கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 24 டன் காய்கறிகளும், 4 டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். […]
Tag: காய்கறி விற்பனை
இந்தியா முழுவதும் முன்னதாக பெரிய வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைவானதால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். எனவே குறைந்த விலையில் மக்களுக்கு கூட்டுறவுத் துறை சார்பாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மற்றும் முக்கிய ரேஷன் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. விற்பனையாகாததற்கான பணத்தை ரேஷன் ஊழியர்களிடம் அதிகாரிகள் வசூலித்தனர். இதனால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்த கனமழையின் காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி விற்பனைக்கு உழவர் நலத்துறை சார்பில் பல குழுக்கள் அமைத்து நடமாடும் காய்கறி வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் யாவும் அவர்கள் வீடு தேடி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் இருக்கும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் குழுக்கள் அமைக்கப்பட்டு நடமாடும் காய்கறி […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக […]
நெல்லையில் 480 டன் அளவிலான காய்கறிகள் நடமாடும் வாகனங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் விதமாக காய்கறிகளை வாகனங்களின் மூலம் விற்பனை செய்வதற்கு அரசாங்கம் உத்தரவிட்டது. இதையொட்டி திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக 339 வாகனங்கள் காய்கறி விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. […]
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி காய்கறி விற்பனை செய்த மளிகை கடைக்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள பேட்டபாளையம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மளிகை கடை வியாபாரம் செய்வதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்மளிகை கடையில் காய்கறி விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மளிகை கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்ததோடு […]
சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வார்டு வாரியாக வாகனங்களில் கொண்டு வியாபாரிகள் விற்பனை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம், தாதகப்பட்டி, அம்மாபேட்டை மற்றும் அஸ்தம்பட்டி ஆகிய நான்கு உழவர் சந்தைகளும் […]
பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கின் போது கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காய்கறி வண்டியை அப்பகுதி காவல்துறை அதிகாரி காலால் உதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 2ஆம் அலை உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட சாலையில் காய்கறி விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து […]
சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தையில் தமிழ் புத்தாண்டையொட்டி காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி, தாதகப்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி உழவர் சந்தைக்கு விற்பனைக்காக காய்கறிகளை விவசாயிகள் அதிகளவு கொண்டு வந்துள்ளனர். இதனால் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. இதுக்குகுறித்து வேளாண்மை துறை அதிகாரி கூறியுள்ளதாவது சந்தைக்கு 842 விவசாயிகள் 201 டன் காய்கறிகள் மற்றும் […]