ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை படிப்படியாக கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து முழுவதுமாக கைப்பற்றிய தலிபான்கள் தற்போது அங்கு ஆட்சி செய்து வருகின்றனர்.. இந்த ஆட்சி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. […]
Tag: காபூல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கு எதிரான அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்நாட்டில் தற்போது டி20 லீக் என்னும் உள்ளூர் அணிகளுக்கான ஷ்பகீசா டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் பெண்ட் – இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர் ஷல்மி […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் சீக்கிய வழிபாட்டு தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பக்தர்கள் மாட்டி தவித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருக்கும் குருத்வாரா கார்டே பர்வான் என்ற சீக்கிய வழிபாட்டு தலத்தில் இன்று காலையில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில் பக்தர்கள் பலர் மாட்டி கொண்டதாக கூறப்பட்டிருக்கிறது. தலீபான் பாதுகாப்பு படை மற்றும் தீவிரவாதிகளுக்கிடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்கு இந்து மற்றும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் […]
காபூல் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி நாட்கள் ஒதுக்கீடு செய்ய போவதாக தலீபான்கள் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபின் கெடுபிடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகள் சேர்ந்து படிப்பதை தடுக்கும் வகையில், மாணவிகள் காலை நேரத்திலும், மாணவர்கள் பிற்பகல் நேரத்திலும் வர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கின்றனர். இந்தநிலையில் இருபாலர் சேர்ந்து படிக்கும் முறையில் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதுபற்றி உயர்கல்வி அமைச்சக செய்தி தொடர்பாளர் அகமது தாகி […]
ஐ.நா. ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை தலீபான்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தொடங்கினார்கள். அன்று முதல் அங்கு மிக கடுமையான மனித நெருக்கடி நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் ஊழியர்கள் அங்கு முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.நா ஆணையத்துடன் இணைந்து பணியாற்றி வந்த 2 […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரான அஷ்ரப் கனி தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின் காபூல் நகரிலிருந்து திடீரென்று வெளியேற முடிவு எடுத்ததாக கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியபின் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. எனவே, ராணுவ அதிகாரிகள், முக்கிய தலைவர்கள் மற்றும் மக்கள் என்று பலரும் அந்நாட்டிலிருந்து வெளியேறினார்கள். அந்த சமயத்தில், அந்த நாட்டின் அதிபராக இருந்த அஸ்ரப் கனியும் விமானத்தின் மூலம் தப்பித்தார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அவர் நேர்காணலில், தெரிவித்திருப்பதாவது, […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் எதுவும் தெளிவாக தெரியவில்லை.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் சிறுவர்கள் ஏழு பேர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 நபர்கள் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியான சம்பவத்தில் அதிபர் ஜோ பைடன் இழப்பீடு அளிக்க தீர்மானித்திருக்கிறார். அமெரிக்க இராணுவத்தின் கவனக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு பணியாளரும் 7 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது நபர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வாகனம் […]
காபூல் நகரில் உள்ள ஒரு மசூதியின் வாசலில் தலிபான்களை குறிவைத்து குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலிபான்களின் செய்தி தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித் என்பவர், தன் தாயின் நினைவு நாள் வழிபாட்டிற்காக ஈத்கா மசூதிக்கு சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று மசூதி வாசலில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். இக்கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தாக்குதலில் தலீபான்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை […]
காபூல் நகரின் மலைப்பகுதிகள் நிறைந்த கோடாமன் நகரில், ஆயிரக்கணக்கான ஆண்கள் தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வந்தனர். தலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால், தங்களின் சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் பெண்கள் போராடினர். மேலும், நாட்டு மக்கள் தலிபான்களைக்கண்டு பயந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், காபூல் நகரில் மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் கோடாமன் என்னும் நகரில், தலிபான்களுக்கு ஆதரவு […]
