இந்தி திரை உலகில் காமெடி நடிகராகவும், குணசத்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவர் கடந்த பத்தாம் தேதி டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று சரிந்து விழுந்தார். அவரை அங்கிருந்து மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது டெல்லியில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் . இந்நிலையில் ராஜ ஸ்ரீவஸ்தவா உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரியவந்துள்ளது நேற்று […]
Tag: காமெடி நடிகர்
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வெங்கல்ராவ். வைகை புயல் வடிவேல் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. ஸ்டண்ட் கலைஞரான இவர் 25 ஆண்டுகள் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார் .வடிவேலுக்கு சினிமாவில் நடிக்க தடை போட்டதற்கு பிறகு இவருக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தது. இதனால் வறுமையில் தவித்து வந்த இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு […]
தமிழ் சினிமாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் காமெடி நடிகர் போண்டா மணி. இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்த இவர் சில காலங்களுக்குப் பிறகு படங்களில் நடித்து பிரபலமானார். போண்டா தொடர்பான காமெடி நடித்து பிரபலமானவர். போண்டா மணி ஆக மாறினார். சினிமா தவிர்த்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக உள்ளார். இந்நிலையில் இவர் இதய பிரச்சினை காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து […]
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், ரசிகர்களின் பேவரட் காமெடியனாகவும் இருந்தவர் நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக நகைச்சுவை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ஏஜன்ட் சாய் சீனிவாச ஆத்ரெயா திரைப்படம் தமிழ் ரீமேக்காக தயாராகி வரும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் கலக்கலான காமெடி துப்பறிவாளன் ஆக நடித்து வருகிறார். தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த நவம்பர் 19-ஆம் தேதி […]
மிகப் பிரபல தமிழ் காமெடி நடிகர் பாபு என்கிற விருச்சிக காந்த் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் நடித்து பிரபலமானவர் பாபு என்கிற விருச்சிக காந்த். அதன்பிறகு தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆட்டோவில் படுத்தபடியே உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தை உலுக்கியுள்ளது. இவர் வேட்டைக்காரன் மற்றும் தூங்காநகரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சாப்பாட்டிற்காக கோவிலில் பிச்சை எடுத்து […]
பிரபல காமெடி நடிகர் மயில்சாமி வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்த் திரை பிரபலங்கள் சிலரும் தேர்தலில் போட்டியிட உள்ளனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். இன்று மனு தாக்கல் செய்த அவர் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். எம்ஜிஆரின் […]
பிரபல தமிழ் காமெடி நடிகர் பெஞ்சமின் தன்னுடைய மருத்துவ செலவுக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பெங்களூரு மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவை அவளால் சமாளிக்க முடியவில்லை. அதனால் நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் சிறு வாய்ப்பு […]
தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் பெஞ்சமினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் வெற்றி கொடி கட்டு மற்றும் திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். இதனையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால் […]
400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகரின் மரணம் திரைஉலகத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று இல்லாமல் உடல்நலக்குறைவால் பலர் இறந்துள்ளனர். அண்மையில் நடிகர் ரிஷி கபூர், இம்ரான் கான் என சினிமா பிரபலங்கள் இறந்துள்ளனர். இந்த நிலையில் ஹிந்தியில் 400க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ஜக்தீப். இவர் மும்பை பந்தரா பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று உடல்நலக்குறைவால் […]