரே முடிவு செய்யப்பட்ட திருமணங்கள் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் சில திருமணங்கள் குறைவான நாட்களிலேயே எளிமையாக நடந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார்லெஸ் முனீஸ் என்பவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவங்க ரெண்டு பேர் அப்படி பண்ணிட்டாங்க… நீயாவது பேச்சைக்கேள்… தங்கை செய்த காரியம்.. உயிரை விட்ட தாய் மற்றும் அண்ணன்..!!

சொல்லை மீறி தங்கை காதல் திருமணம் செய்ததால் அண்ணன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தாயும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் நீலவதி தம்பதியினர் .இத்தம்பதியினருக்கு பால்ராஜ் மற்றும் சின்னத்துரை என்ற மகன்களும் மீரா, கல்பனா மற்றும் மீனா என மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூத்த மகனான பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வர இளைய மகன் சின்னதுரை மற்றும் மீனா தனியார் நிறுவனம் ஒன்றில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமண ஆசையோடு வந்த இளைஞர்… விமான விபத்தில் இறந்த சோகம்… மனமுடைந்து கதறும் காதலி..!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்யப்போகும் மகிழ்ச்சியில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன்தினம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி 18க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள், விமானி என 191 பேர் பயணம் செய்தனர். பயணிகளில் ஒருவரான முகமது ரியாஸ் என்ற 24 வயது இளைஞன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலியை கரம்பிடித்த பிரபாஸ் பட டைரக்டர்….. உறவினர்கள் கூட எளிமையான திருமணம்…!!

சஹோ படத்தை இயக்கி பிரபலமான டைரக்டர் சுஜித்க்கு திருமணம் நடைபெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடித்த சகோ படத்தை இயக்கி பிரபலமானவர் சுஜித். மெகா பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருந்ததாக பாராட்டுகளை பெற்றிருந்தார். ஷ்ரத்தா கபூர், சர்வானந்த் நடித்த ராஜா ராணி என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இதையடுத்து மலையாளத்தில் வெற்றிபெற்ற லூசிபர் படத்தை சிரஞ்சீவி நடிக்க தெலுங்கில் ரீமேக் செய்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுஜித் சில வருடங்களாக வள்ளி […]

Categories

Tech |