ஆப்கானிஸ்தான் IEA படை, காபூல் நகருக்கு வடக்கில் இருக்கும் ஐ.எஸ்-கே மறைவிடத்தில் நடத்திய சோதனையில் பல போராளிகள் கொல்லப்பட்டதாக IEA செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். IEA செய்தித் தொடர்பாளரான Bilal Karimi, பர்வான் மாகாணத்தில் இருக்கும் கரிகார் நகரத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று கூறியிருக்கிறார். எனினும், உயிரிழந்தது எத்தனை பேர்? மற்றும் கைதானது எத்தனை பேர்? என்ற தகவல்களை அவர் கூறவில்லை. சமீபத்தில் நகரத்தின் சாலைப்பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் தொடர்புகொண்ட, ஐ.எஸ்-கே போராளிகள் இருவரை […]
காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரை பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள், அங்கு இடைக்கால அரசை அமைத்துள்ளார்கள். எனவே அங்கிருந்து வெளியேற நினைத்த அந்நாட்டு மக்கள், காபூல் விமான நிலையத்தில் குவிந்து காணப்பட்டனர். அந்த சமயத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று, விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில், அமெரிக்க படையை சேர்ந்த 13 வீரர்கள் உட்பட 183 ஆப்கானிஸ்தான் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இத்தாக்குதலை நடத்திய […]
காபூலில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்கு காபூலில் உள்ள Dasht-e-Barchi என்ற பகுதியில் IED மூலம் முதல் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதாவது வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்ட கார் ஒன்றில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக அந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து Jalalabad பகுதியில் இரண்டாவதாக குண்டுவெடிப்பு நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #BREAKINGThe second […]
காபூல் விமான நிலையத்திற்கு அருகில், அமெரிக்க படை, கடந்த 29-ம் தேதி அன்று நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கோரபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அமெரிக்க அரசு கடந்த மாதம் 31 ஆம் தேதி வரை, தங்கள் குடிமக்களோடு, ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களையும் சேர்த்து விமானம் மூலம் மீட்டுவிட்டது. இதனிடையே மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் நடந்த சமயத்தில், கடந்த மாதம் 26ம் தேதியன்று, அங்கு, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின், ஹரசன் […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அங்கு முதல் நாடாக பாகிஸ்தான், விமான சேவையை தொடங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. தலிபான்கள், கடந்த மாதம் 15-ஆம் தேதி அன்று, காபூல் நகர் உள்பட மொத்த நாட்டையும் கைப்பற்றிவிட்டார்கள். அதன்பின்பு, பிற நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேறியவுடன் காபூல் நகரின் விமான நிலையத்தையும் தலிபான்கள் கைப்பற்றினர். அதனையடுத்து, கத்தார் அரசு காபூல் நகரின் விமான நிலையத்தில், விமான சேவையை முன்பு போன்று தொடங்குவதற்கு உதவி செய்தது. அதன்பின்பே, அங்கு உள்நாட்டு விமான சேவை […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பாகிஸ்தானை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பு நேற்று இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பெண்களால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஊடகத்தை சேர்ந்த சிலர் வீடியோ எடுப்பதை தலிபான்கள் தடுத்துள்ளனர். அதாவது, பாகிஸ்தானின் உள்நாட்டு புலனாய்வுத் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் காபூல் நகருக்கு வந்ததையடுத்து இந்த […]
ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட கூடாது என்று காபூலில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். தற்போது அங்கு புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், நாட்டின் அதிபராக, தலிபான்கள் அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் முல்லா அப்துல் கனி பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து தலீபான் குழுவிற்கும், ஹக்கானி வலைக்குழுவிற்கும் நடந்த பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டு முல்லா அப்துல் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூல் நகரத்தில் தலிபான்கள் நேற்று இரவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். அதாவது, PANJSHIR என்ற பள்ளத்தாக்கை கைப்பற்றியதையும், முல்லா பராதர், நாட்டின் புதிய அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் தலிபான்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். According to TB sources, Mawlawi Muhammad Yaqoob has issued strict orders against […]
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். இவ்வாறு மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாகவும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் 13 பேர் அமெரிக்க படையினர் உட்பட 100 பேர் பலியாகினர். இந்நிலையில் காபூல் பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ […]
காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விடுவோம் என்ற நம்பிக்கையில் காபூல் விமான நிலையத்தில் 12 நாட்களாக பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை அமெரிக்க ராணுவம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை தலிபான்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும், எந்த […]
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். இதனால் அங்கிருந்து வரும் மக்களுக்கு பல்வேறு நாடுகளும் அடைக்கலம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆப்கான் மக்கள் குறித்து பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே நேற்று குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், 15க்கும் […]
காபூல் விமான நிலையத்தில் தாயை விட்டு பிரிந்த பச்சிளம் குழந்தை ஒன்றை துருக்கி இராணுவ வீராங்கனை அன்புடன் முத்தமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி, தங்கள் சொந்த நாட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. மேலும் சில பெற்றோர்கள் தங்களால் செல்ல முடியாவிட்டாலும், தங்கள் குழந்தைகளாவது வெளிநாட்டில் சுதந்திரமாக வாழட்டும் என்று கருதி விமான நிலையத்தில் உள்ள ராணுவ வீரர்களிடம் தங்கள் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண் அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்க ராணுவ விமானத்தில், சென்றபோது அவருக்கு விமானத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதால், மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். அமெரிக்க ராணுவ வீரர்கள், தங்களின் உயிரை பணயம் வைத்து இரவு பகலாக அந்நாட்டு மக்கள் காபூலில் இருந்து வெளியேற உதவி வருகிறார்கள். மேலும், தலிபான்கள் காபூல் விமான நிலையத்திலிருந்து செல்லும் மக்களை தடுக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். […]
ஆப்கானிஸ்தானில் ஒரு பெற்றோர், தலிபான்களுக்கு பயந்து தங்களின் இளம் வயது பெண்கள் 5 பேரையும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் Hazara இனத்தை சேர்ந்த ஒரு பெற்றோர், தன் 5 மகள்களையும் வெளி நாட்டிற்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதாவது, Hazara இனத்தைச் சேர்ந்த மக்களை பிற இனத்தவர்கள் கொடுமைப்படுத்துவது வழக்கமாக நடைபெறுகிறதாம். தற்போது நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதால், தங்கள் மகள்களுக்கு ஆபத்து உண்டாகும் என்று பயந்து அமெரிக்க நாட்டிற்கு தப்பி செல்லுமாறு […]
காபூல் விமான நிலையத்தில் பொதுமக்கள் விரட்டி அடிக்கப்படும் காட்சிகள் வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழுஅதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் நாடு முழுவது பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதிலும் விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு தப்பித்துச் சென்று அகதிகளாக வாழ்கின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதுவரை காபூல் விமான நிலையத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் […]
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் 5 மணிநேரங்களில் கைப்பற்றி விட்டார்கள். மக்களின் உயிர் பறிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற போகிறேன் என்று தெரிவித்துவிட்டு மக்களை கை விட்டுவிட்டு தப்பிவிட்டார், நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி. தற்போது காபூலில் வசிக்கும் மக்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அங்குள்ள பொதுமக்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அவரவர் வீடுகளில் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு, ஆதரவு தெரிவிப்பதோடு நட்பு ரீதியாக உறவை ஏற்படுத்திக் கொள்ள தயார் நிலையில் உள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், நாட்டை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். எனவே நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி, பதவி விலகியதோடு காபூல் நகரிலிருந்து வெளியேறி வேறு நாட்டிற்கே சென்றுவிட்டார். எனவே தலிபான்கள், காபூல் நகரையும் கைப்பற்றி, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி மாளிகை உட்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி […]
ஆப்கானிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாக தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, அமெரிக்க படைகள் வெளியேறியதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தலிபான்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் கைப்பற்றினர். கிட்டதட்ட ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிவிட்டார்கள். தலிபான்களுக்கு பயந்து காபூல் நகரில் பல்வேறு மக்கள் தஞ்சம் அடைந்தார்கள். தற்போது, அங்கிருந்து மக்கள் தப்பி வருகிறார்கள். மேலும் நாட்டின் ஜனாதிபதி அஸ்ரப் கனியும் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்கள், […]
காபூலில் விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தின் சக்கரத்தை பிடித்துக்கொண்டு பயணித்த மக்கள் கீழே விழும் பரபரப்பு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, மக்கள் நாட்டிலிருந்து தப்பித்து வருகிறார்கள். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் பலர் குவிந்ததால் அங்கு நிலை மோசமானது. எனவே அதிகாரிகள் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர். صبح سے پروپیگنڈہ جاری ہے کہ اسٹوڈنٹس کابل ائیرپورٹ […]
காபூலில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து 2 பேர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டு மக்கள் உட்பட பல்வேறு நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர்.. அங்கிருந்து புறப்படும் விமானத்தில் ஏறி எப்படியாவது வெளி நாடுகளுக்கு சென்று விட வேண்டும் என்று முயல்கின்றனர்.. இந்தநிலையில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் டயர் அமைந்துள்ள பகுதியின் மேல் தொங்கியபடி சென்ற […]
ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்த சூழ் நிலையில் நேற்று காபூல் நகரத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.. குடியரசுத் […]
ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து புறப்படும் அனைத்து விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்த சூழ்நிலையில் காபூல் நகரத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.. குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் நகரின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு தலீபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அரண்மனைக்குள் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே ஜனாதிபதி அஷ்ரப் கனி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிவிட்டார். எனவே தலிபான்களின் கைக்கு ஆட்சி மாறியது. காபூல் நகரின் எல்லையை தலிபான்கள் சூழ்ந்திருந்த நிலையில், அவர்களை நகருக்குள் செல்ல தலிபான்களின் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதன்பின்பு தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தனர். நகர் […]
காபூல் விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நேற்று 129 பேர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு விமானம் 12.30க்கு காபூலுக்கு செல்ல இருந்தது. தற்போது அந்த விமான நிலையம் மூடப்பட்டதால் இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் தற்போது விமானங்கள் தரை இறங்குவதற்கான வாய்ப்பு கள் முற்றிலுமாக இல்லை என்பதுதான் அங்கிருந்து வரக்கூடிய தகவலாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்…. லட்சக்கணக்கில் […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான்கள் வசம் வந்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பதற்மாக விமான நிலையம் நோக்கி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள், தலைநகர் காபூலையும் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். அதிபர் மாளிகையும் தலிபான்கள் வசம் வந்தததைத் தொடர்ந்து, தலைநகரில் உள்ள அரசு அலுவலகங்களின் முக்கிய ஆவணங்களை அரசு பணியாளர்கள் தீயிட்டு எரித்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதற்கிடையில் ஆப்கன் […]
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை தலிபான் தீவிரவாதிகள் ஆக்கிரமித்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில், தலிபான்களின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளை அவர்கள் கைப்பற்றி வருகிறார்கள். அதன்படி தற்போது பிற நாட்டின் தூதரகங்கள் உள்ள முக்கிய நகரமான காபூலை இன்று சூழ்ந்துள்ளார்கள். https://twitter.com/SufyanARahman/status/1426884575108677634 இதனைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியான Ashraf Ghani ராஜினாமா செய்ததாகவும், 20 வருடங்களுக்குப் பிறகு நாட்டில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் நகரின் எல்லையை தலிபான் தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டதால் மக்கள் அந்நகரில் இருந்து தப்பிச்செல்வதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் தலைநகரான காபூலின் எல்லையில் சூழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் காபூல் நகரத்தை போர் மற்றும் மோதலின்றி கைப்பற்றப் போவதாக தலிபான்கள் அறிக்கை விட்டுள்ளார்கள். https://twitter.com/newsistaan/status/1426845523948892175 மேலும் போராளிகள் கலவரத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காகவும், நகரில் இருந்து வெளியேற விரும்பாத மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காபூலிலிருந்து மக்கள் வாகனங்களில் […]